Category: இளமை புதுமை

நீங்களும் பொம்மையாகலாம்!

திரைப் பிரபலங்களைத் திரையிலும் தொலைக்காட்சியில் மட்டுமே கண்டு மகிழ்ந்த ரசிகர்களுக்கு, அவர்களை மேசையில் வைத்துப் பார்க்க வழி செய்திருக்கிறது ‘கிக்ஸ் மை 3டி’ என்ற நிறுவனம். மேலைநாடுகளில் பிரபலமாக உள்ள 3டி சிலைகளைப் போல் இங்கேயும் பிரபலங்களை வைத்து சிலைகளை வடிவமைத்து ரசிகர்களை ஈர்த்துவருகிறது. சென்னை ராயப்பேட்டையில் உள்ள இந்நிறுவனத்துக்குச் சென்றால், ‘பேட்ட’ ரஜினி, ‘விஸ்வாசம்’ அஜித் தொடங்கி ஏராளமான திரைப்பிரபலங்கள் மினியேச்சர் பொம்மைகளாக வரவேற்கிறார்கள். சில மாதங்களுக்கு முன்பு தொடங்கப்பட்ட இந்நிறுவனம், முதன் முதலில் ‘2.0’

ட்ரிக் கோல் நாயகன்!

காஷ்மீரைச் சேர்ந்த 21 வயதான ஹுசைஃப் ஷா ட்ரிக் கோல் அடிக்கும் வீரர்களில் இந்தியாவில் புகழ்பெற்றவர். அண்மையில் உலக அளவில் நடைபெற்ற ட்ரிக் கோல் அடிக்கும் வீரர்களின் பட்டியலில் இவர் நான்காம் இடத்தைப் பிடித்துள்ளார். சரி, அதென்ன ட்ரிக் கோல்? கால்பந்தாட்ட விளையாட்டில் கோல் போஸ்ட்டை நோக்கித்தான் பந்தை உதைப்பார்கள். ஆனால், பொழுதுபோக்குக்காக விளையாடப்படும் ட்ரிக் கோல் விளையாட்டில் அப்படியல்ல; ஏதோ ஓரிடத்தில் வைக்கப்பட்டுள்ள இலக்கை எந்த இடத்திலிருந்தும் எப்படி வேண்டுமானாலும் குறிபார்த்து கோல் அடிக்க வேண்டும்.