தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் 12-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு

தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் முழுவதும் நாளை மாலை 6 மணி முதல் 12-ம் தேதி காலை 6 மணி வரை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்படும் என தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் கூறியுள்ளார். மேலும் பாஞ்சாலங்குறிச்சியில் மே 10 மற்றும் 11-ம் தேதிகளில் நடைபெறவுள்ள வீரசக்கதேவி ஆலய திருவிழாவில் அசம்பாவிதங்களை தடுக்கும் பொருட்டு 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளதாக கூறினார்.