காஷ்மீர் என்கவுன்ட்டர் தாக்குதலில் தீவிரவாதி சுட்டுக் கொலை

ஜம்மு காஷ்மீரின் சோபியன் மாவட்டத்தில் நடைபெற்ற என்கவுன்ட்டர் தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார்.

சோபியன் மாவட்டத்தில் தீவிரவாதிகள் பதுங்கியிருப்பதாக பாதுகாப்புப் படையினருக்கு ரகசியத் தகவல் கிடைத்தது. இதன் அடிப்படையில் இன்று (வெள்ளிக்கிழமை) காலை ராணுவத்தினர் தேடுதல் வேட்டையில் ஈடுபட்டனர்.

இதை அறிந்த தீவிரவாதிகள், திடீர் தாக்குதலில் ஈடுபட்டனர். இதற்கு இந்திய ராணுவமும் தக்க பதிலடி கொடுத்தது.  இந்த என்கவுன்ட்டர் தாக்குதலில் தீவிரவாதி ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்டார். அவரிடம் இருந்து ஆயுதங்களும் வெடிபொருட்களும் கைப்பற்றப்பட்டன.

இந்தியத் தரப்பில் சேதம் எதுவும் ஏற்படவில்லை என்று ஆரம்பகட்டத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்திய எல்லைப் பகுதியான காஷ்மீரில் தீவிரவாதிகள் தொடர்ந்து தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.