பானி புயல் எதிரொலி; ஒடிசா மாநிலத்தில் அனைத்து கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை

புவனேஷ்வர்: ஒடிசா மாநிலத்தில் அனைத்து கல்வி, தொழில் நிறுவனங்களுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. வங்கக் கடலில் உருவான அதிதீவிர பானி புயல், ஒடிசாவில் இன்று பகல் கரை கடக்கிறது. இதனால், கடற்கரை மாவட்டங்களில் வசிக்கும் 11 லட்சம் மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.