Category: தலையங்கம்

மேலும் எளிமையாகட்டும் ஜிஎஸ்டி!

பொது சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வசூல் 2018-19 நிதியாண்டின் இறுதி மாதத்தில் (ஏப்ரல்) ரூ.1,13,865 கோடியாக அதிகரித்திருக்கிறது. மார்ச் மாதத்தில் பொருளாதார நடவடிக்கை அதிகரித்து அது ஏப்ரல் மாத வசூலில் வெளிப்பட்டிருப்பது நல்ல அறிகுறி. ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்ட ஜூலை 2017-லிருந்து இதுவரை வசூலான மாதத் தொகைகளிலேயே இதுதான் அதிகம். 2018-19 நிதியாண்டில் வசூலான மாத சராசரி அளவு ரூ.98,114 கோடியுடன் ஒப்பிடுகையில் 15% அதிகம். கடந்த மார்ச், ஜனவரி, அக்டோபர் மாதங்களில் மட்டுமே ஜிஎஸ்டி

அயோத்தி நிலக் கோரிக்கை: பதற்றத்தைத் தூண்டும் செயல்!

அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்துக்கு அருகில் அரசால் 1993-ல் கைப்பற்றப்பட்ட 42 ஏக்கர் நிலத்தை ‘ராமஜென்மபூமி நியாஸ்’ அறக்கட்டளைக்குத் திருப்பித் தர அனுமதிக்குமாறு உச்ச நீதிமன்றத்திடம் மத்திய அரசு முன்வைத்திருக்கும் வேண்டுகோள் உள்நோக்கம் கொண்டது. மக்களவைப் பொதுத் தேர்தலுக்குள் இந்த வழக்கில் ஏதாவதொரு தீர்ப்பு வந்தால் நல்லது என்று அரசியல் கோணத்தில் சிந்திக்கிறது ஆளும் கட்சித் தரப்பு. அதை உணர்ந்துகொண்டிருப்பதாலேயே உச்ச நீதிமன்றம் விசாரணையைத் தள்ளி வைத்திருக்கிறது. சர்ச்சைக்குரிய இடத்தையும் அதைச் சுற்றிய பகுதிகளையும் சேர்த்து மொத்தம் 67.7

மேகாலயச் சுரங்க விபத்து: தொழிலாளர்கள் மீதான அக்கறையின்மையின் விளைவு

மேகாலயத்தின் கிழக்கு ஜயந்தியா குன்றுப் பகுதியில் சட்டவிரோத நிலக்கரிச் சுரங்கத்தில் நடந்த விபத்தின் அதிர்வுகள், வாரங்களைத் தாண்டியும் நம் தூக்கத்தைக் கெடுக்கிறது. 2018 டிசம்பர் 13-ல் நிகழ்ந்த இந்த விபத்தில் உரிய மீட்புப் பணிகளை மேற்கொள்ளாத மேகாலய அரசை உச்ச நீதிமன்றமே கண்டித்த பிறகும் சூழலில் அங்கே பெரிய மாற்றம் ஏதும் வரவில்லை. இது அம்மாநில அரசின் அலட்சியத்தைத்தான் காட்டுகிறது. தொழிலாளர் நலனிலும், தொழிலாளர் நலச் சட்டங்களை அமல் செய்வதிலும் மத்திய அரசுக்கும் மேகாலய மாநில அரசுக்கும்

பகுஜன் சமாஜ் – சமாஜ்வாதி: கூட்டணிக் கணக்குகளின் சமன்பாடுதான் என்ன?

சில வேளைகளில், புதிய எதிரிகளைச் சம்பாதித்துக்கொள்ளாமல் புதிய நண்பர்களைப் பெற முடியாது; மக்களவைத் தேர்தல் நெருங்கும் சூழலில், உத்தர பிரதேசத்தில் தொகுதிப் பங்கீட்டைத் துரிதமாக இறுதிசெய்திருக்கும் பகுஜன் சமாஜ் கட்சி, சமாஜ்வாதி கூட்டணியின் செயல்பாடு இதைத்தான் நினைவுபடுத்துகிறது. மொத்தமுள்ள 80 தொகுதிகளில் தலா 38-ல் போட்டியிட முடிவுசெய்திருக்கும் இரு கட்சிகளும், எஞ்சிய நான்கில் இரண்டை காங்கிரஸுக்கும் இரண்டை ராஷ்ட்ரீய லோக்தளம் கட்சிக்கும் என விட்டுவிடுவது என்று தாங்களாகவே முடிவு செய்துள்ளன. ஆனால், இது என்ன விதமான விளைவை