Category: உலகம்

கல்வி, திறமைகள், ஆங்கிலத்தில் சரளமான அறிவு.. இன்னபிற தகுதிகள் தேவை: கிரீன் கார்டு பெற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழியும் புதிய நிபந்தனைகள்

அமெரிக்கக் குடியுரிமைக்கான கிரீன் கார்டு வழங்குதலில் தகுதி, திறமை அடிப்படையிலான பல்வேறு காரணிகளை உள்ளடக்கி அதிபர் ட்ரம்ப் புதிய முன்மொழிவுகளை பரிந்துரை செய்துள்ளார். குடும்ப அடிப்படையில் கிரீன் கார்டு வழங்கும் நடைமுறைகளுக்குப் பதிலாக பிற காரணிகளுடன் கல்வி, தனிப்பட்ட திறமைகள், ஆங்கிலத்தில் சரளம் மற்றும் அறிவு ஆகிய தகுதி-திறமை அடிப்படையிலான கிரீன் கார்டு வழங்கும் முறையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். ரோஸ் கார்டனில் மூத்த நிர்வாக அதிகாரிகள், செல்வாக்கு மிக்க ஹில் குடியரசுவாதிகள் ஆகியோர் முன்னிலையில்

ஆசியாவிலேயே முதல்முறை: தைவானில் தன்பாலின திருமண மசோதாவுக்கு அனுமதி

ஆசியாவிலேயே முதல்முறையாக தைவானில் தன்பாலின திருமணத்திற்கான மசோதாவுக்கு அந்நாடு அனுமதி அளித்துள்ளது. கடந்த 2017 ஆம் ஆண்டே தைவான் நீதிமன்றம் தன்பாலின திருமணத்தை அங்கீகரித்த உத்தரவிட்டது. இந்த நிலையில் தைவானில் தன்பாலின ஈர்ப்பாளர்கள் திருமண மசோதா அங்கு நிறைவேற்றப்பட்டுள்ளது. இந்த மசோதா மே 24 முதல்  நடைமுறைக்கு வருகிறது. இந்த மசோதா நிறைவேற்றத்தை தைவானில் எல்ஜிபிடி சமூகத்தினர் தெருகளில் கூடி  கொண்டாடி வருகின்றனர்.   தைவானை பொறுத்தவரை அங்கு அதிகளவில் தன்பாலின சேர்கையாளர்கள் சமூகங்கள் உள்ளன. அங்கு

ஆப்கானில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதல்: 17 போலீஸார் பலி

ஆப்கானில் ஹெல்மண்ட் மாகாணத்தில் தவறுதலாக நடத்தப்பட்ட வான்வழித் தாக்குதலில் 17 போலீஸார் பலியாகினர். பலர் காயமடைந்தனர். இதுகுறித்து ஆப்கான் அதிகாரிகள் தரப்பில்,”ஆப்கானிஸ்தானின் தென்பகுதி மாகாணமான ஹெல்மண்ட் மாகாணத்தில் அயல் நாட்டு ராணுவம் தவறுதலாக நடத்திய வான்வழித் தாக்குதலில் போலீஸார் 17 பேர் பலியாகினர். 14 பேர் காயமடைந்தனர்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தாக்குதல் குறித்து விசாரணை  நடத்தப்படும் என்று ஆப்கான் அரசு தெரிவித்துள்ளது. இந்த தாக்குதலை தலிபான்களுக்கு எதிராக ஆப்கானில் முகாமிட்டு சண்டையிட்டு வரும் அமெரிக்க படைகள்

வடகொரியாவின் செயல் யாரையும் மகிழ்ச்சியடையவில்லை: ட்ரம்ப்

இரண்டு ஏவுகணைகளைப் பரிசோதித்துள்ள வடகொரியாவின் செயலால் யாரும் மகிழ்ச்சி அடையவில்லை என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார். குறுகிய தூரம் சென்று இலக்கைத் தாக்கும் இரண்டு ஏவுகணைகளை வியாழக்கிழமை வடகொரியா பரிசோதித்தது. இதுகுறித்து அமெரிக்க அதிபர் டர்ம்ப் கூறும்போது, ”வடகொரியா நடத்தியுள்ள இரண்டு ஏவுகணை சோதனைகள் குறித்து அமெரிக்க அதிகாரிகள் தீவிரமாக கண்காணித்து வருகின்றனர். வடகொரியாவின் செயலால் யாரும் மகிழ்ச்சியடையவில்லை. என்ன நடக்கிறது என்று பொறுந்திருந்து பார்ப்போம். அவர்கள் பேச்சுவார்த்தை குறித்துப் பேசுகிறார்கள். ஆனால் அவர்கள் பேச்சுவார்த்தைக்குத்

துணை பாதுகாப்பு தலைவரை மணந்த தாய்லாந்து மன்னர்

தாய்லாந்து மன்னர் தனது பாதுகாவல் பிரிவின் துணை தலைவரை திருமணம் செய்திருக்கிறார். இதனைத் தொடர்ந்து முறைப்படி அவருக்கு அரசி பதவியையும் வழங்கப்பட்டுள்ளது இதுகுறித்து தாய்லாந்து  ஊடகங்கள் தரப்பில், “தாய்லாந்து மன்னர் மகா வஜ்ரலாங்கோன் புதன்கிழமை தனது பாதுகாப்புப் பிரிவின் துணை தலைவரை திருமணம் செய்துக் கொண்டார். இதனைத் தொடர்ந்து அவருக்கு இளைய அரசி சுதிதா என்ற பட்டமும் வழங்கப்பட்டது. இந்த திருமணம் தாய்லாந்து அரசுமுறைப் படி நடைபெற்றது. இதில் பல பாதுகாப்பு உயரதிகாரிகள் கலந்து கொண்டனர்” என்று

அமெரிக்காவுக்கு நாடுகடத்தலா?- ஜூலியன் அசாஞ்சே போராட்டம்

அமெரிக்காவுக்கு நாடு கடத்தும் வழக்கில் ஜூலியன் அசாஞ்சே மீதான விசாரணைக்கு நீண்ட காலம் பிடிக்கும் என்று பிரிட்டிஷ் நீதிபதி தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக இன்று (மே 2) பேசிய நீதிபதி மைக்கேல் ஸ்னோ, ”ஜூன் 12-ம் தேதியில் விரிவான விசாரணை நடத்தப்படும்” என்று தெரிவித்துள்ளார். விக்கிலீக்ஸ் நிறுவனரான ஜூலியன் அசாஞ்சே அமெரிக்கா தொடர்பான பல தரப்பட்ட விவகாரங்கள் அடங்கிய ரகசியங்களை,  பல்வேறு பரபரப்பு தகவல்களை தனது விக்கிலீக்ஸ் இணையதளத்தில் வெளியிட்டவர். இதனைத் தொடர்ந்து அவரைக் கைது செய்ய அமெரிக்கா

சந்திரனின் மீது 61,000 கிமீ வேகத்தில் மோதிய விண்கல்: வானியல் விஞ்ஞானிகள் தகவல்

கடந்த ஜனவரி மாதத்தில்  ‘சூப்பர் பிளட் உல்ஃப் மூன்’ என்று அழைக்கப்பட்ட முழு சந்திர கிரகணத்தன்று விண்கல் ஒன்று சுமார் 61,000 கிமீ வேகத்தில் சந்திரனின் மீது மோதிய பதிவாகியுள்ளதாக ஸ்பானிய வானியல் விஞ்ஞானிகள் தகவல் வெளியிட்டுள்ளனர். இதனையடுத்து சந்திரமண்டலத்தின் குறுக்காக 15 மீ பள்ளம் ஏற்பட்டுள்ளதும் தெரியவந்ததாக வானியல் நிபுணர்கள் கூறுகின்றனர். ராயல் அஸ்ட்ரனாமிக்கல் சொசைட்டியின் மாதாந்திர இதழில் இந்தத் தகவல் வெளியாகியுள்ளது.  இதற்காகவென்றே ஸ்பானிய விஞ்ஞானிகள் சந்திரனில் ஏற்படும் தாக்கத்தைக் கண்டறியும் உபகரணம் ஒன்றை

நைஜீரியாவில் பன்னாட்டுப் படையினருடன் மோதிய போகோ ஹாரம் கிளர்ச்சியாளர்கள்: 52 பேர் பலி

வடக்கு நைஜீரியாவில் பன்னாட்டு கூட்டுப் படைகளின் மீது தாக்குதல் நடத்திய 50க்கும் மேலான போகோ ஹாரம் தீவிரவாதிகள் கொல்லப்பட்டதாக நைஜீரிய ராணுவம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து ராணுவ செய்தித் தொடர்பாளர் கலோனல் ஆஸெம் பெர்மான்டோவா தெரிவித்ததாவது: நைஜீரியாவில் போகோ ஹாரம் தீவிரவாதிகள் நாட்டின் பெரும் பகுதியை தங்கள் கட்டுப்பாட்டுக்குள் வைத்துள்ளனர். அவர்களை எதிர்த்து பன்னாட்டு கூட்டுப் படையுடன் நைஜீரிய ராணுவமும் இணைந்து சண்டையிட்டு வருகிறது. நேற்று நடைபெற்ற சண்டையில், போகோ ஹாரம் படைகளுக்கு எதிராக பன்னாட்டுக் கூட்டுப் படைகளுடன்

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்

தைவானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கத்தின் காரணமாக கட்டிடங்கள் குலுங்கியதாக செய்திகள் வெளியாகின. இதுகுறித்து அமெரிக்க நிலநடுக்க மையம் தரப்பில், “தைவானில் இன்று (வியாழக்கிழமை) சக்தி வாய்ந்த நில நடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6. 1 ஆக பதிவாகியது. இந்த நில நடுக்கத்தின் ஆழம் 19 கிலோமீட்டர்.  இதன் காரணமாக தைவானில் பல இடங்களில் கட்டிடங்கள் குலுங்கி உள்ளது.  மேலும் மலைப் பாதைகளில் பாறைகள் விழுந்து போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டுள்ளது”

அமெரிக்க ஏகாதிபத்தியமே எங்களது முக்கிய பிரச்சனை: ஈரான்

அமெரிக்க ஏகாதிபத்தியமே எங்களது முக்கிய பிரச்சனை என்று ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஈரான் அரசு தொலைகாட்சியில்  ஈரான் அதிபர் ஹசன் ரவ்ஹானி கூறும்போது, “ ஈரானின் பாதுகாப்புப் படைகள் எந்த பிராந்திய நாட்டிற்கும் எதிரானது அல்ல. எங்களது படை வீரர்கள் ஊடுவல்காரர்களுக்கு எதிராக நிற்கிறார்கள். யூதர்களின் ஆதிக்கம் மற்றும் அமெரிக்க ஏகாதிபத்தியம் எங்களது முக்கிய பிரச்சனைகள்” என்று தெரிவித்தார். ஈரானின் இஸ்லாமிய புரட்சிகர ராணுவப்படையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் ‘பயங்கரவாத அமைப்பு’ என்று

பேருந்தில் இருந்து கீழே இறக்கி 14 பேர் சுட்டுக்கொலை: பாகிஸ்தானில் தீவிரவாதிகள் அட்டூழியம்

துணை ராணுவப்படைக்கான சீருடையை அணிந்திருந்த அடையாளம்தெரியாத துப்பாக்கி ஏந்திய தீவிரவாதிகள், நெடுஞ்சாலையில் சென்றுகொண்டிருந்த பேருந்தை வழிமறித்து அதில் பயணம் செய்துகொண்டிருந்த 14 பேரை கீழே இறக்கி சுட்டுக்கொன்ற அதிர்ச்சி சம்பவம் பாகிஸ்தானில் இன்று நடந்துள்ளது. பலுசிஸ்தான் மாகாணத்தில் ஆர்மாரா பகுதியில் உள்ள மாக்ரான் கோஸ்டல் நெடுஞ்சாலையில் கராச்சிக்கும், குவெட்டாவுக்கும் இடைப்பட்ட பகுதியில் இச்சம்பவம் நடந்துள்ளது.  அவ்வழியே சென்றுகொண்டிருந்த ஐந்து அல்லது ஆறு பேருந்துகளை கிட்டத்தட்ட 15 லிருந்து 20 பேர் வரை அடங்கிய துப்பாக்கிய ஏந்திய நபர்கள்

காங்கோவில் படகு கவிழ்ந்து விபத்து: 3 பேர் பலி; பலர் மாயம்

காங்கோவில் பயணிகள் சென்ற படகு ஒன்று கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில்  3 பேர் பலியாகினர். 150  பேர் மாயமாகினர். இதுகுறித்து ஊடகங்கள் ”காங்கோவின் தென் பகுதியில் அமைந்துள்ள கிவு ஏரியில் பயணிகள் சென்ற படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளனாது. இதில் 150 பேர் மாயமாகினர். 3 பேர் பலியாகினர். 25- க்கும் மேற்பட்டவர்கள் மீட்கப்பட்டனர்” என்று கூறப்பட்டுள்ளது. இந்த விபத்து குறித்து காங்கோ அதிபர் ஃபேலிக்ஸ். இது மிகுந்த வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது. மாயமான அந்தக் குடும்பத்தினரின் வருத்தத்தை பகிர்ந்து கொள்கிறேன்”

ஐந்தாண்டு சிறை தண்டனை பெறுவாரா அசாஞ்சே?

விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே 5 ஆண்டுகள் வரை சிறை தண்டனை பெறலாம் எனத் தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்கிலீக்ஸ் நிறுவனர் ஜூலியன் அசாஞ்சே லண்டனில் உள்ள ஈக்வடார் தூதரகத்தில் வியாழக்கிழமை கைது செய்யப்பட்டார். ஜூலியன் அசாஞ்சே மீது ஸ்வீடனில் பாலியல் குற்றச்சாட்டு வழக்குகள் இருந்த நிலையில் அவரை லண்டன் போலீஸார் கைது செய்தனர். ஈக்வடார் அரசு அசாஞ்சேவுக்கு வழங்கிய அடைக்கலத்தை வாபஸ் பெற்றதைத் தொடர்ந்து அவர் தூதரக அதிகாரிகளால் அழைக்கப்பட்டு கைது செய்யப்பட்டார். கைது செய்யப்பட்ட அசாஞ்சே

இட்லிப் மாகாணத்தில் ஐஎஸ் தலைவர் பதுங்கியுள்ளார்: சிரியா

ஐஎஸ் தலைவர் அபூபக்கர் பாக்தாதி இட்லிப் மாகாணத்தில் உயிருடன் இருப்பதாக சிரியாவின் பாதுகாப்புப் படை தெரிவித்துள்ளது. இந்நிலையில் ரஷ்யாவில் செய்தி சேனல் ஒன்றுக்கு சிரிய பாதுகாப்புப் படையின் செய்தித் தொடர்பாளர் கூறுகையில், ”சிரியாவின் வடமேற்கு இட்லிப் மாகாணத்தில் ஐஎஸ் தலைவர் அபூபக்கர் பக்தாதி பதுங்கி இருக்கிறார்” என்றார். இதற்கு முன்னரும் இராக் பாதுகாப்புப் படைகள் அபூபக்கர் பாக்தாதி உயிருடன் இருப்பதாகக் கூறி வந்தது. இந்த நிலையில் சிரியா தரப்பிலும் இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. சிரியாவின் கிளர்ச்சியாளர்களுக்கும், ஐஎஸ் தீவிரவாதிகளுக்கும்

வாழை இலையால் தாய்லாந்தில் பிரபலமாகும் சூப்பர் மார்க்கெட்

பாலித்தீன் பைகளுக்குப் பதிலாக வாழை இலையைப் பயன்படுத்தும் தாய்லாந்து சூப்பர் மார்க்கெட் ஒன்று அந்நாட்டில் பிரபலமடைந்து வருகிறது. உலகம் முழுவதும் கரியமில வாயுக்கள் வெளியீடு அதிகரித்து வருவதால் உலகின் வெப்பநிலை அதிகரித்து பருவ நிலையில் மாற்றம் ஏற்பட்டு வருகிறது. இதனைத் தடுக்க உலக நாடுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. அந்த வகையில் தாய்லாந்தைச் சேர்ந்த சூப்பர் மார்க்கெட் ஒன்று பாலித்தீன் பைகளுக்கு மாற்றாக வாழை இலையை அறீமுகப்படுத்தி இருகிறது. இந்த சூப்பர் மார்க்கெட்டில் விற்கும் பொருட்கள்

தன்பாலின உறவு, கூடா நட்புக்கு கல்லால் அடித்து மரண தண்டனை: புரூனேயில் புதிய அடக்குமுறைச் சட்டங்கள் அறிமுகம்

புரூனேயில் மிகவும் கடினமான ஷரியத் சட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன, இதில் உலகம் முழுதும் பலநாடுகளில் ’காட்டுமிராண்டித் தனமானது’ என்று கடும் கண்டனங்களுக்கு ஆளான கல்லால் அடித்துக் கொலை செய்யும் தண்டனைகளும் அடங்குகிறது. தன்பாலின உறவு, கூடா நட்பு அல்லது மாற்றுக்காதல் ஆகியவற்றுக்கு கல்லால் அடித்துக் கொலை செய்யும் தண்டனையை அறிமுகம் செய்துள்ளது புருனெய். அதே போல் பாலியல் பலாத்காரம், திருட்டு ஆகியவற்றுக்கும் உச்சபட்ச மரண தண்டனை என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே போல் முகமது நபியை கேலி செய்வது அவதூறு