Category: தமிழகம்

தமிழகம் மற்றும் புதுவையில் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது  இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .  வெப்பச்சலனம் காரணமாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் குறிப்பாக உள் மாவட்டங்களான, நீலகிரி,கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு,  சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அப்போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் 

ஓபிஎஸ் மகன் எம்.பி. என கல்வெட்டு: சர்ச்சை ஏற்பட்டதையடுத்து மறைப்பு

தேர்தல் முடிவு வருவதற்கு முன்னரே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை எம்.பி. என பொறித்து திறக்கப்பட்ட கல்வெட்டு சர்ச்சை ஏற்பட்டதையடுத்து  மறைக்கப்பட்டது. தேனி மக்களவைத் தொகுதிக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார், மதுரைக்கு ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனால் கட்சிக்குள் வாரிசு அரசியல் என சர்ச்சை எழுந்தது. கட்சிக்கு உழைத்த மூத்த நிர்வாகிகளும் விசுவாசிகளும் இருக்க வாரிசைக் களம் இறக்கியது குறித்து பரவலாக முணுமுணுப்பு எழுந்தது. ஆனால், தமிழகத்திலேயே தேனியில் அதிக

கணவர், 1 வயது குழந்தை கொலை; காணாமல் போனதாக நாடகமாடிய இளம்பெண்: போலீஸ் விசாரணையில் சிக்கினார்

வேலூரில் காதல் கணவனையும், ஒரு வயது ஆண் குழந்தையையும் கொலை செய்துவிட்டு, அவர்களைக் காணவில்லை என போலீஸில் புகார் அளித்து நாடகமாடிய  நிலையில் மனைவியே கொலை செய்தது தெரியவந்துள்ளது. வேலூர் மாவட்டம், ஆற்காடு திமிறி பகுதியைச் சேர்ந்தவர் ராஜா (25). எலக்ட்ரீஷியனாகப் பணியாற்றி வந்தார். இவரும், தாஜ்புரா மந்தைவெளி பகுதியைச் சேர்ந்த தீபிகா (20) என்பவரும் 2 ஆண்டுகளுக்கு முன்பு காதலித்து திருமணம் செய்துகொண்டனர். கடந்த ஆண்டு இவர்களுக்கு ஆண் குழந்தை பிறந்தது. அதற்கு பிரனீஷ் எனப்

ரயிலில் பெண்களை குறிவைத்து திருட்டு; மலேசிய ஓட்டல் அதிபர் கைது: விமானத்தில் வந்து காரியம் முடித்தது அம்பலம்

ரயிலில் முதல் வகுப்பு பெண் பயணிகளை குறிவைத்து கடந்த பல ஆண்டுகளாக நகை திருடிய மலேஷிய ஓட்டல் அதிபரை போலீசார் கைது செய்தனர். திருடிய பணத்தில் ஹோட்டல், 3 மனைவிகள், ஆடம்பர வீடு என சொகுசு வாழ்க்கை வாழ்ந்துள்ளது தெரியவந்துள்ளது. ரயில்களில் ஏசி முதல்வகுப்பு, இரண்டாம் வகுப்பு பெட்டிகளில் பயணம் செய்யும் குடும்பத்தினரின் நகைகள் அடிக்கடி திருட்டுப்போவதாக கடந்த பல ஆண்டுகளாக புகார் வந்தவண்ணம் இருந்தது. ஆனால் குற்றவாளி சிக்காமல் இருந்தார். ஏசிப்பெட்டிகளில் பெரும்பாலும் பணக்காரர்கள், தொழிலதிபர்கள்

‘இந்து’ என எப்போது அழைக்கப்பட்டோம்: கமல் ட்வீட்

கோட்சே சர்ச்சையில் கமல் மீது வழக்குகள், தனி மனிதத் தாக்குதல்கள், ஆதரவு கருத்துகள், தேர்தல் பிரச்சாரத் தடை என பலவித ஆதரவு, எதிர்ப்புக் கருத்துகள் வரும் நேரத்தில்  இந்து என்று எப்போது அழைக்கப்பட்டோம் என கமல் ட்வீட் செய்துள்ளார். தமது பிரச்சாரத்தைத் தடை செய்ததை சீப்பை ஒளித்து வைத்து கல்யாணத்தை நிறுத்தப் பார்க்கிறார்கள். ஆனால், மக்கள் தீர்மானித்து விட்டார்கள் என்கிறார். இறுதியில் கூடி வாழ்ந்தால் கோடி நன்மை. நாம் இந்தியராக இருப்போம் எனும் அவர் கோடி என்றால்

கால்நடை மருத்துவப் படிப்பு: ஜூன் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH / BTech) மாணவர் சேர்க்கைக்கு ஜூன் 10-ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக  சேர்க்கை குழுவின் தலைவர் இன்று வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியதாவது: ”தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழக இளநிலை பட்டப்படிப்புகளுக்கான (BVSc & AH / BTech) மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள், பல்கலைக்கழக இணையதளம் (www.tanuvas.ac.in) மூலம் கடந்த மே 8

அதிமுக ஆட்சி வரும் 23-ம் தேதி தானாகவே கவிழும்:  ஸ்டாலின் பிரச்சாரம்

அதிமுக ஆட்சியை யாரும் கவிழ்க்க வேண்டிய அவசியம் இல்லை. இந்த ஆட்சி தானாக 23-ம் தேதி கவிழ்ந்து விடும். அதில் எந்த சந்தேகமும் கிடையாது என்று திமுக தலைவர் ஸ்டாலின் பேசினார். ஸ்டாலின் தனது இறுதிக்கட்டப் பிரச்சாரமாக அரவக்குறிச்சி சட்டப்பேரவை தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜியை ஆதரித்து பல்வேறு பகுதிகளுக்குச் சென்று வாக்கு சேகரித்தார். அப்போது ஸ்டாலின் பேசியதாவது: ”எடப்பாடி பழனிசாமி ஆட்சியை வீட்டுக்கு அனுப்ப வருகின்ற 19-ம் தேதி நடைபெறவிருக்கக் கூடிய அரவக்குறிச்சி

சென்னையின் சிறப்பை உலகறியச் செய்தவர் முத்தையா: நினைவஞ்சலி கூட்டத்தில் புகழாரம்

சென்னையின் சிறப்பை உலகறியச்செய்தவர் எஸ்.முத்தையா என்று சென்னையில் நடந்தநினைவஞ்சலி கூட்டத்தில் புகழாரம் சூட்டப்பட்டது. பத்திரிகையாளரும், வரலாற்றுஆய்வாளருமான எஸ்.முத்தையாகடந்த ஏப்ரல் 20-ம் தேதி காலமானார். அவருக்கு நினைவஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி, சென்னை ஹெரிட்டேஜ் அமைப்பு சார்பில் சென்னையில் நேற்று நடந்தது. இதில் ‘இந்து’ என்.ராம் பேசியதாவது:சென்னை நகரின் பாரம்பரியம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தியவர் எஸ்.முத்தையா. சென்னையின் பாரம்பரியத்தை பாதுகாப்பதற்கான முயற்சியில் அவரது பணி பாராட்டுக்குரியது. அடிப்படையில் அவர் பத்திரிகையாளர். ஆனால், வரலாற்றில் அவருக்கு மிகுந்த ஆர்வமும், ஈடுபாடும் இருந்தது.

மருத்துவ கவுன்சில் பரிந்துரையால் 317 மருத்துவர் பணியிடம் மாயம்: அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் தரமான கல்வி, சிகிச்சைக்கு சிக்கல்

இந்திய மருத்துவக் கவுன்சில்பரிந்துரைப்படி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில் மருத்துவ மாணவர்கள் விகிதாச்சார அடிப்படையில் மருத்துவர்பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டுள்ளதால் இதுவரை இருந்த 317 பழைய மருத்துவர் பணியிடங்கள் மாயமாகி உள்ளன. இதனால், மாணவர்களுக்குத் தரமான கல்வியும், நோயாளிகளுக்கு உயர்தர சிகிச்சையும் கிடைப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைகளில் முன்பு நோயாளிகள் வருகை மற்றும் தேவைகளின் அடிப்படையில் மருத்துவர் மற்றும் மற்ற மருத்துவப் பணியிடங்கள் நிர்ணயிக்கப்பட்டன. இந்த அடிப்படையில் 2018-ம்ஆண்டு தமிழகத்தில் உள்ள 22 அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைகளில்

மொழியால் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க பணி நியமனத்தில் அந்தந்த மாநிலத்தவருக்கு ரயில்வே துறை முன்னுரிமை அளிக்குமா?- அறிவிப்புகள் புரியாமல் பயணிகள் அவதி

மொழிகளால் ஏற்படும் குளறுபடிகளை தவிர்க்க ரயில்வே ஊழியர்கள் நியமனத்தில் அந்தந்த மாநில இளைஞர்களுக்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது. தெற்கு ரயில்வேயில் சுமார் ஒருலட்சம் பேர் பணியாற்றி வருகின்றனர். இதில், 25 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக உள்ளனர் குறிப்பாக ரயில்கள் இயக்கம், சிக்னல் உள்ளிட்ட பணிகளை கவனிக்கும் மொத்தமுள்ள 3,197 ரயில் நிலைய மேலாளர்களில் 60 சதவீதத்துக்கும் மேற்பட்டோர் வடமாநிலங்களை சேர்ந்தவர்களாக இருக்கின்றனர். மதுரை ரயில்வே கோட்டத்தில் கடந்த மே 9-ம் தேதி திருமங்கலம்

தமிழகத்தில் 19 சதவீத கொய்மலர்கள் உற்பத்தி: உதகை மலர்க் கண்காட்சியை தொடக்கிவைத்து ஆளுநர் தகவல்

தேசிய அளவில் தமிழகத்தில் 19% கொய்மலர்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன என்று ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் தெரிவித்தார். நீலகிரி மாவட்டம் உதகை அரசு தாவரவியல் பூங்காவில் 123-வது மலர்க் கண்காட்சி நேற்று தொடங்கியது. மாவட்ட ஆட்சியர் ஜெ.இன்னசென்ட் திவ்யா, தோட்டக்கலைத் துறை முதன்மைச் செயலர் ககன்தீப் சிங் ஆகியோர் தலைமை வகித்தனர். மலர்க் கண்காட்சியை தொடங்கி வைத்து ஆளுநர் பன்வாரிலால் புரோஹித் பேசியதாவது: உதகை மலர்க் கண்காட்சி உலக அங்கீகாரம் பெற்றுள்ளது. முதன் முறையாக 1896-ம் ஆண்டு மலர்க்

கமலுக்கு இன்னும் அதிக பக்குவம் தேவை: பாஜக மாநிலத் தலைவர் தமிழிசை கருத்து

திருச்சி விமானநிலையத்தில் நேற்று பாஜக மாநிலத் தலைவர் தமிழிசைஅளித்த பேட்டி: கமல்ஹாசன் தேவையில்லாமல் சில கருத்துகளை பதிவு செய்கிறார். முதிர்ச்சியின்மையால் இப்படி பேசுகிறாரா அல்லது சிறுபான்மையினர் வாக்குகள் கிடைக்கும் என்பதால் பேசுகிறாரா எனத் தெரியவில்லை. சினிமாவில் பிரபலமாக இருப்பதால், எதைப் பேசினாலும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என நினைக்கிறார். அரசியலில் கமல்ஹாசனுக்கு இன்னும் அதிக பக்குவம் தேவை. கமல்ஹாசன் மீதான தாக்குதலை வரவேற்க முடியாது. ஆனால், பிரிவினைவாத கருத்துகளை அவர் கூறக் கூடாது. எதிர்விளைவுகளை உணர்ந்து பேச

சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி 4 சட்டப்பேரவை தொகுதிகளில் நாளை வாக்குப்பதிவு; அனைத்து வாக்குச்சாவடிகளிலும் நுண் பார்வையாளர் நியமனம்

தமிழகத்தில் சூலூர், திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம், அரவக்குறிச்சி ஆகிய 4 சட்டப்பேரவை தொகுதிகளில் நாளை காலை 7 மணிக்கு வாக்குப்பதிவு தொடங்குகிறது. தமிழகத்தில், வேலூர் தவிர 38 மக்களவை தொகுதிகளுக்கான பொதுத் தேர்தல், 18 சட்டப்பேரவை தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் வாக்குப்பதிவு கடந்த ஏப்ரல் 18-ம் தேதி நடந்து முடிந்துவிட்டது. இந்நிலையில், தமிழகத்தில் மேலும் காலியாக உள்ள சூலூர், அரவக்குறிச்சி, திருப்பரங்குன்றம், ஓட்டப்பிடாரம் ஆகிய சட்டப்பேரவைத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் மே 19-ம் தேதி நடக்கும் என்று தேர்தல் ஆணையம் அறிவித்தது.

சென்னை அருகே மீஞ்சூரில் கொசஸ்தலை ஆறு முகத்துவாரம் முதல் காவேரிப்பாக்கம் வரை பூமிக்கடியில் 80 கி.மீ. நீளத்தில் இயற்கையாக அமைந்துள்ள அணை; சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பி தாராளமாக தண்ணீர் பெறலாம் என்கிறது ஆய்வு

திருவள்ளூர் மாவட்டம் மீஞ்சூரில் இருந்து வேலூர் மாவட்டம் காவேரிப் பாக்கம் வரை சுமார் 80 கிலோ மீட்டர் நீளத்துக்கு பூமிக்கடியில் இயற்கையாக அமைந்துள்ள அணை போன்ற அமைப்பில் சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீரை நிரப்பினால், சென்னை உள்ளிட்ட 3 மாவட்டங்களுக்கு தேவை யான குடிநீரும், விவசாயத்துக்கான தண்ணீரும் தாராளமாகக் கிடைக்கும் என்று கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கடந்த ஆண்டு தென்மேற்கு பருவமழையும், வட கிழக்கு பருவமழையும் இயல்பை விட குறைவாகப் பெய்ததால், ஏரிகள், குளங்களில் தண்ணீர் இருப்பு மிகவும் குறைந்துவிட்டது. பல

இன்று சர்வதேச அருங்காட்சியக தினம்: கால மாற்றங்களின் சாட்சிகளை புறக்கணிக்கலாமா?

`மாற்றம் ஒன்றுதான் மாறாதது’ என்ற வார்த்தைகள் இந்த உலகுக்கு மிகப் பொருத்தமானவை. பூமி தோன்றியது முதல் இன்றுவரை, ஒவ்வொரு நாளும் ஏதாவது ஒரு மாற்றம் நிகழ்ந்துகொண்டேதான் இருக்கிறது. இந்த வரலாற்று மாற்றங்களுக்கெல்லாம் சாட்சி களாய் இருப்பவை அருங்காட்சி யகங்கள். மனித இனத்தின் தொன்மை, வரலாறு, மரபுகள், கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றைப் பாது காத்து, எதிர்கால சந்ததியினர் தெரிந்துகொள்ள உதவுபவை அருங்காட்சியகங்கள். அவற்றின் முக்கியத்துவத்தை மக்களிடம் உணர்த்துவதற்காகவும், முறை சாரா கல்வி மையங்களான அருங் காட்சியகங்கள் குறித்த விழிப்

அந்நிய செலாவணி மோசடி வழக்கு: விசாரணைக்கு காணொலி காட்சி மூலம் ஆஜராக சசிகலாவுக்கு நீதிமன்றம் அனுமதி

அந்நிய செலாவணி மோசடி வழக்கில் கேள்வி விசாரணைக்காக பெங்களூரு சிறையில் உள்ள சசிகலா காணொலி காட்சி மூலமாக ஆஜராக அனுமதியளித்து உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஜெ.ஜெ. தொலைகாட்சிக்கு வெளிநாட்டில் இருந்து எலெக்ட்ரானிக் உபகரணங்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா மற்றும் அவரது உறவினர் பாஸ்கரன் ஆகியோர் மீது அமலாக்கப் பிரிவினர் எழும்பூர் நீதிமன்றத்தில் அந்நியச் செலாவணி மோசடி வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கில் கடந்த ஆண்டு பாஸ்கரன் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது. இதேபோல பெங்களூரு சிறையில் உள்ள