Category: Print Conversion

தனியார் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகள் நடைமுறைக்கு வருவது எப்போது?

தனியார் கல்லூரி ஆசிரியர் நியமனத்தில் யுஜிசி விதிமுறைகள், நடைமுறைக்கு வருவது எப்போது? என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. புதிய பல்கலைக்கழகம் மற்றும் கல்லூரி தொடங்குதல், அவற்றில் புதிய பாடப்பிரிவுகள், புதிய பாடத்திட்டங்கள் கொண்டு வருதல், தகுதியுடைய ஆசிரியர்களை நியமனம் செய்தல், ஆகியவற்றில் பல்கலைக்கழக மானியக்குழு (யுஜிசி) வகுத்துள்ள நெறிமுறைகளைப் பின்பற்ற வேண்டியது கட்டாயம். இந்நிலையில் ஆசிரியர் நியமனம் செய்தல், அவர்களுக்கு உரிய ஊதியம் வழங்குவதில் தனியார் கல்லூரிகள் சிலவற்றில் இந்நடைமுறையைப் பின்பற்றுவதில்லை என்ற புகார் தொடர்ச்சியாக எழுப்பப்பட்டு வருகிறது.

அமைச்சரால் அரசு மருத்துவமனை அருகே நெரிசல்: நோயாளிகள், மருத்துவர்கள், பொதுமக்கள் திண்டாட்டம்

அமைச்சர் செல்லூர் கே.ராஜூ தனது கட்சி அலுவலகத்துக்கு நிர்வாகிகளுடன் வரும்போதெல்லாம் வாகனங்களை குறுக்கும், நெடுக்குமாக சாலையை ஆக்கி ரமித்து நிறுத்துவதால் அரசு ராஜாஜி மருத்துவமனைக்கு வரும் நோயாளிகள், மருத்துவர்கள், ஊழியர்கள், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்தைச் சந்திக்கின்றனர். சாலையில் நிறுத்தப்படும் வாகனங்கள் மதுரை மாநகர அதிமுக அலுவலகம், அரசு ராஜாஜி மருத்துவமனை அருகே பனகல் சாலையில் உள்ளது. இந்த அலுவலகம் மிகுந்த இட நெருக்கடியில் ‘பார்க்கிங்’ வசதியே இல்லாமல் உள்ளது. அதனால், மாநகர அதிமுக அலுவலகத்துக்கு அமைச்சர்

2007-ல் விருதுநகரில் இளைஞர் காணாமல் போன விவகாரம்: திருப்பூரில் இறந்தவர் வழக்கை ஒருங்கிணைத்து சிபிசிஐடி போலீஸ் விசாரணை – எலும்புகள் கண்டெடுக்கப்பட்டு மரபணு பரிசோதனை

விருதுநகரில் 2007-ம் ஆண்டு காணாமல் போன இளைஞர் விவகாரம் தொடர்பாக, திருப்பூரில் 2015-ல் இறந்தவர் வழக்கை ஒருங்கிணைத்து சிபிசிஐடி போலீஸார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருச்சுழி வட்டத்துக்குட்பட்ட திருச்சனூர் அருகே உள்ள கிராமத்தைச் சேர்ந்த முத்துவேல் என்பவரின் மகன் செல்வராஜ் (27). இவர், 2007-ம் ஆண்டு காணாமல் போனார். வெளியூருக்கு வேலைக்கு சென்றிருக்கலாம் என வீட்டில் இருந்தவர்கள் கருதி விசாரிக்காமல் இருந்தனர். ஆனால், நீண்ட நாளாக செல்வராஜ் குறித்து எந்த தகவல்களும் இல்லை. இதையடுத்து, மகன் காணாமல்போனது

மும்முனைப் போட்டியில் சாத்தூர் சட்டப்பேரவைத் தொகுதி: திமுகவின் திட்டம் பலிக்குமா?

இடைத்தேர்தல் நடைபெறும் சாத்தூர் தொகுதியில் இந்த முறை மும்முனைப் போட்டி நிலவி வருகிறது. அதிமுகவின் வாக்கு வங்கியை உடைக்க அமமுகவும், அதை சாதமாக்கி எளிதில் வெற்றிபெறலாம் என்ற திமுகவின் திட்டமும் பலிக்குமா என்ற எதிர்பார்ப்பு அக்கட்சியினரிடம் ஏற்பட் டுள்ளது. விருதுநகர் மாவட்டத்தில் சாத்தூர் தொகுதியும் ஒன்று. காமராஜர் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு வெற்றிபெற்று முதல்வர் ஆனார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 1957 மற்றும் 1962-ம் ஆண்டுகளில் நடைபெற்ற சட்டப்பேரவைத் தேர்தல்களில் சாத்தூர் தொகுதியில் போட்டியிட்டு காமராஜர் வெற்றி