அரசு மருத்துவமனையில் அப்பாவி மக்கள் உயிரிழக்க காரணமான சுகாதாரத்துறைக்கு மு.க.ஸ்டாலின் கண்டனம்

சென்னை: அரசு மருத்துவமனையில் அப்பாவி மக்கள் உயிரிழக்க காரணமான தமிழக அரசு சுகாதாரத்துறைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார். மதுரை அரசு மருத்துவமனையில் மின்தடையால் அப்பாவி உயிர்கள் பலியாகி இருப்பது கவலையளிக்கிறது. அரசு நிர்வாகமும், சுகாதார துறையின் அலட்சியமே முழுக்காரணம். எடப்பாடி பழனிசாமி அரசு முழுப்பொறுப்பு ஏற்பதோடு தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதியும், நிவாரணமும் தேவை என்று மு.க.ஸ்டாலின் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.