Day: May 1, 2019

என்டிஆர் சினிமா வெளியிட தேர்தல் ஆணையம் தடை

அமராவதி: ஆந்திராவின் முன்னாள் முதல்வரும் பிரபல நடிகருமான என்.டி.ராமராவின் வாழ்க்கையை சித்தரிக்கும் `லட்சுமியின் என்டிஆர்’ என்ற சினிமாவை வெளியிட,  அதன் இயக்குநர் ராம்கோபால் வர்மாவுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. இந்த திரைப்படம் இன்று வெளியாக இருந்த நிலையில், தேர்தல் ஆணையம்  இத்தடையை விதித்துள்ளது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் இருக்கும் வரையில் இப்படத்தை வெளியிடக் கூடாது என்று ஆந்திர மாநில தலைமை தேர்தல்  அதிகாரி கோபால் கிருஷ்ண துவிவேதி  தெரிவித்திருக்கிறார். இப்படத்தில் என்டிஆர்.ரின் மனைவி லட்சுமி பார்வதி

ஒடிசாவில் வி‌ஷ சாராயம் குடித்த 7 பேர் பலி

புவனேஷ்வர்: ஒடிசாவில் வி‌ஷ சாராயம் குடித்த 7 பேர் உயிரிழந்தனர்.ஒடிசா மாநிலம் பாரிகாட் கிராமத்தில் நேற்று முன்தினம் தேர்தல் நடந்தது. தேர்தல் முடிவடைந்ததை ெகாண்டாடும் வகையில் இரவு பலர் சாராயம் குடித்துள்ளனர். அது விஷசாராயமாக இருந்தது அவர்களுக்கு தெரியவில்லை. இதனால் சுற்றுவட்டார பகுதியில் இந்த வி‌ஷ சாராயத்தை குடித்த 7 பேர் பலியாகி உள்ளனர். மேலும் 40 பேர் ஆபத்தான நிலையில் கட்டாக்கில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து

ஓ.பி.எஸ் பிரசாரம்

சென்னை: நான்கு தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர்களை ஆதரித்து ஓ.பன்னீர்செல்வம் 4 நாட்கள் பிரசாரம் செய்கிறார்.அதிமுக தலைமை கழகம் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கை: 4 சட்டமன்ற தொகுதிகளுக்கான இடைத்தேர்தலில் அதிமுக ஒருங்கிணைப்பாளரும், துணை முதல்வருமான  ஓ.பன்னீர்செல்வம் நாளை முதல் 9ம் தேதி வரை முதல்கட்ட தேர்தல் சுற்றுப்பயணம் செய்கிறார். அதன்படி நாளை திருப்பரங்குன்றம் தொகுதியிலும், 5ம் தேதி சூலூர்  தொகுதியிலும், 7ம் தேதி அரவக்குறிச்சி தொகுதியிலும், 9ம் தேதி ஓட்டப்பிடாரம் தொகுதியிலும் பிரசாரம் செய்கிறார்.

சூறைக்காற்றுக்கு கூந்தன்குளத்தில் பறவைகள் பலி

நாங்குநேரி: நெல்லை மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் நேற்று முன்தினம் மதியம் 2.30 மணிக்கு அதிவேகமாக சூறாவளியுடன் மழை பெய்தது. அப்போது நாங்குநேரி,  தென்னிமலை மற்றும் மூலைக்கரைப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் உள்ள சுமார் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்ட வாழைகள் சாய்ந்தன.கூந்தன்குளம் பறவைகள் சரணாலயத்தில் மரங்கள் வேரோடு சாய்ந்தன. காற்று, மழையில் பறவைகள் தப்பிக்க முடியாத நிலையில், மரக்கிளைகளின் இடிபாடுகளில் சிக்கி  ஆயிரத்துக்கு மேற்பட்ட பறவைகள் பலியாகின.

மே 01 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.90, டீசல் ரூ.70.44

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.90 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.44-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.