மாதிரி வாக்குப்பதிவின்போது தவறுகள் நடந்த 44 வாக்குச்சாவடிகளில் பதிவான ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும்: தேர்தல் ஆணையம் புதிய உத்தரவு 

தமிழகத்தில் மாதிரி வாக்குப்பதிவின் போது ஏற்பட்ட தவறுகள் கண்டறியப் பட்ட 44 வாக்குச்சாவடிகளில் விவிபாட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டுக் களை எண்ண வேண்டும் என்று தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

தமிழகத்தில் வாக்குப்பதிவின்போது, குறிப்பிட்ட சில வாக்குச்சாவடிகளில் அலு வலர்கள் மாதிரி வாக்குகளை பதிவுசெய்து, கட்டுப்பாட்டு இயந்திரத்தில் அழித்தது, விவிபாட் இயந்திரத்தில் அவற்றை அகற்றி யது போன்றவற்றில் தவறு செய்திருப்பது கண்டறியப்பட்டது. இதுதொடர்பான அறிக்கை தமிழக தலைமை தேர்தல் அதிகாரி மூலம் தேர்தல் ஆணையத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இதில் தேனியில் ஆண்டிப்பட்டி, பெரிய குளம் சட்டப்பேரவை தொகுதிகளுக்கு உட்பட்ட 2 வாக்குச்சாவடிகள், ஈரோட் டில் காங்கேயம் சட்டப்பேரவை தொகு திக்குட்பட்ட ஒரு வாக்குச்சாவடியில் மறு வாக்குப்பதிவுக்கு உத்தரவிடப்பட் டுள்ளது. இந்நிலையில், 44 வாக் குச்சாவடிகளில் வாக்கு எண்ணிக்கையின் போது, விவிபாட் இயந்திரத்தில் உள்ள ஒப்புகை சீட்டுகளை எண்ண வேண்டும் என்று தலைமை தேர்தல் அதிகாரிக்கு தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

இதன்படி, சென்னை வடக்கு மக்களவை தொகுதியில் பானன்தோப்பு ரயில்வே காலனி(40), காஞ்சிபுரம் – தண்டலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (132), கிருஷ்ணகிரி- டேம் எப்பாலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (103), ஒசூர் -பாஸ்தி நகராட்சி தொடக்கப்பள்ளி (63), எடப்பள்ளி ஊராட்சி ஒன்றிய தொடக்க பள்ளி (352), சேலம்- நடுப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (52), இருப் பள்ளி, செவிடனூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (128), வீரபாண்டி அட்ட வணை பூலவாரி ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி (161) ஆகிய வாக்குச்சாவடிகளில் ஒப்புகை சீட்டு எண்ணப்பட வேண்டும்.

விவிபாட் பதிவுகள்

மேலும், பெரம்பலூர்- பூவாலூர் அரசு மேல்நிலைப்பள்ளி (181), நெட்டவேலம் பட்டி ஆதிதிராவிடர் நலப்பள்ளி (85), கோடியம்பாளையம் எஸ்விடபி்ள்யூ தொடக்கப்பள்ளி (117), மாவிலிப்பட்டி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (198), கடலூர்- தொறப்பாடி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (120), வரகல் பட்டூர் அரசு உயர்நிலைப் பள்ளி (50), கொண்டூர் ஊராட்சி ஒன்றிய தொடக் கப்பள்ளி (61), சுத்துக்குளம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (226), வடலூர், வள்ளலார் குருகுலம் பள்ளி (183, 185), தஞ்சை- தஞ்சை நகராட்சி தொடக் கப்பள்ளி (43,183), வேதவிஜயாபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி(269), புலவராயன்குடிக்காடு அரசு மேனிலைப் பள்ளி(37), தூத்துக்குடி- விளாத்திகுளம் அரசு மேனிலைப்பள்ளி (193) ஆகிய வாக்குச்சாவடிகளில் விவிபாட் பதிவுகள் எண்ணப்பட வேண்டும்.

கன்னியாகுமரி- எடைக்கோடு எம்என்எம் பள்ளி (64,65) களியக்காவிளை அரசு நடுநிலைப்பள்ளி (99), நாகை- வெண் மணி ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி (100), வேதாரண்யம் ஆன்டனி மெட்ரிக் பள்ளி (200), பைன்கத்தூர் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளி (80), தெற்கு பள்ளியமேடு ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளி (215), குளிக்கரை அரசு மேனிலைப் பள்ளி (92), தென்காசி- வாக்குச்சாவடி எண் 114,115, நெல்லை- வாக்குச்சாவடி எண் 40,76,187,180,63,121 ஆகியவற்றில் உள்ள விவிபாட் இயந்திரங்களில் பதிவுகள் எண்ணப்பட வேண்டும். இவற்றில் ஒரு சில வாக்குச்சாவடிகளில் மக்களவை மற்றும் சட்டப்பேரவை இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நிகழ்ந்துள்ளது. அந்த வாக்குச்சாவடிகளில் இரண்டையும் எண்ண உத்தரவிடப்பட்டுள்ளது.