Category: விளையாட்டு

வரலாற்றிலேயே மிக அதிகம்: ஐசிசி உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசு அறிவிப்பு

இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்க இருக்கும் ஐசிசி உலகக் கோப்பைப் போட்டிக்கான பரிசுத் தொகை இதுவரை உலகக் கோப்பை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. உலகக் கோப்பைப் போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக ரூ.70 கோடியே 12 லட்சத்து82 ஆயிரம்(ஒரு கோடி அமெரிக்க டாலர்) அறிவிக்கப்பட்டது. இதில் இருந்து வெற்றி பெறும் அணி, 2-வதாக வரும் அணி ஆகியவற்றுக்கு பிரித்து அளிக்கப்படும். இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

2011 உலகக்கோப்பையை வென்ற தோனி தலைமை இந்திய அணியை விட 2019 அணி சூப்பர்:  பாடி அப்டன் பேட்டி

2011-ல் தோனி தலைமையில் இந்திய அணி 2வது முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்று சாம்பியன்களாகி சாதனை படைத்தது. அந்த அணியை ஒப்பிடும்போது தற்போதைய அணி உண்மையில் காகிதத்தில்தான் பலமான அணியாகத் தெரிகிறது என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில் 2011 உலகக்கோப்பை இந்திய அணியை விட தற்போதைய கோலி தலைமை உலகக்கோப்பை இந்திய அணி பிரமாதம் என்கிறார் முன்னாள் உடல்/மனோதத்துவ பயிற்சியாளர் பேடி அப்டன். ஆனால் இந்த உலகக்கோப்பையிலும் இந்திய அணியின் ஒரே அம்சம், பலமான அம்சம்

சச்சின் பக்கத்துல நெருங்க முடியுமா?: உலகக் கோப்பையில் டாப்-5 ‘ரன் ஹிட்டர்ஸ்’

உலகக் கோப்பைப் போட்டிகளில் அதிக ரன்களைச் சேர்ந்த பேட்ஸ்மேன்கள் பட்டியிலில் இந்தியாவின் மாஸ்டர் பிளாஸ்டர் சச்சின் டெண்டுல்கர் சாதனையின் பக்கம் எந்த வீரரும் நெருங்க முடியாத அளவில் இருக்கின்றனர். இங்கிலாந்தில் 12-வது உலகக் கோப்பைப் போட்டி வரும் 30-ம் தேதி முதல் ஜூலை 14-ம் தேதிவரை நடக்கிறது. 11 மைதானங்களில் 46 ஆட்டங்கள் நடக்கின்றன. 10 அணிகள் பங்கேற்கும் இந்த போட்டி ரவுண்ட்ராபின் அடிப்படையில் நடத்தப்படுகிறது. உலகக் கோப்பைப் போட்டியில் அதிக ரன்களை அடித்த பேட்ஸ்மேன் எனும்

2019- உலகக் கோப்பையில் இடம்பெற்றுள்ள இந்திய, பாக். வர்ணனையாளர்கள் யார்?- ஐசிசி வெளியீடு

இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ள உலகக் கோப்பைப் போட்டியில் வர்ணனைப் பணியில் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள 24 முன்னாள் வீரர்களின் பெயரை சர்வதேச கிரிக்கெட் கவுன்சில்(ஐசிசி) இன்று வெளியிட்டுள்ளது. இதில் இந்தியர்கள் மூன்று பேரும், கடந்த உலகக் கோப்பைப் போட்டியில் ஆஸ்திரேலிய அணிக்கு கேப்டனாக இருந்த மைக்கேல் கிளார்க்கும் புதிதாக இடம் பெற்றுள்ளனர். மேலும், லண்டன் எம்சிசி கிளப்பின் தலைவராக நியமிக்கப்பட்ட இலங்கை முன்னாள் கேப்டன் சங்கக்கரா, பாகிஸ்தான் முன்னாள் கேப்டன் வாசிம் அக்ரம், வங்கதேச

ஒரு பந்து… ஒரே பந்தில் புகழ் பெற்ற பவுலர் பல்வீந்தர் சிங் சாந்து

இந்திய அணிக்காக 8 டெஸ்ட் மற்றும் 22 ஒருநாள் போட்டிகளில் மட்டுமே ஆடிய ஸ்விங் பவுலர் பல்வீந்தர் சிங் சாந்து தன் வாழ்க்கையில் ஒரேயொரு பந்துக்காக நினைவில் வைத்துக் கொள்ளப்படுபவர் என்றால் அது மிகையாகாது. ஆனால் அந்த உலகக்கோப்பையில் பல்வீந்தர் சிங் சாந்து அதனை முதல் முறையாகச் செய்யவில்லை. 1979 உலகக்கோப்பை சாம்பியன் கிளைவ் லாய்ட் தலைமை மே.இ.தீவுகளுக்கு எதிரான மான்செஸ்டரில் நடைபெற்ற 1983 உலகக்கோப்பை, இந்திய அணியின் முதல் போட்டியிலேயே சாந்து அதனைச் செய்தார். அது

உலகக்கோப்பையில் மறக்கமுடியாத சர்ச்சைகள்: ஒருபந்தில் 22 ரன்கள், பாப் உல்மர் மர்ம மரணம்

எந்த ஒரு போட்டித்தொடர் முடிவடையும் போது இதில் சில சலசலப்புகள், சர்ச்சைகள் இருப்பது இயல்புதான். அது ஐசிசி நடத்திய உலகக்கோப்பைப் போட்டியும் விதிவிலக்கல்ல. ஒவ்வொரு உலகக் கோப்பைப் போட்டியிலும் ஒவ்வொரு விதமான சர்ச்சைகள் நடந்துள்ளன, அடுத்த சில மாதங்களுக்கு விமர்சிக்கப்பட்டு, விவாதிக்கப்பட்டு அது பதிவு செய்யப்பட்டன. அந்த சர்ச்சைகள் அணிகளின் தோல்விக்கு காரணமாகின, இழப்பை ஏற்படுத்தின. சிலநேரங்களில் ரசிகர்கள் செய்த கலாட்டாக்கள் கூட அணியின் வெற்றி, தோல்விகளை நிர்ணயித்தன. இந்த சர்ச்சைகள் நடக்காமல் இருந்திருந்தால் பாதிக்கப்பட்ட அணிகள்

மார்க் உட் பந்தில் அடிவாங்கிய இமாம் உல் ஹக்; அலறித் துடித்து வெளியேறினார்: உ.கோப்பை வாய்ப்பு சிக்கலில்

நாட்டிங்காமில் இன்று (வெள்ளி) பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை தொடரின் 4வது போட்டியில் எதிர்த்து ஆடிவருகிறது. இதில் டாஸ் வென்ற கேப்டன் பட்லர் முதலில் பாகிஸ்தானை பேட் செய்ய அழைத்தார். இயன் மோர்கனுகு ஒரு போட்டி விளையாடத் தடை விதிக்கப்பட்டதால் பட்லர் கேப்டன் பொறுப்பு ஏற்றுள்ளார். இதனையடுத்து பாகிஸ்தான் பேட்டிங் செய்ய இறங்கியது, இதில் தொடக்க வீரராக கடந்த போட்டியில் 151 ரன்கள் விளாசிய இமாம் உல் ஹக் இறங்கினார். 4வது ஓவரை மார்க் உட் வீசிய

2019 உலகக்கோப்பை கிரிக்கெட்:  அதிகாரபூர்வ பாடலை வெளியிட்டது ஐசிசி

இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்க உள்ள ஐசிசி உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான அதிகாரபூர்வ பாடலை ஐசிசி இன்று வெளியிட்டது. “ஸ்டான்ட் பை” (“Stand By”)என்ற தலைப்பில் இங்கிலாந்தின் புகழ்பெற்ற பாப் இசைப்பாடகர் லாரின் என்பவரால் இந்த அதிகாரபூர்வ பாடல் பாடப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் கோடைக் காலத்தில் நடக்கும் கிரிக்கெட் தொடர்பான சம்பவங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த பாடல் எடுக்கப்பட்டுள்ளது. உலகக் கோப்பை கிரிக்கெட் தூதர் பிளிண்ட்டாப், பாடகர் லாரின் ஆகியோர் கலந்து ஆலோசித்து இந்த பாடல்

‘இறங்கிய 2வது பந்தில் சிக்ஸ் அடிக்கும் உந்துதல் இன்னும் தோனியிடம் உள்ளது; அணி நிர்வாகம்தான் அவருக்கு சுதந்திரம் அளிக்க வேண்டும்’

மகேந்திர சிங் தோனியின் சிக்ஸ் அடிக்கும் திறன், எடுத்த எடுப்பிலேயே சிக்ஸ் அடிக்கும் உந்துதல் தோனியிடம் இன்னும் உள்ளது, அணி நிர்வாகம் அவரை தன் முழு பேட்டிங் சுதந்திரத்தைப் பயன்படுத்த அனுமதி அளிக்க வேண்டும் என்று ஹர்பஜன் சிங் தெரிவித்துள்ளார். இப்போதெல்லாம் தோனி மெதுவாகத் தொடங்கி பிறகு ஆட்டத்தை கடைசி வரை இட்டுச் சென்று அடித்து ஆடி வெற்றி பெறச் செய்கிறார், இது சிலவேளைகளில் வெற்றியாகவும் பலதருணங்களில் முடியாமலும் போகிறது. குறைந்த இலக்கென்றால் அவரது உத்தி சரி,

மும்பையுடன் இறுதிப் போட்டியில் மோதுவது யார்?: சிஎஸ்கே – டெல்லி இன்று பலப்பரீட்சை

ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடரின் 2-வது தகுதி சுற்று ஆட்டத்தில் டெல்லி கேபிடல்ஸ், சென்னை சூப்பர் கிங்ஸ் (சிஎஸ்கே) அணிகள் இன்று விசாகப்பட்டினத்தில் மோதுகின்றன. ஐபிஎல் டி 20 கிரிக்கெட் தொடர் பரபரப்பான வகையில் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. தகுதி சுற்று 1-ல் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை 6 விக்கெட்கள் வித்தியாசத்தில் வீழ்த்திய மும்பை இந்தியன்ஸ் அணி 12-ம் தேதி நடைபெறும் இறுதிப் போட்டிக்கு முதல் அணியாக தகுதி பெற்றது. இந்நிலையில் மும்பை இந்தியன்ஸ்

பிரிட்டீஷார் அல்லாத முதல் எம்.சி.சி.  ‘பிரெசிடென்ட்’ : நியமனம் குறித்து குமார் சங்கக்காரா பெருமிதம்

முன்னாள் இலங்கை அணியின் கேப்டனும் விக்கெட் கீப்பருமான குமார் சங்கக்காரா பெருமைக்குரிய எம்.சி.சி என்று அழைக்கப்படும் மெர்லிபோன் கிரிக்கெட் சங்கத்தின் தலைவராக (பிரெசிடென்ட்) நியமிக்கப்பட்டுள்ளார். அக்டோபர் மாதம் 1ம் தேதி முதல் இவர் ஓராண்டுக்கு இந்த மதிப்புக்குரிய பதவியில் நீடிப்பார். 41 வயது குமார் சங்கக்காரா எம்.சி.சியின் கவுரவ ஆயுள் உறுப்பினராக இருக்கிறார்.  கடந்த 7 ஆண்டுகாலமாக செல்வாக்கு மிக்க எம்.சி.சியில் அவர் கவுரவர் ஆயுள் உறுப்பினராகச் செயல்பட்டு வருகிறார். இது குறித்து சங்கக்காரா கூறும் போது,

கிரிக்கெட் உலகை ஸ்தம்பிக்கச் செய்யும் வெளியீடு: ஷாகித் அஃப்ரீடியின் உண்மையான வயது என்ன? அவரே தன் சுயசரிதையில் வெளியிட்ட தகவலால் அதிர்ச்சி

பாகிஸ்தான் கிரிக்கெட் ஆல்ரவுண்டர் ஷாகித் அஃப்ரீடியின் வயது கிரிக்கெட் உலகில் ஒரு புரியாத புதிராகவே இருந்து வந்துள்ளது. இந்நிலையில் அவர் தனது ‘கேம் சேஞ்சர்’ என்ற சுயசரிதை நூலில் தன் உண்மையான பிறந்த ஆண்டை வெளியிட்டுள்ளது பரபரப்பாகியுள்ளது. இந்த சுயசரிதை நூலில் ஒரு அத்தியாயத்தில் அவர் தான் பாகிஸ்தான் சீனியர் அணிக்குத் தேர்வு செய்யப்பட்டடு 1996ம் ஆண்டு என்று குறிப்பிட்டுள்ளார்.அதில் தான் 1975ம் ஆண்டு பிறந்ததாகக் குறிப்பிட்டுள்ளார். ஆனால் 1975ம் ஆண்டு எந்த மாதம், எந்த தேதி

ஓய்வு பெறுகிறாரா தோனி? சுரேஷ் ரெய்னா சூசகம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தோனி இல்லையென்றால் ஒன்றுமில்லாதது போல் தெரிகிறது, அவர் இல்லையென்றால் தோற்கிறது, அவர் ஆடினால் வெற்றி பெறுகிறது காரணம் டி20 கிரிக்கெட்டின் தாத்பரியங்கள் தோனிக்கு முழுதும் அத்துப்படி. எப்போது இறங்க வேண்டும், எப்போது அடிக்க வேண்டும், எப்போது நிதானிக்க வேண்டு, எந்த பவுலரை அடித்து ஆட வேண்டும், எவரிடம் ரிஸ்க் எடுக்கக் கூடாது என்பதையும் அதே வேளையில் பிட்ச் உள்ளிட்டவைகளை சரியாகக் கணித்து டாஸில் முடிவுகளை எடுப்பதும் பந்து வீச்சு மாற்றம், களவியூகம்,

‘தோனி இல்லாவிட்டால் சிஎஸ்கே நிலைமை கஷ்டம்தான்’: ரோஹித் சர்மா வெளிப்படை

தோனி இல்லாமல் விளையாடும் சிஎஸ்கே அணியால் ரன்களை சேஸிங் செய்வது மிகக்கடினம்தான் என்று மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ரோஹித் சர்மா வெளிப்படையாகத் தெரிவித்தார். சென்னை சேப்பாக்கத்தில் ஐபிஎல் டி20 போட்டியின் 44-வது லீக் ஆட்டம் நடந்தது. இதில் முதலில் பேட் செய்த மும்பை இந்தியன்ஸ் அணி 4 விக்கெட் இழப்புக்கு 155 ரன்கள் சேர்த்தது. 156 ரன்கள் இலக்கை துரத்திய சிஎஸ்கே அணி 17.4 ஓவர்களில் 109 ரன்களுக்கு ஆட்டமிழந்து 46 ரன்கள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தது.

ஆடவர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட் போட்டியில் முதல் முறையாக பெண் களநடுவர்: வரலாறு படைக்கிறார் கிளைர் போலோசக்

ஆடவர் ஒருநாள் சர்வதேச போட்டியில் முதல் முறையாக களநடுவராக கிளைர் போலோசக் என்ற ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த பெண் நடுவர் பணியாற்றி வரலாறு படைத்துள்ளார். சனிக்கிழமை நடைபெறும் ஐசிசி உலக கிரிக்கெட் லீக் டிவிஷன் 2 ஒருநாள் போட்டித் தொடர் இறுதிப் போட்டியில் போலோசக் நடுவராகப் பணியாற்றி வரலாறு படைக்கிறார். 31 வயது ஆஸ்திரேலியரான கிளைர் போலோசக் இதற்கு முன்பாக மகளிர் ஒருநாள் சர்வதேச கிரிக்கெட்டில் 15 போட்டிகளில் நடுவராகப் பணியாற்றியுள்ளார். முதலில் ஆஸ்திரேலியா, தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான

6 தொடர் தோல்விகள் என்றால் கேப்டன்சி பற்றி கேள்வி எழத்தான் செய்யும்: தினேஷ் கார்த்திக் வருத்தம்

6 தொடர் தோல்விகளை அடுத்து நடப்பு ஐபிஎல் தொடரில் தினேஷ் கார்த்திக் கேப்டன்சி செய்யும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பிளே ஆஃப் சுற்று வாய்ப்பு ஏறக்குறைய குறைந்து விட்ட நிலையில் அணியின் நிலை பற்றி தினேஷ் கார்த்திக் பேட்டி அளித்துள்ளார். “கண்டிப்பாக! ஆட்டத்தின் முடிவுகள் அணிக்குச் சாதகமாக இல்லாது போகும்போது கேப்டன்சி குறித்த கேள்விகள் எழவே செய்யும். ஆனால் ஓர் அணியாக நாங்கள் நிறைய விஷயங்களைச் சரியாகச் செய்யவே விரும்புகிறோம். என் பணி அணியை முன்னின்று