Category: வணிக வீதி

பிஎம்டபிள்யூ-வின் புது வரவுகள்

பிஎம்டபிள்யூ நிறுவனம் தனது மோட்டார் சைக்கிள்களை தொடர்ந்து இந்திய சந்தையில் களமிறக்கிவருகிறது. தற்போது மேலும் இரண்டு புதிய மாடலை அறிமுகப்படுத்தியுள்ளது. ஆர் 1250 ஜிஎஸ் மற்றும் ஆர் 1250 ஜிஎஸ் அட்வெஞ்சர் என்ற இந்த இரு மாடலும் தற்போது இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இவற்றின் விலை ரூ. 16.85 லட்சம் முதல் ரூ. 20.95 லட்சம் வரை நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் ஸ்டாண்டர்டு ஆர் 1250 ஜிஎஸ் மாடல் விலை ரூ. 16.85 லட்சமாகும். இதில் ஜிஎஸ் புரோ மாடல்

லேண்ட் ரோவருடன் ஒரு நாள்…

சென்னை டிராபிக்கில் ஒவ்வொரு நாளும் நூறு முறை கிளட்ச்சை மிதித்து கியரை மாற்றி ஓட்டியும், ஜிஎஸ்டி ரோட்டில் ஒரே வீச்சில் 200 கிமீ தூரம் ஓட்டியும் அலுத்துப்போன ஓட்டுநர்கள் அதிகம். அப்படிப்பட்டவர்களுக்கு ஒரு நல்ல ஆட்டோமேட்டிக் காரில் ஆஃப்ரோடு அட்வென்சர் டிரைவிங் அனுபவம் பெறும் வாய்ப்பு கிடைத்தால்? இது பலருக்கு நீண்ட நாள் கனவாகக் கூட இருக்கலாம். ஏனெனில் விலையுயர்ந்த கார்களைப் பார்ப்பதற்காக ஷோரூம் போனால்கூட கூச்சமாக இருக்குமல்லவா. அப்படியிருக்கும்போது அதுபோன்ற கார்களை ஓட்டும்  வாய்ப்பு தேடி

அலசல்: தொழிலாளர் நலனை உறுதி செய்யுமா புதிய சட்டம்?

அடுத்த ஆண்டுக்குள்  தொழில் செய்ய ஏற்ற சூழல் பட்டியலில் இந்தியா 50 இடங்களுக்குள் இருக்க வேண்டுமென இலக்கு வைத்து, அதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் எடுத்து வருகிறது மோடி அரசு. அதன் ஒரு பகுதியாக தொழிலாளர் சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவர திட்டமிட்டுள்ளது. இதற்கான வரைவு தயார் செய்யப்பட்டுள்ளது. விரைவில் இந்த சட்ட திருத்த மசோதா நிறைவேற்றப்பட உள்ளது. இதில் செய்யப்பட்டுள்ள பல்வேறு மாற்றங்கள் பெரும்பாலும் தொழிலதிபர்களுக்கு சாதகமானதாகவும், தொழிலாளர் நலனை, பாதுகாப்பை குறைக்கும்படியாகவும் இருப்பதுதான் வேதனை.  தற்போது

உங்கள் சேமிப்புக்கு அதிக வட்டி கிடைக்க…

உங்களது நிரந்தர சேமிப்புக்கு அதிகபட்ச வட்டி கிடைக்க வேண்டும் என்று நீங்கள் விரும்புவது இயல்புதான். பொதுத்துறை வங்கிகளில் நிரந்தர சேமிப்புக்கு கிடைக்கும் வட்டியை விட கூடுதலான வட்டியை ஸ்மால் ஃபைனான்ஸ் வங்கிகள் (எஸ்எப்பி) அளிக்கின்றன. இவை அளிக்கும் வட்டி விகிதத்துக்கு இணையாகவோ அல்லது சற்று கூடுதலாகவோ வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (என்பிஎப்சி) அளிக்கும். ஆனால் என்பிஎப்சி-க்களில் முதலீடு செய்வதில் கூடுதல் கவனம் தேவைப்படும். ஆனால் அந்தப் பிரச்சினை சிறிய வங்கிகளில் கிடையாது. மேலும் தற்போது என்பிஎப்சி-க்கள் மிகப்

சபாஷ் சாணக்கியா: அடங்காதே தம்பி… அடங்காதே!

வலுப்படுத்தப்பட்ட நம்பிக்கைகள் (reinforced beliefs) என்பதைப் பற்றி கேள்விப்பட்டு இருக்கிறீர்களா? இது ஓர் உளவியல் கோட்பாடு  என்று  துப்பு கொடுத்தால், கேள்வி  எளிதாகிறதா? நாம்  ஒரு பந்தைத் தூக்கி எறிகிறோம். அதை உடனே ஓடிப்போய் எடுத்து வந்து நம்மிடம்  போடும் நாயை தட்டிக் கொடுக்கிறோம், அதற்கு சாப்பிட ஏதாவது கொடுக்கிறோம் என்று வைத்துக் கொள்ளுங்கள். அந்த நாய், தான் அப்படிச் செய்வதை நாம் விரும்புகிறோம் என்பதைப் புரிந்து கொள்கிறதாம். பிறகு தொடர்ந்து அவ்வாறு நடந்து கொள்கிறதாம். அடம்

வெற்றி மொழி: இ.எம். ஃபார்ஸ்டர்

1879-ம் ஆண்டு முதல் 1970 வரை வாழ்ந்த இ. எம். ஃபார்ஸ்டர் ஆங்கில நாவல், சிறுகதை மற்றும் கட்டுரை ஆசிரியர் ஆவார். மேலும், இவர் இலக்கிய மற்றும் சமூக விமர்சகராகவும் விளங்கியுள்ளார். இவரது பெரும்பாலான நாவல்கள் வகுப்புவாத வேறுபாடு மற்றும் போலித்தனம் பற்றி எழுதப்பட்டவை. பதினாறு வெவ்வேறு ஆண்டுகளில் இவரது பெயர் இலக்கியத்திற்கான நோபல் பரிசிற்காகப் பரிந்துரை செய்யப்பட்டது. இவரது எழுத்துகளை தழுவி பல்வேறு திரைப்படங்களும் வெளிவந்துள்ளன. தனது மிகச்சிறந்த படைப்புகளின் மூலமாக அவரது காலத்தின் மிக

யு டர்ன் 03: ஆப்பிள் கம்பெனி – ஆரண்ய காண்டம்

டிசம்பர் 10, 1980. ஆப்பிள் பங்கு வெளியீடு மகத்தான வெற்றி கண்டது. 10 டாலர் மதிப்பில் பங்குகள் வெளியிடப்பட்டன. அன்றே விலை 29 டாலர்களாக உயர்ந்தது. கம்பெனியின் 300 ஊழியர்கள் மில்லியனர்கள் ஆனார்கள். 25 வயது ஸ்டீவின் மதிப்பு 265 மில்லியன். அன்று கம்ப்யூட்டர் உலகின் தனிக்காட்டு ராஜாவாக இருந்த ஐ.பி.எம். கம்பெனி, ஆப்பிளின் மகத்தான வளர்ச்சியைக் கவனித்துக்கொண்டிருந்தார்கள். அலுவலகக் கம்ப்யூட்டர்கள் மட்டுமே தயாரித்து, பெர்சனல் கம்ப்யூட்டர் துறையைக் கை நழுவ விட்டுவிட்டோமே என்று உணர்ந்தார்கள். 1981

ட்ரம்பின் பிம்பம் சிதைகிறதா?

இந்தியாவை வல்லராசாக்கியே தீருவேன் என்கிறார்கள் நம் அரசியல்வாதிகள். ஆனால், இரண்டு பெரிய வல்லரசு நாடுகளே இன்று பெரும் தள்ளாட்டத்தில்தான் இருக்கின்றன. ஒருபக்கம் பிரிட்டன் பிரதமர் தெரசா மே பிரெக்சிட் ஒப்பந்தத்தை திட்டமிட்டபடி செயல்படுத்த முடியாமல் தோல்வியடைந்து இருக்கிறார். மறுபக்கம் அமெரிக்க அரசாங்கமே ஒரு மாத காலமாக செயல்படாமல் வேலை நிறுத்தத்தில் இருக்கிறது. இதற்குமுன் பலமுறை அமெரிக்க அரசு வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டிருக்கிறது என்றாலும், 30 நாட்களுக்கும் மேல் வேலை நிறுத்தம் நடப்பது வரலாற்றிலேயே இதுதான் முதல்முறை. பெடரல்

மாற்றி யோசிக்கும் ‘மில்லினியல்’ தலைமுறை

காலம் மாற புதிய தலை முறைனயினரின் கனவுகளும் மாறுகிறது. இலக்குகளும் முடிவுகளும் கூட மாறுகிறது. அப்படித்தான் இன்றைய மில்லினியல் தலைமுறையினர் தங்களின் முதலீட்டு முடிவுகளிலும், தங்களின் பெற்றோர்களைப் போல அல்லாமல், மாற்றி யோசிக்க ஆரம்பித்துள்ளனர். இப்போதுள்ள பெரும்பாலான பெற்றோர்களுக்கு, தபால் சேமிப்பு, நிரந்தர வைப்பு, தங்கம் கொஞ்சம் பெரிய அளவில் என்றால் ரியல் எஸ்டேட் போன்ற முதலீடு திட்டங்கள்தான் தெரியும். ஆனால், இப்போதைய தலைமுறை வழக்கமான முதலீடு மனோபாவத்திலிருந்து மீண்டும் புதிய முதலீடுகளைத் துணிந்து செய்யத் தொடங்கியுள்ளனர்.