Category: சிறப்புக் கட்டுரைகள்

இந்தியாவின் உடனடித் தேவை… தேசிய வேலைவாய்ப்புக் கொள்கை!

வேறு எந்தப் பொருளாதார ஆய்வறிக்கையும் சமீபத்தில் இந்த அளவுக்கு விவாதிக்கப்பட்டிருப்பதாகத் தெரியவில்லை. கடந்த ஆண்டு செப்டம்பரில் அஸிம் பிரேம்ஜி பல்கலைக்கழகத்தின் நிலையான வேலைவாய்ப்புக்கான மையம், ‘இந்தியப் பணியாளர் நிலை-2018’ என்ற அறிக்கையை வெளியிட்டது. 2019-க்கான ஆய்வறிக்கை ஏப்ரலிலேயே வெளிவந்துவிட்டது. தேர்தல் நேரம். ‘ஆண்டுதோறும் இரண்டு கோடி இளைஞர்களுக்குப் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்குவதாகச் சொன்ன பிரதமர் ஏமாற்றிவிட்டார்’ என்ற எதிர்க்கட்சிகளின் குற்றச்சாட்டுகளுக்கு நடுவே அது உண்மைதான் என்பதற்கு ஆதாரமாக அமைந்துவிட்டது இந்த அறிக்கை. தொழிலாளர் வருங்கால வைப்புநிதி அமைப்பில்

வீட்டுக்கு நடுவே குதிரைகள்

உலகில் உள்ளது எல்லாமும் ‘கேம் ஆப் த்ரோன்ஸ்’ வலைத்தொடரில் உண்டு. காவியங்களுக்கே உரிய படைப்பம்சம்தான். காதல் உண்டா? உண்டு. உக்கிரமான சண்டை உண்டா? உண்டு. உறங்கிய பிறகும் ஆழ்மனதில் ஓசையிடும் வாள்களின் சத்தமும் குதிரைகளின் குளம்பொலிகளும் உண்டு. வெறுப்பு, சதி, எதிர்பாரா திருப்பங்கள், பழிவாங்கல்கள் உண்டு. வாழ்க்கையை விசாரிக்கும் அடிப்படைக் கேள்விகளும், புத்திசாலித்தனமும், இதற்கெல்லாம் அப்பால் காலம்காலமாக சந்தேகத்துடன் விசாரித்துவரும் பேய்கள், பில்லி சூன்யம், ஜோம்பிகளின் நடமாட்டமும் உண்டு. ‘இருள் சூழ்ந்திருக்கிறது; முற்றிலும் பயங்கரங்கள்’ என்ற வசனம்

இந்தியாவை அறிவோம்: ஜார்க்கண்ட்

மாநில வரலாறு ஒரு மாநிலமாக ஜார்க்கண்ட் 2000-ல்தான் பிரிக்கப்பட்டாலும் தொன்மையான வரலாறு உள்ள பிரதேசம்தான் அது. இங்குள்ள குகை ஓவியங்களே ஜார்க்கண்ட்டின் தொன்மைக்குச் சான்று. வனங்கள் சூழந்த பகுதி என்பதால் பெரிய அளவுக்குப் பேரரசுகளால் இது ஆளப்படவில்லை. மௌரியர்கள், குப்தர்கள் போன்றோர் சிறிது காலம் ஆண்டிருக்கிறார்கள். 13-ம் நூற்றாண்டில் ஒடிஷாவைச் சேர்ந்த ராஜா ஜெய்சிங் தேவ் ஜார்க்கண்ட்டின் மன்னராகத் தன்னை அறிவித்துக்கொண்டதாகக் கதைகள் உண்டு. மாநிலமாகப் பிரிக்கப்படும்வரை பிஹார் மாநிலத்தின் தென்பகுதியாகவே ஜார்க்கண்ட் இருந்துவந்தது. பழங்குடியினப் போராளி

எப்படியிருக்கிறது இந்தியா? – தெற்கு

தேசிய அரசியலைத் தீர்மானிக்கும் சக்திகளாக மாறிவருகின்றன தென்னிந்திய மாநிலங்கள்.  தமிழ்நாடு, ஆந்திரம், தெலங்கானா, கர்நாடகம், கேரளம் ஆகிய ஐந்து மாநிலங்களையும் புதுச்சேரி, லட்சத்தீவு ஆகிய மத்திய ஆட்சிக்குட்பட்ட ஒன்றியப் பிரதேசங்களையும் உள்ளடக்கியது தென்னிந்தியா. 543 இடங்களைக் கொண்ட மக்களவையில் தென்னிந்தியாவுக்கு மட்டும் 130 இடங்கள். மாநிலவாரியாகத் தமிழ்நாடு 39, ஆந்திரம் 25, தெலங்கானா 17, கர்நாடகம் 28, கேரளம் 20, புதுச்சேரி 1. தென்னிந்திய பரப்பளவு 2,45,480 ச.கி.மீ. தென்னிந்தியாவின் மக்கள் தொகை 2011 கணக்கெடுப்பின்படி 25.2

‘ஆசார்ய’ கிருபளானி: சமரசமற்ற ஆசான்

தென்னாப்பிரிக்காவிலிருந்து திரும்பிய காந்தி, பிஹார் மாநிலத்தின் சம்பராண் மாவட்டத்தில், 1917-ல் விவசாயிகளுக்கு ஆதரவாக சத்யாகிரகப் போராட்டத்தில் ஈடுபட்டபோது அவரைச் சந்தித்தார் அந்த மனிதர். காந்தியின் கொள்கைகளால் மிகவும் ஈர்க்கப்பட்டார். மகாராஷ்டிரத்திலும் குஜராத்திலும் காந்தி நிறுவிய ஆசிரமங்களில் கல்வி போதிக்கும் பணியில் ஈடுபட்டார். அவர்தான் பின்னாளில் ‘ஆசார்ய’ (ஆசிரியர்) எனும் அடைமொழியுடன் அழைக்கப்பட்ட ஆசார்ய கிருபளானி. காந்தியின் வழிகாட்டலில் காங்கிரஸ் கட்சியில் சேர்ந்த அவர், 1928-29-ல் காங்கிரஸ் கட்சியின் தேசியப் பொதுச்செயலாளரானார். நாடு சுதந்திரம் அடைந்தபோது காங்கிரஸ் கட்சியின்

இதுதான் இந்தத் தொகுதி: திருநெல்வேலி

தமிழகத்திலேயே உற்பத்தியாகி, தமிழகத்திலேயே கடலில் சங்கமிக்கும் தாமிரபரணியின் கரையோரத்தில் இருக்கிறது திருநெல்வேலி. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை என்று ஐந்து வகை நிலங்களை உள்ளடக்கிய பெருமை கொண்டது. திருநெல்வேலி, பாளையங்கோட்டை, அம்பாசமுத்திரம், ஆலங்குளம், நாங்குநேரி, ராதாபுரம் ஆகிய சட்டமன்றத் தொகுதிகளை உள்ளடக்கிய திருநெல்வேலி மக்களவைத் தொகுதி அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. நாட்டின் முக்கியப் பாதுகாப்பு மையங்களைக் கொண்ட தொகுதி இது. விஜயநாராயணம் ஐஎன்எஸ் கடற்படை தளம், மகேந்திரகிரியில் ஐஎஸ்ஆர்ஓ திரவ இயக்க உந்தும வளாகம் உள்ளன.

ஆபத்தாகி வருகிறதா அசைவ உணவு? – ஓர் எச்சரிக்கை ரிப்போர்ட்

நான் சுத்தமான அசைவப் பிரியன். ஓடுவது… நடப்பது… மிதப்பது… என ஏதாவது ஒன்று எனக்கு இருந்தே ஆக வேண்டும் என்று சொல்லும் அளவுக்கு அசைவ உணவுகளை விரும்புபவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. வீட்டில் சமைத்தாலும்  விதவிதமான  அசைவ உணவுகளை  அன்றாடம்  வீட்டிற்கே வரவழைத்து உண்ணும் அளவுக்கு அசைவப் பிரியர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.  வீதிக்கு நான்கு கடைகளில் பிரியாணிக்கு சிக்கன் 65  இலவசமாகவும்,  தள்ளு வண்டியில் பிளேட் பிரியாணி 50 ரூபாய் என்றும் படித்துவிட்டு கடக்கும் போதும் மனம்

ஐ.டி. மோகம் அவ்வளவுதானா? – ஓர் அலசல்

’ஹை ஃபை-யா வாழணும்னா ஐ.டி.துறைக்குத்தானே போகணும். அதான் என் லட்சியம்’ என்று பெருமையாக சொல்லும் தலைமுறையினரைப் பெரு மிதத்தோடு பார்த்தோம். இதற்காக, பல முன்னணி நிறுவனங்களைத்தான் டார்கெட் செய்தார்கள்.    தகவல் தொழில் நுட்பம் என்று அழைக்கப்படும் ஐடி துறையில் அப்படி என்ன  இருக்கு?  ஆறு இலக்க சம்பளம், வெளிநாட்டுப்பயணம்,  சொகுசான வாழ்க்கை என அனைத்துமே உண்டு.  திறமைமிக்க பட்டதாரிகளை வேலை வேலை என்று அலைய விடாமல், படிக்கும் போதே  முன்னணி கல்லூரிகளுக்கு வந்து அள்ளிச்சென்றன  முன்னணி நிறுவனங்கள்.

அன்லிமிடெட் டேட்டா: பலியாகும் மாணவர்கள்

விழுங்கிவிட முடியாதபடி கசக்கிறது உண்மை. தொலைபேசி நிறுவனங்கள், வரம்பற்ற தரவிறக்கத்தை அறிமுகப்படுத்திய பின்னர், மாணவர்களின் பிரிக்கப்பட முடியாத அங்கமாகவே மாறிவிட்டன செல்போன்கள். சில மாணவர்களின் கைகளில் விளையாட்டுப் பொருளாக, பல மாணவர்களுக்குச் சினிமாவாக, இன்னும் சிலருக்குச் சில்லறை விஷயங்களுக்காக. எத்தனை மாணவர்கள் படிப்புக்குப் பயன்படுத்துகிறார்கள்? ஏமாற்றம்தான். தொழிற்சாலைகளிலும் அலுவலகங்களிலும்கூட மொபைல் ஒரு தொந்தரவு என்கிறபோது, வகுப்பறைக்கு மட்டும் அது வரப்பிரசாதமா என்ன? மாணவர்களின் கவனச் சிதறல்களை மிகுந்த எச்சரிக்கையோடு அணுக வேண்டிய நிலையில் இருக்கிறார்கள் கல்லூரி ஆசிரியர்கள்.

360: ரோஹிங்கியாக்களுக்கு நியாயம் வேண்டும்… ஜூலியின் வேண்டுகோள்

மாதவிடாய்: ஒரு பெருமிதப் பேரணி! நாங்கள் பேசுவோம்; வாய் திறப்போம்; உலகம் அப்போதுதான் மாறும் – டெல்லியில் பிப்ரவரி 5-ல் நடந்த  ‘மாதவிடாய் பெருமிதப் பேரணி’யில் கலந்துகொண்ட நூற்றுக்கணக்கான பள்ளி மாணவிகள் எழுப்பிய முழக்கம் இது. 50 அரசுப் பள்ளிகளைச் சேர்ந்த மாணவிகள் இந்தப் பேரணியில் கலந்துகொண்டனர். மாதவிடாய் தொடர்பாக வெளிப்படையாகப் பேசுவது மகிழ்ச்சியையும் பெருமிதத்தையும் தருவதாகப் பள்ளி மாணவிகள் தெரிவித்தனர். மாதவிடாயைக் கொண்டாடுவதுடன் பெண் குழந்தைப் பிறப்பையும் கொண்டாடிய இந்நிகழ்வில், நாடகங்கள், நடன நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன.

தேர்வுக்குத் தயாராவது இப்படித்தான்: பெற்றோர், ஆசிரியர்கள், மாணவர்களுக்கு!

இன்றைக்கு லைஃப் இஸ் எ ரேஸ்… ரன்.. ரன்… என்று  குழந்தைகளோடு சேர்ந்து பெற்றோர்களும் ஓடிக்கொண்டிருக்கிறார்கள்.  இப்படிச் சொல்வதை விட, பெற்றோர் இழுக்க குழந்தைகள் ஓடிக்கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம், ஆசிரியர்கள் இழுக்கிறார்கள். இரண்டுமே மதிப்பெண்ணுக்கான பயணம்தான்! அம்மாவுக்கும்   குழந்தைக்கும், அப்பாவுக்கும் குழந்தைக்கும் அல்லது பெற்றோருக்கும் குழந்தைக்கும் நடக்கும் ஸ்கூல் சம்பந்தப்பட்ட பேச்சு, ஆகச்சிறந்த கவலையாகிவிட்டது. மகுடிக்கு கட்டுப்பட்டது போல் இந்த வாசிப்பில் அடங்கியபடி தலையாட்டுவார்கள் குழந்தைகள். ”இந்த வருஷம் நீங்கல்லாம் பப்ளிக் எக்ஸாம் எழுதப்போறீங்க… கொஞ்சம் கூட

உலகப் பொருளாதாரத்தைக் கட்டமைக்கும் நாடாக சீனா உருமாறியது எப்படி?

சீனத்தில் 1978 டிசம்பரில் நடந்த சீன கம்யூனிஸ்ட் கட்சி மத்தியக் குழுவின் பதினோராவது மாநாடு, எதைப் பற்றியது என்பது வேண்டுமானால் உலகுக்குத் தெரியாமல் இருந்திருக்கலாம். ஆனால், அது ஏற்படுத்திய விளைவுகள், உலகம் முழுவதும் பெரும் நில அதிர்வைப் போல இன்னமும் உணரப்பட்டுவருகிறது. வேளாண்சார் நாடாக இருந்ததைத் தொழிலுற்பத்தி ஆற்றல் மையமாக டெங் சியோபிங் தொடங்கிய ‘(பொருளாதார) சீர்திருத்தம் – திறந்துவிடல்’ கொள்கையானது மாற்றியுள்ளது. அது மட்டுமின்றி, உலகப் பொருளாதாரத்தையே கட்டமைக்கும் நாடாக சீன வளர உதவுகிறது. பொருளாதாரச்

பத்து சதவீத இட ஒதுக்கீடு: வாக்கு வங்கி அரசியல்!

பொருளாதாரத்தில் பின்தங்கிய உயர் சாதியினருக்கு 10% இட ஒதுக்கீடு அளிப்பதற்கான சட்டம் அரசிதழிலும் வெளியாகிவிட்டது. மக்களவையில் வெறும் மூன்று உறுப்பினர்கள் மட்டுமே இந்த மசோதாவை எதிர்த்தனர். மாநிலங்களவையில் திமுக உள்ளிட்ட சில கட்சியினரின் எதிர்ப்பைத் தவிர, பெரும் எதிர்ப்புகள் இந்தச் சட்டத்துக்கு எழவில்லை. ராம ஜென்ம பூமி பிரச்சினை, ஐயப்பன் கோயிலில் பெண்கள் வழிபட அனுமதி என்று அரசியல் பரபரப்புடன் ஒரு மதத்தையோ அல்லது இயக்கத்தையோ பொது எதிரியாகக் காட்டி, அதன் மூலம் தன் ஆதரவு வாக்குகளை

இயக்கமாகட்டும் வனமீட்பு!

திருவண்ணாமலை மாவட்டத்தில் கிழக்குத் தொடர்ச்சி மலையையொட்டி 240 ஹெக்டேர் பரப்பில் விரிந்திருக்கிறது சந்தவாசல் வனப்பகுதி. 20 ஆண்டுகளுக்கு முன்னால் வாடி வதங்கி, வறண்டுகிடந்த பகுதி இது. கணக்கின்றி மரங்கள் வெட்டப்பட்டன. வரையறை இல்லாமல் மேய்ச்சல் அனுமதிக்கப்பட்டது. விவசாயத்துக்கும் எந்த வரையறையும் இல்லை. கடைசியில், எல்லாம் சேர்ந்து வனப்பகுதியை அழியும் நிலைக்குத் தள்ளிவிட்டது. பல்லுயிர்கள் பெருக்கமும் தடைப்பட்டது. வனத்தைச் சுற்றியுள்ள கிராமங்களில் நிலத்தடி நீர்மட்டம் வெகுவாகக் குறைந்து, வெகு ஆழத்துக்குச் சென்றது. கிடைத்த தண்ணீர் விவசாயத்துக்கும் குடிநீருக்கும் பயன்படவில்லை.

360: நீதிக்குக் காத்திருக்கும் கவுரியின் மகள்

நீதிக்குக் காத்திருக்கும் கவுரியின் மகள் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷின் இறுதிக் கணங்களைப் பற்றி அவரது சகோதரியின் மகள் இஷா லங்கேஷ் இணையத்தில் எழுதிய நினைவுக் கட்டுரை வைரலாகிக்கொண்டிருக்கிறது.  அம்மா கவிதா லங்கேஷின் இயக்கத்தில் ‘சம்மர் ஹாலிடேஸ்’ படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறாரே அதே சிறுமிதான்.  ‘அம்மாவைக் கொலைசெய்தவர்களின் மீது எனக்கு கோபம் கோபமாக வந்தது. அவர்களையும் அதேபோலச் செய்ய வேண்டும், பழிக்குப் பழி வாங்க வேண்டும் என்று தோன்றியது.  அந்த வலியை அவர்கள் உணர வேண்டும் என்று நினைத்தேன். ஆனால்,

குழந்தைகள் அழுக்காகவில்லையென்றால் விளையாடவில்லை என்றே அர்த்தம்!

கோடை விடுமுறை நாட்கள். காலை எழுந்து கொஞ்ச நேரத்துக்குள்ளாக எனது மகன், ‘போரடிக்குதும்மா’ என்றபடி விளையாடுவதற்காக ‘ஐபேட்’ கேட்டு நச்சரிப்பான். எனது குழந்தைப் பருவ நாட்களை யோசித்துப்பார்த்தேன். வீட்டில் கிடைக்கும் பொருட்களை வைத்தே பொழுதுகளைப் போக்கிய நாட்கள். மிகச் சாதாரணமான அத்தகைய விளையாட்டுகளெல்லாம் இன்று ‘கிரியேட்டிவிட்டி’ என்று விதந்தோதப்படுகிறது! நானும் அண்ணனும் செய்த ‘ராமரின் வில் – அம்பு’, காகிதத்தாளுக்கு நடுவில் குச்சியை ஒட்டிச் செய்த பட்டம் என வெறும் தென்னை விளக்குமாறு குச்சியை வைத்துக்கொண்டு செய்த