Month: February 2019

கூட்டுறவு சார் பதிவாளரிடம் ரூ. 1.50 லட்சம் லஞ்ச பணம் பறிமுதல்

நெல்லை: மானூர் கூட்டுறவு சார் பதிவாளர் சந்தனராஜிடம் ஒன்றரை லட்சம் லஞ்சப்பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. நெல்லையில் கிடங்கு ஒன்றில் நியாய விலைக்கடை ஊழியர்களிடம் லஞ்சம் வாங்கும் போது பிடிப்பட்டார். சந்தனராஜ் லஞ்சம் வாங்கும்போது கையும் களவுமாக பிடித்து லஞ்ச ஒழிப்பு போலீஸ் தீவிர விசாரணை நடத்துகின்றனர்.

காரைக்காலில் 2 இலங்கை மீனவர்கள் கைது

காரைக்கால்: காரைக்காலில் எல்லைதாண்டி மீன்பிடித்ததாக இலங்கை மீனவர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இலங்கை மீனவர்களை கைது செய்து கடலோர காவல்படை காரைக்கால் துறைமுகம் அழைத்து சென்றது. படகில் எஞ்சின் கோளாறால் இந்திய எல்லைக்குள் வந்ததாக கைதான இலங்கை மீனவர்கள் தகவல் அளித்துள்ளனர்.

சென்னை தேனாம்பேட்டையில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளை

சென்னை: சென்னை தேனாம்பேட்டையில் கார் கண்ணாடியை உடைத்து ரூ.10 லட்சம் கொள்ளையடிக்கப்பட்டுள்ளது. வெங்கடேஸ்வரா மருத்துவமனை எதிரே நிறுத்தியிருந்த தொழிலதிபர் வெங்கடாசலத்தின் காரை உடைத்து திருட்டு சம்பவம் நடந்துள்ளது. சிசிடிவி காட்சி பதிவுகளை கொண்டு திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்களை போலீஸ் தேடி வருகிறது.

குற்ற வழக்குகளில் காவல்துறையினரின் புலன் விசாரணை குறித்து நீதிபதி அதிருப்தி

சென்னை: குற்ற வழக்குகளில் காவல்துறையினரின் புலன் விசாரணை தரம் தாழ்ந்துவிட்டது என்று நீதிபதி வேதனை தெரிவித்துள்ளார். குற்றவழக்கில் கைது செய்யப்பட்டு 264 நாட்கள் சிறையில் அடைக்கப்பட்டிருந்தவருக்கு ஜாமீன் வழங்கி உத்தரவிட்டனர். எண்ணிக்கைக்காக காவல்துறையினர் வழக்குகளை பதிவு செய்கின்றனரோ என்ற அச்சம் எழுகிறது என நீதிபதி தெரிவித்துள்ளார். காவல்துறையின் புலன் விசாரணை நடைமுறைகளை மேம்படுத்துவதற்கான வழிகளை காணவேண்டும் என நீதிபதி தெரிவித்தார். அடையாள அணிவகுப்பு நடத்தததால் எந்த ஆதாரமும் இல்லாமல் புகார் அடிப்படையில் விசாரிக்க வேண்டியுள்ளது.

மக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி மனிதநேய ஜனநாயக கட்சி விளக்கம்

சென்னை: மக்களவை தேர்தலில் யாருக்கு ஆதரவு என்பது பற்றி மனிதநேய ஜனநாயக கட்சி விளக்கம் அளித்துள்ளது. மக்களவை தேர்தலில் காங்கிரஸ் உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகளுக்கு ஆதரவு என மனித நேய ஜனநாயக கட்சி தலைவர் தமிமுன் அன்சாரி தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தான் வெளியுறவுத்துறை அமைச்சகத்தில் பாகிஸ்தானுக்கான இந்திய தூதர் நேரில் வலியுறுத்தல்

டெல்லி: இந்திய விமானப்படை வீரர் அபிநந்தனை பத்திரமாக இந்தியாவிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும் என பாகிஸ்தானில் உள்ள இந்திய தூதர் அந்நாட்டு வெளியுறவு அமைச்சகத்திடம் வலியுறுத்தியுள்ளார். மேலும் அபிநந்தனை ஒப்படைக்குமாரு நேற்று இந்தியாவிலுள்ள பாகிஸ்தான் துணை தூதரிடம் வெளியுறவுத்துறை வலியுறுத்தியிருந்தது குறிப்பிடத்தக்கது.

டெல்லியில் மாலை 6.30 மணிக்கு அனைத்துக்கட்சி கூட்டம்

டெல்லி: டெல்லியில் மாலை 6.30 மணிக்கு பிரதமர் தலைமையில் அனைத்துக்கட்சி கூட்டம் நடைபெறுகிறது. அனைத்துக் கட்சி கூட்டத்திற்கு கட்சி தலைவர்கள் அனைவருக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

தீவிரவாத முகாமை அழிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவு

டெல்லி: ஜெய்ஷ்-இ-முகமது தீவிரவாத முகாமை அழிக்க இந்தியாவுக்கு அமெரிக்கா ஆதரவாக இருப்பதாக கூறியுள்ளது. மேலும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித்தோவலுடன் அமெரிக்க வெளியுறவு செயலர் மைக் பேசியது குறிப்பிடத்தக்கது.

உளுந்தூர்பேட்டை அருகே கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற அரசு பேருந்துகள் கண்ணாடி உடைப்பு

உளுந்தூர்பேட்டை: உளுந்தூர்பேட்டை அருகே செம்பியன்மாதேவி கிராமத்தில் கள்ளக்குறிச்சி நோக்கி சென்ற 3 அரசு பேருந்துகள் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்து சேதம் செய்துள்ளனர். மேலும் எலவனாசூர்கோட்டை போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இலங்கை அதிபர் சிறிசேனவை கொலை செய்ய முயன்றதாக கைதான கேரளா இளைஞர் விடுவிப்பு

இலங்கை: இலங்கை அதிபர் சிறிசேனவை கொலை செய்ய முயன்றதாக கடந்த அக்டோபர் மாதம் கைதான கேரளாவை சேர்ந்த தாமஸ் என்பவரை இலங்கை நீதிமன்றம் விடுவித்தது. மேலும் இலங்கை அதிபரை கொலை செய்ய இந்தியா சதித்திட்டம் தீட்டியதாக குற்றச்சாட்டு எழுந்தது குறிப்பிடத்தக்கது.

2வது டி20 போட்டி: இந்தியாவை 7 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் வீழ்த்தியது ஆஸ்திரேலியா

பெங்களூரு: இந்தியாவுக்கு எதிரான 2-வது டி 20 போட்டியில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ஆஸ்திரேலியா அணி 2 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் விளையாடியது. இரு அணிகளுக்கும் இடையிலான 2 -வது டி 20 போட்டி பெங்களூருவில் நடைபெற்றது. இப்போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதனையடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 190 ரன்கள் எடுத்தது.

அடுத்த 72 மணி நேரம் மிக முக்கியமானது

இந்திய வான் எல்லையில் பாகிஸ்தான் விமானங்கள் அத்துமீறிய சிறிது நேரத்தில் பேட்டி அளித்த பாகிஸ்தான் ரயில்வே அமைச்சர் ஷேக் ரஷித் அகமது கூறுகையில், ‘‘அடுத்த 72 மணி நேரம் மிக முக்கியமானது. இந்தியாவுடன் போர் மூண்டால், அது 2ம் உலகப் போருக்கு பின்னரான மிகப்பெரிய கொடூரமான போராக இருக்கும். அதுவே கடைசி போராகவும் இருக்கும். பாகிஸ்தானும் முழுமையாக தயார்நிலையில் இருக்கிறது’’ என எச்சரித்துள்ளார்.

அண்டை நாடுகள் கவலை

இந்தியா-பாகிஸ்தான் இடையே போர் மூளும் சூழல் ஏற்பட்டுள்ளதைத் தொடர்ந்து, சீனா மட்டுமின்றி இலங்கை, நேபாளம் உள்ளிட்ட அண்டை நாடுகள் கவலை தெரிவித்துள்ளன. இரு நாடுகளும் பேச்சுவார்த்தையை முன்னெடுக்க வேண்டுமென அனைத்து நாடுகளும் ஒட்டு மொத்தமாக குரல் கொடுத்து வருகின்றன.

புதுப்பேட்டையில் 80 காவலர் குடியிருப்புகள்

சென்னை: சென்னை-புதுப்பேட்டையில் 80 காவலர் குடியிருப்புகள், மாதவரத்தில் 1 கோடியே 58 லட்சத்து 37 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள மாதவரம் பால் பண்ணை காவல் நிலைய கட்டிடம், காஞ்சிபுரம் மாவட்டம் தாம்பரம், தீயணைப்பு மற்றும் மீட்புப்பணிகள் நிலையத்தில் 1 கோடியே 37 லட்சத்து 62 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள வான்நோக்கி உயரும் 104 மீட்டர் நீளம் கொண்ட ஏணி ஊர்தியினை நிறுத்துவதற்கான கட்டிடம் என மொத்தம், 55 கோடியே 67 லட்சத்து 33 ஆயிரம்

மயிலாப்பூர் இன்ஸ்பெக்டருக்கு பிடிவாரன்ட்

சென்னை: சென்னை மயிலாப்பூரில் இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் சேகர்சிங். இவர், கடந்த 2011-12ல் நெல்லை மாவட்டம் சேரன்மகாதேவியில் இன்ஸ்பெக்டராக பணியாற்றினார். அப்போது 9 திருட்டு வழக்குகள், சேரன்மகாதேவி மாவட்ட உரிமையியல் நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இந்த வழக்கு விசாரணைக்காக பலமுறை சம்மன் அனுப்பியும் இன்ஸ்பெக்டர் சேகர்சிங் ஆஜராகவில்லை. இதையடுத்து நீதிபதி ஜெனிதா நேற்று  இன்ஸ்பெக்டர் சேகர்சிங்குக்கு பிடிவாரன்ட் பிறப்பித்து உத்தரவிட்டார்.

இந்தியாவின் பாதுகாப்புக்கு மத்திய அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம் : எதிர்க்கட்சிகள் தீர்மானம்

டெல்லி : இந்தியாவின் பாதுகாப்புக்கு மத்திய அரசு எடுக்கும் அனைத்து நடவடிக்கைகளுக்கும் துணை நிற்போம் என நாடாளுமன்ற வளாகத்தில் நடைபெற்ற எதிர்க்கட்சிகளின் ஆலோசனை கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த கூட்டத்தில் அனைத்து எதிர்கட்சி தலைவர்களும் பங்கேற்றனர்.