சாத்தூர் மற்றும் சிவகாசியில் நகை கொள்ளையில் ஈடுபட்ட 2 பேர் கைது

விருதுநகர்: விருதுநகர் மாவட்டம் சாத்தூர் மற்றும் சிவகாசி சுற்றுவட்டாரங்களில் பெண்களிடம் நகை பறிப்பில் ஈடுபட்ட 2 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். சாத்தூரை சேர்ந்த ராஜ்குமார், நவீன் ஆகியோரை கைது செய்த போலீஸ், அவர்களிடம் இருந்து 61 சவரன் நகை மற்றும் ரூ.3 லட்சம் பணத்தையும் பறிமுதல் செய்தது.