Category: பாலிவுட்

குழு உறுப்பினரைப் பற்றி பேசும்போது உடைந்து அழுத சன்னி லியோன்

தொலைக்காட்சி நிகழ்ச்சி ஒன்றில், மறைந்த தனது குழு உறுப்பினர் ஒருவரைப் பற்றி பேசுகையில் உடைந்து அழுதுள்ளார் சன்னி லியோன். நடிகை சன்னி லியோனின் குழுவில் நீண்டகாலமாக இருந்தவர் பிரபாகர். சிறுநீரகம் செயலிழந்த காரணத்தால் சமீபத்தில் இவர் இறந்தார். இவரது சிறுநீரக மாற்று அறுவைச் சிகிச்சைக்கு நிதி உதவி கேட்டு சன்னி லியோன் பதிவிட்டார். ஒரு கோடி ரூபாய் மதிப்புள்ள காரை வாங்கும்போது, உங்களால் அவருக்கு உதவி செய்ய முடியாதா? என பலர் அவரை வசைபாடினர். சமீபத்தில் ஒரு

புற்றுநோயிலிருந்து மீண்ட இர்ஃபான் கான் ரசிகர்களுக்கு உருக்கமான நன்றி

புற்றுநோயிலிருந்து மீண்ட பாலிவுட் நடிகர் இர்ஃபான் கான் தனது ரசிகர்களுக்கு உருக்கமான நன்றியைத் தெரிவித்துள்ளார். ‘தி லஞ்ச் பாக்ஸ்’, ‘லைஃப் ஆஃப் பை’ உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து சர்வதேச அளவில் புகழை எட்டியவர் இர்ஃபான் கான். இவர் தான் நியூரோ எண்டாக்ரின் ட்யூமர் எனப்படும் அரிய வகை நோயினால் பாதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் அந்த நோய்க்கு தீவிர சிகிச்சை பெற்றுக்கொண்டு மீண்டு வந்துள்ளார் இர்ஃபான் கான். இதனைத் தொடர்ந்து தான் நலம்பெறத் துணையாக இருந்த ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்துள்ளார்.

தன்னுடைய சொந்த வாழ்க்கையையே இயக்கும் கங்கணா ரணாவத்

பிரபல பாலிவுட் நடிகையான கங்கணா ரணாவத்தின் வாழ்க்கை வரலாறு படமாகிறது. இப்படத்தை அவரே இயக்க உள்ளார். ‘மணிகர்னிகா’ படத்தில் பணியாற்றியவரும்’ பாகுபலி’யின் கதாசிரியரான கே.வி. விஜயேந்திரா இப்படத்தின் கதையை எழுத உள்ளார். இந்த ஆண்டு அக்டோபர்- நவம்பரில் இப்படம் திரையில் வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் தொழில்நுட்பக் குழுவினர் அனைவரும் தயாராக உள்ளதாக கங்கணா தெரிவித்துள்ளார். இதுகுறித்து கங்கணா வெளியிட்டுள்ள அறிக்கையில், ”என்னுடைய இயக்கத்தில் அடுத்ததாக என் சொந்தக் கதையே வெளியாக உள்ளது. என்னை பொருளாக எண்ணி

ரன்வீர் சிங் வானாளாவ புகழ்ந்து தீட்டிய கடிதம்: இணையதளத்தில் வெளியிட்ட தீபிகா

”உலகின் சிறந்த நடிகை தீபிகா” என்று வானளாவ புகழ்ந்து தீட்டிய ரன்வீர் சிங் கடிதத்தை தனது இணையதளத்தில் வெளியிட்டு திருமணமான கையோடு தீபிகா பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். ”தீபிகா படுகோனே மிக அற்புதமான ஒரு பெண், உலகின் சிறந்த நடிகர்களில் ஒருவர் அவர். அதுமட்டுமின்றி என் வாழ்க்கையை மதிப்புமிக்கதாக மாற்றியவர்” என்று ரன்வீர் சிங் புகழாரம் சூட்டியுள்ளார். தீபிகா கடந்த ஜனவரி 5 அன்று தனக்கென்று ஒரு புதிய இணையதளத்தை தொடங்கியுள்ளார். அதில் முதல் பதிவாக ரன்வீர் சிங்

குண்டாக இருப்பதாக வெளியான செய்தி: நேஹா துபியா கடும் சாடல்

குண்டாக இருப்பதாக வெளியான செய்திக்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கடும் பதிலடி கொடுத்துள்ளார் நேஹா துபியா. பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்தவர் நேஹா துபியா. அங்கட் பேடி என்ற நடிகரை கடந்த ஆண்டு திருமணம் செய்து கொண்டார். இருவருக்கும் 2018-ம் ஆண்டு நவம்பர் மாதம் பெண் குழந்தை பிறந்தது. குழந்தை பிறந்ததைத் தொடர்ந்து, நேஹா துபியா மிகவும் குண்டாகிவிட்டார் என்று பாலிவுட் இணையதளங்கள் செய்திகள் வெளியிட்டன. இதற்கு தனது ட்விட்டர் பக்கத்தில் கடிதம் ஒன்றை வெளியிட்டு

‘மணிகார்னிகா’ இயக்குநர் யார்? – ட்விட்டரில் கங்கணா ரணவத் vs க்ரிஷ் தரப்பு மோதலால் சர்ச்சை

‘மணிகார்னிகா’ இயக்குநர் யார் என்று ட்விட்டர் பக்கத்தில் ரில் கங்கணா ரணவத்  மற்றும் க்ரிஷ் தரப்பு மோதலால் சர்ச்சை வெடித்துள்ளது. கங்கணா ரணவத்  நடிப்பில் வெளியாகியுள்ள படம் ‘மணிகார்னிகா’. ஜீ ஸ்டூடியோ தயாரித்துள்ள இப்படத்தை க்ரிஷ் மற்றும் கங்கணா ரணவத்  இயக்கியுள்ளனர். விமர்சன ரீதியாக நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இப்படம் வெளியான 5 நாட்களில் 52 கோடி வசூல் செய்துள்ளது. இப்படத்தின் பணிகளை முடித்துக் கொடுத்துவிட்டு தான் பாலகிருஷ்ணா நடித்த ‘என்.டி.ஆர்’ படத்தை இயக்கினார் க்ரிஷ். ஆனால்,

சர்ச்சைகள் என்றால் பயம்; அதிலிருந்து தள்ளியிருக்கவே விரும்புகிறேன்: நவாசுதின்

தனது நடிப்பைத் தாண்டி, தனிப்பட்ட வாழ்க்கையின் மீது ரசிகர்களின் கவனம் செல்வதால் சர்ச்சைகளிலிருந்து தள்ளியிருக்கவே தான் விரும்புவதாக நடிகர் நவாசுதின் சித்திக் கூரியுள்ளார். தமிழில் முதன்முதலாக ‘பேட்ட’ படம் மூலம் வில்லனாக அறிமுகமான நவாசுதின் பாலிவுட்டில் வித்தியாசமான கதாபாத்திரங்களில் நடித்ததற்காக ஒவ்வொரு படத்துக்கும் பாராட்டுகளைப் பெறுபவர். சமீபத்தில் ரிதுபர்னா சாட்டர்ஜியுடன் இணைந்து இவர் எழுதிய சுயசரிதை நூல் ‘ஆன் ஆர்டினரி லைஃப்’ சர்ச்சைக்குள்ளானது. அதில் முன்னாள் மிஸ் இந்தியா நிஹாரிகா சிங் மற்றும் நடிகை சுனிதா ராஜ்வருடனான

புரூஸ்லீயின் ஆவியாகவே கங்கணா ரணாவத்தைப் பார்க்கிறேன்: ராம்கோபால் வர்மா பாராட்டு

‘மணிகர்ணிகா தி குயின் ஆப் ஜான்சி’ பாலிவுட் திரைப்படம் திரையிட்ட இடங்களில் எல்லாம் வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கும் நிலையில் இயக்குநர் ராம்கோபால் வர்மா கங்கணாவை வியந்து பாராட்டியுள்ளார். பெண்களை மையமாகக் கொண்ட திரைப்பட வரிசையில் முதன்முறையாக ‘மணிகர்ணிகா: தி குயின் ஆப் ஜான்சி’ திரைப்படம் திரையிட்ட வார இறுதியில் ரூ.40 கோடி வசூலித்து சாதனை படைத்துள்ளது. கங்கணா ரணாவத்தை பாலிவுட்டின் ராணி என்று அழைக்கிறார்கள். அதற்கான காரணம் இப்போது மீண்டும் நிரூபிக்கப்பட்டுள்ளதாவும் இப்படத்தில் கங்கணா மிக அற்புதமாக நடித்துள்ளதாகவும்

படப்பிடிப்பின் போது சக நடிகர்களால் துன்புறுத்தலுக்கு ஆளானேன்: கங்கணா ரணவத் பேச்சு

படப்பிடிப்பில் இருக்கும்போது சக நடிகர்களால் பல முறை தான் துன்புறுத்தலுக்கு ஆளாகியுள்ளதாகவும், அவை #மீடு குற்றச்சாட்டைப் போன்ற பாலியல் துன்புறுத்தல்கள் இல்லையென்றாலும் அவை தன்னை அச்சுறுத்தியதாகவும், அவமானப்படுத்தும் வகையில் இருந்ததாகவும் நடிகை கங்கணா ரணவத் பேசியுள்ளார்.  சில மாதங்களுக்கு முன் மீடூ குற்றச்சாட்டுகள் பாலிவுட்டை சூறாவளி போல தாக்கின. பல நடிகர்கள், இயக்குநர்கள், தயாரிப்பாளர்கள் மீது பல்வேறு பெண்கள் பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகளை முன்வைத்தனர். கங்கணா ரணவத்தும், குயின் பட இயக்குநர் விகாஸ் பால் மீது மீடூ

ரன்வீர் சிங்குக்கு மனைவி தீபிகா படுகோன் விதித்த 3 நிபந்தனைகள் என்ன தெரியுமா?

பாலிவுட்டின் நட்சத்திர தம்பதி ரன்வீர் சிங்-  தீபிகா படுகோன். இத்தாலியின் கோமோ ஏரிப் பகுதியில் கோலாகலமான திருமணம் மூலம் இல்லற வாழ்வில் நுழைந்த தீபிகா படுகோன் – ரன்வீர் சிங் தம்பதியினர் அடுத்தடுத்து முன்னுதாரணமான செய்திகளுக்காகப் பாராட்டுக்களை அள்ளிவருகின்றனர். கிடைக்கும் இடைவெளிகளில் இருவரும் மாறி மாறி அன்பைப் பொழியவும் தவறுவதில்லை. திரையுலகில் இருவரும் பரபரப்பாக இருக்கும் அதேவேளையில் தீபிகா படுகோன், தனது கணவர் ரன்வீர் சிங்குக்கு 3 நிபந்தனைகள் விதித்திருக்கிறார். இதுகுறித்து சினிமா நிகழ்ச்சியொன்றில் ரன்வீர் பகிர்ந்துகொண்டார்.

சர்ச்சையைக் கிளப்பிய ‘ஸ்ரீதேவி பங்களா’ டீஸர்: நோட்டீஸ் அனுப்பிய போனி கபூர்

மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மரணத்தைக் குறிப்பதாக ‘ஸ்ரீதேவி பங்களா’ படக்குழுவினருக்கு ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர் நோட்டீஸ் அனுப்பியுள்ளார். மலையாள இயக்குநர் உமர் அப்துல் வகாப் இயக்கத்தில், ப்ரியா பிரகாஷ் வாரியர் நடித்த திரைப்படம் ‘ஒரு அடார் லவ்’. இந்த திரைப்படத்தில் வரும் ‘மணிக்கய மலரய பூவே’ என்ற பாடலில் ப்ரியா பிரகாஷ் வாரியர் புருவத்தைத் தூக்கி கண் சிமிட்டுவது போன்ற காட்சி கடந்த வருடம் இணையத்தில் பெரும் வைரலானது. அந்தப் பாடலுக்கு எதிராக நீதிமன்றத்தில் வழக்குகளும்