Category: வெற்றிக் கொடி

வேலை வேண்டுமா? – கைத்தறித் துறையில் பணிவேலை வேண்டுமா?

தமிழக அரசின் கைத்தறி மற்றும் ஜவுளித்துறையில் முதுநிலைத் தொழில்நுட்ப உதவியாளர், இளநிலைத் தொழில்நுட்ப உதவியாளர் பதவிகளில் 19 காலியிடங்கள் டி.என்.பி.எஸ்.சி. போட்டித் தேர்வு மூலம் நிரப்பப்பட உள்ளன. தகுதி முதுநிலை உதவியாளர்: பி.எஸ்சி. (ஜவுளித் தொழில்நுட்பம்) பட்டம் பெற்றிருக்க வேண்டும். அல்லது 3 ஆண்டு பணி அனுபவத்துடன் கைத்தறித் தொழில்நுட்பம் அல்லது ஜவுளித் தொழில்நுட்பம் பாடப் பிரிவில் முதல் வகுப்பில் டிப்ளமா முடித்திருக்க வேண்டும். வயது வரம்பு: பொதுப்பிரிவினருக்கு 30. இட ஒதுக்கீட்டுப் பிரிவினருக்கு வயது வரம்பு

இதிகாசம் அறிவியலாகுமா?

“எல்லாவற்றையும் குறித்த சரியான உண்மை எனக்குத் தெரியும் என்று எவரொருவர் தம்பட்டம் அடித்துக்கொள்கிறாரோ, சந்தேகத்துக்கே இடமின்றி அவர் சந்தேகத்துக்குரியவர்” என்று அறிவியல்பூர்வமான சிந்தனைக்கு எதிரானவர்களைக் கேலியாக விமர்சித்தவர் நோபல் பரிசு பெற்ற தத்துவ அறிஞர் பெர்ட்ரண்டு ரசல்.  1931-ல் அவருடைய புத்தகம் ‘தி சயின்டிஃபிக் அவுட்லுக்’ (The Scientific Outlook) வெளியானது. இந்தப் புத்தகத்தில் ‘Characteristics of the Scientific Method’ என்ற அத்தியாயத்தில் ஒரு நிகழ்வை அறிவியல் கோட்பாடாகக் கருத வேண்டுமானால் சோதனைக்கு உட்படுத்துதல், நிரூபணங்களைத்

இயர்புக் 2019: ஓர் அட்சய பாத்திரம்

பொதுவாக ஆங்கிலத்தில் ஆண்டு முழுவதும் நடக்கும் விவரங்களை எல்லாம் தொகுத்து ‘இயர் புக்’  ஆக  வழங்கும்போது ஆங்கிலம் தெரிந்த மாணவர்கள்  அவற்றைப் பயன்படுத்துவார்கள். ஆனால், அவற்றில்  தமிழ்நாடு குறித்த செய்திகள் ஆங்காங்கே தூவப்பட்டிருக்குமே  தவிர, அதுவே முழுமையாக இடம்பெறுவது இல்லை. அந்தப் புத்தகங்களைக் கொண்டு தமிழ்நாட்டில் நடக்கும் போட்டித் தேர்வுகளுக்குத் தயார் செய்வது  கடினம்.  இதனால் தமிழில் அதுபோன்ற  ‘இயர் புக்’ எப்போது வரும் என்று நான் ஏங்கியது உண்டு. அதைத் தீர்க்கும் வகையில் 768 பக்கங்களில் 

இந்திய அறிவியல் மாநாட்டுக் கண்காட்சி: ராணுவ ரோபோவும் செரிக்கும் கரண்டியும்

ஜலந்தரில் நிறைவடைந்த 106-வது இந்திய அறிவியல் மாநாட்டில், ‘இந்தியாவின் பெருமை’ என்ற தலைப்பில் அமைக்கப்பட்டிருந்த இந்திய அறிவியல் படைப்புகளின் கண்காட்சி அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது. டி.ஆர்.டி.ஓ., இஸ்ரோ, சி.எஸ்.ஐ.ஆர்., இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில், அறிவியல் தொழில்நுட்பத் துறை, அணுசக்தித் துறை, வேளாண்மை ஆராய்ச்சி கவுன்சில் ஆகிய இந்திய அறிவியல் நிறுவனங்கள் தங்கள் படைப்புகளை அழகிய அரங்குகளில் காட்சிப்படுத்தி இருந்தன. ஆர்வத்துடன் வந்த கோவை மாணவிகள் பஞ்சாபில் உள்ள ஜலந்தர் லவ்லி புரொஃபஷனல் பல்கலைக்கழகத்தில் மாநாடு நடந்த

சேதி தெரியுமா: 33-வது மாவட்டம் கள்ளக்குறிச்சி

ஜனவரி 8: தமிழ்நாட்டின் 33-வது மாவட்டமாகக் கள்ளக்குறிச்சியை முதல்வர் எடப்பாடி கே. பழனிசாமி அறிவித்தார். மாநிலத்தின் பெரிய மாவட்டமான விழுப்புரத்திலிருந்து பிரிக்கப்பட்டு, கள்ளக்குறிச்சி தனி மாவட்டமாக அறிவிக்கப்பட்டிருக்கிறது. சட்ட அமைச்சர் சி.வி. சண்முகம், உளுந்தூர்பேட்டை சட்டமன்ற உறுப்பினர் குமரகுரு, உள்ளூர் மக்களின் கோரிக்கையை ஏற்று இந்தப் புதிய மாவட்டம் உருவாக்கப்பட்டதாக முதல்வர் தெரிவித்தார். ஸ்டெர்லைட் ஆலைக்குத் தடை இல்லை ஜனவரி 8: ஸ்டெர்லைட் ஆலையை மீண்டும் திறப்பதற்கு அனுமதியளித்த தேசியப் பசுமைத் தீர்ப்பாயத்தின் உத்தரவுக்கு இடைக்காலத் தடைவிதிக்க

தேர்வுக்குத் தயாரா? – வீடியோவில் இருந்தும் குறிப்பெடுக்கலாம்! (பிளஸ் 2 உயிரியல் )

பொதுத் தேர்வுக்குத் தயாராகும்போதே நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்புகளையும் மேற்கொள்ளுதல் பிளஸ் 2 மாணவர்களுக்கு நல்லது. அந்த வகையில், தாவரவியல், விலங்கியல் பாடங்களை உள்ளடக்கிய உயிரியலுக்கான வழிகாட்டுதல் இதோ: ”பொதுத் தேர்வுக்கான பாடங்களில் ஒன்றாக நுழைவுத் தேர்வுக்கான தயாரிப்பையும் சேர்த்துக்கொள்வதும் அதற்காக அன்றாடம் ஓரிரு மணி நேரம் ஒதுக்குவதும் அவசியம்” என்கிறார் திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவில் அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளி முதுகலை விலங்கியல் ஆசிரியை போ.ப்ரீவா. “பாடங்களைப் புரிந்து படிப்பதுடன் ஒவ்வொரு வினாவில் இருந்தும் கேட்கப்பட்ட வாய்ப்புள்ள வேறு

ஆங்கில​ம் அறிவோமே 248: சோதனை மேல் சோதனை முயற்சி!

கேட்டாரே ஒரு கேள்வி “Butter இல்லாத ஒன்றுக்கு buttermilk என்ற பெயர் ஏன்? Sweet எதுவும் வைக்கப்படாத அல்லது இனிக்காத ஒன்றை sweetbread என்று அழைப்பது ஏன்?”. நன்றாய்க் கேட்டீர்கள் நண்பரே. பதிலுக்கு “வாழை மரம் என்று மரமல்லாத ஒன்றை நாம் குறிப்பிடுவது ஏன்? Dry-cleaning என்பது உண்மையில் உலர் சலவை இல்லையே!” என்று கேட்கத் தோன்றுகிறது. இந்த இடத்தில் பொருத்தமில்லாத பெயர்கொண்ட வேறொன்றையும் பார்க்கலாம். “Ten-gallon hat-ல் எவ்வளவு தண்ணீர் நிரப்பலாம்?” என்று கேட்டால் “பத்து

அந்த நாள் 16: வஞ்சியின் ஆற்றங்கரையில் விளைந்த நெல்

காலம்: பொ.ஆ. 100-400, வஞ்சி “பாண்டிய நாடு, சோழ நாடு, பல்லவ நாடு எனப் பழந்தமிழகத்தின் மூன்று நாடுகளுக்கும் போய் வந்துவிட்டோம். இன்னும் மிச்சமிருப்பது சேர நாடு மட்டும்தான் குழலி” “ஆமா செழியன், இப்ப நாம நேரா சேர நாட்டுக்குப் போயிடுவோம்.” “சேர நாட்டுல எந்த ஊருக்குப் போறோம்?” “போர் தொடுத்துப் போகும் வீரர்கள் வஞ்சிப் பூவை அணிவது வழக்கம்னு படிச்சிருப்பே. வஞ்சிங்கிறது வேறொண்ணும் இல்ல, ஆற்றுப் பூவரச மரம்தான். இப்போ நாம வஞ்சி மாநகருக்குத்தான் போறோம்”

பெண்களுக்கு ஐ.ஏ.எஸ். எட்டாக் கனியா?

ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., உள்ளிட்ட உயர் பதவிகளை அடையும் கனவோடு ஆண்டுதோறும் கிட்டத்தட்ட 9 லட்சம் பேர் விண்ணப்பிக்கிறார்கள். இவர்களில் பெண்களின் பங்கேற்பு குறைவாகவே காணப்படுகிறது. தேர்வுக்கு விண்ணப்பிக்கும் மொத்த விண்ணப்பதாரர்களுள் பெண்களின் எண்ணிக்கை 30 சதவீதத்தைக்கூடத் தாண்டவில்லை என்பதே நிதர்சனம். இவர்களில் 40 சதவீதம் பெண்களே முதல்நிலைத் தேர்வை எழுதுகிறார்கள். இவர்களிலும் 2-3 சதவீதம் பெண்களே முதன்மைத் தேர்வுக்குத் தேர்வாகின்றனர். நேர்முகத் தேர்வை வென்று இறுதிப் பட்டியலில் இடம்பெறும் பெண்களின் எண்ணிக்கையானது அறிவிக்கப்பட்ட காலிப் பணியிடங்களில் நான்கில்

புதிய கல்வி நூல்கள்

பாடப் புத்தகங்களைத் தாண்டி மாணவர்கள் ரசித்து வாசிக்கக்கூடிய பலவிதமான புத்தகங்கள் இருக்கின்றன. கல்வி குறித்து அண்மையில் வெளியான நூல்களில் குறிப்பிடத்தகுந்தவை: தமிழைத் தேடிய தந்தை ஓர் ஆங்கில ஆசிரியருக்குத் தன்னுடைய மகள் ஓர் தமிழ்வழிப் பள்ளியில் படிக்க வேண்டும் என்ற கனவு. அதற்காக சென்னையின் வீதிகள்தோறும் அலைந்து திறந்து தன்னுடைய மகள் ஈரோடையை (பெரியாரின் ஊர் நினைவாக வைத்த பெயர்) தமிழ்வழிப் பள்ளியில் பெரும்பாடுபட்டுச் சேர்த்த வாழ்க்கை அனுபவத்தின் தொகுப்பே, ‘தமிழ்வழிப் பள்ளி தேடிய ஓர் அப்பாவின்

இந்தியாவின் ‘முதல்’ வெற்றிகள்

ஆஸ்திரேலிய மண்ணில் எழுபத்தியொரு ஆண்டு கால காத்திருத்தலுக்கு விடை கொடுத்திருக்கிறது இந்திய டெஸ்ட் கிரிக்கெட் அணி. ஆஸ்திரேலியாவுக்கு எதிராக அந்நாட்டு மண்ணில் டெஸ்ட் தொடரில் முதன்முதலாக வெற்றி பெற்று புதிய அத்தியாயத்தைப் படைத்திருக்கிறது. அந்நிய மண்ணில் இந்திய டெஸ்ட் கிரிக்கெட்டின் சில வரலாற்று பதிவுகள்: > டெஸ்ட் விளையாட 1932-ல் அங்கீகாரம் பெற்ற இந்திய அணி முதன் முறையாக ஆஸ்திரேலியாவில் 1947-48-ல்தான் விளையாடியது. > இதுவரை 12 முறை ஆஸ்திரேலியா சென்றிருக்கிற இந்திய அணி, 8 முறை