Category: செய்தியாளர் பக்கம்

டெல்லியில் கேஜ்ரிவால் சாதித்ததைவிட தமிழகத்தில் கமல் அதிகமாக சாதிப்பார்: திருப்பரங்குன்றம் மநீம வேட்பாளர் நம்பிக்கை

டெல்லியில் முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவால் சாதித்ததைவிட தமிழகத்தில் கமல் அதிகமாக சாதிப்பார் என திருப்பரங்குன்றம் மக்கள் நீதி மய்ய வேட்பாளர் சக்திவேல் நம்பிக்கை தெரிவித்திருக்கிறார். கமல்ஹாசனின் ஒரு கருத்து டெல்லி வரை அரசியல் களத்தைப் பரபரபாக்கிய நிலையில் ஆம் நான் சொன்னது உண்மைதான் சரித்திர உண்மை என்று திருப்பரங்குன்றத்தில் சக்திவேலை ஆதரித்துப் பிரச்சாரம் செய்யும்போது தனது கருத்தை மீண்டும் உறுதிப்படுத்தினார். அடுத்த சில மணி நேரங்களில் கமலை நோக்கி காலணி வீச்சு நடந்தது. திருப்பரங்குன்றம் பரபரப்புச் செய்தியானது.

எனக்கு யாரும் ஸ்பான்சர் செய்யவில்லை; தமிழக அரசு சார்பாக யாரும் இன்னும் நேரில் சந்திக்கவில்லை: கோமதி மாரிமுத்து

எனக்கு யாரும் ஸ்பான்சர் செய்யவில்லை. தமிழக அரசு சார்பாக யாரும் இன்னும் நேரில் சந்திக்கவில்லை என கோமதி மாரிமுத்து தெரிவித்துள்ளார். கத்தார் தலைநகர் தோஹாவில் நடைபெற்ற ஆசிய தடகளப் போட்டியில், மகளிருக்கான 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில், தமிழகத்தைச் சேர்ந்த கோமதி மாரிமுத்து 2 நிமிடம் 70 விநாடிகளில் கடந்து தங்கப் பதங்கத்தை வென்றார். சர்வதேச அளவில், கோமதி மாரிமுத்துவுக்குp பாராட்டுகள் குவிந்து வருகின்றன. உறுதுணையாக இருந்த தந்தை, பயிற்சியாளர் இறந்தபோதும், தன்னம்பிக்கையைக் கைவிடாமல், இந்த வெற்றியைப் பெற்றுள்ளார்

அரசுப் பள்ளிகளை தனியார் நிறுவனங்களுக்கு தத்துக் கொடுக்கலாமா?- ஓர் அலசல்

“கல்வி என்பது இந்திய மக்கள் அனைவருக்கும் கிடைக்கக்கூடியதாக இருக்க வேண்டும். கல்வித் துறையில் கைமாறு எதிர்பார்க்க முடியாது. அதை வியாபாரமயமாக்கக் கூடாது. கல்வி எல்லா வகையிலும் எல்லோர்க்கும் மலிவாகக் கிட்டுவதாக இருக்க வேண்டும். கல்வியைப் போதிக்கும் வழிமுறைகளானது பின்தங்கிய வகுப்பு மக்களை எழுச்சி பெறச் செய்வதாக இருக்க வேண்டும்” மும்பை சட்டப்பேரவை கவுன்சில் கூட்டத்தில் 1927 மார்ச் 12-ல் அம்பேத்கர் இவ்வாறு பேசினார். இதை இங்கே இந்தக் கட்டுரையின் தொடக்கப்புள்ளியாக வைக்க வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தியிருக்கிறது தமிழக

மீண்டும் மீண்டும் சொதப்பும் ராகுல் பேச்சுக்கான மொழிபெயர்ப்பு: காங்கிரஸ் தொண்டர்கள் வேதனை

2019 மக்களவைத் தேர்தலில் பாஜகவை அப்புறப்படுத்தியே ஆக வேண்டும்; மோடி வேண்டவே வேண்டாம் என்ற கொள்கையுடன் களமிறங்கியிருக்கிறது காங்கிரஸ். தமிழகத்தில் வெற்றியைக் குவிப்பது காங்கிரஸின் இந்தக் கனவை நனவாக்கும் பலம் சேர்க்கக்கூடியது.அதனாலேயே, தேர்தல் பரபரப்புகள் தொற்றிக் கொள்வதற்கு முன்னதாகவே கடந்த மார்ச் 13-ம் தேதி தமிழகத்தில் நாகர்கோவிலில் பிரச்சாரத்தைத் தொடங்கினார் ராகுல் காந்தி. அன்றைய தினம் அதற்கும் சில மணி நேரங்களுக்கு முன்னதாக சென்னையில் தனியார் கல்லூரியில் அவர் நடத்திய கலந்துரையாடல் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருந்தது. நாகர்கோவிலில்

நீட் வேண்டாம்; கோத்தகிரி பழங்குடி மாணவர்களின் நம்பிக்கை முகம் ஜனனி எம்பிபிஎஸ் வேண்டுகோள்

நீட் தேவையா? இல்லையா? என்பதை தமிழகமே முடிவு செய்யும் அதிகாரம் தருவோம் என காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி சற்றுமுன்னர்தான் சேலத்தில் முழங்கினார். ஆனால், உண்மையிலேயே நீட் வேண்டுமா வேண்டாமா என்பதை இப்போது மருத்துவக் கனவுடன் இருக்கும் மாணவர்களிடமும், நீட்டுக்கு முன்னால் மருத்துவரான சாதனையாளர்களிடமும்தான் நாம் கேட்டுத் தெரிந்து கொள்ள வேண்டும். அது தான் நடுநிலையான கணிப்பாக இருக்கும். அந்த தார்மீகத்தின் அடிப்படையில் மட்டுமே, இன்று கோத்தகிரியில் உள்ள கோத்தர் இன மக்களின் நம்பிக்கை முகமான டாக்டர்

மணிக்கணக்காக டிவி பார்க்கிறோமா? மணிக்கணக்காக குழந்தைகள் கணினி கேம்களை ஆடுகின்றனரா? அச்சுறுத்தும் ‘பல்மனரி எம்பலிசம்’

நுரையீரலுக்கு ரத்தத்தைக் கொண்டு வரும் ரத்தக்குழாயில் ஏற்படும் அடைப்புக்கு நுரையீரல் ரத்தக்குழாய் அடைப்பு என்றும் ஆங்கிலத்தில் ‘பல்மனரி எம்பலிசம்’ (pulmonary embolism) என்றும் பெயர். இது அமெரிக்காவில் பரவலாகக் காணப்படும் நோய் என்றாலும் தற்போது இந்தியாவிலும் அதிகமாகி வருகிறது. சமீபத்தில் பார்முலா 1 இயக்குநர் திடீர் மரணமடைந்ததும் இந்த நுரையீரல் ரத்தக் குழாய் அடைப்பினால்தான். தற்போதைய வாழ்க்கை உடலியக்கத்துக்கு எதிரான வாழ்க்கையாகும் எல்லாம் இருந்த இடத்திலிருந்தே கிடைக்கின்றன, நகர வேண்டிய அவசியமில்லை. டிவி, கணினி விளையாட்டுக்கள், உட்கார்ந்த

வேட்பாளர்கள் தேர்வில் முஸ்லிம்களை மறந்த அதிமுக, திமுக: வாரிசு அரசியலுக்கு முக்கியத்துவம்

மக்களவைத் தேர்தல் பணிகள் வேகமெடுகத்துவிட்டன. தேர்தலுக்குத் தயாராகும் வகையில் தமிழகத்தில் திமுக, அதிமுக, தேமுதிக, பாமக உள்ளிட்ட கட்சிகள் மக்களவைத் தேர்தலுக்கான வேட்பாளர்கள் பட்டியலை சமீபத்தில் வெளியிட்டன. இந்த வேட்பாளர் பட்டியலில் இரு அம்சங்களை குறிப்பிட்டாக வேண்டும். ஒன்று ‘வாரிசு அரசியல்’, இரண்டாவது ‘முஸ்லிம்’ சமூகத்தைச் சேர்ந்த ஒருவருக்கு கூட இடமளிக்காதது. இதில் திமுக கூட்டணியில் இந்தியன் முஸ்லிம் லீக் கட்சி இருக்கிறது என்றாலும், திமுக அறிவித்த 20 இடங்களில் ஒருவர் கூட முஸ்லிம் வேட்பாளர் இல்லை,

கிருஷ்ணசாமியின் சாதி அரசியல் இனியும் எடுபடாது; தென்காசியில் வெற்றி உறுதி: திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் நம்பிக்கை

கிருஷ்ணசாமியின் சாதி அரசியல் இனியும் எடுபடாது. தென்காசியில் எங்கள் வெற்றி உறுதி என்று நம்பிக்கையுடன் சொல்கிறார் திமுக வேட்பாளர் தனுஷ் எம்.குமார் திமுக கூட்டணியில் காங்கிரஸ், விசிக, மதிமுக, இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், கொமதேக ஆகிய கட்சிகள் உள்ளன. முஸ்லீம் லீக் கட்சியும் தங்கள் ஆதரவை திமுகவுக்கு தெரிவித்திருக்கிறது. தொகுதி ஒதுக்கீட்டுக்கு முன்னதாக தென்காசியில் காங்கிரஸ் 9 முறை வெற்றி பெற்றிருப்பதால் கூட்டணிக் கட்சிக்கு அத்தொகுதி ஒதுக்கப்படலாம் எனக் கூறப்பட்டது. ஆனால், திமுக தென்காசி (தனி)

பெற்றதும் கற்றதும்: வாருங்கள், மகப்பேறு அறிவோம்

| மனித குலம் தொடர்ந்து தடையில்லாமல் இயங்கக் காரணம் மகப்பேறு. அதில் ஏற்படும் பிரச்சினைகள், அதற்கான தீர்வுகள், கர்ப்ப காலம், பிரசவ ஆலோசனைகள், குழந்தை வளர்ப்பு குறித்து முழுமையாக அலச முயற்சிக்கும் தொடர் | ஸ்வாதிக்கு 24 வயது. என் அத்தைப் பெண். அழகுக்கு அதிக முக்கியத்துவம் கொடுப்பவள். ஒல்லியாக இருப்பதே அழகு என்ற எண்ணம் அவளுக்கு. பெரும்பாலும் பட்டினியாகவே இருப்பாள். ஜூஸ், பழவகைகள்தான் அவளின் உணவு. திருமணமாகியும் அவளின் எண்ணங்கள் மாறவில்லை. ”கடவுள் புண்ணியத்தால இன்னும்

எட்டாம் வகுப்பு வரை கட்டாயத் தேர்ச்சியால் கல்வித் தரம் கெட்டுவிட்டதா? – முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேட்டி

இந்தியா முழுவதும் இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி 1 முதல் 8-ம் வகுப்பு வரை மாணவர்களை கட்டாயத் தேர்ச்சி செய்யும் முறை இப்போது அமலில் உள்ளது. இதனால் கல்வித்தரம் பாதிக்கப்படுவதாகக் கூறி, 5 மற்றும் 8-ம் வகுப்புகளுக்கு பொதுத்தேர்வு நடத்துவதற்கான சட்டத்திருத்தத்தை கடந்த நாடாளுமன்றக் குளிர்கால கூட்டத்தொடரில் மத்திய அரசு கொண்டு வந்தது. இந்த சட்டத்திருத்தத்தை அமல்படுத்த தமிழக அரசு முடிவெடுத்துள்ளதாகத் தகவல் வெளியானது. தமிழகத்தில் கட்டாயத் தேர்ச்சியை ரத்து செய்தால் கிராமப்புற மாணவர்களின் கல்வி

‘‘சின்னதம்பி ஸ்டாப் ஒண்ணு கொடுங்க!’’ – கரும்புக் காட்டுக்குள் சின்னத்தம்பியின் கடைசிநேரம்

சின்னத்தம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி வெள்ளியன்று பிடித்தது வனத்துறை. ‘யானையை  காயமில்லாமல் பிடிக்க!’ நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு அடுத்த நாள் வியாழக்கிழமையே அதற்கான ஸ்பாட்டில் பரபரப்பும் தொற்றிக் கொண்டது. அன்றைய தினமே  உடுமலை மடத்துக்குளத்திலிருந்து கொமரலிங்கம் போற பஸ்ல எக்கச்சக்க கூட்டம். ‘சின்னத்தம்பி ஸ்டாப் ஒண்ணு கொடுங்க!’ என்றுதான் ஜனங்க கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டார்கள்.  மடத்துக்குளத்திலிருந்து 2 மைல் தூரம். சேம்பர் ஸ்டாப், ச்சீ சின்னத்தம்பி ஸ்டாப். அங்கே கிழக்குமுகமா திரும்பற வண்டிப் பாதையில் திடீர்

‘‘சின்னதம்பி ஸ்டாப் ஒண்ணு கொடுங்க!’’ – கரும்புக் காட்டுக்குள் சின்னத்தம்பியின் கடைசிநேரம்

சின்னத்தம்பி யானையை மயக்க ஊசி செலுத்தி வெள்ளியன்று பிடித்தது வனத்துறை. ‘யானையை  காயமில்லாமல் பிடிக்க!’ நீதிமன்றம் அனுமதி அளித்ததற்கு அடுத்த நாள் வியாழக்கிழமையே அதற்கான ஸ்பாட்டில் பரபரப்பும் தொற்றிக் கொண்டது. அன்றைய தினமே  உடுமலை மடத்துக்குளத்திலிருந்து கொமரலிங்கம் போற பஸ்ல எக்கச்சக்க கூட்டம். ‘சின்னத்தம்பி ஸ்டாப் ஒண்ணு கொடுங்க!’ என்றுதான் ஜனங்க கண்டக்டரிடம் டிக்கெட் கேட்டார்கள்.  மடத்துக்குளத்திலிருந்து 2 மைல் தூரம். சேம்பர் ஸ்டாப், ச்சீ சின்னத்தம்பி ஸ்டாப். அங்கே கிழக்குமுகமா திரும்பற வண்டிப் பாதையில் திடீர்

ஆண்களுக்காக 6: அவள் அப்படித்தான் இருக்க வேண்டுமா?!

அந்தப் பெண்ணுக்கு நடுத்தர வயதுதான் இருக்கும். பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-8 பெட்டிக்குள் புன்னகையோடு ஏறியவர் அங்கிருந்த சிலரிடம் குதூகலமாக பேச்சுக் கொடுத்தார். உறவினர்கள் போலும். அவரைப் பார்த்தவுடன் 10-க்கும் மேற்பட்ட படுக்கைகளில் இருந்தவர்கள் அவர் பெயரைச் சொல்லி இன்முகத்துடன் நலம் விசாரித்தனர். சாப்பிட்டாச்சா? இட்லி, தக்காளி சட்னி இருக்கு சாப்பிடுகிறாயா? என்றெல்லாம் உபசரித்தனர். சம்பாஷணைகள் தொடர்ந்தன. அவர்கள் உரையாடலில் இருந்து அந்தப் பெண்மனியின் கணவர் சில மாதங்களுக்கு முன்னர்தான் தவறியிருந்தார் என்பதும் அந்தப் பெண் அரசுப்

ஆண்களுக்காக 6: அவள் அப்படித்தான் இருக்க வேண்டுமா?!

அந்தப் பெண்ணுக்கு நடுத்தர வயதுதான் இருக்கும். பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலின் எஸ்-8 பெட்டிக்குள் புன்னகையோடு ஏறியவர் அங்கிருந்த சிலரிடம் குதூகலமாக பேச்சுக் கொடுத்தார். உறவினர்கள் போலும். அவரைப் பார்த்தவுடன் 10-க்கும் மேற்பட்ட படுக்கைகளில் இருந்தவர்கள் அவர் பெயரைச் சொல்லி இன்முகத்துடன் நலம் விசாரித்தனர். சாப்பிட்டாச்சா? இட்லி, தக்காளி சட்னி இருக்கு சாப்பிடுகிறாயா? என்றெல்லாம் உபசரித்தனர். சம்பாஷணைகள் தொடர்ந்தன. அவர்கள் உரையாடலில் இருந்து அந்தப் பெண்மனியின் கணவர் சில மாதங்களுக்கு முன்னர்தான் தவறியிருந்தார் என்பதும் அந்தப் பெண் அரசுப்

மோசடி மேல் மோசடிகள்… விசாரணைமேல் விசாரணைகள்: 2020 தேர்தல் வரை தாங்குவாரா அதிபர் டொனால்ட் ட்ரம்ப்?

அதிபர் பதவி ஏற்றுக் கொண்டது முதல் புதிய அமெரிக்காவை கட்டமைக்கப் போகிறேன் என்று அமெரிக்க மக்கள் உணர்வுகளுக்கு எதிராகச் செயல்பட்டு வரும் அதிபர் ட்ரம்ப் மீது ஏகப்பட்ட விசாரணைகள் நடைபெற்று வருவதால் 2020 அதிபர் தேர்தலுக்கு முன்பாகவே அவர் ராஜினாமா செய்யக் கோரப்படலாம் என்று தெரிகிறது. அதிபராவதற்கு ரஷ்யா உதவி புரிந்த விவகாரம், ட்ரம்புக்கும் அமெரிக்க வைரியான ரஷ்யாவுக்குமான மறைமுகமான வர்த்தகம் உள்ளிட்ட தொடர்புகள் ஆகியவை ‘ரஷ்யாகேட்’ என்று அங்கு ஊடகங்களால் வர்ணிக்கப்பட்டு வரும் நிலையில் அதன்

வானொலி காலம் கடந்தும் பயணிக்கும்

பிப்ரவரி 13 ஆம் தேதி உலகம்  முழுவதும் வானொலி தினம் கொண்டாடப்பட்டது. சமூக வலைதளங்களில் #WorldRadioDay என்ற  ஹாஷ்டேக்  உலக முழுவதும் டிரெண்ட் ஆகிக் கொண்டிருந்தது. நாடு முழுவதும்  வானொலி தொடர்பான ஏராளமான  நிகழ்ச்சிகள் சிறப்பாக கொண்டாடப்பட்டன. இவை எல்லாம் ஒருபுறம் இருந்தாலும், இன்றைய தொழில்நுட்பங்களின் வளர்ச்சி காரணமாக வானொலிகள்  இன்றைய தலைமுறையிடம்  சரியாக சென்றடையவில்லை என்ற பார்வை கடந்த சில ஆண்டுகளில் பரவி காணப்படுகிறது. மேலும் அரசு வானொலி சார்ந்த நிதி ஒதுக்கீட்டிலும், வானொலி பயிற்சி