Category: இலக்கியம்

தஸ்தயேவ்ஸ்கி: ஆழ்மனத்தின் பயணி!

ஆன்மாவுக்கும் சதை உந்துதலுக்கும், இச்சைக்கும் நெறிகளுக்கும், குற்றத்துக்கும் மீட்சிக்கும், மிருகத்துக்கும் மனிதத்துக்கும், இருளுக்கும் வெளிச்சத்துக்கும் இடையே தஸ்தயேவ்ஸ்கி நடத்திய யாத்திரைதான் ‘கரமசோவ் சகோதரர்கள்’ நாவல். கடவுளும் சமயநெறிகளும் கடுமையாகக் கேள்விக்குள்ளான காலகட்டத்தில் மனிதனுக்கான மீட்சி சாத்தியமா என்ற கேள்வியுடன் கிறிஸ்துவைத் தீவிரமாகப் பரிசீலித்த படைப்பு இது. தன் காலத்தில் தான் பார்த்த வாழ்க்கை, சிந்தனைக் கோலங்களை முன்வைத்து கிறிஸ்துவை மதிப்பிட்டு, விமர்சித்து, அசௌகரியமான கேள்விகளைக் கேட்டு, அவரைத் தன்வயப்படுத்தித் தக்கவைத்துக்கொள்ள ஒரு கலைஞன் செய்த மாபெரும் முயற்சி.

கோபிகிருஷ்ணன்: ஒப்பனைகளற்ற வாழ்வும் எழுத்தும்

தீவிர படைப்பு மனோபாவம் கொண்ட எழுத்தாளனைப் பெரிதும் அலைக்கழித்து அல்லலுறவைக்கும் வறுமை வாழ்வு பாரதி, புதுமைப்பித்தன் காலங்களிலிருந்து இன்றுவரை தமிழ்ச் சூழலின் மாறாத் தன்மைகளில் ஒன்றாக இருந்துவருகிறது. செளகர்யமான குடும்பப் பின்புலமோ, பாதுகாப்பான பணி உத்தரவாதமோ இல்லாத வரை ஒரு படைப்பாளியின் வாழ்க்கை துயர் மிகுந்ததாகவே தொடர்ந்துகொண்டிருக்கிறது. துயர் கவிந்த வாழ்வினூடாகத் தன் எழுத்தைக் கலை நம்பிக்கையோடு பேணியவர் கோபிகிருஷ்ணன். வறுமை பிடுங்கித் தின்னும் வாழ்வினூடாகவும் பிழைப்புக்கான சாதுர்யங்கள் எதுவும் தன்னை அண்டாமல் வாழ்ந்தவர். அதேசமயம், ஆங்கிலத்தில்

75 மணித்துளிகள்.. 4 நாடகங்கள்

ஒரு நல்ல கதையைப் படிக்கும் போது, அதன் காட்சிகள் நம் மனத்திரையில் ஓடும். ஒரு நல்ல நாடகத்தைப் பார்க்கும்போது, நாமும் அந்த நாடகத்தில் ஒரு பாத்திரம் ஆகிவிடுவோம். இப்படிப்பட்ட அனுபவத்தை நமக்கு வழங்கியது ‘தியேட்டர் மெரினா’ அரங்கேற்றிய ‘நேற்று இன்று நாளை’ நாடகம். இது, கார்த்திக் ஃபைன் ஆர்ட்ஸ் ஆதரவில் கீர்த்தி மாரியப்பன் தயாரித்து, மயிலாப்பூர் ஃபைன் ஆர்ட்ஸ் கிளப்பில் அரங்கேற்றப்பட்ட நாடகம். புராணமோ, சமூகக் கதையோ, அதை அறிவியல் கோட்டிங் கொடுத்து வழங்கியவர் எழுத்தாளர் சுஜாதா.

கவனிக்க வேண்டிய 5 புத்தகங்கள்

தமிழுக்கு என்ன செய்தார் பெரியார்? கி.வீரமணி திராவிடர் கழக வெளியீடு சேரியில் பூனை ராக்மில் பிரிக்ஸ் தமிழில்: அரியநாச்சி அடையாளம் வெளியீடு தெருவோர ஜென் குரு பெர்னி கிளாஸ்மேன் தமிழில்: அமலன் ஸ்டேன்லி தமிழினி வெளியீடு சிவப்புக்கூடை திருடர்கள் எஸ்.செந்தில்குமார் உயிர்மை வெளியீடு காப்பு தொகுப்பு: ஈழவாணி பூவரசி வெளியீடு ஆஹா கசார்களின் அகராதி (ஆண் பிரதி, பெண் பிரதி இரண்டும் சேர்த்து) மிலோராத் பாவிச் தமிழில்: ஸ்ரீதர் ரங்கராஜ் எதிர் பதிப்பகம் விலை: ரூ.1,000 சர்வதேச

நான் என்னென்ன வாங்கினேன்?

நீலாங்கரையிலிருந்து தாத்தா பலவேந்திரனுடன் புத்தகம் வாங்க வந்திருந்தார் ரோஸ்மேரி. “தாத்தா, எனக்குப் புடிச்ச கதைப் புத்தகங்கள், புதிர்விளையாட்டு அட்டை, பொம்மையெல்லாம் வாங்கிக் கொடுத்தாங்க. நான் நைட் தூங்கும்போது தாத்தாட்ட கதை கேட்டுட்டுதான் தூங்குவேன். சாப்பிடும்போதும் பாட்டிட்ட கதை கேட்டுட்டே சாப்டுவேன். படங்களோட இருக்கிற குட்டிக் குட்டிக் கதைகள் இருக்குற புத்தகம்தான் எனக்கு ரொம்பப் பிடிக்கும்” என்ற ரோஸ்மேரி, “ஹாப்பி ரீடிங்” என்று சொல்லிவிட்டுச் சென்றாள்.

‘இந்து தமிழ்’ இயர்புக் 2019

இயர்புக் 2019 இந்து தமிழ் திசை வெளியீடு 768 பக்கங்கள் விலை: ரூ.250 140 ஆண்டு பாரம்பரியம் கொண்ட ‘தி இந்து’ குழுமத்தைச் சேர்ந்த ‘இந்து தமிழ்’ நாளிதழ் சார்பில் முதல் முறையாக ‘இயர்புக் 2019’ வெளியிடப்பட்டிருக்கிறது. ஐஏஎஸ் உள்ளிட்ட தேசிய போட்டித் தேர்வுகள், டிஎன்பிஎஸ்சி உள்ளிட்ட மாநில போட்டித் தேர்வுகள், உயர்கல்வி படிக்க விரும்புபவர்கள், விநாடி வினாப் போட்டிகளில் பங்கேற்பவர்கள், நடப்பு விவகாரங்களை விரல் நுனியில் வைத்திருக்க விரும்புவோருக்கு உதவுவதற்கான முழுமையான கையேடாக இந்த  ‘இயர்புக்’

7 மணி சந்திப்பு

சென்னை புத்தகக்காட்சியில் ‘பகிர்வு’ நவீன கலை இலக்கியப் பரிமாற்றம் என்கிற அமைப்பு, அரங்கு எண் 305-ல் ‘ஏழு மணி இலக்கிய சந்திப்பு’ எனும் நிகழ்ச்சியை நாள்தோறும் நடத்திவருகிறது. அனைவரது கவனத்தையும் ஈர்க்கும் இந்நிகழ்ச்சியில் தினம் ஒரு புத்தகத்தைப் பற்றி ஆளுமைகள் கலந்துகொண்டு உரையாடுகிறார்கள். கவிஞர் தமிழ்மணவாளனும், கவிஞர் சொர்ணபாரதியும் இந்நிகழ்வை முன்னெடுத்துச் செல்கிறார்கள். 7 மணி! மறந்துடாதீங்க!