சமூக மாற்றம் என்பது ஒவ்வொருவரின் மனதில் இருந்து வரவேண்டும்: சீமான்

சென்னை: சமூக மாற்றம் என்பது ஒவ்வொருவரின் மனதில் இருந்து வரவேண்டும் என நாம் தமிழர் கட்சி ஒருகிணைப்பாளர் சீமான் கூறியுள்ளார். மேலும் தொகுதிக்கு என்ன செய்வார் என்று பார்த்துதான் நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களை நிறுத்தியுள்ளது எனவும் கூறினார். பெண்மையை போற்றவும் அவர்களின் உரிமைகளை நிலைநாட்டவும் குரல் கொடுத்து வருகிறோம் என தெரிவித்தார்.