Category: தமிழ் சினிமா

முதல் பார்வை:  Mr.லோக்கல்

ஸ்டேட்டஸ் ஈகோவால் அவமானப்படுத்தும் நாயகியை அன்பால் காதலிக்க வைக்கும் மிடில் கிளாஸ் நாயகனின் கதையே ‘ Mr.லோக்கல்’. கார் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிகிறார் சிவகார்த்திகேயன். அம்மா, தங்கை என்று அவரது குடும்பம் அன்பின் எல்லையில் அழகாகிறது. குங்குமம் சீரியல் நாயகி நக்‌ஷத்ராவைச் சந்தித்து செஃல்பி எடுக்க ஆசைப்படுகிறார் ராதிகா. இதைத் தன் மகன் சிவகார்த்திகேயனிடம் கூறுகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் நக்‌ஷத்ராவைச் சந்திக்க பைக்கில் அம்மா ராதிகாவை ஏற்றிச் செல்கிறார் சிவா. இந்த சூழலில் சிக்னலில் வேகமாக

‘டுலெட்’ இயக்குநர் படத்தில் நடிக்கும் மிஷ்கின், ஆர்.கே.சுரேஷ்

‘டுலெட்’ படத்தை இயக்கிய செழியனின் அடுத்த படத்தில், மிஷ்கின் மற்றும் ஆர்.கே.சுரேஷ் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன். இவர் முதன்முதலாக இயக்கிய படம் ‘டுலெட்’ (Tolet). கடந்த பிப்ரவரி 21-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. ஒரு இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த ‘டுலெட்’ என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தில் நாயகன் – நாயகி என்றெல்லாம் கிடையாது. செழியனின் உதவியாளர்

கார்த்தி ஜோடியாக நிகிலா விமல்?

ஜீத்து ஜோசப் இயக்கத்தில் கார்த்தி நடிக்கும் படத்தில், தற்போது நிகிலா விமலும் இணைந்துள்ளார். ‘பாபநாசம்’ படத்துக்குப் பிறகு தன்னுடைய இரண்டாவது தமிழ்ப் படத்தைத் தற்போது இயக்கி வருகிறார் ஜீத்து ஜோசப். இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தில், ஜோதிகா, கார்த்தி, சத்யராஜ், அம்மு அபிராமி ஆகியோர் நடிக்கின்றனர். அக்கா – தம்பியாக ஜோதிகா – கார்த்தி நடிக்க, அவர்களுடைய அப்பாவாக சத்யராஜ் நடிக்கிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’ படத்தில் கார்த்தியின் தங்கையாக நடித்த அம்மு அபிராமி, இரண்டாவது முறையாக

முதல் பார்வை: மான்ஸ்டர்

ஒரு எலியால் பாதிக்கப்பட்டு, சிக்கி சின்னாபின்னமாகும் நாயகனின் கதையே ‘மான்ஸ்டர்’. மின்வாரியத்தில் ஊழியராகப் பணிபுரியும் எஸ்.ஜே.சூர்யாவுக்கு திருமணம் தள்ளிக்கொண்டே போகிறது. சொந்த வீடு வாங்கினால் நிச்சயம் திருமணம் நடக்கும் என்று நம்பி சூர்யா ஒருவழியாக சொந்த வீடு வாங்குவதற்காக வீடு பார்க்கிறார். அந்த நேரத்தில் பெண் பார்க்க வரச் சொல்லிவிட்டு, பார்க்காமலேயே போன பெண், செல்போனில் பேசி ஸாரி கேட்கிறார். தனக்கு நல்ல நேரம் வந்துவிட்டதாக நினைத்து சூர்யா, அந்த வீட்டையே வாங்குகிறார். ஆனால், அந்த வீட்டில்

சின்ன குஷ்பு.. குஷியில் ஏக‘வில்லி’

சன் தொலைக்காட்சியில் கிளைமாக்ஸை எட்டியுள்ளது ‘பிரியமானவள்’ தொடர். இதில் ‘செவ்வந்தி’ என்ற வில்லியாக நடித்துவந்த ஏகவல்லி, தனது கதாபாத்திரம் சிறப்பாக நிறைவு பெற்றதை தோழிகளுடன் சேர்ந்து கொண்டாடி வருகிறார். ‘‘பல அத்தியாயங்கள் அசத்திய சீரியல் இது. இப்போது நிறைவுகட்டத்தை எட்டியுள்ளது. இந்த நேரத்தில் பக்கா வில்லியாக, அந்த சீரியலில் சமீபத்தில்தான் உள்ளே வந்தேன். ஆனாலும் எனக்கு நல்ல அடையாளத்தை கொடுத்திருப்பது மகிழ்ச்சி. அதேபோல,  கலர்ஸ் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘சிவகாமி’ தொடரில் பத்மாவதி என்ற 45-50 வயதுடைய மாமியார்

ஆண் போட்டியாளர்களுடன் ‘ரெடி ஸ்டெடி போ’

விஜய் தொலைக்காட்சியில் ‘ரெடி ஸ்டெடி போ – சீசன் 2’, முழுக்க ஆட்டம், பாட்டம், விளையாட்டு என முற்றிலும் பெண்கள் கலந்துகொள்ளும் நிகழ்ச்சியாக ஒளிபரப்பாகி வருகிறது. இதில், தலா 3 பெண்கள் என 2 அணிகள் கலந்துகொள்ளும். இவர்களுக்கு சுவாரஸ்யமான இலக்குகள் (டாஸ்க்) தரப்படும். இதுவரை ஒளிபரப்பான அனைத்து அத்தியாயங்களும் இப்படித்தான் இருந்தன. ஆனால் வரும் ஞாயிற்றுக்கிழமை ஒளிபரப்பாகும் நிகழ்ச்சியில் சிறு மாற்றம் செய்யப்பட்டுள்ளது. வழக்கம்போல, இரு அணிகள்தான். ஆனால், ஒரு அணியினர் முழுவதும் ஆண் போட்டியாளர்கள்.

கோவா செலவில் தாய்லாந்து!

ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் தொடர் ‘யாரடி நீ மோகினி’.  இதில் முத்தரசன் – வெண்ணிலா திருமணம் நடந்தே ஆகவேண்டும் என, ஆசையோடு அவர்களுக்கு உறுதுணையாக இருப்பவர் நீலாம்பரியின் 2-வது மகன் கார்த்திக். இந்த கதாபாத்திரத்தில் நடித்துவரும்  பவித்ரன், தற்போது சீரியல் நடிப்புக்கு இடையே, ‘எக்ஸ்ப்ளோர் வித் பவின்’ என்ற பெயரில் சுற்றுலா தொடர்பான யூ-டியூப் சேனல் ஒன்றை தொடங்கி கலக்கி வருகிறார். ‘‘வெளிநாட்டு பயணம்னா ஏதோ தாறுமாறா செலவாகும்னு சிலர் நினைக்கிறாங்க. முன்பின் தெரியாத ஏஜென்ட்

விஷாலின் ’அயோக்யா’ ரிலீஸ் இல்லை: பின்னணி என்ன?

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘அயோக்யா’ திட்டமிட்டப்படி இன்று (மே 10) வெளியாகவில்லை. இதற்கான காரணம் என்ன என்பது தெரியவந்துள்ளது. வெங்கட்மோகன் இயக்கத்தில் விஷால் நடித்துள்ள படம் ‘அயோக்யா’. இந்தப் படத்தில் ராஷி கண்ணா, பார்த்திபன், கே.எஸ்.ரவிகுமார், தேவதர்ஷினி, வம்சி கிருஷ்ணா, பூஜா தேவரியா, சோனியா அகர்வால் உள்ளிட்ட பலர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜூனியர் என்.டி.ஆர். நடிப்பில் வெளியான ‘டெம்பர்’ தெலுங்குப் படத்தின் ரீமேக் இது. லைட் ஹவுஸ் மூவி மேக்கர்ஸ் நிறுவனம் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு,

‘பிக் பாஸ் சீசன் 3’.. கமல்ஹாசன் ரெடி!

கடந்த 2 ஆண்டுகளைப் போல, இந்த ஆண்டும் ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியை கமல்ஹாசன் தொகுத்து வழங்குவாரா, இல்லையா? என்ற கேள்வி கடந்த சில வாரங்களாக சின்னத்திரை ரசிகர்கள் மத்தியில் பரவலாக எழுந்தது. ‘பிக் பாஸ் சீசன் 3’ நிகழ்ச்சிக்கான போட்டோஷூட் மூலம் இதற்கு விடை அளித்துள்ளது விஜய் தொலைக்காட்சி. அரசியல் பயணத்தில் தீவிரமாக இருக்கும் அதே முறுக்குமீசை கெட்டப்பில்தான் இம்முறை ‘பிக் பாஸ்’ நிகழ்ச்சியையும் கமல்ஹாசன் கையில் எடுக்கிறார். அதற்கான போட்டோஷூட் நடந்து முடிந்துள்ளது.  நிகழ்ச்சியின் முதல்கட்ட

தயாரிப்பு நிறுவனம் தொடங்கிய இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி

கணவன் – மனைவியான இயக்குநர்கள் புஷ்கர் – காயத்ரி, புதிதாகத் தயாரிப்பு நிறுவனம் தொடங்கியுள்ளனர். 2007-ம் ஆண்டு வெளியான ‘ஓரம்போ’ படத்தின் மூலம் இயக்குநர்களாக அறிமுகமானவர்கள் புஷ்கர் – காயத்ரி. ஆர்யா, பூஜா, லால் ஆகியோர் இந்தப் படத்தில் நடித்தனர். அதன்பிறகு ‘வ குவார்ட்டர் கட்டிங்’ என்ற படத்தை இயக்கினர். 2010-ம் ஆண்டு இந்தப் படம் ரிலீஸானது. அதனைத் தொடர்ந்து, 7 வருடங்களுக்குப் பிறகு ‘விக்ரம் வேதா’ படத்தை இயக்கினர். மாதவன், விஜய் சேதுபதி, ஷ்ரத்தா ஸ்ரீநாத்

‘பொன்னியின் செல்வன்’ அப்டேட்: ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை தொடங்கிய மணிரத்னம்

‘பொன்னியின் செல்வன்’ படத்தைத் தயாரிப்பதற்காக ரிலையன்ஸ் நிறுவனத்துடன் பேச்சுவார்த்தை தொடங்கியுள்ளார் மணிரத்னம். இயக்குநர் மணிரத்னத்தின் கனவுப்படம் ‘பொன்னியின் செல்வன்’. அமரர் கல்கி எழுதியுள்ள ‘பொன்னியின் செல்வன்’ நாவலைப் படமாக்கப் பல வருடங்களாக முயற்சி செய்து வருகிறார் மணிரத்னம். ஆனால், பட்ஜெட் உள்ளிட்ட சில விஷயங்களால் அது தள்ளிப் போய்க்கொண்டே இருக்கிறது. தற்போது விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, கீர்த்தி சுரேஷ் என தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர்கள் சிலரையும், அமிதாப் பச்சன், ஐஸ்வர்யா ராய் என பாலிவுட்

ஏப்ரல் 28-ல் கூடுகிறது நடிகர் சங்க செயற்குழு: தேர்தல் குறித்து விவாதிக்க முடிவு

நாளை (ஏப்ரல் 28) நடிகர் சங்க செயற்குழு கூடவுள்ளது. இதில், தேர்தல் நடத்துவது குறித்து விவாதிக்க முடிவு செய்திருப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. 2015-ம் ஆண்டு நடைபெற்ற தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தலில், நாசர் தலைமையிலான அணி வெற்றி பெற்றது. பொதுவாக, நடிகர் சங்கத்தில் 3 ஆண்டுகளுக்கு ஒருமுறை தேர்தல் நடைபெறுவது வழக்கம். அதன்படி, நாசர் தலைமையிலான அணியின் பதவிக்காலம் 2018-ம் ஆண்டு அக்டோபர் மாதத்துடன் முடிவு பெற்றது. ஆனால், நடிகர் சங்கத்தின் கட்டிடப் பணிகளை முடித்துவிட்டுத்தான் தேர்தல்

சந்தானம் இல்லாத குறை தெரியக்கூடாது என்பதற்காக நிறைய மெனக்கெட்டுள்ளோம்: சிவகார்த்திகேயன்

சந்தானம் இல்லாத குறை தெரியக்கூடாது என்பதற்காக நிறைய மெனக்கெட்டுள்ளோம் என ‘Mr. லோக்கல்’ படம் குறித்துப் பேசியுள்ளார் சிவகார்த்திகேயன். சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘Mr. லோக்கல்’. எம்.ராஜேஷ் இயக்கியுள்ள இந்தப் படம், முழுவதும் நகைச்சுவையை மையமாகக் கொண்டு உருவாகியுள்ளது. ஸ்டுடியோ க்ரீன் நிறுவனம் சார்பில் ஞானவேல் ராஜா இந்தப் படத்தைத் தயாரித்துள்ளார். சிவகார்த்திகேயன் ஜோடியாக நயன்தாரா நடிக்க, ராதிகா சரத்குமார், யோகி பாபு, ரோபோ சங்கர், சதீஷ் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். அனிருத் இசையமைத்துள்ள

தயாரிப்பாளர் சங்கத்தை தமிழக அரசே ஏற்றது: விஷால் அணிக்கு பெரும் பின்னடைவு – என்ன காரணம்?

தயாரிப்பாளர் சங்கத்தின் நிர்வாகத்தை, தமிழக அரசே ஏற்றுக் கொண்டது. இதனால், விஷால் தலைமையிலான அணிக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. தயாரிப்பாளர் சங்கத்துக்கு விஷால் தலைமையிலான அணி நிர்வாகத்துக்கு வந்தது. அப்போது திருட்டு விசிடி ஒழிப்பு, படங்கள் வெளியீட்டுக் குழு என பல வாக்குறுதிகளை அளித்தது. அதன்படி இந்த நிர்வாகம் செயல்படவில்லை என்று எதிர்தரப்பினர் குற்றச்சாட்டுகளை முன்வைத்துக்கொண்டே இருந்தனர். மேலும், வைப்பு நிதியில் இருந்த 7 கோடி ரூபாயை தயாரிப்பாளர் சங்கத்தின் புதிய நிர்வாகம் எடுத்து செலவழித்துவிட்டதாக எதிரணி

‘சூப்பர் டீலக்ஸ்’ அற்புதம், கண்களுக்கு விருந்து! – இன்ஸ்டாகிராமில் அமலாபால் பதிவு

‘சூப்பர் டீலக்ஸ்’ திரைப்படத்தைப் பாராட்டி அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நீண்ட வாழ்த்து ஒன்றை பதிவு செய்துள்ளார். தியாகராஜன் குமாரராஜா இயக்கத்தில் சில வாரங்களுக்கு முன் வெளியான ‘சூப்பர் டீலக்ஸ்’ விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது. ரசிகர்களிடம் கலவையான வரவேற்பையே பெற்றது. இந்நிலையில் இந்தப் படத்தைப் பற்றி நடிகை அமலாபால் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பெரிய வாழ்த்துப் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அதன் தமிழாக்கம்: ”நான் தாமதம் என்று தெரியும். ஆனால் வரமால் இருப்பதை விட தாமதமாக வரலாம்தானே.

வாக்காளர் பட்டியலில் பெயரில்லை: தேர்தல் அதிகாரிகளின் உதவியால் வாக்களித்த திவ்யதர்ஷினி

வாக்காளர் பட்டியலில் பெயரில்லை என்ற போதிலும், தேர்தல் அதிகாரிகளின் உதவியுடன் தனது வாக்கைப் பதிவு செய்திருக்கிறார் திவ்யதர்ஷினி. தமிழகத்தில் 39 மக்களவைத் தொகுதிகள் மற்றும் 19 சட்டப்பேரவை தொகுதிகளின் இடைத்தேர்தலுக்கான வாக்குப் பதிவு இன்று (ஏப்ரல் 18) தொடங்கி நடைபெற்று வருகிறது. அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலக பிரபலங்கள், வர்த்தகத் தலைவர்கள் உள்ளிட்ட பலரும் வாக்களித்து வருகிறார்கள். இதில் விஜய் தொலைக்காட்சியின் முன்னணித் தொகுப்பாளரான திவ்யதர்ஷினி தனது வாக்கைப் பதிவு செய்யச் சென்றார். ஆனால், வாக்காளர் பட்டியலில்