Category: சொந்த வீடு

நகர்ப்புற வீடுகளுக்கான ஜென் தோட்டங்கள்

நகர்ப்புற வாழ்க்கைப் பரபரப்பிலிருந்து தப்பிப்பதற்கு உதவக்கூடியவை ஜென் தோட்டங்கள். ஜப்பான் கல் தோட்டம் என்றும் அழைக்கப்படும் இந்தத் தோட்டம், இப்போது நகர்ப்புற வீடுகளில் பிரபலமாகிவருகிறது. வீட்டுக்குள் நுழைந்தவுடன் அமைதியான மனநிலையை உணரவைக்கும் ஆற்றல் இந்த ஜென் தோட்டத்துக்கு உண்டு. இந்தத் தோட்டத்தைப் பராமரிப்பது எளிது என்கின்றனர் உள்அலங்கார வடிவமைப்பாளர்கள். இயற்கை, கலை என்ற இரண்டு முக்கிய அம்சங்களை இணைத்து ஜென் தோட்டம் அமைக்கப்படுகிறது. கற்கள், நீர், மணல், பாதைகள், படிக் கற்கள்,  செடிகள் போன்றவற்றால் இந்தத் தோட்டம்

வெறும் சுவர் அல்ல 25: குளியலறை எப்படி இருக்க வேண்டும்?

வீட்டின் வடிவமைப்பில் குளியலறை, கழிவறை ஆகிய அறைகள் முக்கியமான இடத்தைப் பெறுகின்றன. கடந்த தலைமுறையினர் குளியலறையுடன் கழிவறை இணைக்கப்படுவதை விரும்பாமல் இருந்தனர். இடமும் நிறைய இருந்தது. ஆகையால் முன்பெல்லாம் வீட்டின் பின்புறம் கழிவறை அமைக்கப்பட்டது. ஆனால் தற்போது வீட்டை அமைப்பதற்கே இடம் குறைவாக இருக்கிறது. அதுவும் பெருநகரங்களின் நிலையைக் கேட்கவே வேண்டாம். அதனால் குளியலறையுடன் சேர்த்தே கழுவறையும் பெரும்பாலும் இன்றும் வடிவமைக்கப்படுகிறது. எந்தக் கோப்பைகள் அமைக்கலாம்? ஒரு குளியலறையில், இந்தியக் கழிவறைக் கோப்பை (INDIAN WATER CLOSET)

அதிகரிக்கிறது பட்ஜெட் வீடுகளின் எண்ணிக்கை

கடந்த சில ஆண்டுகளாகப் பல விதமான நெருக்கடிகள் காரணமாக ரியல் எஸ்டேட் துறை பெரும் தேக்கத்தைச் சந்தித்தது. ஆனால், கடந்த இரண்டு ஆண்டுகளாக அதிலிருந்து ரியல் எஸ்டேட் துறை மீண்டுவருகிறது. இப்போது வெளியாகியிருக்கும் ரியல் எஸ்டேட் ஆய்வு நிறுவனமான ஜே.எல்.எல். நிறுவனத்தின் அறிக்கை அதற்கான சான்று எனலாம். பத்தாண்டுகளுக்கு முன்பு வரை ஐ.டி. துறையின் வருகை சென்னை ரியல் எஸ்டேட்டின் அபார வளர்ச்சிக்கு வழிவகுத்தது. அப்போது அந்தத் துறையில் ஊழியர்களுக்கு அளிக்கப்பட்ட சம்பளம் காரணமாக ரியல் எஸ்டேட்டில்

பத்திரம் பத்திரம்!

முத்திரை வரி முறையாகச் செலுத்தப்படிருப்பதை பார்த்து உறுதிசெய்ய வேண்டும். முத்திரைத் தாள் மூலமாகவோ, வரைவோலை, இ-ஸ்டாம்பிங் மூல்மாகவோ முத்திரை வரி செலுத்தப்படும். சொத்தை வாங்குபவரின் பெயரும் விற்பவரின் பெயரும் பிழையின்றி எழுதப்பட்டிருக்க வேண்டும்.சொத்தை வாங்குபவர், விற்பவர் ஆகியோரின் அடையாள அட்டை நகல்கள் இணைக்கப்பட்டிருக்க வேண்டும். விற்பவரின், வாங்குபவரின் கையோப்பங்கள், ஒளிப்படங்கள் ஆகியவற்றையும் சரிபார்க்க வேண்டும்சொத்து விவரங்கள், அளவுகள் ஆகியவை தெளிவாகக் குறிப்பிட்டிருக்க வேண்டும். விற்பனையாளருக்கு அச்சொத்து எப்படி வந்தது என்பதை முறையாகக் கிரையப் பத்திரத்தில் தெளிவாகக் குறிப்பிடப்பட

‘கீல்’கள் கவனம்

வீடுகளுக்கு கீல்கள் (Hinge) பொருத்துவது என்பதைப் பலரும் பெரிய விஷயமாகக் கருதுவதில்லை. பெரும்பாலும் இதைக் கட்டிடம் கட்டுபவரின் விருப்பத்திற்கே விட்டுவிடுகிறார்கள். ஆனால் இதில் பல நுணுக்கங்கள் உண்டு என்பதை நாம் அறிந்து கொள்ள வேண்டும். எந்தவகையான கீல்கள் எங்கே பொருத்த வேண்டும் என்பதற்குச் சில அடிப்படைத் தர்க்கங்கள் உண்டு. வெளிக் கதவுக்குப் பொருத்தப்படும் கீல்கள் இரும்புக் கலப்பு இல்லாதாக இருக்க வேண்டும். எஃக்கில் உருவாக்கப்பட்ட கீல்கள் உண்டு. பித்தளையிலும் வெண்கலத்திலும் இருக்கலாம், இரும்பில் இருக்கலாம். இவற்றில் வெண்கலம்,

கட்டிடங்களின் கதை 10: உலகின் மிகப் பெரிய நாடாளுமன்றம்

உலகிலேயே மிகப் பெரிய நாடாளுமன்றத்தைக் கொண்டுள்ளது வங்கதேசம். இருநூறு ஏக்கர் பரப்பளவில் கட்டப்பட்டுள்ள இந்த நாடாளுமன்றத்தின் பெயர் ஜாட்டியா சங்சத் பவன் (Jatiya Sangsad Bhaban). இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க கட்டிடத்தை வடிவமைத்தவர் 20-ம் நூற்றாண்டின் தலைச்சிறந்தக் கட்டிடக்கலை  வடிவமைப்பளரான லூயி கான். வங்கதேசத் தலைநகர் டாக்காவில் அமைந்துள்ளது ஜாட்டியா சங்சத் பவன். இந்தியாவின் உதவியுடன் 1959-ம் ஆண்டு பாகிஸ்தான் கட்டுப்பாட்டியில் ஓர் அங்கமாக இருந்தது கிழக்கு பாகிஸ்தான். அப்போது தங்களுடைய நாடாளுமன்றத்தின் ஒரு பகுதியாக டாக்காவில்

வெறும் சுவர் அல்ல 14: செண்ட்ரிங்கில் கவனிக்க வேண்டியவை

செண்ட்ரிங் வேலை எதற்கு? கான்கிரீட் இட்ட பின்பு அது முழுமையாகத் தன் வலிமையை அடையும் காலம் வரை அதைத் தாங்கி பிடிப்பதற்கான ஒரு அமைப்பு தேவை. அது தான் இந்த செண்ட்ரிங் வேலை. மேலே நின்று கம்பி கட்டுவதற்கும் கான்கிரீட் கொட்டும்போது அதன் எடையைத் தாங்குவதற்கும் தகுந்தவாறு இந்தத் தளம் அமைக்கப்பட வேண்டும், எந்தப் பொருள் கொண்டு செய்யலாம்? மரப்பலகை, ஒட்டுப்பலகை அல்லது இரும்பு தகடுகளைக் கொண்டு இந்தத் தளம் அமைக்கப்படுகிறது, தென்னம் பலகை முதற்கொண்டு வெவ்வேறு

அழகு, ஆரோக்கியம், ஆத்தங்குடி டைல்ஸ்

காரைக்குடி என்றாலே செட்டிநாடு வீடுகள், கோயில்கள், வித விதமான உணவு எனப் பல விஷயங்கள் நினைவுக்கு வரும். அவற்றில் ஒன்று, ஆத்தங்குடி டைல்ஸ். காரைக்குடி அருகே அமைந்துள்ள அழகிய கிராமம் ஆத்தங்குடி. அங்கு மனிதர்களின் உழைப்பால் இயந்திரங்கள் துணை இல்லாமல் முழுக்க முழுக்க கலை நயத்துடன் சிமெண்ட், ஜல்லி, நிறத்துக்காக ஆக்சைடுகள் கலந்து செய்யப்படுவது ஆத்தங்குடி டைல்ஸ். 60-70 ஆண்டுகள் வரை நன்றாக உழைக்கக் கூடியது. இவற்றை பாலிஷ் செய்யத் தேவையில்லை. இதன் வண்ணமும் வடிவமும் பார்ப்பவர்கள்

வளர்ச்சிப் பாதையில் தென் சென்னை

2012-ம் ஆண்டுக்குப் பிறகு, சென்னையின் ரியல் எஸ்டேட் சந்தை ஒவ்வொரு ஆண்டும் 3 சதவீதம் வளர்ச்சியடைந்திருப்பதாகத் தெரிவிக்கிறது ‘நைட் ஃபிராங்க்’ நிறுவனம் சமீபத்தில் வெளியிட்ட அறிக்கை. 2018-ம் ஆண்டில் மட்டும் சென்னையில் 2000 புதிய வீட்டுத் திட்டங்கள் அறிமுகப்படுத்தப் பட்டிருக்கின்றன. 2017-ம் ஆண்டுடன் ஒப்பிடும்போது இது 20 சதவீதம் அதிகம். ‘தமிழ்நாடு ஒருங்கிணைந்த மேம்பாட்டு ஒழுங்குமுறை (TNCDR), மற்றும் கட்டிட விதிகள் 2018’ தொடர்பான முழுமையான தெளிவு கிடைப்பதற்காகவும் கட்டுநர்கள் மேலும் புதிய திட்ட அறிவிப்புகளைத் தற்போது