ஆண் போட்டியாளர்களுடன் ‘ரெடி ஸ்டெடி போ’

விஜய் தொலைக்காட்சியில் ‘ரெடி ஸ்டெடி போ – சீசன் 2’, முழுக்க ஆட்டம், பாட்டம், விளையாட்டு என முற்றிலும் பெண்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில், தலா 3 பெண்கள் என 2 அணிகள் கலந்துகொள்ளும். இவர்களுக்கு சுவாரஸ்யமான இலக்குகள் (டாஸ்க்) தரப்படும். இதுவரை ஒளிபரப்பான அனைத்து அத்தியாயங்களும் இப்படித்தான் இருந்தன. ஆனால் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல, இரு அணிகள்தான். ஆனால், ஒரு அணியினர் முழுவதும் ஆண் போட்டியாளர்கள். விஜய் டிவியின் ‘கலக்கப் போவது யாரு’ நிகழ்ச்சியில்  அசத்திவரும் தீனா, சதீஷ், பாலா இதில் இடம்பெறுகின்றனர்.

நிகழ்ச்சியை ரியோ – ஆண்ட்ரூஸ் தொகுத்து வழங்குகின்றனர்.

ஆண் – பெண் அணிகளின் கலாய், கலாட்டா என கலகலப்பு நிறைந்ததாக இந்த நிகழ்ச்சி இருக்கப்போகிறது இந்த ஒரு வாரம் மட்டுமே ஆண் – பெண் போட்டியாளர்கள் பங்கேற்கும் சிறப்பு நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகிறது. அடுத்தடுத்த வாரங்களில், வழக்கம்போல பெண் போட்டியாளர்கள் மட்டுமே பங்கேற்பார்கள் என்கிறது தயாரிப்புக் குழு.