Category: இந்து டாக்கீஸ்

எலியே குறைந்த டேக்கில் நடித்தது! சிலிர்க்கும் பிரியா பவானிசங்கர்

‘கடைக்குட்டி சிங்கம்’ படத்துக்குப் பிறகு ‘மான்ஸ்டர்’ படத்துக்காக எஸ்.ஜே.சூர்யாவுடன் இணைந்திருக்கிறார், பிரியா பவானிசங்கர். அடுத்தடுத்து ஜீவா, அதர்வா, இயக்குநர் சிம்புதேவன் படம் என அவரது இந்த ஆண்டு ரிலீஸ் படங்களின் பட்டியல் நீண்டுகொண்டே செல்கிறது. இப்படிப் பிரகாசமாக ஒளிரும் தனது திரையுலகப் பயணம் பற்றி பிரியா பவானி சங்கர் பகிர்ந்துகொண்டவை..! ‘மான்ஸ்டர்’ படத்தில் எலிதான் முதன்மைக் கதாபாத்திரம். அப்படியிருக்கையில் உங்களுக்கும் எஸ்.ஜே.சூர்யாவுக்கும் என்ன வேலை? ஒரு வீட்டுக்குள் நடக்குற கதைதான் இந்தப் படம். எஸ்.ஜே.சூர்யா, கருணாகரன், நான்,

மும்பை கேட்: மீண்டும் ‘விக்கி டோனார்’ ஜோடி

மீண்டும் ‘விக்கி டோனார்’ ஜோடி ‘விக்கி டோனார்’ படத்தின் பிரபல ஜோடியான ஆயுஷ்மான் குரானா, யமி கவுதம் ஜோடி ‘பாலா’ திரைப்படத்தில் மீண்டும் இணைந்து நடிக்கவிருக்கிறார்கள். அமர் கவுசிக் இயக்கும் இந்தப் படத்தில் நடிகை பூமி பேட்நேகரும் முக்கியக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இளமையிலேயே வழுக்கைத் தலையாகிவிடும் ஓர் இளைஞனின் கதையை இந்தப் படம் பதிவுசெய்கிறது. இதில், ஆயுஷ்மானின் காதலி கதாபாத்திரத்தில் யமி நடிக்கிறார். யமி, சூப்பர் மாடலாகவும் பூமி சாதாரணக் குறுநகரத்தைச் சேர்ந்த இளம்பெண்ணாகவும் இந்தப் படத்தில்

நிகழ்வு: எம்.எஸ்.வி. இசையும் ‘சோ’வின் குறும்பும்

மெல்லிசை மன்னர் எம்.எஸ்.விஸ்வநாதனிடம் உதவியாளராகப் பல ஆண்டுகள் இருந்தவர் மதுரை ஜி.எஸ். மணி. இந்தியாவின் பிரபல சபாக்களிலும் அயல் நாடுகளிலும் புகழ்பெற்ற கர்னாடக இசை நிகழ்ச்சிகளை நடத்தியவர் ஜி.எஸ். மணி. எவ்வளவு புகழ் வாய்ந்த மேடையிலும் தன்னை எம்.எஸ்.விஸ்வநாதனின் உதவியாளர் என்பதையும் எம்.எஸ்.விஸ்வநாதனின் மேதைமையையும் மிகவும் பெருமையோடு சொல்வதற்குத் தயங்காதவர். எம்.எஸ்.விஸ்வநாதனுடன் தான் பணியாற்றியபோது நிகழ்ந்த சுவையான அனுபவங்களையும் அவரைக் குறித்த சுவையான தருணங்களையும் கடந்த ஞாயிறன்று சீனிவாச சாஸ்திரி அரங்கில் பகிர்ந்துகொண்டார். இடையிடையே எம்.எஸ்.வி. மற்றும்

கதையின் நாயகர்கள்!

தமிழ் சினிமாவில் ஒவ்வோர் ஆண்டும் சுமார் 150-க்கும் மேற்பட்ட படங்கள் வெளியாகின்றன. முன்னணி நடிகர்கள் ஆண்டுக்கு ஓரிரு படங்களில் மட்டுமே நடிக்கிறார்கள். அவர்கள் எல்லோருமே பெரிய பட்ஜெட் படங்களில் நடித்து வசூலை அள்ள வேண்டும் என்ற நோக்கத்திலேயே ஃபார்முலா சினிமாக்களிலேயே கவனம் செலுத்திவருகிறார்கள். இவர்களுக்கும் அப்பால் தமிழ் சினிமாவின் கிரியா ஊக்கியாக, ஊக்க சக்தியாக யார் இருக்கிறார்கள்? மார்க்கெட் சிறியதாக இருந்தாலும் படத்தின் வியாபாரம் பற்றி அலட்டிக்கொள்ளாமல், வணிக சமரசத்துக்கு இடம் கொடுக்காமல் தரமான, தகுதியான படங்களுக்காக

இயக்குநரின் குரல்: இங்கே வெற்றிதான் எல்லாமே!

டீஸரைப் பார்க்கும்போதே சில படங்கள் எதிர்பார்ப்பை ஏற்படுத்திவிடும். அந்த வகையில் சமீபத்தில் வெளியாகியுள்ள ‘கண்ணாடி’ டீஸரைச் சொல்லலாம். இது பேய்ப் படமா, திரில்லர் படமா, காதல் படமா என்று ஊகிக்க முடியாத அளவில் டீஸரை வெளியிட்டிருக்கிறார்கள். படத்தின் வெளியீட்டுப் பணியில் மும்முரமாக இருந்த ‘கண்ணாடி’ இயக்குநர் கார்த்திக் ராஜூவை சந்தித்துப் பேசியதிலிருந்து… ‘கண்ணாடி’ படத்தில் என்ன சொல்ல வருகிறீர்கள்? மக்களுக்கு ஒரு நல்ல திரில்லர் அனுபவமாகப் படம் இருக்கும். இப்போதைக்கு டீஸரில் சில காட்சிகள் வரும். அதை

தரைக்கு வந்த தாரகை 12: பொம்மைக் கல்யாணம்

“இவ்வளவு நாளாக நான் சொல்லிக்கொண்டு வந்த என் வாழ்க்கைக் சம்பவங்களில் ஒரு பொதுவான அம்சம் இருக்கிறதே கவனித்தீர்களா?” என்று கேட்டார் பானுமதி.நான் விழித்தேன். “நான் சாதாரண விஷயங்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து சொல்லிக்கொண்டிருக்கிறேன். இதெல்லாம் எல்லோர் வாழ்க்கையிலும் நடப்பதுதானே என்று உங்களுக்குத் தோன்றலாம். ஆனால், ரொம்பச் சாதாரணச் சம்பவங்கள், சாமானிய மனிதர்களை நாம் கவனிப்பதே கிடையாது. உண்மையில் இவை தருகிற ஆனந்தத்துக்கு ஈடு இணையே கிடையாது. இப்படி ரொம்பச் சாதாரண விஷயங்களை நாம் ரசிக்கக் கற்றுக்கொண்டால் பெரிய விஷயங்களுக்கு

டிஜிட்டல் மேடை 26: பூமி தப்பிப் பிழைக்கட்டும்!

கோடை விடுமுறையில் குழந்தைகளுடன் சேர்ந்து பயனுள்ளதாக நேரத்தைக் கழிக்க விரும்புவோர் ‘நெட்ஃபிளிக்’ஸில் கடந்த மாதம் வெளியான ‘அவர் பிளானட்’ (Our Planet) ஆவணப் படத்தொடரைக் கண்டு ரசிக்கலாம். காட்சி ஆவணம் 60 நாடுகளில் 4 ஆண்டு மெனக்கெடல், கடல் பரப்பில் மட்டும் 911 தினங்கள், கடலுக்குள் 2,000 மணி நேரக் காத்திருப்பு, 600 பேர் அடங்கிய படக் குழுவினரின் 200-க்கும் மேற்பட்ட பயணங்கள் என அசகாய உழைப்பைக் கொட்டி ‘4K’ தரத்திலான காட்சி ஆவணங்களுடன் வந்திருக்கிறது ‘அவர்

ஹாலிவுட் ஜன்னல்: அலாதினும் புதிய பூதமும்

டிஸ்னி நிறுவனம் 27 ஆண்டுகளுக்கு முந்தைய தனது அனிமேஷன் படைப்பைத் தற்போதைய தொழில்நுட்பங்களுடன் ‘ரீமேக்’ செய்திருக்கிறது. அந்தப் படம், ‘அலாதின்’. ‘அலாவுதீனும் அற்புத விளக்கும்’ என்று அனைவரும் அறிந்த கதையைத் தழுவி 1992-ல் அனிமேஷன் திரைப்படமாக டிஸ்னி தயாரித்து வெளியிட்டது. இந்தப் படம் புதிய பாக்ஸ் ஆபீஸ் சாதனையைப் படைத்தது.  கூடுதலாக ‘வீடியோ டேப்’ விற்பனையிலும் ஹிட் அடித்தது. தொடர்ந்து பல திரைப்படங்களாகவும், தொலைக்காட்சித் தொடர்களாகவும் அலாதின் உருவெடுத்தபோதும் 1992 வெற்றி வாய்க்கவில்லை. எனவே, பழைய அனிமேஷன்

திரைவிழா முத்துக்கள்: அவள் ஒரு புதிர்!

வட ஆப்பிரிக்க நாடான மொராக்கோவில் திருமணத்துக்கு அப்பாற்பட்டு உறவுகொள்வது தண்டனைக்குரிய குற்றம். அப்படியொரு தேசத்தில் 20 வயது இளம் பெண்ணான சோஃபியா திருமணமாகாமல் கர்ப்பமடைகிறாள். அதனால் அவளும் அவளுடைய குடும்பத்தாரும் படும்பாட்டை வெளிப்படுத்துகிறது ‘சோஃபியா’ என்ற படம். பிரான்சின் ஆளுகைக்குக் கீழ் 44 ஆண்டுகளாக மொராக்கோ இருந்ததால் படத்தின் கதைக்களம் வட ஆப்பிரிக்காவாக இருந்தாலும் பிரெஞ்சு மொழியில் எடுக்கப்பட்டிருக்கிறது. இந்தப் படம் சென்னை சர்வதேசத் திரைப்பட விழா உள்படப் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டிருக்கிறது. பெற்றோரோடு வீட்டில்

இயக்குநர் மகேந்திரன் அஞ்சலி: நண்பர்கள் சந்தித்தபோது…

அது 2008-ம் வருடம். அப்போது நான் ‘பிரியதர்ஷினி’ என்ற கடலோரக் காவல்படைக் கப்பலில் கேப்டனாக இருந்தேன். விசாகப்பட்டினத்தைச் சேர்ந்த அந்தக் கப்பல் அவ்வப்போது சென்னைக்கு வரும் நேரத்தில் எனது திரையுலக, இலக்கிய நண்பர்கள் கப்பலுக்கு வருவதுண்டு. என் நண்பன் லாசரஸின் அப்பா உடல்நலம் குன்றி, கவலைக்கிடமாக இருந்தபோது, என்னுடைய பத்திரிகை நண்பரிடம் நான், “லாசரஸின் அப்பா எல்.சி.மகேந்திரனின் கல்லூரிக் கால நண்பர்தான் இயக்குநர் மகேந்திரன். இயக்குநர் ஆவோம் என்று நினைத்துக் கூடப் பார்த்திராத அவருடைய இயற்பெயர் ஜான்

மும்பை கேட்: சாய்னாவாக மாறும் பரிணீத்தி

பேட்மிண்டன் வீராங்கனை சாய்னா நேவாலின் வாழ்க்கைக்கதை திரைப்படமாகிறது. சாய்னாவாக நடிகை பரிணீத்தி சோப்ரா நடிக்கவிருக்கிறார். இதற்காகத் தினமும் இரண்டு மணி நேரம் சாய்னாவின் ஆட்டங்களைப் பார்த்து தயாராகிவருவதாக இன்ஸ்டாகிராமில் பரிணீத்தி தெரித்திருக்கிறார். இயக்குநர் அமோல் குப்தா இயக்கும் இந்தப் படம் அடுத்த ஆண்டு வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. “நான் காட்சிகளின் வழியே கற்றுகொள்வேன். அதனால், சாய்னாவின் பேட்மிண்டன் ஆட்டங்களைப் பார்த்து, அவர் எப்படி விளையாடுகிறாரோ, அப்படியே விளையாடுவதற்குத் தயாராகிவருகிறேன். இதுவரையில் இவ்வளவு பேட்மிண்டன் ஆட்டங்களை நான் பார்த்ததில்லை.

டிஜிட்டல் மேடை 22: நிழல் நாயகியின் நிஜக் கதை

இந்திய சினிமாவின் வெற்றிகரமான பெண் சண்டைக் கலைஞர்களில் முக்கியமானவர் ரேஷ்மா பதான். அவரது போராட்ட வாழ்க்கையைச் சுவாரசியமாக விவரிக்கிறது ‘ஜீ5’ தளத்தில் கிடைக்கும் ‘தி ஷோலே கேர்ள்’. 60-களின் இறுதிவரை பாலிவுட் உட்பட இந்தியத் திரைப்படங்களின் சண்டைக் காட்சிகளில் ஆண்களின் ஆதிக்கமே நிலவியது. நாயகிகளுக்கு ‘டூப்’ போடும் சண்டைக் கலைஞர்களும் ஆண்களாகவே இருந்தார்கள். 14 வயதில் பாலிவுட்டில் கால்வைத்த ரேஷ்மா பதான் என்ற சின்னப் பெண், இந்த நிலைமையை அடியோடு மாற்றினார். கூடவே திரைத்துறையில் ஊறிப் போயிருந்த

விவேக் நேர்காணல்: விரைவில் இயக்குநர் அவதாரம்!

பல படங்களில் காமெடி போலீஸாக பார்த்துப் பழக்கப்பட்ட விவேக், ‘வெள்ளைப் பூக்கள்’ படத்தில் சீரியஸ் போலீஸாகப் புது அவதாரம் எடுத்திருக்கிறார். அதுவும் துப்பறியும் போலீஸ்! ‘சால்ட் அண்ட் பெப்பர்’ தோற்றத்தில் புதிய தடத்தில் ஆச்சரியப்படுத்தும் அவரைச் சந்தித்து உரையாடியதிலிருந்து… குணச்சித்திரக் கதாபாத்திரம் என்பது உங்களுக்குப் புதிதல்ல; ’வெள்ளைப் பூக்கள்’ படத்துக்கான உங்களது கதாபாத்திரத் தோற்றம் புதிதாக ஏதோ சொல்ல வருகிறதே.. இந்தப் படத்தின் இயக்குநருடைய பெயரும் விவேக்தான். அவர் முடிவு செய்த தோற்றம் இது. “ நீண்டகாலம்

தரைக்கு வந்த தாரகை 08: நம்பியாரை நானே பார்த்துக்கிறேன்!

சலாம் பாபு… சலாம் பாபு… என்னைப் பாருங்க! தங்க கையில் நாலுகாசை அள்ளி வீசுங்க! ஏ சலாம் பாபு… சலாம் பாபு கனவு இல்லீங்க நினைவு தானுங்க கணமேனும் வீண்காலம் கழிக்காதீங்க… படம்: அலிபாபாவும் நாற்பது திருடர்களும் பானுமதியிடம் இயல்பாகவே நகைச்சுவை உணர்வு உண்டு. அவருடைய பேச்சிலும் எழுத்திலும் அது வெளிப்படும். மெல்லிய நகைச்சுவை இழையோட அவர் தெலுங்கில் எழுதிய ‘அத்தகாரு கதலு’ என்ற கதைகள் அவருக்கு ஆந்திரப்பிரதேசத்தின் தலைசிறந்த நகைச்சுவை எழுத்தாளர் என்ற அந்தஸ்தைப் பெற்றுத்தந்தன.

மற்றும் இவர்: கதாநாயகிக்கு டப்பிங் பேசிய கத்தாழம்பட்டி ‘காளி’

இயல்பான நடிப்பால் ரசிகர்களைக் கட்டிப்போடும் திறன் பெற்றவர் காளி வெங்கட். காமெடி, குணச்சித்திரக் கதாபாத்திரங்களில் பரிணமித்துவரும் மண்ணின் கலைஞர். தூத்துக்குடி அருகே உள்ள கத்தாழம்பட்டி என்ற குக்கிராமத்திலிருந்து எளிய பிண்ணனியோடு சென்னைக்கு வந்து போராடி திரைக்குள் நுழைந்தவர். விவசாயக் குடும்பத்தைச் சேர்ந்த வெங்கட், சென்னை வந்த கையோடு சினிமா வாய்ப்பு தேடத் தொடங்கினார். ஆனால், அன்றாட ஜீவனத்தை ஓட்ட வேண்டும் என்பதற்காக சென்னை அண்ணா நகரில் மளிகைக் கடையில் வேலை பார்த்திருக்கிறார். அதோடு தண்ணீர் கேன் போடுவது

திரையிசையில் புதிது!

‘லிரிக் இன்ஜினியரிங்’ என்ற ஐடியாவை பிரபலப்படுத்திவருபவர் பாடலாசிரியர் மதன் கார்க்கி. அவர் இணை இயக்குநராக பணிபுரிந்துவரும் நிறுவனம் ‘டூபாடூ’ (DooPaaDoo). திரைப்பாடல்களை எழுதவும் இசையமைக்கவும் விரும்பும் சுயாதீனக் கலைஞர்களை ஒருங்கிணைக்கும் செயலி இணையதளம் இது. இயக்குநர்கள் தங்கள் படங்களுக்குத் தேவையான பாடல் வரிகள், இசையை இந்த செயலி வழியாகப் பெற்றுக்கொள்ளலாம். இந்த வகையில் விரைவில் வெளியாக இருக்கும் ‘காஞ்சனா 3’ படத்துக்குத் தேவையான ஆறு பாடல்களை இந்த செயலி வழியாகவே பெற்று படத்தில் இணைத்திருக்கிறார் அந்தப் படத்தின்