Day: May 10, 2019

திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை ராமநாதன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை ராமநாதன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராமநாதன் 70 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்தவர். எம்.எல்.ஏ., எம்.பி., திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் கோவை ராமநாதன்.

அயோத்தி வழக்கு: மத்தியஸ்தம் குழு அறிக்கை தர ஆகஸ்ட் 15ம் தேதி வரை அவகாசம் அளித்தது உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலம் தொடர்பான வழக்கில் அறிக்கை தர மத்தியஸ்தம் குழுவிற்கு ஆகஸ்ட் 15ம் தேதி வரை கூடுதல் அவகாசம் அளித்து உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. சமரச பேச்சுவார்த்தையை அரைகுறையாக முடிக்க விருப்பமில்லை என உச்சநீதிமன்ற நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான அரசாணை வெளியிட்டது தமிழக அரசு

சென்னை : உள்ளாட்சி தேர்தலுக்காக வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டுள்ளது. வாக்குச்சாவடிகள் அமைத்தல், வாக்காளர் பட்டியலை இறுதி செய்தல் தொடர்பான பணிகளை தொடங்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது 2011ம் ஆண்டிற்கு பிறகு தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் நடத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

மதுரையில் ஒரே பாதையில் 2 ரயில்கள் நேருக்கு நேர் வந்தது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை

மதுரை : மதுரையில் ஒரே பாதையில் 2 ரயில்கள் நேருக்கு நேர் வந்தது குறித்து 2 ரயில் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில் நிலைய அதிகாரிகள் கள்ளிக்குடி தீப்சிங், திருமங்கலம் ஜெயக்குமாரிடம் துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரே தண்டவாளத்தில் மதுரை-செங்கோட்டை ரயிலும், செங்கோட்டை-மதுரை ரயிலும் நேருக்கு நேர் வந்த நிலையில் அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

அதிருப்தி அதிமுக எம்.எல்.ஏ பிரபு மீது சபாநாயகர் நடவடிக்கை எடுக்கத் தடை: உச்சநீதிமன்றம்

புதுடெல்லி: அதிமுக எம்எல்ஏ கள்ளக்குறிச்சி பிரபுவுக்கு சபாநாயகர் அளித்த நோட்டீஸுக்கு உச்சநீதிம்,அறம் தடை விதித்துள்ளது. சபாநாயகர் அனுப்பிய நோட்டீசுக்கு தடை விதிக்கக் கோரி எம்எல்ஏ பிரபு உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: விசாரணைக்கு காணொலி காட்சி மூலம் ஆஜராக சசிகலாவுக்கு நீதிமன்றம் அனுமதி

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கேள்வி விசாரணைக்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா காணொலி காட்சி மூலமாக ஆஜராக அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.ஜெ. தொலைகாட்சிக்கு வெளிநாட்டில் இருந்து எலெக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவினர் எழும்பூர் நீதிமன்றத்தில் அந்நியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதேபோல பெங்களூரு சிறையில் உள்ள

ஸ்மார்ட் சிட்டி திட்டத்தில் ரூ.6 கோடியில் 15 குளங்களை சீரமைக்க சென்னை மாநகராட்சி நடவடிக்கை

சென்னையில் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் ரூ.6.16 கோடி செலவில் 15 குளங்களை சீரமைத்து, சுற்றுச்சுவர், ஓய்வு இருக்கைகள், குழந்தைகள் விளையாட்டு உபகரணங்கள் போன்றவற்றை அமைக்க மாநகராட்சி நடவடிக்கை எடுத்து வருகிறது. சென்னையில் மழை காலங்களில் வெள்ளம் ஏற்படுவதை தடுக்கவும், மழைநீர் கடலில் சென்று வீணாக கலப்பதை தடுக்கவும், அந்தந்த பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டத்தை உயர்த்தவும் மாநகராட்சி பகுதிகளில் உள்ள நீர்நிலைகள் சீரமைக்கப்பட வேண்டும் என்று நீரியல் வல்லுநர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இந்நிலையில், மாநகரப்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேவை செய்ய மருத்துவர்கள் முன்வர வேண்டும்: ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தல்

ஆரம்ப சுகாதார நிலையங்களில் சேவை செய்ய மருத்துவர்கள் முன்வர வேண்டும் என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் வலியுறுத்தியுள்ளார். சென்னை எழும்பூரில் உள்ள இந்திய செஞ்சிலுவை சங்கத்தின் தமிழ்நாடு கிளை அலுவலகத்தில், உலக செஞ்சிலுவை தின விழா நேற்று கொண்டாடப்பட்டது. இந்த விழாவில் சிறப்பு விருந்தினராக தமிழக ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பங்கேற்று செஞ்சிலுவைச் சங்க கொடியை ஏற்றி வைத்தார். இதைத் தொடர்ந்து, சிறப்பு மருத்துவ முகாமைத் தொடங்கி வைத்தார். பின்னர், பெண்கள் மற்றும் மாற்றுத்திறனாளிகளுக்கு தையல் இயந்திரம்,

பொறியியல் பட்டம் முடிக்காதவர்களுக்கு அரியர் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு: அண்ணா பல்கலைக்கழகம் அறிவிப்பு

பழைய மாணவர்களுக்கு அரியர் தேர்வு எழுத மீண்டும் வாய்ப்பு வழங்க அண்ணா பல்கலைக்கழகம் முடிவு செய்துள்ளது. அண்ணா பல்கலைக்கழகத்தின் ஆட்சிமன்றக் குழு கூட்டம் சென்னையில் நேற்று நடந்தது. இதில் உயர்கல்வித் துறை செயலர் மங்கத்ராம் சர்மா, துணைவேந்தர் சுரப்பா, பதிவாளர் குமார் உட்படமுக்கிய நிர்வாகிகள் கலந்துகொண்டனர். கல்விக் கட்டண உயர்வு, அரியர் தேர்வு முறை, புதிய பதிவாளர் நியமனம், நிதி பற்றாக்குறை உள்ளிட்ட பிரச்சினைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. கூட்டம் முடிந்த பின்னர் செய்தியாளர்களிடம் பதிவாளர் குமார்

நடுவிரலில் மை வைக்கப்படும்; மறு வாக்குப்பதிவுக்கான வாக்குச்சாவடிகள் அறிவிப்பு: 11 வாக்குச்சாவடிகளில் 2 வாக்குகளை பதிவு செய்ய வேண்டும்

மறு வாக்குப்பதிவு நடக்கவுள்ள 13 வாக்குச்சாவடிகளின் விவரங் களை தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. தருமபுரி, திருவள்ளூர், தேனியில் உள்ள 11 வாக்குச்சாவடிகளில் வாக்கா ளர்கள் மக்களவை, சட்டப்பேரவை இடைத்தேர்தல் என 2 வாக்குகள் பதிய வேண்டும். தமிழகத்தில் 38 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத் தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடந்தது. வாக்குப்பதிவு நாளன்று தருமபுரி மாவட்டம் பாப்பிரெட்டிபட்டி சட்டப் பேரவை தொகுதிக்கு உட்பட்ட 8 வாக்குச்சாவடிகளில் பிரச்சினை

7 பேர் விடுதலையில் ஆளுநருக்கு அழுத்தம் தரக்கூடாது: கே.எஸ்.அழகிரி கருத்து

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையில் ஆளுநருக்கு அழுத்தம் தரக்கூடாது என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று பேசியதாவது: பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்துதமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்பதும், மறுப்பதும் ஆளுநர் முடிவு. ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டோம் என்று, காங்கிரஸ் தலைமை எப்போதோ கூறிவிட்டது. 25 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வளவோ தமிழர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களையும் விடுதலை செய்யட்டும். 7 பேரையும் விடுதலை செய்யட்டும்.

தஞ்சை மாவட்டத்தில் 2 சர்க்கரை ஆலைகளில் கரும்பு விவசாயிகளின் பெயரில் ரூ.360 கோடி கடன் பெற்று மோசடி: ஆலை உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க கோரிக்கை

தஞ்சாவூர் மாவட்டத்தில் இயங்கும் 2 தனியார் சர்க்கரை ஆலைகளில் விவசாயிகளின் பெயரில் ரூ.360கோடி வங்கிக் கடன் பெற்று மோசடிசெய்த ஆலை உரிமையாளர் மீதுகுற்றவியல் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று கரும்பு விவசாயிகள் சங்கம் வலியுறுத்தியுள்ளது. இதுதொடர்பாக சங்கத்தின் மாநில பொதுச் செயலாளர் டி.ரவீந்திரன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க மாவட்டச் செயலாளர் என்.வி.கண்ணன், மாவட்டத் தலைவர் பி.செந்தில்குமார், திருஆரூரான் சர்க்கரை ஆலைகரும்பு விவசாயிகள் சங்கத் தலைவர் தம்புசாமி, செயலாளர் பி.எம்.காதர்உசேன், கரும்பு விவசாயி கபிஸ்தலம் ராமகிருஷ்ணன்ஆகியோர் தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியரிடம்

வேட்பு மனு நிராகரிப்பு விவகாரம்: தேஜ் பகதூரின் மனு தள்ளுபடி

மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்காக தமது வேட்புமனுவை தேஜ் பகதூர் அண்மையில் தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு, அவரை தமது வேட்பாளராக சமாஜ்வாதி அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, அக்கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான மற்றொரு வேட்பு மனுவையும் தேஜ் பகதூர் சமர்ப்பித்தார். ஆனால், அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. அவரது இரண்டு வேட்பு மனுக்களிலும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாகவும், கடைசியாக தாக்கல் செய்த வேட்பு மனுவில், தான் பணிநீக்கம்

தனியார் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகள் நடைமுறைக்கு வருவது எப்போது?

தனியார் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகள், நடைமுறைக்கு வருவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி தொடங்குதல், அவற்றில் புதிய பாடப்பிரிவுகள், புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வருதல், தகுதியுடைய ஆசிரியர்களை நியமனம் செய்தல், ஆகியவற்றில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வகுத்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம். இந்நிலையில் ஆசிரியர் நியமனம் செய்தல், அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில் தனியார் கல்லூரிகள் சிலவற்றில் இந்நடைமுறையைப் பின்பற்றுவதில்லை என்ற புகார் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது.

நவீன அரிசி ஆலைகளில் இருந்து காற்றில் பறக்கும் கரித்துகள்கள்: காஞ்சிபுரம் பகுதி பொதுமக்களுக்கு கடும் பாதிப்பு

காஞ்சிபுரம் பகுதியில் உள்ள பல்வேறு அரிசி ஆலைகளில் புகைப்போக்கியில் சல்லடைகள் பொருத்தப்படாததால் கரித்துகள்கள் காற்றில் பறந்து மக்களுக்கு பல்வேறு வகையான பாதிப்புகளை ஏற்படுத்துகின்றன. இந்த விஷயத்தில் மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் வேகமாகச் செயல்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் சமூக ஆர்வலர்கள் வலியுறுத்துகின்றனர். காஞ்சிபுரம் மற்றும் சுற்று வட்டாரப் பகுதிகளில் அதிக நெல் விவசாயம் நடைபெறுகிறது. நெல் விவசாயத்துக்குத் தகுந்தாற்போல் இந்தப் பகுதியில் பிள்ளையார்பாளையம், அரக்கோணம் சாலை, சாலபோகம், பஞ்சுப்பேட்டை, பாக்குப்பேட்டை, புத்தேரி, கீழம்பி மற்றும் சுற்றியுள்ள

அதிமுக ஆட்சியை யாராலும் அகற்ற முடியாது: தம்பிதுரை எம்.பி. கருத்து

மக்கள் எங்கள் பக்கம் இருக்கும்போது, அதிமுக ஆட்சியை யாராலும் அகற்ற முடியாது என்று அக்கட்சியின் மூத்த தலைவர் தம்பிதுரை எம்.பி. தெரிவித்தார். ராமேசுவரம் ராமநாதசுவாமி கோயில் தீர்த்தங்களில் மக்களவை துணை சபாநாயகர் தம்பிதுரை எம்.பி. புனித நீராடினார். பின்னர், ராமநாதசுவாமி, பர்வதவர்த்தினி அம்மனை தரிசனம் செய்தார். அதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:அதிமுக ஆட்சியை முதல்வர் பழனிசாமியும், துணை முதல்வர் பன்னீர்செல்வமும் சிறப்பாக வழிநடத்தி வருகிறார்கள். மக்கள் எங்கள் பக்கம் இருக்கும்போது, இந்த ஆட்சியை யாராலும் அகற்ற