Month: April 2019

ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு விஜய் சேதுபதி சார்பில் ரூ.5 லட்சம் பரிசு

திருச்சி: ஆசிய தடகள போட்டியில் தங்கம் வென்ற கோமதிக்கு விஜய் சேதுபதி சார்பில் ரூ.5 லட்சம் பரிசுத்தொகை வழங்கப்பட்டது. திருச்சியில் கோமதியிடம் நடிகர் விஜய் சேதுபதி சார்பில் ரசிகர் மந்திரத்தை மாநில பொறுப்பாளர்கள் பரிசு வழங்கினர்.

நேபாளத்தில் இமயமலையின் அடிவாரத்தில் ‘எட்டி’ எனப்படும் பனிமனிதன்!

நேபாளம்: நேபாளத்தில் இமயமலையின் அடிவாரத்தில் எட்டி எனப்படும் பனிமனிதனின் கால் தடத்தை கண்டதாக ராணுவ வீரர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். பனி மனிதன் கால்தடம் மிகப்பெரியதாக இருந்ததாக ராணுவ வீரர்கள் கூறியுள்ளனர். பனி மனிதன் பற்றி பல ஆண்டுகளாகவே நேபாளத்தில் பொதுமக்களிடையே கருத்து நிலவி வருகிறது

ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ்

டெல்லி: காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு மத்திய உள்துறை அமைச்சகம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது. பிரிட்டிஷ் குடியுரிமை பிரச்சனை குறித்து விளக்கம் அளிக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டுள்ளது.

நாடுமுழுவதும் 4-ம் கட்ட மக்களவை தேர்தலில் கணக்கில் வராத ரூ. 785 கோடி பணம் பறிமுதல்

டெல்லி: 4-ம் கட்ட மக்களவை தேர்தலின் போது நாடுமுழுவதும் கணக்கில் வராத ரூ. 785 கோடி பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. ரூ.249 கோடி மதிப்பிலான மது பாட்டில்களும் பறிமுதல் செய்யப்ட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது

நெல்லை அருகே 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை

நெல்லை : நெல்லை மாவட்டம் சேந்திமங்கலம் அருகே 10-ம் வகுப்பு தேர்வில் தோல்வியடைந்ததால் மாணவர் ஒருவர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். அழகியபாண்டியபுரத்தை சேர்ந்த மாணவர் சுரேந்தர்(18) தூக்கிட்டு தற்கொலை கொண்டார்.

10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் 4,395 மாற்றுத்திறனாளிகள் தேர்ச்சி

சென்னை: 10-ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்வு எழுதிய 4,816 மாற்றுத்திறனாளிகளில் 4,395 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதைபோல் தேர்வு எழுதிய 152 சிறை சிறைக்கைதிகளில் 110 பேர் தேர்ச்சி அடைந்துள்ளனர். 

4-ம் கட்ட மக்களவை தேர்தல்: காலை 9 மணி நிலவரப்படி பீகாரில் 10.76% வாக்குப்பதிவு

டெல்லி: 4-ம் கட்ட மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவில் காலை 9 மணி நிலவரப்படி பீகாரில் 10.76%, ஜம்மு-காஷ்மீரில் 0.61%, மத்திய பிரதேசத்தில் 11.11%, மகாராஷ்டிராவில் 5.87%, ஒடிசாவில் 8.34%, ராஜஸ்தான் – 11.20%, உத்தரபிரதேசம் – 9.01%, மேற்கு வங்கம் – 16.89%, ஜார்க்கண்ட் – 12% வாக்குகள் பதிவாகின. 9 மாநிலங்களில் உள்ள 72 தொகுதிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெறுகிறது. மக்கள் ஆர்வமுடன் வாக்களித்து வருகின்றனர்.

நிர்மலா சீதாராமன் சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வே பெங்கியுடன் சந்திப்பு

டெல்லி: பாதுகாப்பு துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், சீனாவின் பாதுகாப்பு துறை அமைச்சர் வே பெங்கியை  சந்தித்து பேச்சு வார்த்தை நடத்தினார். ‘ Shanghai Cooperation Organisation’, என்ற அமைப்பில் சந்தித்து இருநாட்டு  பாதுகாப்பு குறித்து  ஆலோசனையில் ஈடுபட்டனர்.

4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு: விஜயகாந்த் அறிவிப்பு

சென்னை: 4 தொகுதி இடைத்தேர்தலில் அதிமுகவுக்கு தேமுதிக ஆதரவு என தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார். இடைத்தேர்தலில் அதிமுக வேட்பாளர்கள் வெற்றிக்கு தேமுதிக உதவும் என்றும் தெரிவித்துள்ளார்.

காஞ்சிபுரம் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் மதுராந்தகம் அருகே தற்கொலை செய்து கொண்ட மாணவி 10 ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் தேர்ச்சி பெற்றார். தோல்வி அடைந்து விடுவோம் என்ற அச்சத்தில் தேர்வு முடிவு வரும் முன்பே மாணவி சந்தியா காலையில் தற்கொலை செய்து கொண்டார்

‘நமது குப்பை, நமது பொறுப்பு’ தலைப்பில் துப்புரவு ஊழியர்கள் ஆலோசனை

புழல்: சென்னை மாநகராட்சி மாதவரம் மண்டலம், புழல் 23வது வார்டு பகுதியில் துப்புரவு பணியாளர்கள், கொசு மருந்து அடிப்பவர்கள் மற்றும் சுகாதாரத்துறை ஊழியர்களுக்கு நேற்று விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மாதவரம் மண்டல அலுவலர் தேவேந்திரன் தலைமை தாங்கினார். அப்போது ஊழியர்களிடம் ‘‘நமது குப்பை, நமது பொறுப்பு’’ என்ற தலைப்பில் மக்கும் குப்பை, மக்காத குப்பைகளை தரம் பிரித்தல், சாலையில் குப்பைகள் தேங்காமல் இருக்கவும், அவற்றினால் நோய்கள் பரவுவதை தடுக்கவும் பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என

மைசூரு தசரா யானை துரோணா மாரடைப்பால் சாவு

மைசூரு: கர்நாடகா மாநிலம், மைசூருவில் ஆண்டுதோறும் நடைபெறும் உலக புகழ்பெற்ற தசரா விழாவில் கடந்த மூன்று முறை துரோணா  (39) யானை கலந்து கொண்டது. இந்த யானை நாகரஹொலே தேசிய வனவிலங்கு  பூங்காவில் வைத்து பராமரிக்கப்பட்டு வந்தது. கடந்த மாதம் மத்திகோடு யானைகள் முகாமில் காட்டு யானைகளுடன் ஏற்பட்ட மோதலில் துரோணாவுக்கு இடுப்பு  பகுதியில் எலும்பு முறிவு ஏற்பட்டது. இதற்காக, முகாமில் தீவிர சிகிச்சை  அளிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில், நேற்று மாலை திடீர் என்று துரோணாவுக்கு  மாரடைப்பு

கொச்சுவேலி-கிருஷ்ணராஜபுரம் சிறப்பு ரயில்

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிடப்பட்டுள்ள அறிக்கை:கொச்சுவேலி-கே.எஸ்.ஆர்.புரம் இடையே சுவிதா சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. இந்த ரயில் கொச்சுவேலியில் ஞாயிற்றுக்கிழமைகளில் மாலை 5 மணிக்கு புறப்பட்டு (ஏப். 28, மே 5, 12, 19, 26, ஜூன் 2, 9, 16, 23, 30) மறுநாள் காலை 8.45 மணிக்கு கே.எஸ்.ஆர்.புரத்தை சென்றடையும். மறுமார்க்கத்தில் கே.எஸ்.ஆர்.புரத்தில் இருந்து திங்கட்கிழமைகளில் மதியம் 2 மணிக்கு புறப்பட்டு (ஏப்ரல் 29, மே 6, 13, 20, 27, ஜூன் 3, 10,

ரயில்கள் இன்று ரத்து

சென்னை: தெற்கு ரயில்வே வெளியிட்ட அறிக்கை: மேல்பாக்கம்-அரக்கோணம் இடையே பராமரிப்பு பணி இன்று நடக்கிறது. இதையொட்டி சென்னை கடற்கரை-அரக்கோணம்-செங்கல்பட்டு-தாம்பரம்-சென்னை கடற்கரை மற்றும் சென்னை கடற்கரை-தாம்பரம்-செங்கல்பட்டு-அரக்கோணம்-சென்னை கடற்கரை ரயில்கள் முழுவதும் ரத்து செய்யப்படுகிறது. பெங்களூருவில் இருந்து காலை 9.15 மணிக்கு அரக்கோணத்திற்கு புறப்படும் ரயில், ஜோலார்பேட்டை வரை மட்டுமே இயக்கப்படும்.

ஏப்ரல் 28 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.85, டீசல் ரூ.70.34

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.85 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.34-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.