Day: May 3, 2019

மே-03 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.75.84, டீசல் ரூ.70.39

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.84 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.70.39-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

பானி புயல் எதிரொலி; ஒடிசா மாநிலத்தில் அனைத்து கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் அனைத்து கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான அதிதீவிர பானி புயல், ஒடிசாவில் இன்று பகல் கரை கடக்கிறது. இதனால், கடற்கரை மாவட்டங்களில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் குளறுபடிகள் சீரானது : தேசிய தேர்வு முகமை

மதுரை: நீட் தேர்வு ஹால் டிக்கெட்டில் நிலவி வந்த குளறுபடிகள் சரி செய்யப்பட்டுள்ளதாக தேசிய தேர்வு முகமை தெரிவித்துள்ளது. மேலும் பிரச்சினைக்குரிய மதுரை மண்டலத்தில் 6 தேர்வு மையங்கள் மாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. நீட் தேர்வுக்கு வெளியான ஹால் டிக்கெட்டில் குழப்பம் நிலவி வந்ததை சன் நியூஸ் சுட்டிக்காட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.

ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு ரெட் அலர்ட் : இந்திய வானிலை மையம்

புவனேஷ்வர்: ஒடிசா, மேற்குவங்கம், ஆந்திரா ஆகிய மாநிலங்களுக்கு இந்திய வானிலை மையம் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுத்துள்ளது. ஒடிசா பூரி கடல் பகுதியில் 73 கி.மீ. தூரத்தில் பானி புயல் மையம் கொண்டுள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சாத்தூர் மற்றும் சிவகாசியில் நகை கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சிவகாசி சுற்றுவட்டாரங்களில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தூரை சேர்ந்த ராஜ்குமார், நவீன் ஆகியோரை கைது செய்த போலீஸ், அவர்களிடம் இருந்து 61 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தது.

பாம்புகளுடன் விளையாடிய பிரியங்கா காந்தி: பாம்பாட்டிகளின் குறை கேட்டறிந்தார்

தனது தாய் சோனியா காந்திக்கு ஆதரவாக ரேபரேலி தொகுதியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்கா காந்தி, பாம்புகளுடன் விளையாடி, பாம்பாட்டிகளிடம் குறைகளைக் கேட்டறிந்தார். உத்தரப்பிரதேசத்தில் உள்ள ரேபரேலி மக்களவைத் தொகுதியில் காங்கிரஸ் மூத்த தலைவர் சோனியா காந்தி போட்டியிடுகிறார். அவருக்கு ஆதரவாக காங்கிரஸ் கட்சியின் பொதுச்செயலாளரும், அவரின் மகளுமான பிரியங்கா காந்தி இன்று தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்டார். அப்போது, ஹன்சா கா புர்வா கிராமத்துக்கு இன்று சென்ற பிரியங்கா காந்தி அங்கிருந்த பாம்பாட்டிகளிடம் பிரச்சினைகளைக்

சிபிஎஸ்இ +2 தேர்வு முடிவு: 96.4% மதிப்பெண் பெற்ற கேஜ்ரிவால் மகன்; ஸ்மிருதி இரானி மகன் மார்க் எத்தனை?

சிபிஎஸ்இ +2 வகுப்புகளுக்கான பொதுத்தேர்வு முடிவுகள் இன்று இணையதளத்தில் வெளியாகின. இதில் டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலின் மகன் புல்கித் கேஜ்ரிவால் 96.4% மதிப்பெண்கள் பெற்று முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றுள்ளார். நாடு முழுவதும் ஏப்ரல் 4-ம் தேதியன்று தேர்வு முடிந்த நிலையில், ஒரு மாதத்துக்குள்ளாக முடிவுகளை சிபிஎஸ்இ வெளியிட்டுள்ளது. இந்த தேர்வை 18.1 லட்சம் மாணவர்கள் மற்றும் 12.9 லட்சம் மாணவிகள் என மொத்தம் 31 லட்சம் பேர் எழுதினர். இதில் 83.4% மாணவர்கள் தேர்ச்சி

கல்வி நிறுவனங்களில் பெண்கள் முகத்தை முழுதும் மூடும் புர்காவுக்குத் தடை : கேரள முஸ்லிம் கல்விக்கழகம் உத்தரவு

தங்கள் நிறுவன பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவிகள் முகத்தை மூடும் வகையில் புர்கா உடை அணிய தடை விதித்து கேரளா முஸ்லிம் எஜுகேஷன் சொஸைட்டி சுற்றறிக்கை அனுப்பியுள்ளது. கடந்த மாதம் ஈஸ்டர் பண்டிகையின்போது தேவாலயங்கள், நட்சத்திர விடுதிகளில் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் 250க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதை அடுத்து இலங்கையில் தற்போது முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கப்பட்டுள்ளது. இதேபோன்று இந்தியாவிலும் தேசிய பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், முஸ்லிம் பெண்கள் புர்கா அணிய தடை விதிக்கவேண்டும்

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி

கணவன் – மனைவியான இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி, புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளனர். 2007-ம் ஆண்டு வெளியான ‘ஓரம்போ’ படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் புஷ்கர் – காயத்ரி. ஆர்யா, பூஜா, லால் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். அதன்பிறகு ‘வ குவார்ட்டர் கட்டிங்’ என்ற படத்தை இயக்கினர். 2010-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. அதனைத் தொடர்ந்து, 7 வருடங்களுக்குப் பிறகு ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கினர். மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத்

சர்க்காரியா ஊழலைப் பற்றி பேசலாமா? – ஸ்டாலினுக்கு தமிழிசை பதிலடி

சர்க்காரியா ஊழலைப் பற்றி பேசலாமா? என்று பிரதமர் மோடி குறித்த ஸ்டாலினின் விமர்சனத்துக்கு தமிழிசை பதிலடி கொடுத்துள்ளார். தூத்துக்குடியில் நடைபெற்ற மே தின பேரணியில் கலந்து கொண்டார் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின். சிவப்புச்சட்டை அணிந்து பலரும் ஊர்வலமாகச் சென்றனர். இறுதியில் மே தின நினைவு சின்னத்தில் மரியாதை செலுத்திவிட்டு, நிகழ்ச்சியில் பேசினார். அப்போது, “நாட்டின் காவலாளி என பிரதமர் மோடி கூறிக்கொண்டாலும், திமுகவே உண்மையான காவலாளியாக செயல்படுவதாக தெரிவித்தார். பிரதமர் மோடி நாட்டின் காவலாளி அல்ல, நாட்டின்

அஜித் படத்தில் நடித்தது சேலஞ்சிங்காக இருந்தது: ஷ்ரத்தா ஸ்ரீநாத்

”நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சியை அகற்றினாலே வறுமையை ஒழிக்க முடியும்” என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பது…

பிரிட்டீஷார் அல்லாத முதல் எம்.சி.சி.  ‘பிரெசிடென்ட்’ : நியமனம் குறித்து குமார் சங்கக்காரா பெருமிதம்

முன்னாள் இலங்கை அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான குமார் சங்கக்காரா பெருமைக்குரிய எம்.சி.சி என்று அழைக்கப்படும் மெர்லிபோன் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக (பிரெசிடென்ட்) நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இவர் ஓராண்டுக்கு இந்த மதிப்புக்குரிய பதவியில் நீடிப்பார். 41 வயது குமார் சங்கக்காரா எம்.சி.சியின் கவுரவ ஆயுள் உறுப்பினராக இருக்கிறார்.  கடந்த 7 ஆண்டுகாலமாக செல்வாக்கு மிக்க எம்.சி.சியில் அவர் கவுரவர் ஆயுள் உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். இது குறித்து சங்கக்காரா கூறும் போது,

‘மான்ஸ்டர்’ டீஸர்

”நாடு முழுவதும் காங்கிரஸ் ஆட்சியை அகற்றினாலே வறுமையை ஒழிக்க முடியும்” என மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்திருப்பது…

துணை பாதுகாப்பு தலைவரை மணந்த தாய்லாந்து மன்னர்

தாய்லாந்து மன்னர் தனது பாதுகாவல் பிரிவின் துணை தலைவரை திருமணம் செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து முறைப்படி அவருக்கு அரசி பதவியையும் வழங்கப்பட்டுள்ளது இதுகுறித்து தாய்லாந்து  ஊடகங்கள் தரப்பில், “தாய்லாந்து மன்னர் மகா வஜ்ரலாங்கோன் புதன்கிழமை தனது பாதுகாப்புப் பிரிவின் துணை தலைவரை திருமணம் செய்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இளைய அரசி சுதிதா என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இந்த திருமணம் தாய்லாந்து அரசுமுறைப் படி நடைபெற்றது. இதில் பல பாதுகாப்பு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்” என்று

உங்களுடன் பணியாற்றக் காத்துக் கொண்டிருக்கிறேன் லாரன்ஸ் மாஸ்டர்: ஸ்ரீரெட்டி

உங்களுடன் பணியாற்றக் காத்துக் கொண்டிருக்கிறேன் லாரன்ஸ் மாஸ்டர் என்று ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தெலுங்குத் திரையுலகை பாலியல் புகார்களால் கலங்கடித்தவர் ஸ்ரீரெட்டி. பவன் கல்யாண், ராணாவின் தம்பி உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டு வைத்தவர், தமிழ்த் திரையுலகம் பக்கம் திரும்பினார். ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சிலர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ராகவா லாரன்ஸ், ‘அவரை நான் பார்த்தது கூட இல்லை. வேண்டுமானால் எனது

தேர்தலில் வாக்குகள் பெறுவதற்காக மசூத் அசார் விவகாரத்தை பேசுவதா? – பாஜகவுக்கு மாயாவதி கண்டனம்

தேர்தலில் வாக்குகளை பெறுவதற்காக மசூத் அசார் விவகாரத்தை பாஜக பேசி வருவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றம்சாட்டியுள்ளார். புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு, ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தலைவர் மசூத் அசாரை சர்வதேச தீவிரவாதியாக அறிவிக்கக் கோரி அமெரிக்கா, பிரான்ஸ், இங்கிலாந்து  உள்ளிட்ட நாடுகள் தீர்மானம் கொண்டு வந்தன. 10 நாட்களுக்குள் ஐ.நா.வில் உள்ள உறுப்பு நாடுகள் எதிர்ப்புத் தெரிவித்தால், தீர்மானம் குறித்து ஆய்வு செய்யப்படுவதாக இருந்தது. ஆனால், சீனா  தொழில்நுட்ப ரீதியாக