Category: ஆன்மிகம்

நல்லதே நடக்கும் – இந்தநாளின் விசேஷங்கள், விழாக்கள், நல்லநேரம், சந்திராஷ்டமம்

10-05-2019 வெள்ளிக்கிழமை விகாரி 27 சித்திரை சிறப்பு: அரியக்குடி ஸ்ரீஸ்ரீநிவாசப் பெருமாள், திருமோகூர் ஸ்ரீகாளமேகப் பெருமாள் தலங்களில் உற்சவாரம்பம். திதி: சஷ்டி இரவு 9.36 மணி வரை. அதன் பிறகு சப்தமி. நட்சத்திரம்: புனர்பூசம் பிற்பகல் 2.23 வரை. அதன் பிறகு பூசம். நாமயோகம்:  சூலம் மாலை 4.34 வரை. அதன் பிறகு கண்டம். நாமகரணம்:  கௌலவம் காலை 10.39 வரை. அதன் பிறகு தைதுலம்.  நல்லநேரம்: காலை 6.00-9.00, மதியம் 1.00-3.00, மாலை 5.00-6.00, இரவு 8.00-10.00

இந்தநாள் உங்களுக்கு எப்படி? – 12 ராசிகளுக்கும் உரிய பலன்கள்

மேஷம்: மறைமுக எதிர்ப்புகள் அடங்கும். வேலை தேடியவர்களுக்கு நல்ல நிறுவனத்தில் வேலை கிடைக்கும். தாய்வழி உறவினர்களுடன் கருத்துமோதல்கள் வர வாய்ப்பிருக்கிறது. ரிஷபம்: குடும்பத்தினருடன் கலந்தாலோசித்து பழைய பிரச்சினைகளுக்கு முக்கியத் தீர்வு காண்பீர்கள். பிரபலங்களின் நட்பு கிடைக்கும். வீடு, வாகனத்தைச் சீர் செய்வீர்கள். மிதுனம்: கணவன் – மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். அரைகுறையாக நின்ற வேலைகள் முடியும். தோற்றப் பொலிவு கூடும். விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். கடகம்: தேவையற்ற விஷயங்களை நினைத்து குழம்பிக் கொண்டிருக்காதீர்கள். குடும்பத்தில் சலசலப்புகள்

சித்திரை வெள்ளி… சஷ்டி; எதிர்ப்பெல்லாம் தூள்தூளாகும்!

சித்திரை மாதத்தின் சஷ்டி, வெள்ளிக்கிழமையன்று வந்துள்ளது. ஆமாம்… இன்று 10.5.19ம் தேதி சஷ்டி. முருகப்பெருமானுக்கு உரிய நன்னாளில் கந்தகுமாரனை வழிபடுங்கள். பலமும் வளமும் தந்தருள்வார் வேலவன். நம் எதிர்ப்பெல்லாம் தூள்தூளாக்கிவிடுவார் ஞானக்குமரன்! பொதுவாகவே, சஷ்டி என்பது முருகப்பெருமானுக்கு உரிய, அற்புதமான, வழிபாட்டுக்கு உரிய நாள். அதேபோல் வெள்ளிக்க்கிழமை என்பதும் குமரனை வழிபடுவதற்கு உரிய அருமையான நாள். சித்திரை மாதத்தில், வெள்ளிக்கிழமையும் சஷ்டியும் ஒருசேர வருவது கூடுதல் சிறப்பு. இன்னும் விசேஷம். இந்தநாளில், விரதம் இருந்து முருகப்பெருமானை வணங்கி

சித்ரா பெளர்ணமியில் மா, பலா, வாழை!

சித்ரா பெளர்ணமி நாளில், மா, பலா, வாழை வைத்து, பூஜிப்பதால், சகல ஐஸ்வர்யத்துடன் வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யப் பெருமக்கள். மாதந்தோறும் பெளர்ணமி நாளில், வழிபாடுகள் நடத்துவது வழக்கம். குறிப்பாக, சித்திரை மாதத்தில் வரும் பெளர்ணமி ரொம்பவே விசேஷம். சித்திரை நட்சத்திரமும் பெளர்ணமியும் கூடிய  இந்தநாள், சித்ரா பெளர்ணமி  என்று போற்றப்படுகிறது. சித்ரா பெளர்ணமி நாளில், கடல் நீராடுவது சிறப்பு. இந்தநாளில், கடலில், ஆற்றில் என நீர்நிலைகளில் நீராடினால், மகா புண்ணியம்  என்கிறது சாஸ்திரம். மேலும் நீர்நிலைகளில் நீராடினால்,

ஸ்ரீராம நவமி; சுந்தரகாண்டம் படித்தால் சுபிட்சம் நிச்சயம்!

நாளைய தினம் 13.4.19 சனிக்கிழமை அன்று ஸ்ரீராம நவமி. இந்த அற்புதமான நாளில், சுந்தரகாண்டம் பாராயணம் செய்யுங்கள். வாழ்வில் சுபிட்சம் கிடைப்பது உறுதி, நவக்கிரக தோஷங்கள் அனைத்தும் விலகும் என்பது நிச்சயம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். ஸ்ரீராமபிரான் அவதரித்த நன்னாள் என்பதாலேயே பங்குனி மாதம் இன்னும் மகத்துவம் வாய்ந்ததாகப் போற்றப்படுகிறது. இந்தநாளில், ஸ்ரீராமபிரானை மனதில் நிறுத்தி, வேண்டிக்கொண்டால், தடைப்பட்ட திருமணங்கள் நடந்தேறும். கருத்துவேற்றுமையால் சண்டையும்சச்சரவுமாக இருக்கும் தம்பதி, சுந்தரகாண்டம் பாராயணம் செய்து பிரார்த்தனை செய்து, வீட்டில் விளக்கேற்றினால், தம்பதி

கல்யாணத் தடை நீக்கும் பங்குனி உத்திரம்

பங்குனி உத்திர நாளில், விரதமிருந்து சுவாமி தரிசனம் செய்யுங்கள். வாழ்வில் எல்லாத் தடைகளும் நீங்கும். இதுவரை இல்லாத உன்னதத்தையும் உயர்வையும் அடைவீர்கள். தமிழ் மாதத்தின் 12வது மாதம் பங்குனி. அதேபோல் நட்சத்திரங்களில் 12வது நட்சத்திரம் உத்திரம். பங்குனியில் வருகிற உத்திரம் விசேஷம் என்று போற்றுகின்றன புராணங்கள். ‘நாங்களும் பாக்காத ஜாதகமே இல்லீங்க. இன்னும் எங்க பொண்ணுக்கு வரன் அமையல’ என்று பெண்ணைப் பெற்றவர்கள், வேதனையுடன் புலம்புவதைக் கேட்டிருக்கலாம். ‘கைநிறைய சம்பாதிக்கிறான். கண்ணும்கருத்துமா பாத்துக்கறான். அவனுக்கு ஒரு கால்கட்டு

திருச்செந்தூரில் வரம் தரும் வள்ளி கல்யாணம்; பங்குனி உத்திர ஸ்பெஷல்

திருச்செந்தூரில் பங்குனி உத்திர விழா, வருடந்தோறும் களைகட்டும். அப்போது முக்கியமான நிகழ்ச்சியாக, வள்ளி திருமணம் வெகு விமரிசையாக நடைபெறும். கல்யாணம் தள்ளிப்போகும் ஆண்களும் பெண்களும் வந்து தரிசித்தால், விரைவில் கெட்டிமேளச் சத்தம் நிச்சயம் என்பது ஐதீகம். வருகிற 21.3.19 வியாழக்கிழமை, பங்குனி உத்திர நன்னாள். இதையொட்டி, கொடியேற்றத்துடன் தொடங்கி திருச்செந்தூரில் அமர்க்களமாக நடந்து வருகிறது பங்குனி உத்திரப் பெருவிழா. பங்குனி உத்திர நாளில், திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு வந்து, ஸ்ரீவள்ளிக்கும் ஸ்ரீமுருகப்பெருமானுக்கும் நடைபெறும் திருமண வைபவத்தைக் கண்ணாரத்

இறந்தவரின் தாலியை பயன்படுத்தினால் தோஷமா?

நம் இந்திய தேசத்தில், தாலிக்கு எப்போதுமே முக்கியத்துவம் உண்டு. தங்கமாகவோ ஆபரணமாகவோ மட்டும் பார்க்கப்படுவதில்லை. அது உறவு சம்பந்தப்பட்டது. தெய்வீக உணர்வுடன் இரண்டறக் கலந்து பார்க்கப்படுவது! காலமாகிவிட்ட அம்மாவின் திருமாங்கல்யத்தை என்ன செய்யவேண்டும் என்பதில் நிறையபேருக்கு குழப்பங்கள் இருக்கின்றன. திருமாங்கல்யம் என்பது மகாலக்ஷ்மி வாசம் செய்யக்கூடிய இடம். ஆதிகாலத்தில் திருமாங்கல்யம் என்றால் ஒரு மஞ்சள் கயிற்றில் – மஞ்சள் கிழங்கை கட்டி வைத்து தாலி கட்டினார்கள். ஆதிகாலத்தில் இன்னொரு விஷயம்… ஆண்கள் பெண்கள் இருவருக்குமே தாலி என்பது

சிவனின் ஐந்து பெயர்கள்; அடையாளங்கள்

ஸ்ரீஸ்ரீரவிசங்கர் சிவன், என்பது ஆழ்ந்த மெளனத்தின்  மற்றும் அசைவற்ற நிலையின் பரப்பு; அங்கு மனதின் அனைத்து செயல்களும் களையப்படுகின்றன. நீங்கள் எங்கிருந்தாலும் இந்த இடம் கிடைக்கும். தெய்வத்தைக்  கண்டுபிடிக்க நீண்ட புனித யாத்திரை செல்ல வேண்டிய அவசியம் இல்லை. நீங்கள் இருக்குமிடத்தில்  கடவுளை நீங்கள் காணாவிட்டால், அவரை வேறு எங்கும் தேடிக் காண   முடியாது. நீங்கள் நிறுவப்பட்டு  மையமாக, இருக்கும்போது அனைத்து இடங்களிலும் தெய்வத்தைக் காண்கின்றீர்கள்  தியானத்தில் இதுதான் நிகழ்கின்றது. சிவபெருமானின் பெயர்களில் ஒன்று  ஆதியந்தாஹினம் –  

எருக்க இலை; ரத சப்தமி; பீஷ்மாஷ்டமி; தர்ப்பணம்! ஏழு ஜென்ம பாவம் போக்கும் புண்ணிய நாள்

ரத சப்தமி நன்னாளில், ஏழு எருக்கம் இலைகள், அட்சதை, அருகம்புல், பசுஞ்சாணம் முதலானவற்றைக் கொண்டு நீராடவேண்டும் என்கிறது சாஸ்திரம். இப்படி நீராடினால், சகல தோஷங்களும் நீங்கும். துர்தேவதைகள் நம்மை அண்டாது. தேக ஆரோக்கியத்துடனும் மனத்தெளிவுடனும் வாழலாம். நம் பாவங்களெல்லாம்  தொலையும், புண்ணியங்கள் பெருகும் என்கின்றன ஞானநூல்கள். மேலும் இது பீஷ்மர் சம்பந்தப்பட்டது என விவரிக்கிறது புராணம். மகாபாரத யுத்தத்தில் வீழ்ந்தார் பீஷ்மர். ஆனாலும் புண்ணியங்கள் நிறைந்த உத்தராயன புண்ய காலத்தில் இறந்தால் புண்ணியம் என மரணத்துக்காகக் காத்திருந்தார்.

நாலுபேருக்கு புளியோதரை பொட்டலம்; நலமும் வளமும் தரும் தை ஏகாதசி!

ஏகாதசி என்பது பெருமாளுக்கு உகந்த அற்புதமான விரத நாள். தை மாத ஏகாதசியில் பெருமாளை விரதமிருந்து வணங்குவோம். சகல சம்பத்துகளுடன் நோயின்றி ஆரோக்கியமாக வாழலாம் என்கிறார்கள் ஆச்சார்யர்கள். நாளை 31.1.19 வியாழக்கிழமை சர்வ ஏகாதசி. மறக்காதீர்கள்! ஏகாதசி என்பது பெருமாளுக்கு உரிய திதி என்பார்கள். அதனால்தான் வைகுண்ட ஏகாதசி என்று போற்றுகிறோம். விரதம் இருக்கிறோம். கொண்டாடுகிறோம். பொதுவாகவே, மாதந்தோறும் வரும் ஏகாதசியும் விரதத்துக்கு உரிய அற்புதமான நாள்தான். ஏராளமான பக்தர்கள், மாதந்தோறும் ஏகாதசியில், தவறாமல் விரதம் மேற்கொண்டு,

இன்று வாஸ்து வழிபாடு; வீட்டுக்கு திருஷ்டி சுற்றிப்போடுங்கள்! கடன் தொல்லை குறையும்; ஐஸ்வர்யம் பெருகும்!

‘எது எது எங்கெங்கே இருக்கணுமோ.. .அதது அங்கங்கே இருக்கணும்’ என்று சொல்வோம். ஆனால் இந்த வாசகம் எதற்குப் பொருந்துகிறதோ இல்லையோ… வாஸ்துவுக்கு சர்வநிச்சயமாகப் பொருந்தும். வாஸ்து பகவானுக்கு உரிய நாளில், அவருக்கு உரிய நேரத்தில் வீட்டை சுத்தமாக வைத்திருப்பதே வாஸ்து பகவானை வழிபடுவற்கு இணையானது என்கிறார்கள். சொல்லப் போனால், வீடுதான் வாஸ்து பகவான்; வாஸ்து பகவான் தான் வீடு! வீட்டை சுத்தமாக பெருக்கிவிட்டு, நன்றாகத் துடைத்து, முடிந்தால் எல்லா சுவாமிப் படங்களுக்கும் பூக்களைக் கொண்டு அலங்கரித்து, ஓர்

அசுர மயில் முருகன் அல்லல் தீர்ப்பான்; திருப்பம் தருவான் திருப்பட்டூர் முருகன்!

தைப்பூசம் ஸ்பெஷல் தெருவுக்குத் தெரு பிள்ளையார் கோயில்கள் இருப்பது போல், ஊரில் ஐந்தாறு இடங்களிலேனும் முருகனுக்குக் கோயில் இருப்பது உறுதி. அதேபோல், எல்லா சிவாலயங்களிலும் பிராகாரத்தில் தனிச்சந்நிதியில் அருள்பாலிக்கும் முருகப்பெருமான், விசேஷமான பரிவாரத் தெய்வங்களாக அந்தக் கோயில்களில் வணங்கப்படுவதையும் பார்க்கலாம். குன்றிருக்கும் இடமெல்லாம் குமரன் இருப்பான் என்பார்கள். குன்றிருக்கும் இடம் என்றில்லை. எல்லா ஊர்களிலும் குமரன் குடிகொண்டு, குடிமக்களை குறைவின்றி காத்துவருகிறான். சென்னை மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயிலில் உள்ள முருகப்பெருமானுக்கு தனி சக்தியும் சாந்நித்தியமும் உண்டு. அதேபோல்,

எத்தனை எத்தனை முருகன்கள்?

தைப்பூசம் ஸ்பெஷல் * ஆண்டுக்கு மூன்று முறை-…  ஐப்பசி கந்த சஷ்டி விழாவின்போதும், தை மாதம் தெப்பத் திருவிழாவின்போதும், பங்குனி மாதத் திருவிழாவின்போதும் ஆக மூன்று சூரசம்ஹாரம் நடைபெறும் சிறப்பு கொண்டது திருப்பரங்குன்றம் திருத்தலம். * யோக நிலையில் அமர்ந்திருக்கும் முருகப் பெருமானின் விக்கிரகத் திருமேனியை சென்னை திண்டிவனம் சாலையில், மதுராந்தகம் அருகில் உள்ள குமாரவாடி, ஸ்ரீஅழகேஸ்வரப் பெருமாள் கோயிலில் காணலாம். * நாமக்கல் அருகில் உள்ள கொல்லிமலையில் உள்ள ஸ்ரீபழநியப்பர் கோயிலில் உள்ள முருகன் விக்கிரகத்தில்,