Category: சற்று முன்

சற்று முன்

காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

டெல்லி: காங்கிரஸ் கட்சியின் தலைவராக ராகுல்காந்தியே நீடிப்பார் என செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. காங்கிரஸ் கட்சியில் அனைத்து தீர்மானத்தையும் எடுக்கும் அதிகாரத்தை ராகுல் காந்திக்கு வழங்கி தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தேர்தல் தோல்வி குறித்து 3 மணி நேரம் நடைபெற்ற விவாதத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

உலகக்கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டம்: நியூசி. அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்

லண்டன்: உலகக்கோப்பை கிரிக்கெட் பயிற்சி ஆட்டத்தில் நியூசி. அணிக்கு எதிராக இந்திய அணி பேட்டிங்கை தேர்வு செய்தது. லண்டனில் முதலில் டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பேட்டிங்கை தேர்வு செய்தார்.

ராகுல்காந்தி ராஜினாமா செய்வதாக தெரிவித்ததை செயற்குழு நிராகரித்துவிட்டது: காங். அறிவிப்பு

டெல்லி: ராகுல்காந்தி ராஜினாமா செய்வதாக தெரிவித்ததை செயற்குழு நிராகரித்துவிட்டது என காங். அறிவிப்பு வெளியிட்டுள்ளது. கட்சித் தலைவர் பொறுப்பில் இருந்து விலகுவதாக செயற்குழுவில் ராகுல் தெரிவித்தார். ஆனால் அது நிராகரிக்கப்பட்டது. மேலும் காங்கிரஸ் கட்சியின் அனைத்து விதமான முடிவுகளை எடுக்கவும் ராகுல் காந்திக்கு முழு அதிகாரம் அளிக்கப்பட்டுள்ளது.

நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் பெயரில் ரூ. 17 லட்சம் மோசடி

திண்டுக்கல்: கொடைக்கானல் நகர கூட்டுறவு வங்கியில் வாடிக்கையாளர் பெயரில் ரூ. 17 லட்சம் மோசடி செய்யப்பட்டது ரூ.17 லட்சம் மோசடியில் ஈடுபட்ட வங்கி ஊழியர்கள் 3 பேர் கைது செய்யப்பட்டவர்.

மதுரையில் இளைஞர் கொலை…. போலீசார் விசாரணை

மதுரை: முத்துப்பட்டி அய்யனார் காலனியில் சவுந்தர்(29) என்பவரை 4 பேர் கொண்ட கும்பல் வெட்டிக் கொலை செய்தது. இளைஞர் சவுந்தர் கொலை குறித்து சுப்பிரமணியபுரம் போலீஸ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வெற்றி

வடசென்னை: வடசென்னை மக்களவை தொகுதியில் திமுக வேட்பாளர் கலாநிதி வீராசாமி வெற்றி பெற்றுள்ளார். தேமுதிக வேட்பாளரை 4.47 லட்சம் வாக்குகள் வித்தியாசத்தில் கலாநிதி வீராசாமி தோற்கடித்துள்ளார். மக்களவை தேர்தல் மற்றும் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் பணி தொடங்கியது. நாடு முழுவதும் 542 மக்களவை தொகுதிகளுக்கு 7 கட்டமாக தேர்தல் நடைபெற்றது.

ஓபிஸ், ஈபிஸ் அறிக்கை வெளியீடு

சென்னை: பேரவையில் அதிமுகவின் பெருபான்மையை உறுதி செய்த வாக்காளர்களுக்கு அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் மற்றும் துணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி நன்றி தெரிவித்துள்ளனர். தமிழகத்தை ஆளும் தகுதி அதிமுகவுக்கே உண்டு என்பதை தேர்தல் முடிவுகள் காட்டுகின்றன. மற்றும் மக்களின் எதிர்பார்ப்புக்கு ஏற்ப நல்லாட்சியை தொடர்ந்து வழங்குவோம் என ஓபிஸ், ஈபிஸ் அறிக்கை வெளியிட்டுள்ளனர்.

39 மக்களவைத் தொகுதிகளில் 32 தொகுதியில் திமுக கூட்டணி வெற்றி: அதிகாரப்பூர்வ அறிவிப்பு

சென்னை: தமிழகம், புதுச்சேரியில் உள்ள 39 மக்களவைத் தொகுதியில் 32 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. 22 சட்டமன்ற இடைத்தேர்தலில் திமுக 10 தொகுதிகளில் வெற்றி பெற்றுள்ளது.

மானாமதுரையில் அதிமுக – அமமுக கட்சியினர் இடையே வாக்குவாதம்

மானாமதுரை:  மானாமதுரை இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கையின் போது அதிமுக – அமமுக கட்சியினர் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அய்யம்பட்டியில் வாக்குபதிவில் வித்தியாசம் இருப்பதாக கூறி அதிகாரிகளுடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டுள்ளனர்.

பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர் மு.க.ஸ்டாலினுக்கு நடிகர் ரஜினிகாந்த் வாழ்த்து

சென்னை: பாராளுமன்ற தேர்தலில் மாபெரும் வெற்றி பெற்ற தி.மு.க தலைவர், மதிப்பிற்குரிய நண்பர் ஸ்டாலின் அவர்களுக்கு என் மனமார்ந்த வழ்த்துக்கள் என நடிகர் ரஜினிகாந்த் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார். தமிழகம், புதுச்சேரியில் தேர்தல் நடைபெற்ற 39 மக்களவைத் தொகுதியில் 32 தொகுதிகளில் திமுக கூட்டணி வெற்றி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

நீர்மட்டம் 48.60 அடியாக சரிவு மேட்டூர் அணையில் நீர் திறப்பு குறைப்பு

மேட்டூர்: கர்நாடக மாநில காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை இல்லாததால், மேட்டூர் அணைக்கான நீர்வரத்து தொடர்ந்து குறைந்து வருகிறது. எனினும் நேற்று முன்தினம் விநாடிக்கு 33 கனஅடியாக இருந்த நீர்வரத்து, நேற்று காலை நிலவரப்படி வினாடிக்கு 58 கனஅடியாக சற்று அதிகரித்தது. அணையில் இருந்து குடிநீர் தேவைக்காக திறக்கப்படும் நீரின் அளவு நேற்று காலை விநாடிக்கு 2000 கனஅடியில் இருந்து 1000 கனஅடியாக குறைக்கப்பட்டது. நேற்று முன்தினம் 48.82 அடியாக இருந்த நீர்மட்டம், நேற்று காலை 48.60

பொருளாதார சரிவு தொடர்ந்து நீடிக்கும்

புதுடெல்லி: பொருளாதார சரிவு மேலும் சில காலம் தொடர்ந்து நீடிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பொருளாதாரம் தொடர்ந்து சரிந்து வருகிறது. நாட்டின் பொருளாதாரம் உயர்ந்து வருவதாக மத்திய அரசு புள்ளி விவரம் வெளியிட்டது. ஆனால், மத்திய அரசின் புதிய கணக்கீட்டு முறை தவறு என எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டி வருகின்றன. இதற்கு ஏற்ப, பொருளாதார சரிவை நிரூபிக்கும் பிற புள்ளி விவரங்களும் வெளியாகின. கடந்த நிதியாண்டில் கச்சா எண்ணெய் இறக்குமதி 227 மில்லியன் டன்களாக இருந்தது, நடப்பு

சங்கராபுரம் அருகே துப்பாக்கி குண்டு பாய்ந்து பெண் படுகாயம்

சங்கராபுரம்: விழுப்புரம் மாவட்டம் சங்கராபுரம் அடுத்த ஈருடையாம்பட்டு கிராமத்தை சேர்ந்தவர் தனிஸ்லாஸ்(60). இவரது மனைவி சந்தோஷமேரி(55). இவர் கடந்த மாதம்  உடல்நிலை சரியில்லாமல் இறந்துவிட்டார். இவருக்கு கல்லறையில் பெயர் பலகை வைப்பதில் தனிஸ்லாஸ்க்கும் அவரது தம்பி சூசைக்கண் என்பவருக்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது தனிஸ்லாசின் இளைய மகன் லெனின்பாஸ்கர்(30) வீட்டில் இருந்த நாட்டுத்துப்பாக்கியை  எடுத்து சூசைக்கண்ணை துப்பாக்கியால் சுடமுயலும் போது அங்கிருந்தவர்கள் அதனை தடுத்தனர். அப்போது நாட்டுத்துப்பாக்கியின் குறிதவறி லெனின்பாஸ்கரின் அண்ணன் அந்தோனிசாமியின் மனைவி லிமா(28) காலில்

‘டிக்டாக்’கில் அவதூறு வீடியோ வெளியிட்ட மாணவன் கைது

போச்சம்பள்ளி: கிருஷ்ணகிரி மாவட்டம், போச்சம்பள்ளி அடுத்த மத்தூர் அருகே மோட்டுகொட்டாய் கிராமத்தை சேர்ந்த 17 வயது மாணவன், பாலிடெக்னிக் கல்லூரியில் படித்து வருகிறார். இந்நிலையில், சமூக வலைதளமான டிக்டாக் செயலியில், ஒரு சமூகத்தை பற்றி அவதூறாக பேசி இவர் வீடியோ வெளியிட்டார். இந்த வீடியோ வைரலாக பரவியதை தொடர்ந்து, மத்தூர் அருகே சாணிப்பட்டி கிராமத்தை சேர்ந்த 100க்கும் மேற்பட்ட இளைஞர்கள், டிக்டாக் செயலியில் அவதூறாக பேசியவரை கைது செய்யக்கோரி, ஊத்தங்கரை டிஎஸ்பி ராஜபாண்டியனிடம் புகார் மனு அளித்தனர்.

மே-20 இன்றைய விலை: பெட்ரோல் ரூ.73.82, டீசல் ரூ.69.88

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.73.82 ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.69.88-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

சேலம் அருகே உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.49 லட்சத்தை தேர்தல் அதிகாரிகள் பறிமுதல்

சேலம்: சேலம் மாவட்டம் சந்தைபேட்டை பகுதியில் காரில் உரிய ஆவணமின்றி எடுத்துவரப்பட்ட ரூ.49 லட்சத்தை தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர். நாளை தமிழகத்தில் 4 தொகுதிகளுக்கு இடைத்தேர்தல் நடக்கவுள்ள நிலையில் தேர்தல் பறக்கும் படையினர் பறிமுதல் செய்துள்ளனர்.