14 நகரங்களில் 100 டிகிரி வெயில்

சென்னை வானிலை ஆய்வு மைய அதிகாரிகள் கூறிய தாவது:

தெற்கு ஆந்திர கடலோர மாவட்டங்களில் வெப்ப அலை நீடித்து வருகிறது. அதன் தாக்கத்தால் தமிழகத் திலும் வெப்ப அலை நீடிக்க வாய்ப்புள்ளது. நேற்று மாலை 5.30 மணி வரை பதிவான வெப்பநிலை அளவுகளின்படி அதிகபட்ச மாக திருத்தணியில் 111 டிகிரி, வேலூரில் 109 டிகிரி, மதுரை யில் 107 டிகிரி, சென்னை நுங்கம்பாக்கம், சென்னை விமான நிலையம் ஆகிய இடங்களில் தலா 106 டிகிரி, நாகப்பட்டினம், புதுச்சேரி ஆகிய இடங்களில் தலா 104 டிகிரி, திருச்சி, பரங்கிப் பேட்டையில் தலா 103 டிகிரி, கடலூர், காரைக்கால் ஆகிய இடங்களில் தலா 102 டிகிரி, சேலத்தில் 101 டிகிரி, கரூர் பரமத்தி, நாமக்கல் ஆகிய இடங்களில் தலா 100 டிகிரி வெயில் பதிவாகி யுள்ளது.

வியாழக்கிழமை காலை 8.30 மணியுடன் நிறை வடைந்த 24 மணி நேரத்தில் பதிவான மழை அளவுகளின் படி அதிகபட்சமாக திருச்சி மாவட்டம் வளத்தி அணைக் கட்டு பகுதியில் 10 செமீ பதிவாகியுள்ளது.

தமிழகத்தில் வெப்பச் சலனம் காரணமாக அடுத்த சில தினங்களுக்கு, ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்யும். ஓரிரு இடங்களில் இடி, மின் னல் மற்றும் சூறைக் காற்றுடன் கூடிய மழையோ அல்லது கனமழையோ பெய்யக்கூடும்.