Category: New Articles

கோமதி மாரிமுத்துவுக்கு ரூ.10 லட்சம்; ஆரோக்கிய ராஜீவுக்கு ரூ.5 லட்சம் நிதியுதவி: திமுக அறிவிப்பு

ஆசிய தடகளப் போட்டியில், தங்கம் வென்ற கோமதி மாரிமுத்துவுக்கு 10 லட்சமும், வெள்ளிப்பதக்கம் வென்ற ஆரோக்கிய ராஜீவுக்கு 5 லட்சமும் திமுக சார்பில் நிதியுதவி வழங்கப்படும் என, அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். இதுதொடர்பாக மு.க.ஸ்டாலின் இன்று (சனிக்கிழமை) வெளியிட்ட அறிவிப்பில். “தமிழகத்திற்கும், இந்தியாவுக்கும் பெருமை தேடித் தரும் வகையில் தோஹா ஆசிய தடகளப் போட்டியில் 800 மீட்டர் ஓட்டப்பந்தயத்தில் தங்கம் வென்று சாதனை படைத்த கோமதி மாரிமுத்துவுக்கும், அதே போட்டியில் ஆண்கள் மற்றும் பெண்களுக்கான 4×400

கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு இல்லை: தேர்தல் அலுவலகம் திறப்பை ஒத்தி வைத்த என்.ஆர்.காங்கிரஸ்

கூட்டணி கட்சிகளுக்கு அழைப்பு இல்லாத காரணத்தால் என்.ஆர்.காங்கிரஸ் தேர்தல் அலுவலகம் திறப்பு நிகழ்ச்சி இன்று ஒத்திவைக்கப்பட்டது. அதிமுக-பாஜக-பாமக கூட்டணியில் இடம் பெற்றுள்ள என்.ஆர்.காங்கிரஸ் கட்சியானது புதுச்சேரியில் போட்டியிடுகிறது. இக்கட்சியின் அலுவலகம் ரெட்டியார்பாளையத்தில் உள்ளது. இங்கு இன்று (வெள்ளிக்கிழமை) காலை 8.15 மணிக்கு மக்களவைத் தேர்தல் அலுவலகம் திறக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது. ஆனால், அறிவித்தப்படி தேர்தல் அலுவலகம் திறக்கப்படவில்லை. கூட்டணி கட்சிகளுக்கு தெரிவிக்காமல் எப்படி தேர்தல் அலுவலகம் திறப்பது என்ற பிரச்சினை எழுந்தது. வழக்கம்போல் என்.ஆர்.காங்கிரஸ் தலைவர் ரங்கசாமி

அபிநந்தனை வரவேற்க வாகா எல்லையில் குவியும் மக்கள்

இந்திய விமானி அபிநந்தன் பாகிஸ்தான் ராணுவத்தால் இன்று (வெள்ளிக்கிழமை) விடுதலை செய்யப்படுவதைத் தொடர்ந்து வாகா எல்லையில் மக்கள் கூட்டம் கூட்டமாக குவியத் தொடங்கி உள்ளனர். இந்தியா – பாகிஸ்தான் எல்லையில் நேற்று முன்தினம் நடந்த விமான தாக்குதலில் தமிழகத்தை சேர்ந்த விமானி அபிநந்தனை பாகிஸ்தான் ராணுவம் சிறைப் பிடித்தது. இருநாடுகள் இடையே பதற்றம் சூழ்ந்த நிலையில் அதனை தணிக்கும் முயற்சியில் உலக நாடுகள் பலவும் இறங்கின. அமெரிக்கா, ஆஸ்திரேலியா, பிரான்ஸ், பிரிட்டன், ஜப்பான், கனடா உள்ளிட்ட நாடுகள்

அத்திக்கடவு திட்டம்: 60 ஆண்டு கனவை நனவாக்கிய முதல்வர் பழனிசாமிக்கு நன்றி: ராமதாஸ்

அத்திக்கடவு திட்டத்திற்கு அடிக்கல் நாட்டியதற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமிக்கு பாமக நிறுவனர் ராமதாஸ் பாராட்டுகளை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக ராமதாஸ் இன்று (வெள்ளிக்கிழமை) வெளியிட்ட அறிக்கையில், “கோவை, திருப்பூர், ஈரோடு ஆகிய மாவட்டங்களுக்கு பயனளிக்கும் அத்திக்கடவு – அவினாசி  நிலத்தடி நீர் செறிவூட்டும் திட்டத்திற்கு அவினாசியை அடுத்த நாதம்பாளையம் என்ற இடத்தில் வியாழக்கிழமை நடந்த விழாவில் முதல்வர் எடப்பாடி பழனிசாமி அடிக்கல் நாட்டியிருக்கிறார். கொங்கு மண்டல மக்களின் 60 ஆண்டு கால கனவை முதல்வர் பழனிசாமி நனவாக்கியிருப்பது பாராட்டத்தக்கது.