Category: வணிகம்

ஜெட் ஏர்வேஸ் டிக்கெட் புக் செய்தவர்களுக்கு உடனடியாக ரீ-ஃபண்ட் வாய்ப்பு இல்லை

புதன் இரவு முதல் ஜெட் ஏர்வேஸ் விமான சேவை நிறுவனம் தனது விமானச்சேவைகளை முற்றிலும் நிறுத்தி விட்டது. இதனால் டிக்கெட் புக் செய்த பயணிகளுக்கு ரீஃபண்ட் கிடைக்குமா என்ற கேள்வி எழுந்துள்ளது. இந்நிலையில் உடனடியாக ரீ-ஃபண்ட் வாய்ப்பில்லை என்று ஜெட் ஏர்வேஸ் தெரிவித்துள்ளது. “பயணிகள் ரத்து செய்யப்பட்ட டிக்கெட்டுகளுக்கான ரீஃபண்ட் தொகையை திரும்பப் பெற ஜெட் ஏர்வேஸ் அதனை நடைமுறைப் படுத்த வேண்டியது அவசியம். இது உடனடியாகச் சாத்தியமில்லை, விமான சேவை நிறுவனம் மீண்டும் புத்துயிர் பெற்றால்தான்

சர்வதேச வர்த்தக வளர்ச்சி சரியும்: உலக வர்த்தக அமைப்பு கணிப்பு

சர்வதேச அளவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக வர்த்தக வளர்ச்சி 2019-ம் ஆண்டில் கணிசமாகக் குறையும் என்று உலக வர்த்தக அமைப்பு (டபிள்யூடிஓ) கணித்துள்ளது. பொருளாதாரத்தில் நிலவும் ஸ்திரமற்ற நிலை காரணமாக வர்த்தக வளர்ச்சி சரியும் என்று சுட்டிக் காட்டியுள்ளது. இந்த ஆண்டு சர்வதேச வர்த்தக வளர்ச்சி 3.7 சதவீத அளவுக்கு இருக்கும் என்று முன்னர் கணித்திருந்தது. ஆனால் தற்போது வெளியான திருத்திய மதிப்பீட்டின்படி வளர்ச்சி 2.6 சதவீதமாக சரியும் என்று குறிப்பிட்டுள்ளது. 2018-ம் ஆண்டில் எட்டப்பட்ட

ஹட்சன் பசுவின் பால் அறிமுகம்

ஹட்சன் அக்ரோ புராடெக்ட்ஸ் லிமிடெட் நிறுவனம் புதிதாக ஹட்சன் பசுவின் பாலை அறிமுகம் செய்துள்ளது. பண்ணைகளில் வளர்க்கப்படும் பசுக்களின் பாலை பதப்படுத்தி பாக்கெட்டுகளில் அடைத்து விற்பனை செய்கிறது. பசும்பாலுக்கான தேவை மக்களிடையே அதிகரித்து வருவதைக் கருத்தில் கொண்டு இது அறிமுகம் செய்யப்பட்டுள்ளதாக நிறுவனத்தின் சந்தைப் பிரிவு துணைத் தலைவர் பிரசன்ன வெங்கடேஷ் தெரிவித்துள்ளார். பண்ணைகளில் வளர்க்கப்படும் பசு மாடுகளின் பாலை தனியாக சேகரித்து அவற்றை குறிப்பிட்ட வெப்ப நிலையில் கொதிக்க வைத்து அதை குளிர்விப்பதன் மூலம் அதில்

மானியம், மானியம் அல்லாத சமையல் கேஸ் சிலிண்டர் விலை அதிகரிப்பு

மானியமில்லாத சமையல் கேஸ் சிலிண்டர் ஒன்றின் விலை 42 ரூபாயும், மானியத்துடன் வழங்கப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.2.08 பைசாவும் உயர்த்தப்பட்டுள்ளது. கடந்த 3 மாதங்களாக தொடர்ந்து சமைல் கேஸ் சிலிண்டர் விலை குறைக்கப்பட்ட நிலையில், இப்போது உயர்த்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கேஸ் சந்தை விலை மீது

நட்பு நாடு அந்தஸ்தை விலக்கியதால் பாகிஸ்தானுக்கு பாதிப்பு: எல்லையில் நிற்கும் சரக்கு வாகனங்கள்

புல்வாமா தாக்குதலுக்குப் பின்னர்  பாகிஸ்தானை  முக்கிய நட்பு நாடு பட்டியலிலிருந்து இந்தியா விலகிய பிறகு வர்த்தகக ஒப்பந்தங்களும் ரத்தானதால் அட்டாரி எல்லையில் ஏராளமான சரக்கு வாகனங்கள் நிறுத்தப்பட்டுள்ளன. புல்வாமா தாக்குதல் சம்பவத்துக்கு பிறகு முக்கிய நாடு அந்தஸ்து விலக்கிக்கொள்ளப்பட்ட பிறகு பாகிஸ்தானுடன் வர்த்தக ஒப்பந்த சலுகைகள் ரத்து செய்யப்பட்டன.  முக்கிய நட்பு நாடு தகுதியை மற்றொரு நாட்டிற்கு வழங்கும் ஒரு நாடு, வரி இன்ன பிற சலுகைகள் வழங்க வேண்டும். மற்றும் வர்த்தக ஒப்பந்தங்களில் விதிவிலக்கு ஆகியவற்றை

ஜியோ பாய்ச்சல்: ஒரே மாதத்தில் 85 லட்சம் புதிய வாடிக்கையாளர்களால் ஏர்டெல், வோடபோனுக்கு இழப்பு

கடந்த டிசம்பர் மாதத்தில் மட்டும் ரிலையன்ஸ் ஜியோ 85.6 லட்சம் புதிய வாடிக்கையாளர்களைப் பெற்றுள்ளது தெரியவந்துள்ளது. மிகப்பெரிய தொலைத்தொடர்பு நிறுவனங்களான வோடபோன் ஐடியா மற்றும் பார்தி ஏர்டெல் ஆகியவை தனது வாடிக்கையாளர்களை இழந்துள்ளன. இத்தகவல் இந்திய தொலைத் தொடர்பு நிறுவனமான ட்ராய் வெளியிட்ட அறிக்கை மூலம் தெரியவந்துள்ளது. இதன்படி, ”2018-ம் ஆண்டு நவம்பர் கடைசியில் இருந்து டிசம்பர் கடைசி வரை மொத்த வாடிக்கையாளர்களின் எண்ணிக்கை 117.17 கோடியில் இருந்து 117.6 கோடியாக உயர்ந்துள்ளது. 0.36% என்ற அளவில்

‘இன்னமும் தேவை ரூ.200 கோடி’ – சொத்துக்களை விற்கிறார் அனில் அம்பானி

உச்ச நீதிமன்ற உத்தரவுபடி, எரிக்ஸன் நிறுவனத்துக்கு செலுத்த வேண்டிய தொகையில் மேலும் 200 கோடி ரூபாயை திரட்ட ஜியோ நிறுவனத்தின் பாக்கித் தொகையுடன், ரிலையன்ஸ் கம்யூனிகேஷன் நிறுவனத்தின் அசையா சொத்துக்களை விற்பனை செய்ய அனில் அம்பானி நடவடிக்கை எடுத்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. அனில் அம்பானி, எரிக்ஸன் நிறுவனத்துக்கு 450 கோடி ரூபாயை 4 வாரங்களுக்குள் செலுத்தாவிட்டால் அவருக்கு 3 மாதங்கள் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என உச்ச நீதிமன்றம்  தீர்ப்பளித்துள்ளது. மேலும் நீதிமன்ற அவமதிப்பு

கச்சா எண்ணெய் உற்பத்தி நாள் ஒன்றுக்கு 10 ஆயிரம் பீப்பாய்கள் சரிவு: தவிக்கும் வெனிசுலா; நெருக்கடி கொடுக்கும் அமெரிக்கா

தென் அமெரிக்காவில் எண்ணெய் வளம் மிகுந்த நாடுகளில் வெனிசுலாவும் ஒன்று. இங்கு அதிபராக இருந்த ஹக்கோ சாவேஸ் கடந்த 2013-ம் ஆண்டு மரணமடைந்த பின்னர் அதிபராக நிகோலஸ் மதுரோ பதவி ஏற்றார். அப்போதே அவரின் மீது விமர்சனங்கள் எழுந்தன. கடந்த மே மாதம் நடந்த நடந்த தேர்தலிலும் நிகோலஸ் மதுரோ வெற்றி பெற்று இரண்டாவது முறையாக அதிபரானார். தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் செய்து மதுரோ வென்றிருப்பதாகவும் சர்வதேச அளவில் விமர்சனங்கள் எழுந்தன. வெனிசுலா கடும் வறுமை, வேலையில்லாத்

தனது இந்திய இணையதளத்திலிருந்து விற்பனைப் பொருட்களைத் திரும்பப் பெற்றது அமேசான்: புதிய விதிமுறையின் தாக்கமா?

இந்திய புதிய இ-காமர்ஸ் முதலீட்டு விதிமுறைகளின் படி ஆன்லைன் விற்பனையாளர்கள் தாங்கள் பங்கு வைத்திருக்கும் பிற விற்பனையாளர்கள் மூலம் வர்த்தகம் செய்யக்கூடாது. இந்த புதிய விதிமுறைகள் நடைமுறையானதையடுத்து அமேசான் ஆன்லைன் வர்த்தக நிறுவனம் தன் இந்திய இணையதளத்திலிருந்து சிலபல வர்த்தகப் பொருட்களை விற்பனையிலிருந்து எடுத்து விட்டது. எக்கோ ஸ்பீக்கர்கள் உள்ளிட்ட பொருட்களை அமேசான் விற்பனையிலிருந்து எடுத்து விட்டது.  இது குறித்த விவரம் அறிந்த வட்டாரங்கள் தெரிவிப்பதென்னவெனில் கடந்த வியாழன் முதலே அமேசானின் இந்திய ஆன்லைன் அலமாரியிலிருந்து சிலபல

ஊழியர்கள் பெறும் ‘கிராஜுவிட்டி’ அளவு ரூ.30 லட்சமாக உயர்வு: பட்ஜெட்டில் சலுகை

ஒரு நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர், தனது பணிக்காலம் முடிந்து செல்லும்போது நிறுவனம் அளிக்கும் பணிக்கொடை(கிராஜுவிட்டி) அளவுக்கு ரூ.10 லட்சத்தில் இருந்து ரூ.30 லட்சமாக உயர்த்த மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், அமைப்புசாரா தொழிலில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களுக்கு மாதம் ரூ. 3ஆயிரம் ஓய்வூதியம் கிடைக்கும் வகையிலான திட்டத்தையும் பட்ஜெட்டில் நிதி அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார். மக்களவையில் மத்திய நிதி அமைச்சர் பியூஷ் கோயல் 2019-20 ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இன்று தாக்கல் செய்தார்.

சந்தா கோச்சார் மீதான குற்றம் உறுதியானது; போனஸ், பங்குகளை திரும்பப் பெற ஐசிஐசிஐ வங்கி முடிவு

சந்தா கோச்சார் விடியோகான் நிறுவனத்துக்குக் கடன் வழங்கிய விவகாரத்தில் வங்கியின் நடத்தை விதிமுறைகளை மீறியது உறுதியானதால், அவருக்கு வழங்கப்பட்ட போனஸ் மற்றும் பங்குகளைத் திரும்பப் பெற ஐசிஐசிஐ வங்கி முடிவு செய்துள்ளது. சந்தா கோச்சார், விடியோகான் நிறுவனத்துக்கு ரூ. 300 கோடி கடன் வழங்கிய விவகாரத்தை விசாரித்து வந்த நீதிபதி ஸ்ரீகிருஷ்ணா குழு, அவர் வங்கி நடத்தை விதிகளை மீறி கடன் வழங்கியதை உறுதி செய்தது. சந்தா கோச்சார் மீதானகுற்றம் உறுதியானதால் ஐசிஐசிஐவங்கி இயக்குநர் குழு, அவருடைய

‘திவால் நடைமுறைகளை அமல்படுத்த வேண்டாம்’- எஸ்பிஐ வங்கியிடம் நிறுவனங்கள் கோரிக்கை

திவால் சட்ட நடைமுறைகளுக்கு ஆளாக விரும்பவில்லை என கடன் வாங்கி திரும்பச் செலுத்தாமல் உள்ள நிறுவனங்கள் பாரத ஸ்டேட் வங்கியிடம் கூறிவருகின்றன. வங்கிகளில் கடன் வாங்கித் திருப்பிச் செலுத்தாமல் இருக்கும்நிறுவனங்களிடமிருந்து கடனைமீட்க திவால் சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்தச் சட்டம் நிறுவனத்தின் சொத்துகளைக் கையகப்படுத்தி ஏலத்தில் விற்று கடனை மீட்கும்அதிகாரம் கொண்டது. திவால் சட்ட நடைமுறைகளில் இதுவரை சில நிறுவனங்கள் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் இந்தியத் தொழிலதிபர்களை விழிப்படைய வைத்துள்ளன. பாரத ஸ்டேட் வங்கியில் கடன் வாங்கி திருப்பிச்

ரூ. 31 ஆயிரம் கோடி நிதி மோசடி: டிஎச்எப்எல் மீது அரசு விசாரணை

வீட்டுக் கடன் வழங்கும் நிறுவனமான திவான் ஹவுசிங் பைனான்ஸ் நிறுவனம் (டிஎச்எப்எல்) ரூ. 31 ஆயிரம் கோடி நிதி மோசடியில் ஈடுபட்டுள்ளதாகக் குற்றம்சாட்டப்பட்டது. இதுதொடர்பான விசாரணையை நிறுவனங்கள் விவகாரத் துறை அமைச்சகம் தொடங்கியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. டிஎச்எப்எல் நிறுவனம் வங்கிகளிடம் வாங்கியுள்ள கடன்களைத் திருப்பிச் செலுத்தாமல், தன்னிடமுள்ள நிதியை பல்வேறுஷெல் கம்பெனிகளுக்குக் கடனாக வழங்குவதன் மூலம், இந்தியா மற்றும் வெளிநாடுகளில் சொத்துகளை வாங்கி வருவதாக கோப்ரா போஸ்ட் இணையதளத்தில் செய்திகள் வெளியாயின. மேலும் அரசியல் கட்சிகளுக்கு அதிகளவிலான

மானியவிலை சமையல் கேஸ் சிலிண்டர் விலை குறைப்பு

மானியத்துடன் வழங்கப்படும், வீடுகளில் பயன்படுத்தப்படும் சமையல் கேஸ் சிலிண்டர் விலை ரூ.1.46 பைசா குறைக்கப்பட்டுள்ளதாக எண்ணெய் நிறுவனங்கள் அறிவித்துள்ளன. இந்த விலைகுறைப்பு அமலுக்கு வந்துள்ளது. சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை நிலவரத்துக்கு ஏற்ப இந்தியாவில் சமையல் கேஸ் சிலிண்டரின் விலையை எண்ணெய் நிறுவனங்கள் ஒவ்வொரு மாதமும் மாற்றி அமைத்து வருகின்றன. அந்த வகையில் கேஸ் சந்தை விலை மீது விதிக்கப்பட்ட வரியின் விளைவால் தற்போது விலை குறைந்து இருக்கிறது. அதன்படி, 14.2 கிலோ எடை கொண்ட

மத்திய பட்ஜெட்: நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல்

நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இந்த ஆண்டின் முதல் கூட்டம் என்பதால் இரு அவைகளின் கூட்டுக் கூட்டத்தில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உரையாற்றினார். இதையடுத்து, 2019-20 நிதியாண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை இடைக்கால நிதியமைச்சர் பியூஷ் கோயல் மக்களவையில் இன்று தாக்கல்செய்கிறார். இந்த அரசின் பதவிக்காலம் மே மாதத்துடன் முடிவடைவதால் முழு பட்ஜெட்டாக அல்லாமல் செலவினங்களுக்கான ஒப்புதல் பெறும் இடைக்கால பட்ஜெட்டாக தாக்கல் செய்யப்படுகிறது. பாஜக தலைமையிலான மத்திய அரசின் கடைசி பட்ஜெட் இது.

தங்கம் விலை வரலாற்றில் இல்லாத உயர்வு: ஒரே நாளில் சவரனுக்கு ரூ. 144 அதிகம்

சர்வதேச சந்தையில் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வரும் நிலையில், சென்னையில் இன்று ஆபரண தங்கத்தின் விலை பவுனுக்கு 144 ரூபாய் உயர்ந்துள்ளது. சர்வதேச அளவில் டாலரின் மதிப்பு குறைந்து வருவதால் தங்கத்தில் முதலீடு செய்வது கடந்த சில நாட்களாக அதிகரித்துள்ளது. தங்கம் மீதான முதலீடு 35 சதவீதம் வரையில் அதிகரித் துள்ளது. இதனால், சர்வதேச அளவில் தங்கத்தின் விலை தொடர்ந்து  உயர்ந்து வருகிறது. இந்தியாவிலும் எப்போதும் இல்லாத அளவுக்கு தங்கம் விலை உயர்ந்து வருகிறது. இந்தியாவில்