பொருளாதார சரிவு தொடர்ந்து நீடிக்கும்

புதுடெல்லி: பொருளாதார சரிவு மேலும் சில காலம் தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து வருவதாக மத்திய அரசு புள்ளி விவரம் வெளியிட்டது. ஆனால், மத்திய அரசின் புதிய கணக்கீட்டு முறை தவறு என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு ஏற்ப, பொருளாதார சரிவை நிரூபிக்கும் பிற புள்ளி விவரங்களும் வெளியாகின. கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி 227 மில்லியன் டன்களாக இருந்தது, நடப்பு

நீர்மட்டம் 48.60 அடியாக சரிவு மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும் நேற்று முன்தினம் விநாடிக்கு 33 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 58 கனஅடியாக சற்று அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை விநாடிக்கு 2000 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் 48.82 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 48.60

சங்கராபுரம் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் படுகாயம்

சங்கராபுரம்: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ஈருடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனிஸ்லாஸ்(60). இவரது மனைவி சந்தோஷமேரி(55). இவர் கடந்த மாதம்  உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இவருக்கு கல்லறையில் பெயர் பலகை வைப்பதில் தனிஸ்லாஸ்க்கும் அவரது தம்பி சூசைக்கண் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது தனிஸ்லாசின் இளைய மகன் லெனின்பாஸ்கர்(30) வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கியை  எடுத்து சூசைக்கண்ணை துப்பாக்கியால் சுடமுயலும் போது அங்கிருந்தவர்கள் அதனை தடுத்தனர். அப்போது நாட்டுத்துப்பாக்கியின் குறிதவறி லெனின்பாஸ்கரின் அண்ணன் அந்தோனிசாமியின் மனைவி லிமா(28) காலில்

‘டிக்டாக்’கில் அவதூறு வீடியோ வெளியிட்ட மாணவன் கைது

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே மோட்டுகொட்டாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவன், பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளமான டிக்டாக் செயலியில், ஒரு சமூகத்தை பற்றி அவதூறாக பேசி இவர் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து, மத்தூர் அருகே சாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், டிக்டாக் செயலியில் அவதூறாக பேசியவரை கைது செய்யக்கோரி, ஊத்தங்கரை டிஎஸ்பி ராஜபாண்டியனிடம் புகார் மனு அளித்தனர்.

மே-20 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.82, டீசல் ரூ.69.88

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.82 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.88-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சேலம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.49 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல்

சேலம்: சேலம் மாவட்டம் சந்தைபேட்டை பகுதியில் காரில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.49 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நாளை தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.

பழனி அருகே சொத்துத் தகராறில் அண்ணனை தம்பிகள் கத்தியால் குத்திக் கொலை

பழனி: பழனி அருகே ஆயக்குடியில் சொத்துத் தகராறில் அண்ணன் தாஜூதீன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். தாஜூதீனை கொலை செய்த அவரது தம்பிகள் உசேன், காதர் உசேனை போலீசார் தேடுவருகின்றனர்.

அடுத்த பிரதமர் யார் என்று தெரியாத நிலையில், நாங்கள் எப்போதும் காங்கிரஸ் உடன் தான்: முன்னாள் பிரதமர் தேவ கவுடா பேட்டி

பெங்களூரு: அடுத்த பிரதமர் யார் என்று தெரியாத நிலையில், நாங்கள் எப்போதும் காங்கிரஸ் உடனேதான் இருப்போம் என முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணியுடன் முன்னாள் பிரதமர் தேவ கவுடா மகன் குமாராசாமி முதல்வராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்து பதிவு செய்யப்படவில்லை: ஆணையர் லவாசா

டெல்லி: தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்து பதிவு செய்யப்படவில்லை என ஆணையர் லவாசா விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளில் பங்கெடுக்கப் போவதில்லை என்று தேர்தல் ஆணையர் லவாசா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் மீதான தேர்தல் நடத்தை விதிமீறல்கள் பற்றி முடிவெடுத்த மூன்று பேரில் ஆணையர் லவாசா ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேதார்நாத் கோவிலில் சாமி சரிதனம் செய்ய பிரதமர் மோடி வருகை

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி சரிதனம் செய்ய வருகை தந்துள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தராகண்ட மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோவிலில் சாமி சரிதனம் செய்ய உள்ளர். 4-வது முறை கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட 7 பேரும் வாரம் ஒருமுறை நேரில் ஆஜராக வேண்டும் என்று  சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராக தவறியதால், தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்ற நீதிபதி வினோத் பதல்கர் இந்த உத்தரவை பிறப்பித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகான் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஒரு மசூதி

மோடிக்கு வாக்களிக்க வாரணாசி வாக்காளர்கள் மிரட்டப்படுகிறார்கள்: மாயாவதி பரபரப்பு குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி வாக்காளர்கள், அவருக்கே வாக்களிக்க மிரட்டப்படுவதாக, காசு கொடுத்து விலைக்கு வாங்கப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில், “வாரணாசியில் தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடக்க வாய்ப்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அத்தொகுதியில் மீண்டும் மோடியே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வெளியாட்களை வைத்து மக்கள் மனங்களை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. சில

தேர்தலில் போட்டியிட சீட் வழங்கவில்லை: பஞ்சாப் முதல்வர் மீது சித்து மனைவி மீண்டும் புகார்

அமித்சர் தொகுதியில் போட்டியிட விரும்பினேன், ஆனால் வேறு தொகுதியில் நிற்குமாறு என்னிடம் கூறினார்கள், முதல்வர் அம்ரீந்தர் சிங் எனக்கு வாய்ப்பு வழங்க மறுத்து விட்டார் என சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் மீண்டும் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது தவறான கருத்து, போட்டியிட அவர் மறுத்து விட்டார் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 இடங்களுக்கு

தமிழகம் மற்றும் புதுவையில் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது  இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .  வெப்பச்சலனம் காரணமாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் குறிப்பாக உள் மாவட்டங்களான, நீலகிரி,கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு,  சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அப்போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் 

‘‘300 இடங்களில் வெற்றி; மீண்டும் பாஜக ஆட்சி’’: பிரதமர் மோடி நம்பிக்கை

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான அணி 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும், மீண்டும் மோடி அரசு அமையும் என 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான கடைசிக் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. வரும் 19-ம் தேதி 7-ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன.

ஓபிஎஸ் மகன் எம்.பி. என கல்வெட்டு: சர்ச்சை ஏற்பட்டதையடுத்து மறைப்பு

தேர்தல் முடிவு வருவதற்கு முன்னரே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை எம்.பி. என பொறித்து திறக்கப்பட்ட கல்வெட்டு சர்ச்சை ஏற்பட்டதையடுத்து  மறைக்கப்பட்டது. தேனி மக்களவைத் தொகுதிக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார், மதுரைக்கு ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனால் கட்சிக்குள் வாரிசு அரசியல் என சர்ச்சை எழுந்தது. கட்சிக்கு உழைத்த மூத்த நிர்வாகிகளும் விசுவாசிகளும் இருக்க வாரிசைக் களம் இறக்கியது குறித்து பரவலாக முணுமுணுப்பு எழுந்தது. ஆனால், தமிழகத்திலேயே தேனியில் அதிக