About us

About us

என்னைப் பற்றி சில

என் பெயர் மகேஷ். எனது ஊர்  நாகர்கோவில், கன்னியாகுமரி மாவட்டம். நான் கடந்த 15 வருடங்களாக ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருகிறேன். உங்களுக்கு ஏதாவது சொத்துக்கள், வீடுகள், இடங்கள், தொழிற்சாலை கட்டுவதற்கான இடங்கள், வணிக வளாகங்கள் கட்டுவதற்கான இடங்கள், முதலீடுகள் செய்வதற்கான இடங்கள், ஸ்கூல், காலேஜ் கட்டுவதற்கான இடங்கள் வாங்குவதற்கு என்னை தொடர்பு கொள்ளுங்கள். தமிழ்நாடு முழுவதும் உங்களுக்கு மிகச்சிறிய கமிஷன் அடிப்படையில் நான் உதவத் தயாராக உள்ளேன்.

நான் வெளியூருக்கு எனது குடும்பத்தோடு தரிசனத்திற்கு செல்லும் பொழுது எனக்கு வந்த சில சிரமங்கள் அடிப்படையில் இந்த வலைத்தளத்தை உருவாக்கும் நோக்கம் எனக்கு வந்தது.வெளியூரிலிருந்து வரும் பக்தர்களுக்கு உதவியாக இருக்கும் என்ற நினைப்பில் இந்த வலைத்தளத்தை தொடங்கி உள்ளேன்.

சில திருக்கோவில்களில் மொபைல் கொண்டு செல்லக்கூடாது, சில திருக்கோவில்களில் ஆடை கட்டுப்பாடுகள் உள்ளன, சில திருக்கோயில்களில் தங்குமிட வசதிகள்  இருக்காது, சாப்பிடுவதற்கான வசதிகள் இருக்காது , பூஜை நேரங்கள் சரியாக நமக்கு தெரியாது, இந்த சூழலில் சிரமங்கள் தவிர்ப்பதற்காக இந்த வலைத்தளத்தை நான் உருவாக்கினேன்.

எனக்குத் தெரிந்த திருக்கோவில்களின் விபரங்களை நான் எனது வலைத்தளத்தில் தெரிவித்திருக்கிறேன், இதில் இதில் ஏதேனும் தவறுகள் உங்கள் கண்களுக்கு தெரிந்தால் அதை என் முகவரியில் தெரிவிக்கவும்,இந்த தகவல்கள் நான் கோவிலுக்கு சென்று எடுத்து வந்து தகவலாகவும் இருக்கும், கேள்வி ஞானத்தால் வந்த தகவலாகவும் இருக்கும், அல்லது பிறரிடம் கேட்டு நான் தெரிந்து கொண்டதாகவும் இருக்கும், தவறுகள் இருந்தால் மெயிலில் தெரிவித்தால் நான் சரி செய்து கொள்கிறேன்.

வேறு ஏதேனும் திருக்கோவில் தகவல்கள் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் எனது  இ-மெயிலில் தெரிவிக்கவும்,

உங்கள் ஊரில் உங்களுக்கு தெரிந்த  விவரங்களையும் இதில் சேர்க்க வேண்டும் என்று நீங்கள் விரும்பினால் இதில் காணும் ஈமெயில் ஐடியில் நீங்கள் அந்த விவரங்களை எனக்கு அனுப்பினால்,  நான் எனது வலைத்தளத்தில் பொதுமக்கள் உபயோகத்திற்காக பகிர்ந்துகொள்வேன்.

விவரங்கள் அனுப்பும் பொழுது அந்த திருக்கோயில் உடைய பூஜை நேரங்கள், அந்த திருக்கோயில்  இருக்கும் இடம், அதை எப்படி வந்தடைவது அல்லது அந்தந்த திருக்கோவில்களுக்கு அருகாமையில் உள்ள பெரிய ஊர்களில் இருந்து எப்படி அந்த கோவிலுக்கு வருவது என்ற விபரங்களையும், அந்தத் திருக்கோவில் தரிசனத்திற்கு செல்லும் பொழுது ஏதாவது உடை கட்டுப்பாடுகள் உண்டா, அந்த கோவிலில் மொபைல் போன்கள் கொண்டு செல்ல முடியுமா, இந்த விவரங்கள் எல்லாம் அனுப்பினால் பக்தர்களுக்கும் உதவியாக இருக்கும்.

அந்தத் திருக்கோவிலுக்கு அருகாமையில் பக்தர்கள் தங்குவதற்கு இட வசதிகள் உள்ளனவா, லாட்ஜுகள் உள்ளனவா, அப்படி லாட்ஜுகள் இருந்தால் தங்குவதற்கான  ஒருநாள் தொகை எவ்வளவு, அந்த திருக்கோவிலில் கார் பார்க்கிங் வசதி இருக்கிறதா, இப்படிப்பட்ட சகல விஷயங்களையும் தெரிவிக்கவும். ( நீங்கள்  முன்பின் தெரியாத  வெளி ஊருக்கு திருக்கோவில் தரிசனத்திற்காக சென்றால் சென்றால் அங்கு உங்களுக்கு என்னென்ன பிரச்சனைகள் இருக்கும் என்பதை உணர்ந்து தேவைப்பட்ட விபரங்களை எனக்கு அனுப்பு எனக்கு அனுப்பவும் )

இதில் தகவல்கள் நான் முழுமையாக இன்னமும் சேர்க்கவில்லை, இன்னும் மிக அதிகமான தகவல்களை நான் கொஞ்சம் கொஞ்சமாக பகிர்ந்து கொள்வேன். வலைத்தளம் இப்பொழுதுதான் தொடங்கப்பட்டது, மிக விரைவில் மிக தெளிவான விவரங்களை  நான் கொடுக்க இருக்கிறேன்

error: Content is protected !!