வாலிபர் போக்சோவில் கைது

கீழ்ப்பாக்கம்:   வியாசர்பாடி கக்கன்ஜி நகரை சேர்ந்தவர் ஜோஸ்வா (21). இவர், அயனாவரம் வாட்டர் டேங்க் சாலையை சேர்ந்த 17 சிறுமியை காதலித்து வந்துள்ளார். அப்போது, திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி சிறுமியை  ஜோஸ்வா கர்ப்பமாக்கியுள்ளார். பின்னர், சிறுமியை அடித்து சித்ரவதை செய்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக இருந்த சிறுமியை தாய் வீட்டுக்கு விரட்டியுள்ளார்.  இதனால் மனமுடைந்த சிறுமியின் பெற்றோர், நேற்று முன்தினம் அயனாவரம் அனைத்து மகளிர் காவல்  நிலையத்தில் புகார் செய்தனர். போலீசார் வழக்குப்பதிவு செய்து ஜோஸ்வாவை போக்சோ சட்டத்தில் கைது செய்து சிறையில் அடைத்தனர்.