Category: மாயா பஜார்

டிங்குவிடம் கேளுங்கள்: பூநாரை ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது?

பூநாரை (ஃப்ளமிங்கோ) ஏன் ஒற்றைக் காலில் நிற்கிறது, டிங்கு? – எல்.ஆர். ஆசாத் அன்புச் செல்வன், மாதவரம், சென்னை. நல்ல கேள்வி ஆசாத். நம் உடல் செங்குத்தாக இருப்பதால், நம்மால் சில நிமிடங்கள் மட்டுமே ஒற்றைக் காலில் நிற்க முடியும். ஆனால், பூநாரை, நாரை, கொக்கு போன்ற நீர்ப்பறவைகளின் உடல் ஒற்றைக் காலில் நிற்பதற்கு ஏற்றவாறு, அமைந்திருக்கிறது. அதனால் அவற்றால் ஒற்றைக் காலில் நிற்க முடிகிறது என்று சொல்லப்பட்டுவந்தது. பிறகு பூநாரையை ஆராய்ச்சி செய்தவர்கள், உடல் வெப்பநிலையைச்

திறந்திடு சீஸேம் 24: துட்டன்காமனின் கத்தி!

ஹோவர்ட் கார்டெர், பிரிட்டனைச் சேர்ந்த தொல்பொருள் ஆய்வாளர். அவரது வாழ்நாளில் பெரும்பாலான ஆராய்ச்சிகளை எகிப்தில் மேற்கொண்டவர். 1922-ல் எகிப்தின் நைல் நதியோரம் இருக்கும் தீப்ஸ் பகுதியில் தனது ஆராய்ச்சிகளை மேற்கொண்டிருந்தார் ஹோவர்ட். சில வாரங்கள் தேடியும் எதையும் கண்டறிய இயலவில்லை. அங்கிருந்து கிளம்பலாம் என்று முடிவெடுத்தார்கள். தங்குவதற்காகப் போடப்பட்டிருந்த கூடாரங்களை எல்லாம் கலைத்துக்கொண்டிருந்தார்கள். அப்போது அங்கே தண்ணீர் சுமந்து வந்த எகிப்தியச் சிறுவன் ஒருவன், கல்  தடுக்கிக் கீழே விழுந்தான். என்ன கல் இது என்று குழுவினர்

இது எந்த நாடு? 99 – ரோஜா பள்ளத்தாக்கு

கீழே உள்ள குறிப்புகளின் உதவியுடன் அவை உணர்த்தும் நாடு எது என்பதைக் கண்டுபிடியுங்கள். 1. தென்கிழக்கு ஐரோப்பாவில் அமைந்த நாடு. 2. ருமேனியா, செர்பியா, மாசிடோனியா, கிரீஸ், துருக்கி ஆகியவை இதன் எல்லை நாடுகள். 3. 1908-ம் ஆண்டு செப்டம்பர் 22 அன்று சுதந்திரம் பெற்றது. 4. மிகப் பழமையான நாடு. 6 ஆயிரம் ஆண்டுகளாக மக்கள் இங்கே வசித்து வருகின்றனர். 5. இந்த நாட்டின் கரன்சி Lev. 6. ஆடைகள், காலணிகள், இரும்பு, எரிபொருள் போன்றவை

அன்றாட வாழ்வில் வேதியியல் 24: தனிம உலகின் சில ஆச்சரியங்கள்

பியூரெட்டுக்கு இந்த வாரம் பரீட்சைங்கிறதால, நாங்க ரெண்டு பேரும் சந்திச்சுக்கல. அதுனால ஒரு புத்தகத்துல நான் படிச்ச வேதியியல் தனிமங்களப் பத்தின சுவாரசியமான துணுக்குகளை உங்களோட பகிர்ந்துக்கறேன் – பிப்பெட் 1. தனிம வரிசை அட்டவணையில் முதலிடத்தில் உள்ள தனிமம் ஹைட்ரஜன். அதில் ஒரே ஓர் அணு மட்டுமே இருப்பதால், அது முதலிடத்தைப் பிடித்தது. ஹைட்ரஜன் மிகவும் அடர்த்தி குறைந்த தனிமமும்கூட. 2. தனிம வரிசை அட்டவணையில் இல்லாத ஒரே ஓர் ஆங்கில எழுத்து J. 3.

கதை: மந்திரப் பூசணி!

பரமன் மிகப் பெரிய பணக்காரர். அந்த ஊரில் இருந்த பெரும்பாலான நிலங்கள் அவருடையது. அவரிடம் முனியன் வேலை செய்தார். ஒரு நாள் பரமனிடம் வந்த முனியன். “ஐயா, எல்லா நிலத்திலும் உழுது விதை நட்டுவிட்டார்கள். என் நிலம் மட்டும்தான் சும்மா இருக்கிறது. சிறிது தானியம் கொடுத்தால் என் நிலத்திலும் விதைத்துவிடுவேன்” என்றார். “என் நிலத்திலேயே வேலை செய். சொந்தமாகப் பயிரிட வேண்டாம். இப்போது கஞ்சியாவது கிடைக்கிறது. சொந்தமாக விவசாயம் செய்தால் அதுவும் கிடைக்காது” என்று கோபத்துடன் சொன்னார்

இடம் பொருள் மனிதர் விலங்கு: புத்தரின் புன்னகை

நான் என்ன செய்தாலும் புத்தருக்குக் கோபமே வராது, அவரைப் போன்ற ஒரு பரம சாதுவைப் பார்க்க முடியாது என்று நீங்கள் நினைத்தால் அது உண்மையல்ல. புத்தருக்கும் கோபம் வரும். உதாரணத்துக்கு, ‘ஹாஹாஹா’ என்று நீங்கள் சத்தமாகச் சிரித்தால் புத்தருக்குப் பிடிக்காது. “இப்போது என்ன ஆகிவிட்டது என்று இப்படி ஊரே பயந்து ஓடும் அளவுக்குச் சிரிக்கிறீர்கள்?” என்று ஓர் அதட்டல் போடுவார். சிரிப்பு என்பது அமைதியாக நிகழ வேண்டும். உடல் அதிரக் கூடாது. நிலம் அதிரக் கூடாது. வாய்

சாதனை: நிலவில் இசைக்க ஆசை!

ஒரே நிகழ்ச்சியில் ஒட்டுமொத்த உலகத்தையும் ஆச்சரியப்பட வைத்துவிட்டார் சென்னையைச் சேர்ந்த லிடியன் நாதஸ்வரம். அமெரிக்காவில் தனியார் தொலைக்காட்சி நடத்திய ‘தி வேர்ல்டு பெஸ்ட்’ நிகழ்ச்சியில் இவரது இசை முதல் பரிசை வென்றது. இதன் மூலம் ‘தி வேர்ல்டு பெஸ்ட்’ என்ற பட்டத்துடன் பத்து கோடி ரூபாய் பரிசையும் பெற்றுள்ளார் லிடியன் நாதஸ்வரம்! சாலிக்கிராமத்தில் இவரது வீட்டுக்குள் நுழைந்தால் பூங்கொத்துகள், பரிசுப் பொருட்கள், சான்றிதழ்கள், இசைக் கருவிகள் என்று கொட்டிக் கிடக்கின்றன. அடுத்த நிகழ்ச்சிக்காக வெளிநாட்டுக்குக் கிளம்பிக்கொண்டிருந்த லிடியனிடம்,

கதை: உணவு எப்போது ருசிக்கும்?

குறிஞ்சிக்காட்டிலுள்ள மரப்பொந்தில் அம்மா அணிலும் குட்டி அணிலும் வசித்தன. அதே மரத்தில் வசித்த கிளி, குருவி, குட்டி அணில் மூன்றும் நண்பர்களாக இருந்தன. கிளியும் குருவியும் தங்களுக்குச் சாப்பிட என்ன கிடைத்தாலும் அதில் ஒரு பங்கை குட்டி அணிலுக்கும் கொண்டுவந்து கொடுத்தன. ஆனால், குட்டி அணிலோ சுயநலமாக இருந்தது. தனக்குக் கிடைக்கும் உணவை மரப்பொந்துக்குள் ஒளித்து வைத்துவிடும். நண்பர்கள் சென்ற பிறகு எடுத்துச் சாப்பிடும். அம்மா அணிலுக்குத் தன் குட்டியின் இந்தக் குணம் பிடிக்கவில்லை. ‘இவன் இப்படிச்