7 பேர் விடுதலையில் ஆளுநருக்கு அழுத்தம் தரக்கூடாது: கே.எஸ்.அழகிரி கருத்து

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலையில் ஆளுநருக்கு அழுத்தம் தரக்கூடாது என்று, தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் கே.எஸ்.அழகிரி தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக திருப்பூரில் செய்தியாளர்களிடம் அவர் நேற்று பேசியதாவது:

பேரறிவாளன் உட்பட 7 பேரின் விடுதலை குறித்துதமிழக அமைச்சரவையின் முடிவை ஏற்பதும், மறுப்பதும் ஆளுநர் முடிவு. ராஜீவ்காந்தி கொலையாளிகளை மன்னித்துவிட்டோம் என்று, காங்கிரஸ் தலைமை எப்போதோ கூறிவிட்டது.

25 ஆண்டுகளுக்கு மேலாக எவ்வளவோ தமிழர்கள் சிறையில் இருக்கிறார்கள். அவர்களையும் விடுதலை செய்யட்டும். 7 பேரையும் விடுதலை செய்யட்டும். சட்டம்தன் கடமையை செய்யட்டும் என்பதுதான் எங்கள் நிலைப்பாடு. இதுதொடர்பாக நீதிமன்றத்துக்கோ, ஆளுநருக்கோ அழுத்தம் தரக்கூடாது. கட்டாயப்படுத்தக்கூடாது. இவ்வாறு அவர் பேசினார்.