Category: இந்தியா

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட 7 பேரும் வாரம் ஒருமுறை நேரில் ஆஜராக வேண்டும் என்று  சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராக தவறியதால், தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்ற நீதிபதி வினோத் பதல்கர் இந்த உத்தரவை பிறப்பித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகான் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஒரு மசூதி

மோடிக்கு வாக்களிக்க வாரணாசி வாக்காளர்கள் மிரட்டப்படுகிறார்கள்: மாயாவதி பரபரப்பு குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி வாக்காளர்கள், அவருக்கே வாக்களிக்க மிரட்டப்படுவதாக, காசு கொடுத்து விலைக்கு வாங்கப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில், “வாரணாசியில் தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடக்க வாய்ப்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அத்தொகுதியில் மீண்டும் மோடியே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வெளியாட்களை வைத்து மக்கள் மனங்களை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. சில

தேர்தலில் போட்டியிட சீட் வழங்கவில்லை: பஞ்சாப் முதல்வர் மீது சித்து மனைவி மீண்டும் புகார்

அமித்சர் தொகுதியில் போட்டியிட விரும்பினேன், ஆனால் வேறு தொகுதியில் நிற்குமாறு என்னிடம் கூறினார்கள், முதல்வர் அம்ரீந்தர் சிங் எனக்கு வாய்ப்பு வழங்க மறுத்து விட்டார் என சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் மீண்டும் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது தவறான கருத்து, போட்டியிட அவர் மறுத்து விட்டார் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 இடங்களுக்கு

‘‘300 இடங்களில் வெற்றி; மீண்டும் பாஜக ஆட்சி’’: பிரதமர் மோடி நம்பிக்கை

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான அணி 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும், மீண்டும் மோடி அரசு அமையும் என 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான கடைசிக் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. வரும் 19-ம் தேதி 7-ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன.

காந்தியை அவமதித்த பிரக்யாவுக்கு மன்னிப்பு இல்லை: பிரதமர் மோடி கடும் கண்டனம்

மகாத்மா காந்தியை அவமதித்த பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகுர் மன்னிப்பு கோரினாலும், அவரை நான் மன்னிக்க தயாராக இல்லை என பிரதமர் மோடி தெரிவித்தார். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரக்யா சிங் தாக்குர். தற்போது ஜாமீனில் இருக்கும் அவர், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலாக, பல்வேறு கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். காத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி’ என

மனைவி, பெற்றோரை வெட்டிக்கொன்றவர் தலைமறைவு; பலத்த காயத்துடன் மகன் மருத்துவமனையில் சிகிச்சை: ம.பி.யில் கொடூரம்

வீட்டுத் தகராறில் நடந்த சண்டையைப் பொறுக்கமுடியாமல் அனைவரையும் வெட்டிவிட்டு குடும்பத் தலைவர் ஒருவர் தப்பிச்சென்ற சம்பவம் மபியில் நேற்று நடந்துள்ளது. இதில் அவரது மனைவியும் பெற்றோரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதுகுறித்து பரேலி காவல்நிலைய ஆய்வாளர் கே.எஸ் முகாதி தெரிவித்ததாவது: ஜிதேந்திரா புர்வாமா (30), இவர் நேற்று மாலை வேலை முடிந்து வீட்டுக்குத் திரும்பிக்கொண்டிருக்கையில் பலத்த விவாதம் நடந்துகொண்டிருந்தது. வழக்கமாக வீடுகளில் நடக்கும் இப்பிரச்சினைகள் சூடாவதைப்போலவே, ஜிதேந்திராவின் மனைவிக்கும் அவரது பெற்றோர்களுக்கும் இடையே வாக்குவாதம் வளர்ந்துள்ளது. இதனால்

‘பணமதிப்பு நீக்க அறிவிப்பின்போது கேபினட் அமைச்சர்களை மோடி தன் வீட்டில் அடைத்துவைத்தார்’: ராகுல் காந்தி பகீர் குற்றச்சாட்டு

பணமதிப்பு நீக்க அறிவிப்பின்போது கேபினட் அமைச்சர்களை பிரதமர் மோடி தனது ரேஸ்கோர்ஸ் சாலை வீட்டில் அடைத்துவைத்ததாக குற்றஞ்சாட்டியிருக்கிறார் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி. இமாச்சல பிரதேசத்தில் தேர்தல் பிரச்சாரப் பொதுக்கூட்டத்தில் பேசிய ராகுல் காந்தி, “பணமதிப்பு நீக்க அறிவிப்பின்போது கேபினட் அமைச்சர்களை பிரதமர் மோடி தனது ரேஸ்கோர்ஸ் சாலை வீட்டில் அடைத்துவைத்தார். இது சத்தியம். சிறப்பு பாதுகாப்புப் படையில் இருக்கும் சிலர் எனது பாதுகாப்புப் பணியிலும் ஈடுபட்டுள்ளனர். அவர்களே இதை என்னிடம் சொன்னார்கள்” எனக் கூறினார். கடந்த

பிரதமர் மோடியை ராவணனோடு ஒப்பிட்டு சர்ச்சையைக் கிளப்பிய சமாஜ்வாதி தலைவர்

சமாஜ்வாதி கட்சியின் மூத்த தலைவரான ராம் கோவிந்த் சவுத்ரி, பிரதமர் மோடிடை ராவணனோடு ஒப்பிட்டுப் பேசி சர்ச்சையைக் கிளப்பியுள்ளார். செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய ராம் கோவிந்த், “ராமர் கோயில் எங்களுக்கெல்லாம் வழிப்பாட்டுத்தலம். ஆனால், பாஜகவுக்கு அது வாக்குகளை குவிப்பதற்கான ஒரு விவாத தலைப்பு. பிரதமர் மோடி ராவணன் போல் ஆகிவிட்டார். ராவணன் கடவுளரையும், பெண் தெய்வங்களையும் கடத்திச் சென்றார். பிரதமர் மோடி சிபிஐ, அமலாக்கத்துறை, ரிசர்வ் வங்கி போன்ற அமைப்புகளை கடத்தி தன் கட்டுப்பாட்டில் வைத்துள்ளார்” என்றார்.

மகாத்மா காந்தியை ‘பாகிஸ்தானின் தந்தை’ என அழைத்த பாஜக செய்திதொடர்பாளர் கட்சியிலிருந்தே நீக்கம்

நமது தேசப்பிதா மகாத்மா காந்தியை ‘பாகிஸ்தானின் தந்தை’ என அழைத்த மத்தியப் பிரதேச மாநில பாஜக செய்தித் தொடர்பாள அனில் சவுமித்ரா கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியிலிருந்தே நீக்கப்பட்டிருக்கிறார். சவுமித்ரா தனது ஃபேஸ்புக் பதிவில், மகாத்மா காந்தியை பாகிஸ்தானின் தந்தை எனக் குறிப்பிட்டிருக்கிறார். பாகிஸ்தான் பாபுவின் ஆசிர்வாதத்தில் பிறந்த தேசம் எனவே மகாத்மா காந்தி பாகிஸ்தானின் தந்தையே தவிர இந்தியாவின் தந்தை அல்ல எனப் பதிவிட்டிருந்தார். நேற்று, வியாழக்கிழமை அவர் இதனை தனது ஃபேஸ்புக்கில் பதிவு செய்திருந்தார்.

வைரலாகும் பனிச் சிறுத்தை புகைப்படம்

புகைப்படக் கலைஞர் ஒருவர் எடுத்த பனிச் சிறுத்தை புகைப்படம் ஒன்று வைரலாகி வருகிறது. திறமைகளை அடையாளம் கண்டு பாராட்டுவதில் சமூக வலைதளங்கள் முக்கிய பங்காற்றி வருகின்றன. அந்த வகையில் சமீபத்தில் பாரட்டப்பட்டிருக்கிறார் சவுரப் தேசாய் என்ற விலங்கியல் புகைப்பட கலைஞர் . இவர் பனிச் சிறுத்தை ஒன்றை எடுத்த புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாகி பாராட்டப்பட்டிருக்கிறார். அந்த புகைப்படத்தில் ஹிமாச்சல் பிரதேசத்தில் பள்ளத் தாக்கில்  பனி மலையில் மறைந்து இருந்து எட்டி பார்க்கும் சிறுத்தை படம் வைரலாகி

பாஜக-வின் வெற்றி வாய்ப்புக் கதவுகளை 90% நாங்கள் மூடிவிட்டோம், மீதி 10%-ஐ மோடியே மூடிவிட்டார்: ராகுல் காந்தி

பிரதமர் நரேந்திர மோடி 5 ஆண்டுகளில் செய்தியாளர்களிடம் தன் முகத்தைக் காட்ட, காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி புதுடெல்லியில் வெள்ளிக்கிழமை செய்தியாளர்கள் சந்திப்பில் பல்வேறு கருத்துகளைப் பகிர்ந்து கொண்டார். காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் ரந்தீப் சுர்ஜேவாலாவுடன் ராகுல் காந்தி செய்தியாளர்கள் கேள்விக்குப் பதில் அளித்தார். மோடியின் செய்தியாளர்கள் சந்திப்பு பற்றி நிருபர் ஒருவர் ராகுல் காந்தியிடம் கேட்க, ‘மிகப்பிரமாதம்’ என்றார்.  “முன்னுதாரணமற்ற ஒரு நிகழ்வு. ஒரு நாட்டின் பிரதமர் முதன் முறையாக செய்தியாளர்களைச் சந்தித்திருக்கிறார்” என்றார் ராகுல்

5 ஆண்டுகளில் முதல்முறையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் மோடி: ‘கட்சிகட்டுப்பாடுகளை மீறாமல்’ கேள்விகளை அமித் ஷா பக்கம் திருப்பினார்

5 ஆண்டுகளில் முதல் முறையாக பத்திரிகையாளர்களைச் சந்தித்த பிரதமர் நரேந்திர மோடி எந்தவிதமான கேள்விகளுக்கும் பதில் அளிக்க மறுத்து பாஜக தேசியத்தலைவர் அமித் ஷா பக்கம் திருப்பிவிட்டார். அதேசமயம், மக்களவைத் தேர்தலில் பாஜக தனிப்பெரும்பான்மையும் மீண்டும் மத்தியில் ஆட்சி அமைக்கும் என்று பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்தார். பிரதமர் மோடி கடந்த 2014-ம் ஆண்டில் பதவி ஏற்கும் போது பத்திரிகையாளர்கள அடிக்கடி சந்திப்பேன் என்று தெரிவித்திருந்தார். ஆனால், ஒருமுறை கூட பத்திரிகையாளர்களுக்கு பேட்டி அளிக்க வில்லை. இந்நிலையில்,

அடுத்த முறை  ஓரிரு கேள்விகளுக்கு நீங்கள் பதிலளிக்க அமித் ஷா அனுமதிப்பார்: மோடியை ராகுல் கிண்டல்

5 ஆண்டுகளில் முதல் முறையாக செய்தியாளர்கள் சந்திப்பில் முகம் காட்டிய பிரதமர் மோடி கேள்விகளை எதிர்கொள்ளவில்லை அதனை பாஜக தேசியத் தலைவர் அமித் ஷாவுக்கு விட்டு விட்டார். அந்த செய்தியாளர்கள் சந்திப்பில் பிரதமர் மோடி, ” நான் உங்களுடைய கேள்விகள் எதற்கும் பதில் அளிக்க முடியாது.ஏனென்றால், இது பாஜக தலைவர் அமித் ஷா நடத்தும் பத்திரிகையாளர் சந்திப்பு. பாஜக முறைப்படி, ஒழுக்கத்தை கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும். கட்சியின் ஒழுக்கமான தொண்டர்கள் நாங்கள். ஆதலால் எங்களுக்கு எல்லாமே கட்சியின்

108 இளம் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தலைவர் கலந்துரையாடல்

இளம் விஞ்ஞானி திட்டமான யுவிகா 2019-ன் கீழ், நாடெங்கிலும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 108 பள்ளி மாணவர்களுடன் இஸ்ரோ தலைவர் டாக்டர் கே. சிவன் கலந்துரையாடினார். ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ்தவான் விண்வெளி மையத்தில் இன்று இளம் விஞ்ஞானிகளுடனான கலந்துரையாடல் நிகழ்ச்சி நடைபெற்றது. நாட்டின் அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் இருந்து வந்திருந்த பள்ளி மாணவர்கள் இஸ்ரோ தலைவர் டாக்டர் சிவனிடம், இந்திய விண்வெளித்துறை, கோள்கள், இஸ்ரோவின் எதிர்காலத் திட்டங்கள், செயற்கை நுண்ணறிவு, புவிப் பாதுகாப்பு, விண்வெளி, பொருளாதாரம்

வேட்பு மனு நிராகரிப்பு விவகாரம்: தேஜ் பகதூரின் மனு தள்ளுபடி

மக்களவைத் தேர்தலில் பிரதமர் நரேந்திர மோடியை எதிர்த்து வாரணாசி தொகுதியில் போட்டியிடுவதற்காக தமது வேட்புமனுவை தேஜ் பகதூர் அண்மையில் தாக்கல் செய்திருந்தார். அதன் பிறகு, அவரை தமது வேட்பாளராக சமாஜ்வாதி அறிவித்தது. இதன் தொடர்ச்சியாக, அக்கட்சி சார்பில் போட்டியிடுவதற்கான மற்றொரு வேட்பு மனுவையும் தேஜ் பகதூர் சமர்ப்பித்தார். ஆனால், அவரது வேட்பு மனுவை தேர்தல் ஆணையம் நிராகரித்தது. அவரது இரண்டு வேட்பு மனுக்களிலும் பல்வேறு முரண்பாடுகள் உள்ளதாகவும், கடைசியாக தாக்கல் செய்த வேட்பு மனுவில், தான் பணிநீக்கம்

ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேர் விடுதலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி: ஆளுநரின் முடிவே இறுதியானதாக இருக்கும் என எதிர்பார்ப்பு

பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர் விடு தலையை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளது. இதை யடுத்து, இந்த விவகாரத்தில் தமிழக ஆளுநரின் முடிவே இறுதியாக இருக்கும் என்பதால் அதை எதிர்நோக்கி காத்திருக்கும் நிலை மீண்டும் ஏற்பட்டுள்ளது. முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலை வழக்கில் தண்டனை பெற்ற நளினி, முருகன், சாந்தன், பேரறிவாளன், ஜெயகுமார், ராபர்ட் பயஸ், ரவிச்சந்திரன் ஆகியோர் கடந்த 28 ஆண்டுகளாக சிறையில் இருந்து வருகின்றனர். இவர் களை