Category: அறிவியல்

அறிவியல்

முறையற்ற யோகா பயிற்சி பாதுகாப்பானது அல்ல: ஆய்வில் தகவல்

பழமையான இந்திய தியான பயிற்சியில் ஒன்றாக யோகா, மனிதர்களின் தசை மற்றும் எலும்பு வலி போக்குகிறது என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது, இதனை ஆராய்ச்சியாளர்களும் நம்பி வருகின்றனர். இந்நிலையில் முறையற்ற யோகா பயிற்சி பாதுகாப்பானது அல்ல என்று ஒரு நாளிதழில் குறிப்பிட்டுள்ளனர். அதாவது, பாடிஒர்க் அண்ட் மூவ்மென்ட் தெரஃபி என்று சொல்லக்கூடிய நாளிதழ் ஒன்று, யோகா பயிற்சியில் ஈடுபடுவதால் காயங்கள் ஏற்படும் சதவீதம் அதிகரிக்கிறது என்று அதிர்ச்சியூட்டும் தகவலை வெளியிட்டுள்ளது. யோகா பயிற்சி, தசைக்கூட்டு சீர்குலைவுகளுக்கான மாற்று

வெப்பத்தை குறைக்கும்; விலையும் குறைவு மணலுக்கு எம்-சாண்ட் செங்கலுக்கு பிளை ஆஷ்: அரசுக்கு வருவாய் தேடித்தரும் இன்ஜினியரிங் மாணவர்கள்

காரைக்குடி: செங்கலுக்கு மாற்றாக ‘பிளை ஆஷ்’ கல்லை தயாரித்து, அவற்றை விற்று அரசுக்கும் லாபம் ஈட்டி தருகின்றனர் இன்ஜினியரிங் கல்லூரி மாணவர்கள் என்றால் நம்ப முடிகிறதா? நீர்நிலைகளை பாதுகாக்க ஆற்றுமணல் விற்பனைக்கு தமிழக அரசு சில நிபந்தனைகளை விதித்துள்ளது. மேலும், மணலுக்கு மாற்றாக எம்-சாண்டை உபயோகிக்க அறிவுறுத்தி உள்ளது. கட்டுமான பணிக்கு பிரதானமே செங்கல்தான். இதனை உற்பத்தி செய்ய அதிக அளவில் கிராவல் மண் தேவை. ஆயிரம் செங்கல் உற்பத்தி செய்ய 3 டன்னுக்கு மேல் கிராவல்

செவ்வாய் மீது மட்டும் ஏன் இத்தனை ஆர்வம்?

நமது சூரியமண்டலத்தில் மனிதன் காலடி பதிக்கக்கூடிய வாய்ப்புள்ள கிரகம் ஒன்று இருக்கிறது என்றால் அது செவ்வாயாகத்தான் இருக்கும். மனிதன் சந்திரனுக்கு போய்விட்டு வந்தாலும் சந்திரன் என்பது கோள் அல்ல. அது பூமியை சுற்றிவரும் ஒரு துணைக்கோள் மட்டுமே. புதன், வெள்ளி (சுக்கிரன்) ஆகியவை மனிதன் போகமுடியாத இடங்கள். சூரியனுக்கு மிக அருகாமையில் உள்ளதால் புதன் கிரகம் வெப்பம் பூமியில் உள்ளதைபோல 11மடங்கு அதிகமாக இருக்கும். மேலும் பகல் என்பது சுமார் 3 மாதத்திற்கு இருக்கும். வெள்ளிக்கு செல்லலாம்

மனிதர்களின் செயல்பாட்டால் வனவிலங்குகளின் அழிவை பூமி சந்திக்க நேரிடும்! ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஏற்கனவே 5 முறை வெகுஜன அழிவை சந்தித்துள்ள பூமி, தற்போது 6-வது முறையாக பல உயிரினங்கள் அழியும் நிலையை சந்தித்து வருவதாக புதிய ஆய்வு ஒன்று தெரிவித்துள்ளது. ஊர்வன, பறவைகள், பாலூட்டிகள், நீர்நிலை இருவாழ்விகள் என 27,600 உயிரினங்கள் குறித்து ஆய்வாளர்கள் ஆய்வு நடத்தியுள்ளனர். இதில் 32% உயிரினங்களின் எண்ணிக்கை பெரும் சரிவை சந்தித்து வருவதடன் அவற்றின் வாழ்விடங்களும் பெருமளவு சுருங்கி வருவது கண்டறியப்பட்டு உள்ளது. சிறுத்தை, சிங்கம், ஒட்டகச்சிவிங்கி உள்ளிட்ட பாலூட்டிகளையும் சேர்த்து 9,000 முதுகெலும்பு

டெங்கு, சிக்குன்குனியா பாதிப்பு டெல்லியில் குறைவு : உச்ச நீதிமன்றத்தில் அரசு தகவல்

புதுடெல்லி: கடந்த ஆண்டைவிட சிக்குன்குனியா மற்றும் டெங்கு பாதிப்பு இந்த ஆண்டில் சற்று குறைவாகவே உள்ளது என டெல்லி அரசு, உச்சநீதிமன்றத்தில் தகவல் தெரிவித்துள்ளது. திறந்தவெளியில் தேங்கும் நீரில் ஏடியஸ் மற்றும் பெண் கொசுக்கள் தங்கள் இனப்பெருக்கத்தை பெருக்கி கொண்டு, பொதுமக்களுக்கு டெங்கு, சிக்குன்குனியா மற்றும் மலேரியா உள்ளிட்ட நோய் பாதிப்புகளை ஏற்படுத்தி வருகிறது. இந்த தாக்குதலால் பலர் பாதிக்கப்பட்டாலும், சிலர் சிகிச்சை பலனின்றி உயிரிழக்க நேரிடுகிறது. கடந்த 2015ம் ஆண்டு டெல்லியை சேர்ந்த 7 வயது

குடிநீரில் இருந்து புளூரைடுவை நாவல்பழ விதை பொடி நீக்கும்: வாய் புற்றுநோய் உள்ளிட்ட பிரச்னைகளுக்கு தீர்வு

ஐதராபாத் : குடிநீரில் அதிகப்படியாக உள்ள புளூரைடு உப்பை நீக்க நாவல்பழ விதைப்பொடி பயன்படுகிறது என்பதை இன்ஜினியர்கள் கண்டுபிடித்துள்ளனர்.நாம் குடிக்கும் குடிநீரில் புளூரைடு உப்பு உள்ளது. ஒரு லிட்டர் தண்ணீரில் ஒரு மிலி கிராம் அல்லது 1.5 மில்லி கிராமுக்கு குறைவாக புளூரைடு உப்பு கலந்திருந்தால் அது சரியான குடிநீர். இந்த அளவை தாண்டி புளூரைடு உப்பு குடிநீரில் சேர்ந்தால் எலும்பு நோய், பல் நோய், வாய் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாகி விடும். எனவே,

நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை பரப்பும் ஈக்கள்: விஞ்ஞானிகள் எச்சரிக்கை

பென்சில்வேனியன்: நாம் நினைத்ததைவிட அதிக நோய்களை ஈக்கள் பரப்புவதாக விஞ்ஞானிகள் ஆய்வில் கண்டறிந்துள்ளனர். வீட்டில் பெரும்பாலும் காணப்படும் ஈக்கள் மற்றும் நீலநிற ஈக்கள், 600 விதமான பாக்டீரியாக்களை பரப்புவதாக மரபணு ஆய்வில் தெரியவந்துள்ளது. இந்த பாக்டீரியக்கள், பெரும்பாலும், வயிற்று வலி, ரத்தத்தில் விஷம் ஏறுதல், நிமோனியா ஆகிய மனிதர்களுக்கு தொடர்புடைய நோய்களை பரப்புகின்றன. ஈக்களால், தனது கால்கள், இறக்கைகள் மற்றும் பாதங்கள் மூலமாக, நோய்களை ஒரு இடத்திலிருந்து மற்றொரு இடத்திற்குப் பரப்ப முடியும். சொல்லப்போனால், அவை எடுத்து

ஆப்ரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து: ஆய்வில் அதிர்ச்சி தகவல்

ஜெனிவா: ஆப்ரிக்க இன யானைகள் விரைவில் அழிந்துவிடும் ஆபத்து உள்ளதாக அதிர்ச்சி தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. ஸ்விட்சர்லாந்து நாட்டில் உள்ள ஜெனிவாவில் அழிந்துவரும் விளங்குகளின் பாதுகாப்பு தொடர்பான 69வது மாநாடு தொடங்கியுள்ளது. ஆப்ரிக்காவின் பல பகுதிகளில் கடந்த 2006ம் ஆண்டு முதல் சட்டத்திற்கு புறம்பாக யானைகள் வேட்டையாடப்பட்டதால் அவற்றின் எண்ணிக்கை வெகுவாக குறைந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், ஒவ்வொரு 15 நிமிடத்திற்கு ஒரு ஆப்ரிக்க யானை கொல்லப்பட்டு வருவதாகவும், கடந்த 10 ஆண்டுகளில் யானைகளின் மக்கள் தொகை 62 சதவிகிதம்

பிரபஞ்சத்தில் மேலும் ஒரு சூரியக் குடும்பம் இருப்பது உறுதியானது: கெப்ளர்-90 குடும்பத்தில் 8வது கோள் கண்டுபிடிப்பு

கலிபோர்னியா: சூரிய மண்டலத்திற்கு வெளியே பூமி அளவில் 7 புதிய கோள்கள் இருப்பதாக நாசா முன்னர் அறிவித்திருந்தது. சூரிய குடும்பத்தை போன்று இக்கோள்களும் பெரிய நட்சத்திரத்தை சுற்றி வருகின்றன. இந்த குடும்பத்திற்கு கெப்ளர் 90 என பெயரிடப்பட்டது. இந்நிலையில், அக்குடும்பத்தில் 8வது கோள் நாசாவின் கெப்ளர் ஸ்பேஸ் டெலஸ்கோப் மற்றும் அமெரிக்க விண்வெளி கழகத்தின் செயற்கை நுண்ணறிவு முறை மூலம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்த கோள் பூமியை போன்று 30 சதவீதம் அதிக எடையில் இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

150 ஆண்டுகளுக்குப் பிறகு தெரியும் அரிதான முழு சந்திர கிரகணம்: ப்ளூ மூன் என வர்ணனை!

வாஷிங்டன்: 2018-ன் முதல் சந்திரகிரகணம் இம்மாதம் 31-ம் தேதி நிகழும் என்று எதிர்பார்க்கப்படுவதாக சர்வதேச வானிலை ஆராய்ச்சி மையங்கள் தெரிவித்துள்ளன. இதற்கு மற்றுமொரு சிறப்பம்சம் என்னவென்றால், சுமார் 150 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் அரிதான முழு சந்திர கிரகணம் இது ஆகும். மேலும் இது ‘நீல நிலா’ (ப்ளூ மூன்) என்று அழைக்கப்படுகிறது. ஜனவரி 31- ம் தேதி நள்ளிரவில் இந்த முழு சந்திரகிரகணம் ஏற்படுவதால் பசிபிக் பெருங்கடல் பகுதி கொந்தளிப்புடன் காணப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தியத்

152 ஆண்டுகளுக்கு ஒருமுறை நிகழும் அதிசயம்: நீலநிலவு சந்திர கிரகணம்

பூமியானது சூரியனின் சுற்று வட்ட பாதையில் சுற்றி வருவதை கிரகண பாதை என்று அழைக்கின்றோம். சந்திரனும் பூமியை சிறு வட்டப்பாதையில் சுற்றி வருகின்றது. ஆனால் சந்திரனின் சுற்றுப்பாதை சரியான கிரகண பாதையில் அமையவில்லை. அது சுமார் 5 டிகிரி சாய்வு கோணத்தில் அமைந்துள்ளது. இதனால் மிக அரிதாக நிலவு பூமிக்கும், சூரியனுக்கும் இடையில் உள்ள கற்பனைக் கோட்டை கடக்கும் போது சூரியகிரகணம் ஏற்படுகிறது. எனவே சந்திரனின் பாதை கிரகண பாதையோடு ஒன்றியிருக்கும்போது அமாவாசையின்போது சூரிய கிரகணமும் பவுர்ணமியின்போது

1000 பிரிட்டிஷ்கால சட்டங்கள் ரத்து: உத்தரபிரதேச அரசு முடிவு

லக்னோ: நாட்டிலேயே முதல் முறையாக, உத்தரபிரதேச மாநிலத்தில் பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் உருவாக்கப்பட்ட 1,000 சட்டங்கள் ரத்து செய்யப்பட உள்ளன. உ.பி.,யில் பா.ஜ.,வைச் சேர்ந்த யோகி ஆதித்யநாத் முதல்வராக உள்ளார். தற்போதைய சூழ்நிலைக்கு பொருந்தாத, 1,000 சட்டங்களை, உ.பி., அரசு பட்டியலிட்டுஉள்ளது. இந்த சட்டங்கள் அனைத்தையும், ஒரே சட்ட திருத்த மசோதா மூலம், ரத்து செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து, உ.பி., மாநில சட்ட அமைச்சர், பிரிஜேஷ் பதக், நிருபர்களிடம் கூறியதாவது: பிரிட்டிஷ் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட 

அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி

புபனேஸ்வர் : அணு ஆயுதத்தை சுமந்து சென்று தாக்கும் அக்னி 1 ஏவுகணையை இந்தியா வெற்றிகரமாக பரிசோதித்தது. ஒடிசாவில் பரிசோதிக்கப்பட்ட ஏவுகணை 700 கிமீ தொலைவில் இருந்து இலக்கை துல்லியமாக தாக்கியது.

5.55 லட்சம் கோரிக்கை கடிதங்களுடன் பிரதமர் அலுவலகம் நோக்கி மாலிவால் பேரணி போலீசார் தடுத்ததால் தள்ளு முள்ளு

புதுடெல்லி:  பிரதமர் அலுலகத்திற்குள் உரிய அனுமதியின்றி நுைழய முயன்ற மாநில பெண்கள் ஆணைய தலைவர் சுவாதி மாலிவால் மற்றும் அவரது குழுவினர் டெல்லி போலீசாரால் வலுகட்டாயமாக இழுத்து சென்று அப்புறப்படுத்தப்பட்டனர். டெல்லியில் கடந்த ஜனவரி மாதம் 8 மாத குழந்தை பாலியல்  பலாத்காரத்துக்குள்ளானது. இந்த சம்பவத்தை அடுத்து டெல்லி பெண்கள் மற்றும்  குழந்தைகளுக்கு மீதான பாலியல் வன்முறைக்கு எதிராக  மாநில பெண்கள் ஆணைய  தலைவர் மாலிவால், ‘ரேப் ெராகோ’ இயக்கத்தை தொடங்கினார். இதன் நோக்கம்,  பாலியல் பலாத்கார

செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்ள ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டம்

வாஷிங்டன் : செவ்வாய் கிரகத்தில் ஆய்வு மேற்கொள்வதற்காக ரோபோ தேனீக்களை அனுப்ப நாசா திட்டமிட்டுள்ளது. செவ்வாய் கிரகத்தில் தண்ணீர் இருக்கிறதா, அங்கு உயிர்கள் வாழ தகுந்த சூழல் நிலவுகிறதா என இந்தியா உட்பட உலக நாடுகள் அனைத்தும் ஆய்வு நடத்தி வருகின்றன. இந்த ஆராய்ச்சியின் ஒரு பகுதியாக, அமெரிக்க விண்வெளி ஆராய்ச்சி நிறுவனமான நாசா, கியூரியாசிட்டி ரோவர் என்ற விண்கலத்தை செவ்வாய் கிரகத்துக்கு அனுப்பி வைத்தது. செவ்வாய் கிரகத்தில் உலவி வரும் கியூரியாசிட்டி ரோவர் 2 ஆயிரம்

ரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு லாலு மனைவி ரப்ரிதேவியிடம் சிபிஐ அதிகாரிகள் விசாரணை

புதுடெல்லி: பீகார் முன்னாள் முதல்வர் ரப்ரி தேவியிடம்  ரயில்வே ஓட்டல் ஒப்பந்த முறைகேடு தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் நேற்று விசாரணை நடத்தினர்.ராஷ்டிரிய ஜனதா தளம் தலைவர் லாலு பிரசாத் யாதவ் மத்திய ரயில்வே அமைச்சராக இருந்தபோது ராஞ்சி மற்றும் பூரி நகரங்களில் ஐஆர்டிசியின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த இரண்டு ஓட்டல்களை பராமரிப்பதற்காக ஒப்பந்தம் விடப்பட்டது.   வினய் மற்றும் விஜய் கோச்சாருக்கு சொந்தமான சுஜாதா ஓட்டல், இந்த இரண்டு ஓட்டல்களையும் ஒப்பந்தத்துக்கு எடுத்தது. தனது அதிகாரத்தை முறைகேடாக