திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை ராமநாதன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல்

சென்னை: திமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் கோவை ராமநாதன் மறைவுக்கு மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். திராவிட இயக்கத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ராமநாதன் 70 ஆண்டு காலம் கட்சிக்காக உழைத்தவர். எம்.எல்.ஏ., எம்.பி., திமுக உயர்நிலை செயல் திட்டக்குழு உள்பட பல்வேறு பொறுப்புகளை வகித்தவர் கோவை ராமநாதன்.