Category: தென்னிந்திய சினிமா

ரூ.200 கோடி வசூலித்த முதல் மலையாளப்படம்: ‘லூசிஃபர்’ சாதனை

மோகன்லால் நடிப்பில் வெளியான ‘லூசிஃபர்’ படம், 200 கோடி ரூபாய் வசூலித்து சாதனை படைத்துள்ளது. நடிகர் பிரித்விராஜ் இயக்குநராக அறிமுகமான மலையாளப் படம் ‘லூசிஃபர்’. அரசியல் பின்னணியைக் கொண்ட ஆக்‌ஷன் படமான இதில், மஞ்சு வாரியர், டொவினோ தாமஸ், விவேக் ஓபராய் ஆகியோர் முக்கியக் கதாபாத்திரங்களில் நடித்தனர். முரளி கோபி, படத்தின் திரைக்கதையை எழுதியுள்ளார். கடந்த மார்ச் 28-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. வெளியானதும் கலவையான விமர்சனங்களைப் பெற்றாலும், ரசிகர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்று, மாபெரும்

உங்களுடன் பணியாற்றக் காத்துக் கொண்டிருக்கிறேன் லாரன்ஸ் மாஸ்டர்: ஸ்ரீரெட்டி

உங்களுடன் பணியாற்றக் காத்துக் கொண்டிருக்கிறேன் லாரன்ஸ் மாஸ்டர் என்று ஸ்ரீரெட்டி தனது ஃபேஸ்புக் பதிவில் தெரிவித்துள்ளார். சில மாதங்களுக்கு முன்பு தெலுங்குத் திரையுலகை பாலியல் புகார்களால் கலங்கடித்தவர் ஸ்ரீரெட்டி. பவன் கல்யாண், ராணாவின் தம்பி உள்ளிட்ட பலர் மீது குற்றச்சாட்டு வைத்தவர், தமிழ்த் திரையுலகம் பக்கம் திரும்பினார். ஏ.ஆர்.முருகதாஸ், ராகவா லாரன்ஸ் உள்ளிட்ட சிலர் மீது குற்றச்சாட்டுகளை அடுக்கினார். தன் மீதான குற்றச்சாட்டு குறித்து ராகவா லாரன்ஸ், ‘அவரை நான் பார்த்தது கூட இல்லை. வேண்டுமானால் எனது

ஆன்லைன் அச்சுறுத்தல்கள், கூலிப்படைகளை ஏவுவதற்கு சமம்: பார்வதி சாடல்

ஆன்லைன் அச்சுறுத்தல்கள், கூலிப்படைகளை ஏவுவதற்கு சமம் என்று நடிகை பார்வதி கடுமையாகச் சாடியுள்ளார். மனு அசோகன் இயக்கத்தில் பார்வதி நாயர், டோவினோ தாமஸ், ஆஷிப் அலி உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘உயிரே’. விமர்சன ரீதியாக இப்படத்துக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. ஆசிட் வீச்சால் பாதிக்கப்பட்டப் பெண்ணாக பார்வதி நடித்துள்ளார். ‘உயிரே’ படத்தை விளம்பரப்படுத்த ‘தி இந்து’ ஆங்கில நாளிதழுக்குப் பேட்டி அளித்துள்ளார் பார்வதி. அதில், ‘சமூக ஊடகங்களில் உங்களுக்கு எதிரான வெறுப்புப் பிரச்சாரங்களை எப்படிக்

தமிழில் ரீமேக் ஆகும் ‘பவித்ரம்’: சிவகார்த்திகேயன், துல்கர் சல்மானிடம் பேச்சுவார்த்தை

மலையாளத்தில் பெரும் வரவேற்பைப் பெற்ற ‘பவித்ரம்’, தமிழ் மற்றும் தெலுங்கில் ரீமேக் செய்ய பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்கள். 1994-ம் ஆண்டு வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்ற மலையாளப் படம் ‘பவித்ரம்’. டி.கே. ராஜீவ் குமார் இயக்கத்தில் வெளியான இப்படத்தில் மோகன்லால், திலகன், ஸ்ரீவித்யா, ஷோபனா, ஸ்ரீனிவாசன், நெடுமுடி வேணு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். படத்தில் மோகன்லாலின் தாய் ஸ்ரீவித்யா தனது 50-வது வயதில் கர்ப்பமாகிறார். அதனைத் தொடர்ந்து என்னவாகிறது என்பதுதான் கதை. இக்கதையைப் போலவே இந்தியில் ‘Badhaai

தென்னிந்திய- ஹாலிவுட் கூட்டுத் தயாரிப்பாக உருவாகும் ‘மாதவன் – அனுஷ்கா’ படம்

சில நாட்களுக்கு முன்பு தெலுங்குத் திரையுலகின் முன்னணிக் கதாசிரியரும், தயாரிப்பாளருமான கோனா வெங்கட் தன் படத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளதை உறுதிப்படுத்தினார். ‘பாகுபலி’, ‘பாகமதி’ ஆகிய படங்களைத் தொடர்ந்து அனுஷ்கா நடிக்கவுள்ள அடுத்த படம் குறித்து பல்வேறு செய்திகள் வெளியான வண்ணம் இருந்தன. ஆனால், அதிகாரபூர்வமாக எந்தவொரு அறிவிப்புமே வெளியாகாமல் இருந்தது. சில நாட்களுக்கு முன்பு தெலுங்குத் திரையுலகின் முன்னணிக் கதாசிரியரும், தயாரிப்பாளருமான கோனா வெங்கட் தன் படத்தில் அனுஷ்கா நடிக்கவுள்ளதை உறுதிப்படுத்தினார். தற்போது, அப்படம் குறித்த அதிகாரபூர்வத்

‘கேர் ஆஃப் கஞ்சரபலேம்’: தேசிய விருது பரிந்துரையில் சர்ச்சைக்குப் பிறகு தேர்வு

கடந்த வருடம் வெளியாகி விமர்சகர்களின் ஏகொபித்த ஆதரவைப் பெற்ற தெலுங்கு மொழிப் படமான ‘கேர் ஆஃப் கஞ்சரபலேம்’ தேசிய விருதுக்கான பரிந்துரைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளது. முன்னதாக,’கேர் ஆஃப் கஞ்சரபலேம்’ படத்தின் தயாரிப்பாளர் பிரவீனா பருசூரி இந்தியக் குடியுரிமை இல்லாதவர் என்பதால், இப்படம் தேசிய விருதுக்கான பரிந்துரைக்குத் தகுதி பெறாது என்று நிராகரிக்கப்பட்டது. தொடர்ந்து தெலங்கானா அமைச்சர் கே.டி.ஆர் மற்றும் மத்திய அமைச்சர் ராஜ்யவர்த்தன் ரத்தோரின் முயற்சிகள் காரணமாக தற்போது தேர்வு செய்யப்பட்டுள்ளது.  கே.டி.ஆர், அருண் ஜேட்லி, ரத்தோர் மற்றும்

‘வினய விதேய ராமா’ சோகம்: அதிக கலாய்ப்பினால் காட்சி நீக்கம்

பொங்கலை முன்னிட்டு ராம் சரண் நடிப்பில், போயப்பாடி சீனு இயக்கத்தில் வெளியான படம் ‘வினய விதேய ராமா’. வெளியான முதல் காட்சியிலிருந்து இந்தப் படம் நெட்டிசன்களால் கலாய்க்கப்பட்டு வருகிறது. அந்த அளவு அபத்தமான ஹீரோயிசக் காட்சிகள் படத்தில் நிறைந்திருந்தது. ராம் சரண் தேஜாவின் ரசிகர்களே கோபம் கொள்ளும் அளவுக்கு இருந்த இந்தப் படத்தின் காட்சிகளை வைத்து பல மீம்ஸும் உருவானது. இன்னும் சில ரசிகர்கள் ஒரு படி மேலே போய், வேண்டுமென்றே ஸ்ரீனு ராம் சரணை வைத்து

என்.டி.ஆர் படம் தோல்வி: இயக்குநர் ராம் கோபால் வர்மா கிண்டல்

மக்களிடையே ‘என்.டி.ஆர்’ படம் தோல்வியடைந்துள்ளதை இயக்குநர் ராம் கோபால் வர்மா கிண்டல் செய்துள்ளார். மறைந்த ஆந்திர முதல்வரும், பழம்பெரும் நடிகருமான என்.டி.ராமாராவின் பயோபிக் (உண்மைக்கதை) சமீபத்தில் ஆந்திரா, தெலங்கானா மட்டுமின்றி, உலகமெங்கும் வெளியானது. என்.டி.ஆர் வேடத்தில் நடித்த அவரது மகனும் பிரபல நடிகருமான பாலகிருஷ்ணா நடித்துள்ளார். க்ரிஷ் இயக்கியுள்ள இப்படத்தில் வித்யா பாலன், ராணா, சுமந்த், கல்யாண் ராம், ரகுல் ப்ரீத் சிங் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். பெரும் எதிர்பார்ப்புக்கு இடையே சுமார் 1500 திரையரங்குகளில் வெளியான