Category: பெண் இன்று

முகங்கள்: ‘அப்பாச்சிப் பொண்ணு’

தங்கள் லட்சியப் பயணத்தில் எதிர்படும் இடையூறுகளைத் தன்னம்பிக்கையுடன் தகர்த்து முன்னேறும் பெண்களில் ஒருவர் பிரேமா ராணி மஞ்சுநாதன். சென்னையில் தனியார்  நிறுவனத்தில் மார்கெட்டிங் பிரிவில் பணிபுரியும் பிரேமா, மாற்றுச் சிந்தனைகளை அனைவரிடமும் கொண்டு சேர்ப்பதற்கான கருவியாகப் பயணத்தைத் தேர்ந்தெடுத்திருக்கிறார். ஆண்களின் அடையாளமாகக் கருதப்படும் பைக்கைத் தன் பயணத் துணையாக்க முடிவெடுத்திருக்கிறார். தலைக்கவசத்தின் முக்கியத்துவம் குறித்தும் பெண்கள் தங்கள் வாழ்க்கையைத் தாங்கள் விரும்பியபடியே வாழ்வதன் அவசியம் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக இந்தியா முழுவதும் பைக் பயணம் மேற்கொள்ளவிருக்கிறார். அண்ணன்

நிதர்சனம்: உழைக்கும் பெண்களின் எதிர்பார்ப்புகள்

திருப்பூரின் அடையாளம் பின்னலாடைத் தொழில். இந்த அடையாளத்தை ஏற்படுத்த ஆண்கள் எந்த அளவு உழைத்திருக்கிறார்களோ அதே அளவுக்குப் பெண்களும்  உழைத்திருக்கிறார்கள். இன்றைக்கும் உழைத்துக்கொண்டே இருக்கிறார்கள். திருப்பூரின் பின்னலாடை உற்பத்தியில் சரிபாதியாக ஆண்களோடு பெண்களும் பகிர்ந்துகொள்ளும் அளவுக்கு இந்தத் துறை பெண்களின் அளவற்ற உழைப்பை நம்பியே இருக்கிறது. பின்னலாடை நிறுவனங்களில் இரவு பகலாக உழைக்கும் பெண்களுக்கு, பல்வேறு எதிர்பார்ப்புகள், தேவைகள், ஏக்கங்கள் உள்ளதாகச் சொல்கின்றனர் திருப்பூர் பெண் தொழிலாளர்கள். “இந்த ஊரை மட்டும் நம்பிவந்தால் போதும். எவ்வித முதலீடும்

காந்தி கண்ட கனவு

ஜனவரி 30: மகாத்மா காந்தி நினைவுநாள் பெண்களின் அரசியல் பங்கேற்பைப் பிரம்மாண்ட அளவில் நிகழ்த்திக்காட்டியவர் காந்தி. அவரின் பின்னால் லட்சக்கணக்கான பெண்கள் அணிவகுத்துப் பல்வேறு போராட்டங்களில் பங்கேற்றது வரலாறு. பெண்ணுரிமைக்காகவும் பெண் முன்னேற்றத்துக்காகவும் பேசிவந்தவர் காந்தி. பெண்கள் குறித்து காந்தி பேசியவற்றில் சில: “மனைவி என்பவள் கணவனுக்குப் பொம்மையாக இருக்கக் கூடாது. கணவன்மார்கள் தங்களுடைய மனைவியை எல்லாச் சூழ்நிலைகளிலும் உற்ற தோழமையாக நடத்த வேண்டும். பெண் குறித்து சமுதாயத்தில் நிலவும் பிற்போக்கான கருத்துகள் மோசமானவை. இந்நிலை முற்றிலுமாக

சூழல் காப்போம்: காகிதக் குப்பைத்தொட்டி

வீடுகளிலும் அலுவலகங்களிலும் குப்பைக் கூடையைப் பயன்படுத்துகிறோம். ஆனால், ஒவ்வொரு நாளும் குப்பைக் கூடைகளைச் சுத்தம் செய்வதில் பலர் ஆர்வம்காட்டுவதில்லை. குப்பைக் கூடைகளை அடிக்கடி கழுவி, காயவைப்பதைத் தவிர்க்கவே பெரிய பிளாஸ்டிக் பைகளைக் குப்பைக்கூடையின் உள்புறம் வைத்துப் பயன்படுத்துவோம். தினமும் அந்த பிளாஸ்டிக் பைகளை மட்டும் அகற்றிவிடுவோம். இவ்வாறு பெரிய பிளாஸ்டிக் பைகளைக் கூடைக்குள் போடுவதற்கு  மாற்றாகப் பழைய செய்திதாள்களை மடித்து காகிதக் குப்பைக்கூடை செய்யலாம். இதைச் செய்யப் பசை தேவையில்லை. பிளாஸ்டிக் பைகளுக்குப் பதிலாக குப்பைகூடைக்குள் இந்தக்

படிப்போம் பகிர்வோம்: நூற்றாண்டு கடந்தும் மாறாத நிலை

ஏழை – பணக்காரன், ஆண் – பெண் என எந்தப் பாகுபாடும் இல்லாமல் அனைவரும் சமமாக வாழ்வதற்கான சூழ்நிலையைப் பாட்டாளிவர்க்கப் புரட்சியால் சாத்தியப்படுத்த முடியும் என்பதை நிரூபித்தது 1917-ல் நடந்த ரஷ்யப் புரட்சி. இன்றளவும்  உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களுக்குப் பொதுவுடைமை மீதான நம்பிக்கையை நீர்த்துப்போகாமல் வைத்திருப்பதும்  இந்தப் புரட்சியே.   ரஷ்யப் புரட்சிக்கு முந்தைய ஜார் அரசின்கீழ் ரஷ்ய மக்கள் பட்ட துயரங்கள் ஏராளம். அதிலும் பெண்களின் நிலை இன்னும் மோசம். பொதுவாகப் போராட்டம், ஆர்ப்பாட்டம்

பக்கத்து வீடு: விடாமுயற்சியின் மறுபெயர்

பெஸி கோல்மேன் (Bessie Coleman), ‘விமானம் ஓட்டும் கலையின் ராணி’ என்று புகழப்பட்டவர். இதற்காக அவர் செய்த முயற்சிகள், அவற்றை அறிய நேரும் ஒவ்வொருவருக்கும் பாடம். அவர் இறந்தபோது மூன்று இடங்களில் நினைவஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. ஜான்ஸன்வில்லி, ஆர்லாண்டோ, சிகாகோ ஆகிய நகரங்களில் அஞ்சலிக் கூட்டங்கள் நடத்தப்பட்டன. மக்கள் வெள்ளமெனத் திரண்டார்கள். அதுவும் சிகாகோவில் பல்லாயிரக்கணக்கானவர்கள் கூடினர். கண்ணீர் சிந்தி அஞ்சலி செலுத்தினர். சிகாகோவிலுள்ள லிங்கன் இடுகாட்டில் அவர் உடல் புதைக்கப்பட்டது. ஏழ்மையின் பிடியில் டெக்ஸாஸ் நகரில்

பார்வை: இளம் மனங்களில் புதைந்திருக்கும் பெண் வெறுப்பு

ஒரு சொல் எப்போது வெறுக்கும் சொல்லாகிறது? அது உச்சரிக்கப்படுவதன் உளவியல் பின்னணி  அம்பலப்படும்போது அது வெறுக்கும் சொல்லாகிறது. அச்சொல்லின் ஊடாக அந்த நபரின் வக்கிரமும் ஆபாசமும் இணைந்தே வெளிப்படுகின்றன. ஒரு சொல்தான் அதிகாரத்தில் இருப்பவர்களுக்கும் அதிகாரத்தின் கீழ் அடங்கி இருப்பவர்களுக்கும் இடையிலான பாகுபாட்டை அம்பலப் படுத்துவதாக அமைகிறது. ஒரு ஊடகத்தின் அறையிலிருந்து வெளிப்பட்டு நாடாளுமன்றம்வரை அச்சொல் எதிரொலிக்கிறது. கோடிக்கணக்கான மக்களால் வசீகரிக்கப்பட்ட ஒரு விளையாட்டுப் பிரபலம் பொதுவெளியில் திருவாய் மலர்ந்து அருளும்போது பல லட்சம் பார்வையாளர்களைச் சென்றடையும்போது

பிளாஸ்டிக் ஒழிப்பில் வழிகாட்டும் வாசகர்கள்: கறி வாங்கச் சென்றால்…

எனக்குத் தையல் நன்கு தெரியும்.  என்னிடம் உள்ள வேண்டாத துணிகளையும் புடவை முந்தானைகளையும் கொண்டு பல வண்ணப் பைகளாகத் தைத்து வைத்துள்ளேன்.  கடந்த ஆறு மாதங்களாகக் கடைகளுக்குச் செல்லும்போது கையில் பை இல்லாமல் செல்வதில்லை.  கடைகளில் பாலித்தீன் பைகளுக்கு மாற்றாகக் கொடுக்கப்படும் பைகளும் அதிகம் உழைப்பதில்லை.  ஆனால், தேவையில்லை என நாம் ஒதுக்கும் பழைய துணிகள் நன்றாக உழைக்கக்கூடியவை. பழைய துணிகளைப் பைகளாக தைப்பது மிக எளிது.  பிளாஸ்டிக்கைத் தனியாகப் பிரிக்கும்போதுதான் அதன் விபரீதம் புரிந்தது. மக்கும்

சிறுதுளி: வலிமை தந்த வல்லவர்கள்!

அமெரிக்க ஓவியக் கலைஞர் ஆலிசன் ஆடம்ஸ், தன் கணவரின் மரணம் அளித்த துயரத்திலிருந்து மீள்வதற்காக வரலாற்றில் என்றென்றும் வாழும் முன்னோடிப் பெண்களின் ஓவியங்களை ‘முன்னோடிப் பெண்கள்’ (Groundbreaking Girls) என்ற தலைப்பிலேயே வரைய ஆரம்பித்திருக்கிறார். அப்படி வரைவதற்காக முன்னோடிப் பெண்களின் வாழ்க்கை வரலாறைப்  படித்ததால் கிடைத்த வலிமையால், தன் தனிப்பட்ட வாழ்க்கைத் துயரத்திலிருந்து மீண்டதாகச் சொல்கிறார் ஆலிசன். கலிஃபோர்னியாவைச் சேர்ந்த இவர், பல்வேறு துறைகளில் முன்னோடிகளாகத் திகழ்ந்த 200 பெண்களின் உருவத்தை வரைந்திருக்கிறார். இதில், வரலாற்றில் பெரும்

கற்பிதமல்ல பெருமிதம் 40: சமையலறை பெண்ணுக்கு மட்டுமல்ல

பொங்கலுக்கு நாலு நாட்கள் அலுவலகம் விடுமுறை. ஜனவரி முதல் வாரத்திலிருந்தே அந்த நான்கு நாட்களுக்காகத் திட்டமிட்டுக்கொண்டிருந்தாள் நர்மதா. ஒவ்வொரு முறையும் பொங்கலுக்கு ஊருக்குப் போவது வழக்கம். டிக்கெட் கிடைக்காததால் ஊருக்குப் போகும் திட்டம் கைவிடப்பட்டது. எளிமையாகச் சமைத்துவிட்டு, டி.வி. பார்க்கலாம், கொஞ்சம் வெளியே சுற்றலாம், தினமும் காலை ஏழு மணிவரை தூங்கலாம், ஆற அமர நாளைத் திட்டமிடலாம் என்று கற்பனைக் கோட்டை கட்டினாள் நர்மதா. இவர்கள் ஊருக்குப் போகாததால், ஊரிலிருந்து வந்த உறவினர் காரில் மைத்துனர் குடும்பமும்

நம்பிக்கை முனை: இப்படித்தான் சாதித்தார் வீனஸ் வில்லியம்ஸ்

உலகப் புகழ்பெற்ற டென்னிஸ் வீராங்கனை வீனஸ் வில்லியம்ஸ், 14 வயது சிறுமியாக இருந்தபோது ஒரு டென்னிஸ் போட்டியில் பங்கேற்கிறார். போட்டி தொடங்கும் முன் ஏபிசி செய்தி நிறுவனத்தைச் சேர்ந்த ஊடகவியலாளர் ஜான் மெக்கன்ஸி அவரைப் பேட்டி காண்கிறார். போட்டியில் எதிராளியை வீழ்த்த முடியும் என்று எந்த அளவுக்கு நம்புகிறாய் என்று வீனஸைக் கேட்கிறார் ஜான். “என்னால் அவளை வீழ்த்த முடியும். அதை உறுதியாக நம்புகிறேன்” என்று புன்னகையுடன் பதில் சொல்கிறார் வீனஸ். “அது எப்படி அவ்வளவு எளிதாகச்

பக்கத்து வீடு: புள்ளியில் விரியும் பிரபஞ்சம்!

அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஓவியக் கண்காட்சி. ஒரு டிக்கெட்டின் விலை 1,750 ரூபாய். ஒருவருக்கு 30 நொடிகளே பார்வையிட அனுமதி. காரணம், அந்தக் கண்காட்சியைக் காண 90 ஆயிரம் பேர் குவிந்துவிட்டனர்! உலகப் புகழ்பெற்ற ஜப்பானிய ஓவியர் யாய்வாய் கிசாமாவின் கண்காட்சிதான் அது. பார்த்தவுடனேயே சட்டென்று மாய உலகத்துக்கு அழைத்துச் சென்று, நம் துயரத்தை எல்லாம் துடைத்துவிடும் ஆற்றல் இவரது ஓவியங்களுக்கு உண்டு. யார் இந்த கிசாமா? ஜப்பானில் வசதியான குடும்பத்தில் பிறந்தவருக்கு மகிழ்ச்சியான குழந்தைப்

போகிற போக்கில்: காகிதத்தில் கலைவண்ணம்!

பிளாஸ்டிக் ஒழிப்புக்குத் தடை விதிக்கப்படுவதற்கு முன்பே இயற்கைக்கு ஊறுவிளைவிக்காத பாதையைத் தேர்ந்தெடுத்தவர் குணவதி. சிவகாசியைச் சேர்ந்த இவர், காகிதங்களில் பலவிதமான ஆபரணங்களைச் செய்து விற்பனை செய்துவருகிறார். பத்தாம் வகுப்பு முடித்ததுமே குணவதிக்குத் திருமணம் செய்துவைத்துவிட்டனர். மகிழ்ச்சியான குடும்பம், இரண்டு பெண் குழந்தைகள் என்று வாழ்க்கை எந்தச் சிக்கலும் இல்லாமல் இருந்தது. ஆனால், தனித்து ஏதாவது சாதிக்க வேண்டும், கிராமப்புறத்தில் உள்ள பெண்களின் வாழ்க்கையை முன்னேற்ற வேண்டும் என்ற ஆவல் குணவதிக்கு இருந்தது. அதைக் கணவரிடமும் தாயிடமும் தெரிவித்தார்.

பாதையற்ற நிலம் 22: பெண் எனும் தன்னிலையின் கவிதைகள்

தமிழ்க் கவிதைகளில் பெண் உலகு பலவிதமாகச் சொல்லப்பட்டுள்ளது. தொண்ணூறுகளுக்குப் பிறகு அவர்களது பிரச்சினைகள் கவிதைகளில் திடமாகத் தொழிற்பட்டன. ஆனால், அவை பெண்ணினத்தைப் பொதுவில்கொண்டு ரெளத்திரமாகப் பாடப்பட்டவை. இதற்கு அப்பாற்பட்டு பெண் என்ற தன்னிலையில் நின்று இந்தப் பிரச்சினைகளைக் கவிதைக்குள் சொன்னவர்கள் சிலரே. அப்படியான விசேஷமிக்க கவிஞர்களுள் ஒருவர் அ.வெண்ணிலா. வெண்ணிலாவின் கவிதைகள், சமூ கத்தைப் பெண் என்ற தன்னிலையில் நின்று எதிர்கொள்பவை. இந்தத் தன்னிலையால் பெண் அடையும் சிக்கல்களுக்குத் தன்னையே உதாரணமாக ஆக்குகின்றன இந்தக் கவிதைகள். இதனால்

வண்ணங்கள் ஏழு 37: வஞ்சிக்கப்பட்டவர்களுக்காக உயரும் கை

உலகில் இரண்டுவிதமான மனிதர்கள் இருக்கிறார்கள். தான் அனுபவித்த சிரமங்களையும் போராட்டங்களையும் தன்னுடைய சந்ததிகள் அனுபவிக்க வேண்டாம் என்று நினைப்பவர்கள் ஒரு ரகம். நான் அனுபவித்த வேதனைகளையும் சிரமங்களையும் அவமானங்களையும் நீயும் அனுபவித்து உன்னால் முடிந்தால் முன்னேறிக் காட்டு… என்று கையைக் கட்டிக்கொண்டு வேடிக்கைப் பார்ப்பவர்கள் இன்னொரு ரகம். திருநங்கை கிரேஸ் பானு, முதல் ரகத்தைச் சேர்ந்தவர். பிச்சை எடுத்தாவது படிக்கச் சொன்னார் அவ்வையார். ஆனால், சாலையில் இறங்கிப் போராடியும் சட்டத்தின் உதவியோடும் இந்தியாவின் முதல் திருநங்கை பொறியாள

பெண்கள் 360: நீதி கேட்டவர்களுக்குத் தண்டனையா?

நீதி கேட்டவர்களுக்குத் தண்டனையா? 2014 முதல் 2016வரை கன்னியாஸ்திரி ஒருவரை ஜலந்தர் மறைமாவட்ட ஆயர் பிராங்கோ முல்லைக்கால் என்பவர் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார். அவருக்கு எதிராக நடவடிக்கை எடுக்க வேண்டுமென அனுபமா, ஆல்ஃபி, ஜோஸ்பின், அன்சிட்டா ஆகிய நான்கு கன்னியாஸ்திரிகள் போராடினர். ‘சேவ் அவர் சிஸ்டர்ஸ்’ என்ற பரப்புரை மூலம் அவர்கள் முன்னெடுத்த போராட்டத்தால், பிராங்கோ முல்லைக்கால் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் நீதிக்காகப் போராடிய அந்த நான்கு கன்னியாஸ்திரிகளை கடந்த வியாழன் அன்று திருச்சபை இடமாற்றம் செய்துள்ளது.