Category: ஹாலிவுட்

திருமணமான 4 நாட்களிலேயே 4-வது மனைவியை விவாகரத்து செய்யும் நடிகர் நிகோலஸ் கேஜ்

ஹாலிவுட் நடிகர் நிகோலஸ் கேஜ், தனது நான்காவது மனைவியை, திருமணமான நான்காவது நாளிலேயே விவாகரத்து செய்ய முடிவெடுத்துள்ளார். இதற்கு அவரது மனைவி எய்ர்கா கோய்கியூம் சம்மதம் தெரிவித்துள்ளார். கடந்த மார்ச் 23-ம் தேதி, 35 வயதான கோயிகியை 55 வயதான நிகோலஸ் கேஜ் திருமணம் செய்துகொண்டார். ஒப்பனைக் கலைஞரான கோய்கியை திருமணம் செய்யும் முன், இருவரும் அளவுக்கதிகமாக குடித்து போதையில் இருந்ததாகவும், என்ன நடக்கிறது என்பதை சரியாகப் புரிந்து கொள்ளாமலேயே திருமணம் செய்து கொண்டதாகவும் கேஜ் விவாகரத்துக்கான

தானோஸின் சொடுக்கால் மாயமாய் மறையும் கூகுள் தேடல்கள்

‘அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்’ திரைப்படத்துக்காக மார்வெல் நிறுவனம் கூகுளில் வித்தியாசமான ப்ரமோஷன் செய்துள்ளது. 2008-ம் ஆண்டு தொடங்கிய மார்வல் சினிமாட்டிக் உலகத்தின் கதை, ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்துடன் முடிகிறது. கடந்த வருடம் ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் மூன்றாம் பாகமான ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ வெளியாகி, 2 பில்லியன் டாலர் வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தொடர்ச்சியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ நேற்று (ஏப்ரல் 26) வெளியானது. ராபர்ட் டவுனி ஜூனியர், க்ரிஸ் எவான்ஸ், மார்க் ருஃப்பாலோ, ஸ்கார்லெட்

இந்தியாவில் வசூல் சாதனையை நோக்கி ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ – வர்த்தக நிபுணர்கள் கணிப்பு

2008-ம் ஆண்டு தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின் கதை, ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்துடன் முடிந்துள்ளது. கடந்த வருடம் ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் மூன்றாம் பாகமான ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ வெளியாகி, 2 பில்லியன் டாலர் வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தொடர்ச்சியான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ நேற்று (ஏப்ரல் 26) வெளியானது. ராபர்ட் டவுனி ஜூனியர், க்ரிஸ் எவான்ஸ், மார்க் ருஃப்பாலோ, ஸ்கார்லெட் ஜொஹான்ஸன் நடித்துள்ள இப்படத்தை, ரூஸோ ப்ரதர்ஸ் இயக்கியுள்ளனர். மார்வெல் சினிமாட்டிக் யுனிவர்ஸின்

உலக அளவில் 305 மில்லியன் டாலர்கள்; இந்தியாவில் ரூ. 53.10 கோடி: முதல் நாள் வசூல் சாதனையில் ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’

உலக அளவில் 305 மில்லியன் டாலர்களும், இந்தியளவில் 53.10 கோடி ரூபாயும் வசூலித்து முதல் நாளிலேயே  சாதனை புரிந்துள்ளது ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படம். 2008-ம் ஆண்டு தொடங்கிய மார்வெல் சினிமாட்டிக் உலகத்தின் கதை, ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ திரைப்படத்துடன் முடிகிறது. கடந்த வருடம் ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் மூன்றாம் பாகமான ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிட்டி வார்’ வெளியாகி, 2 பில்லியன் டாலர்வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இதன் அடுத்த பாகமான ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ நேற்று (ஏப்ரல் 26) வெளியானது. ராபர்ட்

சென்னையில் ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ வசூலை முறியடித்த ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’

‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம்’ படத்தின் முதல் நாள் வசூல், ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படங்களின் வசூலைத் தாண்டியது. 2019-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்தே தமிழ்த் திரையுலகில் வெளியான பல படங்கள் மக்களிடையே நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றன. இதனால், விநியோகஸ்தர்களும் பெரும் மகிழ்ச்சியில் உள்ளனர். இந்த ஆண்டு தொடக்கத்தில் வெளியான ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ படங்கள், வசூலை வாரிக் குவித்தன. ஆனால், தொடர் ஓட்டத்தில் தமிழகத்தில் ‘விஸ்வாசம்’ படத்தின் வசூலே அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் ‘பேட்ட’ 1.12 கோடி

ரசிகர்களைச் சந்திக்க இந்தியா வரும் அவெஞ்சர்ஸ் இயக்குநர்

‘அவெஞ்சர்ஸ்’ திரைப்பட இயக்குநர்களில் ஒருவரான ஜோ ரூஸோ இந்திய ரசிகர்களைச் சந்திக்க மும்பை வரவுள்ளார். ‘அவெஞ்சர்ஸ்: எண்ட்கேம் திரைப்படம்’ ஏப்ரல் மாதம் வெளியாகவுள்ளது. 2009-ம் ஆண்டு தொடங்கிய மார்வல் சினிமாடிக் உலகத்தின் கதை இந்த ‘எண்ட்கேம்’ திரைப்படத்துடன் முடிகிறது. கடந்த வருடம் ‘அவெஞ்சர்ஸ்’ படத்தின் மூன்றாம் பாகமான ‘அவெஞ்சர்ஸ் இன்ஃபினிடி வார்’ வெளியாகி 2 பில்லியன் டாலர் வரை வசூலித்து மாபெரும் வெற்றி பெற்றது. இந்தப் படத்தின் தொடர்ச்சியே எண்ட்கேம்.  ரூஸோ சகோதரர்கள் என்று அழைக்கப்படும் ஆண்டனி ரூஸோ

மை ஃபேர் லேடி இசையமைப்பாளர் ஆந்த்ரே பிரெவின் மரணம்: நான்கு முறை ஆஸ்கர் வென்றவர்

பாடல்களுக்காகவே வெற்றிபெற்ற மை ஃபேர் லேடி உள்ளிட்ட படங்களுக்கு இசையமைத்த இசையமைப்பாளர் ஆந்த்ரே பிரெவின் நேற்று காலமானார். அவருக்கு வயது 89. மன்ஹாட்டனில் உள்ள அவரது இல்லத்தில் பிரெவின் இறந்ததை அவரது மேலாளர் நேற்று மாலை உறுதி செய்தார். ஹாலிவுட்டில் ஆந்த்ரே பிரெவின் இசையமைத்த ஏராளமான திரைப்படங்கள் வசூலில் பெரும் சாதனை படைத்தன. அவற்றில் முக்கியமானவை கிகி, போர்கி அன்ட் பெஸ், இர்மா லா டியூஸெ மற்றும் மை ஃபேர் லேடி போன்ற படங்களாகும். இந்த நான்கு

‘அவெஞ்சர்ஸ்’ படத்துக்கு வசனம் எழுதும் ஏ.ஆர்.முருகதாஸ்

இந்த ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகவுள்ள ஹாலிவுட் படமான ’அவெஞ்சர்ஸ்: எண்ட் கேம்’ படத்துக்கு இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தமிழில் வசனம் எழுதுகிறார். கடந்த ஆண்டு வெளியான ’அவெஞ்சர்ஸ்: இன்ஃபினிட்டி வார்’ திரைப்படம் உலகமெங்கும் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. இந்தியாவிலும் தமிழ், தெலுங்கு, இந்தி ஆகிய மொழிகளில் வெளியாகி வசூலில் பெரும் சாதனை படைத்தது. இந்நிலையில் அவெஞ்சர்ஸ் படவரிசையில் 4வது பாகமான ’அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்’ இந்த ஆண்டு ஏப்ரல் 26ஆம் தேதி வெளியாகவுள்ளது. ஹாலிவுட்

கிராமி விருது விழாவில் மகளுடன் ஏ.ஆர்.ரஹ்மான் பங்கேற்பு

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான், கிராமி விருதுகள் 2019 விருது வழங்கும் விழாவுக்கு தனது மகள் ரஹீமாவை அழைத்து வந்திருந்தார். லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் ஸ்டேப்பிள்ஸ் மையத்தில் கிராமி விருதுகள் வழங்கும் நடைபெற்றது. இவ்விழாவில் சிம்பல், ஃபாலுஸ் பஜார் மற்றும் பிலவ்டு ஆகிய இசை ஆல்பங்களுக்காக பல்வேறு பிரிவுகளில் விருதுகளுக்காக பரிந்துரை செய்யப்பட்ட லண்டனைச் சேர்ந்த பிரசாந்த் மிஸ்ட்ரி, நியூயார்க்கைச் சேர்ந்த பால்குனி ஷா மற்றும் அமெரிக்காவைச் சேர்ந்த சாத்னம் கவுர் ஆகியோருடன் சேர்ந்து ஆஸ்கர் விருதுபெற்ற ஏ.ஆர்.ரஹ்மானும் வந்திருந்தார்.

ஒரு பில்லியன் வசூலை எட்டிய ‘ஆக்வாமேன்’: புதிய டிசி சாதனை படைக்குமா?

டிசி காமிக்ஸின் சூப்பர் ஹீரோ திரைப்படமான ‘ஆக்வாமேன்’, சர்வதேச அளவில் ஒரு பில்லியன் டாலர் வசூலை எட்டியுள்ளது.  கடந்த டிசம்பர் மாதம் வெளியான ‘ஆக்வாமேன்’ திரைப்படம் சர்வதேச அளவில் மிகப்பெரிய வரவேற்பைப் பெற்று மாபெரும் வெற்றிப் படமாக அமைந்தது. ‘சூப்பர்மேன்’, ‘ஜஸ்டிஸ் லீக்’, ‘சூஸைட் ஸ்க்வாட்’  உள்ளிட்ட சூப்பர்ஹீரோ படங்களின் தோல்வியில் துவண்டிருந்த டிசி நிறுவனத்துக்கு ‘வொண்டர் வுமன்’ திரைப்படம் முதல் ப்ளாக் பஸ்டராக அமைந்தது. தற்போது ‘ஆக்வாமேன்’ அதையும் முந்தியுள்ளது. இதற்கு முன், கிறிஸ்டோபர் நோலன்