மதுரையில் ஒரே பாதையில் 2 ரயில்கள் நேருக்கு நேர் வந்தது குறித்து அதிகாரிகளிடம் விசாரணை

மதுரை : மதுரையில் ஒரே பாதையில் 2 ரயில்கள் நேருக்கு நேர் வந்தது குறித்து 2 ரயில் நிலைய அதிகாரிகளிடம் விசாரணை நடைபெற்று வருகிறது. ரயில் நிலைய அதிகாரிகள் கள்ளிக்குடி தீப்சிங், திருமங்கலம் ஜெயக்குமாரிடம் துறை ரீதியாக விசாரணை நடைபெற்று வருகிறது. ஒரே தண்டவாளத்தில் மதுரை-செங்கோட்டை ரயிலும், செங்கோட்டை-மதுரை ரயிலும் நேருக்கு நேர் வந்த நிலையில் அதிஷ்டவசமாக பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.