Month: January 2019

கோடைகாலத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய ரூ.158 கோடி நிதி ஒதுக்கீடு: தமிழக அரசு

சென்னை: கோடைகாலத்தில் சீரான குடிநீர் விநியோகம் செய்ய ரூ.158 கோடி நிதி ஒதுக்கி முதல்வர் பழனிச்சாமி உத்தரவிட்டுள்ளார். சென்னை பெருநகர குடிநீர் வழங்கல் மற்றும் கழிவு நீரகற்று வாரியத்திற்கு ரூ.122 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. நகர மற்றும் கிராம பகுதிகளில் குடிநீர் திட்டப்பணிகள் மேற்கொள்ள ரூ.36 கோடி ஒதுக்கி முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.

தென்காசி கல்வி அலுவலருக்கு அபராதம் விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு

மதுரை: தென்காசி கல்வி அலுவலருக்கு ரூ. 10 ஆயிரம் அபராதம் விதித்து ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது. தென்காசி கல்வி அலுவலர் போன்றவர்கள் தான் கல்வித்தரம் குறைய காரணம் என்று ஐகோர்ட் கருத்து தெரிவித்துள்ளது. வசந்தி என்ற ஆசிரியைக்கு பதவி உயர்வு வழங்காமல் அலைக்கழித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

மாணவர்கள், பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக கவுன்சிலின்…சிபிஎஸ்இ முடிவு

சென்னை: அனைத்து மாணவர்கள் மற்றும் பெற்றோருக்கு தேர்வு தொடர்பாக கவுன்சிலின் வழங்க சிபிஎஸ்இ முடிவு செய்துள்ளது. நாளை முதல் ஏப்ரல் 4-ம் தேதி வரை மனரீதியிலான ஆலோசனை வழங்க சிபிஎஸ்இ முடிவு எடுத்துள்ளது. மேலும் தேர்வை எதிர்கொள்வது மற்றும் சாதிப்பது குறித்து கவுன்சிலின் வழங்கப்படும் என்று சிபிஎஸ்இ கூறியுள்ளது.

சிறப்பு பொது விநியோகத் திட்டம் மேலும் ஓராண்டு நீட்டிப்பு…தமிழக அரசு அரசாணை வெளியீடு

சென்னை: சிறப்பு பொது விநியோகத் திட்டம் மேலும் ஓராண்டு நீட்டித்து தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது. பிப்ரவரி மாதத்துடன் இத்திட்டம் நிறைவடையும் நிலையில், 2020 பிப்ரவரி வரை நீட்டித்து கூட்டுறவு உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை அரசாணை வெளியிடப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்து சென்னை எம்.ஐ.டி கடிதம்

சென்னை: நடிகர் அஜித்துக்கு நன்றி தெரிவித்து சென்னை எம்.ஐ.டி கடிதம் அனுப்பியுள்ளது. ஏரோநாட்டிகல் மாணவர்களுக்கு பயிற்சி அளித்து உதவியது மகிழ்ச்சி அளிக்கிறது. எம்.ஐ.டி மாணவர்களுக்கு உரிய நேரத்தில் அஜித் உதவி புரிந்துள்ளதாக எம்.ஐ.டி பாராட்டு தெரிவித்துள்ளது.

கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடக்கம்

காஞ்சிபுரம் : கல்பாக்கம் அணுமின் நிலையத்தின் 2வது அணு உலையில் மீண்டும் மின் உற்பத்தி தொடங்கியது. பராமரிப்பு பணியால் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டிருந்த நிலையில் தற்போது 117 மெகாவாட் மின் உற்பத்தி தொடங்கியது. படிப்படியாக 220 மெகாவாட் மின் உற்பத்தி செய்யப்படும் என அணுமின் நிலைய நிர்வாகம் தகவல் அளித்துள்ளது.

மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியீடு

டெல்லி : மருத்துவ பட்ட மேற்படிப்புக்கான நீட் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டதாக தேசிய தேர்வுகள் வாரியம் தெரிவித்துள்ளது. 2019-2020ம் கல்வியாண்டு சேர்க்கைக்கான நீட் தேர்வு நாடு முழுவதும் ஜூன் 6ம் தேதி நடைபெற்றது. தமிழகத்தில் 20,000 பேர் உட்பட நாடு முழுவதும் ஒரு லட்சத்திற்கும் மேற்பட்டோர் நீட் தேர்வு எழுதினர்.

பாஜக வேட்பாளரை வெற்றி பெற செய்த ஜந்த் தொகுதி மக்களுக்கு நன்றி : பிரதமர் மோடி ட்வீட்

டெல்லி : ஹரியானாவில் பாஜக வேட்பாளரை வெற்றி பெற வைத்த ஜந்த் தொகுதி மக்களுக்கு பிரதமர் மோடி நன்றி தெரிவித்துள்ளார். பாஜக வாக்குறுதி அளித்தப்பபடி தொகுதியில் அனைத்து வசதிகளையும் ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று அவர் உறுதியளித்துள்ளார்.

திருச்சி மணிகண்டன் பகுதியில் 3 ரவுடிகள் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை

திருச்சி : 2004ம் ஆண்டில் திருச்சி மணிகண்டன் பகுதியில் 3 ரவுடிகள் கொல்லப்பட்ட வழக்கில் 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. ரவுடிகள் குணா, சுந்தரபாண்டியன், துறை முருகன், மனோகரன் ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. 3 பேர் மரணம் அடைந்த நிலையில் 5 பேரை திருச்சி முதலாவது கூடுதல் நீதிமன்றம் விடுவித்தது.

கொடைக்கானலில் விதிமீறய கட்டிடங்கள் மீது நடவடிக்கை தொடர உயர்நீதிமன்ற கிளை உத்தரவு

மதுரை : கொடைக்கானலில் விதிமீறலில் ஈடுபட்டுள்ள கட்டிடங்கள் மீது நடவடிக்கை தொடர வேண்டும் என உயர்நீதிமன்ற கிளை உத்தரவிட்டுள்ளது. 1,415 கட்டிடங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதாகவும், விதிமுறைகளை மீறிய 49 கட்டிடங்களை பூட்டி சீல் வைக்கப்பட்டுள்ளதாகவும் கொடைக்கானல் நகராட்சி சார்பில் விளக்கம் அளித்துள்ளனர். இதையடுத்து கட்டிடங்கள் மீது நடவடிக்கைக்கு தடை கோரிய வழக்கில் மார்ச் 11ம் தேதிக்குள் நடவடிக்கை எடுத்து அறிக்கை தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

புதுக்கோட்டையில் மேலும் 76 ஆசிரியர்கள் சஸ்பெண்ட்

புதுக்கோட்டை: புதுக்கோட்டையில் மேலும் 76 ஆசிரியர்களை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் சஸ்பெண்ட் செய்தார். இதுவரை புதுக்கோட்டை மாவட்டத்தில் மொத்தம் 90 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

போலீஸ் நடவடிக்கை எடுக்காததால் தாய், மகள் தற்கொலை

நெல்லை: நெல்லை ராதாபுரம் அருகே 2-வது திருமணம் செய்த கணவர் மீது புகார்தந்த பெண் மற்றும் அவர்துதாய் தற்கொலை செய்து கொண்டனர். போலீசில் புகார் தந்தும் நடவடிக்கை இல்லை என மகள் வைரமுத்து, தாய் பொன்னம்மாள் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டனர்.

4-வது ஒருநாள் போட்டி: நியூசிலாந்தின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இந்தியா திணறல்

ஹாமில்டன்: நியூசிலாந்துக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டியில் இந்திய அணி அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. இந்தியா 17 ஓவர்களில் 40 ரன்களுக்கு 7 விக்கெட்டுகளை இழந்து தடுமாறி வருகிறது. நியூசிலாந்தின் போல்ட் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

கோவை அருகே மீண்டும் ஊருக்குள் புகுந்த காட்டு யானை

கோவை: கோவையில் வனத்துறையினர் பிடித்து காட்டுக்குள் விட்ட யானை  ஊருக்குள் திரும்பியதால் அப்பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். பொள்ளாச்சி அருகே கோட்டூர், அங்கலங்குறிச்சியில் புகுந்த யானையை விரட்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கும்கி யானை உதவியுடன் டாப்ஸ்லிப்பில் விடப்பட்ட யானை மீண்டும் ஊருக்குள் புகுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கேரளா சட்டசபையில் பட்ஜெட் தாக்கல்

திருவனந்தபுரம்: கேரளா சட்டசபையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது. இந்தாண்டிற்கான பட்ஜெட்டை அம்மாநில நிதியமைச்சர் டி.எம்.தாமஸ் ஐசக் தாக்கல் செய்தார்.

தூத்துக்குடி – சென்னை விமானத்தில் இன்ஜின் கோளாறு

தூத்துக்குடி : தூத்துக்குடியில் இருந்து 70 பயணிகளுடன் சென்னை செல்ல இருந்த இண்டிகோ விமானத்தில் இன்ஜின் கோளாறு ஏற்பட்டது. விமானம் அவசர அவசரமாக தரையிறக்கப்பட்டதால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.