Day: May 13, 2019

சமூக மாற்றம் என்பது ஒவ்வொருவரின் மனதில் இருந்து வரவேண்டும்: சீமான்

சென்னை: சமூக மாற்றம் என்பது ஒவ்வொருவரின் மனதில் இருந்து வரவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் தொகுதிக்கு என்ன செய்வார் என்று பார்த்துதான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது எனவும் கூறினார். பெண்மையை போற்றவும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் குரல் கொடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.

அரவக்குறிச்சி தொகுதியில் கமல் பிரசாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி மறுப்பு

கரூர்: அரவக்குறிச்சி தொகுதி பள்ளப்பட்டியில் மக்கள் நீதி மய்யம் வேட்பாளர் மோகன்ராஜை ஆதரித்து கமல் பிரசாரம் மேற்கொள்ள போலீசார் அனுமதி மறுப்பு தெரிவித்துள்ளது. மேலும் அனுமதி மறுக்கப்பட்டதை அடுத்து அங்கு பிரசாரம் மேற்கொள்ளாமல் கமல் புறப்பட்டு சென்றார்.

குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேருக்கு குண்டாஸ்

சென்னை: தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தொடர் செயின் பறியில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் உட்பட 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் முகவரி கேட்பது  போல் நடித்து தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த கண்ணகி நகரை சேர்ந்த சேகர் (எ) சிந்துபாய் (25), மதுரை

வாலிபர் போக்சோவில் கைது

கீழ்ப்பாக்கம்:   வியாசர்பாடி கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா (21). இவர், அயனாவரம் வாட்டர் டேங்க் சாலையை சேர்ந்த 17 சிறுமியை காதலித்து வந்துள்ளார். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை  ஜோஸ்வா கர்ப்பமாக்கியுள்ளார். பின்னர், சிறுமியை அடித்து சித்ரவதை செய்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமியை தாய் வீட்டுக்கு விரட்டியுள்ளார்.  இதனால் மனமுடைந்த சிறுமியின் பெற்றோர், நேற்று முன்தினம் அயனாவரம் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து

மே-13 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.74.14, டீசல் ரூ.69.74

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.74.14 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.74-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.