அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோவில் நாகர்கோவில்

அருள்மிகு நாகராஜா சுவாமி திருக்கோவில் நாகர்கோவில்

அருள்மிகு நாகராஜா திருக்கோயில் சுமார் ஆயிரம் ஆண்டு பழமையான திருக்கோவில். இந்த கோவிலில் மூலவர் நாகராஜா சுவாமி. இந்தக் கோவிலின் தலவிருட்சம் ஓடவள்ளி ஆகும். இந்த கோவிலின் மூலவர் சுயம்புவாகத் தோன்றிய நாகராஜா சுவாமி ஆவார், மேலும் இந்தக் கோவிலின் தெப்பக் குளம் தீர்த்தமாக அமைந்துள்ளது. முன்பு மன்னர் மார்த்தாண்ட வர்மா இந்தத் தலத்துக்கு  வந்து  தனது உடம்பில் உள்ள தோல் வியாதி குணமாக வேண்டி வழிபட்டு குணம் அடைந்தார், இதனால் அவர் மனம் மகிழ்ந்து நாகராஜ சுவாமிக்கு இந்த ஆலயத்தைக் கட்டினார்.

மேலும் ஒரு வரலாறும் இந்த கோயிலுக்கு இருக்கிறது

இந்த நாகராஜா திருக்கோவில் அமைந்திருக்கும் இடம் முன்பு வயல் அமைந்திருந்த இடமாக இருந்த காலத்தில் பெண் ஒருத்தி வயல் அறுவடை செய்து கொண்டிருக்கும் பொழுது ஒரு நாகத்தின் மேல் பட்டு இரத்தமாக வந்திருக்கிறது இந்தப் பெண் ஓடோடிச் சென்று அந்த கிராமத்தில் உள்ள மக்களிடம் சொல்ல மக்கள் ஓடி வந்து பார்த்தபோது அங்கு ஒரு நாகர் சிலை மட்டுமே இருந்தது, அந்த சிலையை சுற்றி தென்னை ஓலை கொண்டு கூரை வேய்ந்து கோயிலாக அமைத்து வழிபாடு செய்தனர்

இப்பொழுதும் இப்பொழுதும் மூலவர் அமர்ந்திருக்கும் இடம் தென்னங் கீற்றுகளால் வேயப்பட்ட இடமாகவே இருக்கிறது.

இந்த கோவிலின் மிகச் சிறந்த விஷயம்

அந்த மூலவர் அமர்ந்திருக்கும் இடம் ஏற்கனவே இருந்த வயல் இருந்த இடமாக இருப்பதினால் எப்பொழுதும் அந்த இடம் நீர் மண் நிறைந்த இடமாக இருக்கும் அந்த இடத்தில் உள்ள மண் தான் வரும் பக்தர்களுக்கு பிரசாதமாக வழங்கப்படுகிறது

இந்த கோவிலில் ஆண் நாகம்  பெண் நாகம் துவாரபாலகர்களாக இருக்கிறார்கள்

இந்த கோவிலில் எப்பொழுதும் பக்தர்கள் கூட்டம் மிக அதிகமாகவே இருக்கும் அதிலும் குறிப்பாக ஞாயிற்றுக்கிழமை அன்று சற்று அதிகமான கூட்டமாகவே இருக்கும் அதுவும் ஆவணி மாதங்களில் மிக அதிகமான பக்தர்கள் வெளியூர்களில் இருந்து வருகை தருவார்கள் ஆவணி மாதம் இந்த கோவிலில் மிகவும் சிறப்பு வாய்ந்த மாதமாக கருதப்படுகிறது

இந்தக் கோவில் ராகு கேது பரிகார கோவிலாக அமைந்திருப்பதால் வெளி மாநிலங்களிலிருந்தும் வெளி நாடுகளிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து பரிகாரம் செய்து வணங்கி விட்டு செல்கின்றனர். இந்த கோவிலில் வெளிப்புறமாக அமர்ந்திருக்கும் அரசமரத்தின் கீழ் நிறைய நாகர் சிலைகள் அமைக்கப்பட்டு உள்ளது அதில் கணபதியும் இருக்கிறார் இந்த நாகர் சிலைகளுக்கு மஞ்சள்தூள் இட்டு பால் அபிஷேகம் செய்து கணபதியை வழிபட்டு மூலவரை வணங்கி மற்றும் இதர தெய்வங்களையும் வணங்கினால் ராகு கேது தோஷ பரிகார நிவர்த்தி ஆகும் என்பதால் எல்லா ஊர்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு வந்து வழிபட்டு ஐஸ்வர்யம் அடைகின்றனர்

இந்த கோவிலில்  சிவன், கிருஷ்ணர், கன்னிமூல கணபதி, நாகமணி பூதத்தார், துர்க்கை அம்மன் ,சுப்பிரமணிய சுவாமி, ஸ்ரீ கிருஷ்ணர், ராமர், சீதா தேவி, ஆஞ்சநேயர், இடும்பன் சுவாமி, சாஸ்தா ஆகிய தெய்வங்களும் இருக்கின்றன

இந்த கோவிலில் உள்ள துர்க்கை அம்மன் நாக தீர்த்தத்தில் கிடைத்ததால் தீர்த்த துர்க்கைஎன்று அழைக்கப்படுகிறார்

இந்த கோவிலில் அதிசய நாகலிங்க பூ  மரம் ஒன்று உள்ளது, இந்த மரத்தில் பூக்கும் இந்தப் பூவானது லிங்கத்தின் மேல் நாகம் அமர்ந்து இருப்பது போல் இருக்கும்,

மேலும் இங்கு அனந்தகிருஷ்ணன் சன்னதிக்கு நேர் எதிரே கொடி மரமும் அமையப் பெற்றுள்ளது

இந்த நாகராஜா திருக்கோயில் அதிகாலை 4.30 am மணி முதல் மதியம் 11.30 am மணி வரையும் மாலை 4 pm மணி முதல் 8.30 pm மணி வரை நடை திறந்திருக்கும்

இந்தக் கோவிலில் அன்னதானமும் தொடர்ந்து நடைபெற்று வருகிறது இங்கு வரும் பக்தர்களுக்கு இருசக்கர வாகனங்கள் நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்துவதற்கு போதுமான வசதிகள் செய்யப்பட்டுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

error: Content is protected !!