குற்ற சம்பவங்களில் ஈடுபட்ட 5 பேருக்கு குண்டாஸ்

சென்னை: தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் தொடர் செயின் பறியில் ஈடுபட்டு வந்த குற்றவாளிகள் உட்பட 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர்.சென்னையில் தொடர் குற்றங்களில் ஈடுபட்டு வரும் நபர்களை குண்டர் சட்டத்தில் கைது செய்ய போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் போலீசாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதன்படி தனியாக நடந்து செல்லும் பெண்களிடம் முகவரி கேட்பது  போல் நடித்து தொடர் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்த கண்ணகி நகரை சேர்ந்த சேகர் (எ) சிந்துபாய் (25), மதுரை மாவட்டம் பசுமலை தியாகராஜன் காலனியை சேர்ந்த பாண்டியராஜ் (எ) ஒற்றைக்கண் பாண்டியராஜ் (33), கவாஸ்கர் (34), மற்றும்  கொலை வழக்கில் தொடர்புடைய அரும்பாக்கம் பெருமாள் கோயில் கார்டன் தெருவை சேர்ந்த அஜித்குமார் (எ) அஜித் (24), சங்கர் (29) ஆகிய 5 பேரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்து, சிறையில் அடைத்தனர்.