பழனி அருகே சொத்துத் தகராறில் அண்ணனை தம்பிகள் கத்தியால் குத்திக் கொலை

பழனி: பழனி அருகே ஆயக்குடியில் சொத்துத் தகராறில் அண்ணன் தாஜூதீன் கத்தியால் குத்திக் கொலை செய்யப்பட்டுள்ளார். தாஜூதீனை கொலை செய்த அவரது தம்பிகள் உசேன், காதர் உசேனை போலீசார் தேடுவருகின்றனர்.

அடுத்த பிரதமர் யார் என்று தெரியாத நிலையில், நாங்கள் எப்போதும் காங்கிரஸ் உடன் தான்: முன்னாள் பிரதமர் தேவ கவுடா பேட்டி

பெங்களூரு: அடுத்த பிரதமர் யார் என்று தெரியாத நிலையில், நாங்கள் எப்போதும் காங்கிரஸ் உடனேதான் இருப்போம் என முன்னாள் பிரதமர் தேவ கவுடா தெரிவித்துள்ளார். கர்நாடகாவில் காங்கிரஸ் கூட்டணியுடன் முன்னாள் பிரதமர் தேவ கவுடா மகன் குமாராசாமி முதல்வராக உள்ளது குறிப்பிடத்தக்கது.

தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்து பதிவு செய்யப்படவில்லை: ஆணையர் லவாசா

டெல்லி: தேர்தல் நடத்தை விதிமீறல்கள் தொடர்பான முடிவுகளில் தன்னுடைய கருத்து பதிவு செய்யப்படவில்லை என ஆணையர் லவாசா விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் ஆணையத்தின் நடைமுறைகளில் பங்கெடுக்கப் போவதில்லை என்று தேர்தல் ஆணையர் லவாசா கூறியுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மோடி, அமித்ஷா உள்ளிட்டோர் மீதான தேர்தல் நடத்தை விதிமீறல்கள் பற்றி முடிவெடுத்த மூன்று பேரில் ஆணையர் லவாசா ஒருவர் என்பது குறிப்பிடத்தக்கது.

கேதார்நாத் கோவிலில் சாமி சரிதனம் செய்ய பிரதமர் மோடி வருகை

உத்தராகண்ட்: உத்தராகண்ட் மாநிலம் கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி சரிதனம் செய்ய வருகை தந்துள்ளார். மக்களவை தேர்தல் பிரச்சாரம் முடிந்த நிலையில், உத்தராகண்ட மாநிலத்துக்கு 2 நாள் பயணமாக சென்றுள்ள பிரதமர் மோடி, கேதார்நாத் கோவிலில் சாமி சரிதனம் செய்ய உள்ளர். 4-வது முறை கேதார்நாத் கோவிலில் பிரதமர் மோடி சாமி தரிசனம் செய்யவுள்ளது குறிப்பிடத்தக்கது.

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு: பிரக்யா சிங் உள்ளிட்ட 7 பேருக்கு நீதிமன்றம் புதிய உத்தரவு

மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் குற்றச்சாட்டுக்கு ஆளான போபால் மக்களவை தொகுதியின் பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாக்குர் உள்ளிட்ட 7 பேரும் வாரம் ஒருமுறை நேரில் ஆஜராக வேண்டும் என்று  சிறப்பு நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது. மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கு விசாரணைக்கு முறையாக ஆஜராக தவறியதால், தேசிய புலனாய்வு அமைப்பு நீதிமன்ற நீதிபதி வினோத் பதல்கர் இந்த உத்தரவை பிறப்பித்தார். மகாராஷ்டிரா மாநிலத்தின் மாலேகான் நகரில் கடந்த 2008-ம் ஆண்டு செப்டம்பர் 29-ம் தேதி ஒரு மசூதி

மோடிக்கு வாக்களிக்க வாரணாசி வாக்காளர்கள் மிரட்டப்படுகிறார்கள்: மாயாவதி பரபரப்பு குற்றச்சாட்டு

பிரதமர் நரேந்திர மோடி போட்டியிடும் வாரணாசி தொகுதி வாக்காளர்கள், அவருக்கே வாக்களிக்க மிரட்டப்படுவதாக, காசு கொடுத்து விலைக்கு வாங்கப்படுவதாக பகுஜன் சமாஜ் கட்சித் தலைவர் மாயாவதி குற்றஞ்சாட்டியுள்ளார். இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியில் ஒரு ட்வீட் பதிவிட்டுள்ளார். அந்த ட்வீட்டில், “வாரணாசியில் தேர்தல் நேர்மையாகவும் நியாயமாகவும் நடக்க வாய்ப்பிருப்பதாக எனக்குத் தெரியவில்லை. அத்தொகுதியில் மீண்டும் மோடியே வெற்றி பெற வேண்டும் என்பதற்காக வெளியாட்களை வைத்து மக்கள் மனங்களை மாற்றும் முயற்சி நடைபெறுகிறது. சில

தேர்தலில் போட்டியிட சீட் வழங்கவில்லை: பஞ்சாப் முதல்வர் மீது சித்து மனைவி மீண்டும் புகார்

அமித்சர் தொகுதியில் போட்டியிட விரும்பினேன், ஆனால் வேறு தொகுதியில் நிற்குமாறு என்னிடம் கூறினார்கள், முதல்வர் அம்ரீந்தர் சிங் எனக்கு வாய்ப்பு வழங்க மறுத்து விட்டார் என சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுர் மீண்டும் கூறியுள்ளார். மக்களவைத் தேர்தலில் நவ்ஜோத் சிங் சித்துவின் மனைவி நவ்ஜோத் கவுருக்கு வாய்ப்பு வழங்கப்படவில்லை என்பது தவறான கருத்து, போட்டியிட அவர் மறுத்து விட்டார் என பஞ்சாப் முதல்வர் கேப்டன் அம்ரீந்தர் சிங் விளக்கம் அளித்துள்ளார். பஞ்சாப் மாநிலத்தில் மொத்தமுள்ள 13 இடங்களுக்கு

தமிழகம் மற்றும் புதுவையில் 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை: வானிலை ஆய்வு மையம்

தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்து 24 மணி நேரத்தில் ஓரிரு இடங்களில் மழை அல்லது  இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் .  வெப்பச்சலனம் காரணமாக வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக மழை பெய்யக்கூடும். தமிழ்நாட்டில் குறிப்பாக உள் மாவட்டங்களான, நீலகிரி,கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், நாமக்கல், ஈரோடு,  சேலம், திருச்சி ஆகிய மாவட்டங்களில் இடியுடன் கூடிய மழை பெய்யக்கூடும் அப்போது 30 முதல் 40 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக் கூடும். கடந்த 24 மணி நேரத்தில் 

‘‘300 இடங்களில் வெற்றி; மீண்டும் பாஜக ஆட்சி’’: பிரதமர் மோடி நம்பிக்கை

மக்களவைத் தேர்தலில் பாஜக தலைமையிலான அணி 300 இடங்களுக்கும் மேல் வெற்றி பெறும், மீண்டும் மோடி அரசு அமையும் என 2019-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலுக்கான கடைசிக் கூட்டத்தில் பிரதமர் மோடி உறுதிபடத் தெரிவித்தார். மக்களவைத் தேர்தல் கடந்த ஏப்ரல் 11-ம் தேதி தொடங்கி, இதுவரை 6 கட்டத் தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. வரும் 19-ம் தேதி 7-ம் கட்டத் தேர்தல் நடைபெறுகிறது. வரும் 23-ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடந்து தேர்தல் முடிவுகள் வர இருக்கின்றன.

ஓபிஎஸ் மகன் எம்.பி. என கல்வெட்டு: சர்ச்சை ஏற்பட்டதையடுத்து மறைப்பு

தேர்தல் முடிவு வருவதற்கு முன்னரே ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத்தை எம்.பி. என பொறித்து திறக்கப்பட்ட கல்வெட்டு சர்ச்சை ஏற்பட்டதையடுத்து  மறைக்கப்பட்டது. தேனி மக்களவைத் தொகுதிக்கு ஓபிஎஸ் மகன் ரவீந்திரநாத் குமார், மதுரைக்கு ராஜன் செல்லப்பா மகன் ராஜ் சத்யன் உள்ளிட்டோர் வேட்பாளர்களாக அறிவிக்கப்பட்டனர். இதனால் கட்சிக்குள் வாரிசு அரசியல் என சர்ச்சை எழுந்தது. கட்சிக்கு உழைத்த மூத்த நிர்வாகிகளும் விசுவாசிகளும் இருக்க வாரிசைக் களம் இறக்கியது குறித்து பரவலாக முணுமுணுப்பு எழுந்தது. ஆனால், தமிழகத்திலேயே தேனியில் அதிக

வரலாற்றிலேயே மிக அதிகம்: ஐசிசி உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசு அறிவிப்பு

இங்கிலாந்தில் வரும் 30-ம் தேதி தொடங்க இருக்கும் ஐசிசி உலகக் கோப்பைப் போட்டிக்கான பரிசுத் தொகை இதுவரை உலகக் கோப்பை வரலாற்றிலேயே இல்லாத அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது. உலகக் கோப்பைப் போட்டியின் ஒட்டுமொத்த பரிசுத் தொகையாக ரூ.70 கோடியே 12 லட்சத்து82 ஆயிரம்(ஒரு கோடி அமெரிக்க டாலர்) அறிவிக்கப்பட்டது. இதில் இருந்து வெற்றி பெறும் அணி, 2-வதாக வரும் அணி ஆகியவற்றுக்கு பிரித்து அளிக்கப்படும். இங்கிலாந்தில் நடைபெற உள்ள ஐசிசி உலகக் கோப்பைப் போட்டியில் 10 அணிகள் பங்கேற்கின்றன.

கல்வி, திறமைகள், ஆங்கிலத்தில் சரளமான அறிவு.. இன்னபிற தகுதிகள் தேவை: கிரீன் கார்டு பெற அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழியும் புதிய நிபந்தனைகள்

அமெரிக்கக் குடியுரிமைக்கான கிரீன் கார்டு வழங்குதலில் தகுதி, திறமை அடிப்படையிலான பல்வேறு காரணிகளை உள்ளடக்கி அதிபர் ட்ரம்ப் புதிய முன்மொழிவுகளை பரிந்துரை செய்துள்ளார். குடும்ப அடிப்படையில் கிரீன் கார்டு வழங்கும் நடைமுறைகளுக்குப் பதிலாக பிற காரணிகளுடன் கல்வி, தனிப்பட்ட திறமைகள், ஆங்கிலத்தில் சரளம் மற்றும் அறிவு ஆகிய தகுதி-திறமை அடிப்படையிலான கிரீன் கார்டு வழங்கும் முறையை அமெரிக்க அதிபர் ட்ரம்ப் முன்மொழிந்துள்ளார். ரோஸ் கார்டனில் மூத்த நிர்வாக அதிகாரிகள், செல்வாக்கு மிக்க ஹில் குடியரசுவாதிகள் ஆகியோர் முன்னிலையில்

காந்தியை அவமதித்த பிரக்யாவுக்கு மன்னிப்பு இல்லை: பிரதமர் மோடி கடும் கண்டனம்

மகாத்மா காந்தியை அவமதித்த பாஜக வேட்பாளர் பிரக்யா சிங் தாகுர் மன்னிப்பு கோரினாலும், அவரை நான் மன்னிக்க தயாராக இல்லை என பிரதமர் மோடி தெரிவித்தார். மாலேகான் குண்டுவெடிப்பு வழக்கில் முதல் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டவர் பிரக்யா சிங் தாக்குர். தற்போது ஜாமீனில் இருக்கும் அவர், போபால் தொகுதி பாஜக வேட்பாளராக அறிவிக்கப்பட்டது முதலாக, பல்வேறு கருத்துகளை தெரிவித்து சர்ச்சைகளில் சிக்கி வருகிறார். காத்மா காந்தியை சுட்டுக் கொன்ற நாதுராம் கோட்சேவை ‘சுதந்திர இந்தியாவின் முதல் தீவிரவாதி’ என

முதல் பார்வை:  Mr.லோக்கல்

ஸ்டேட்டஸ் ஈகோவால் அவமானப்படுத்தும் நாயகியை அன்பால் காதலிக்க வைக்கும் மிடில் கிளாஸ் நாயகனின் கதையே ‘ Mr.லோக்கல்’. கார் விற்பனை நிறுவனத்தில் பணிபுரிகிறார் சிவகார்த்திகேயன். அம்மா, தங்கை என்று அவரது குடும்பம் அன்பின் எல்லையில் அழகாகிறது. குங்குமம் சீரியல் நாயகி நக்‌ஷத்ராவைச் சந்தித்து செஃல்பி எடுக்க ஆசைப்படுகிறார் ராதிகா. இதைத் தன் மகன் சிவகார்த்திகேயனிடம் கூறுகிறார். ஷூட்டிங் ஸ்பாட்டில் இருக்கும் நக்‌ஷத்ராவைச் சந்திக்க பைக்கில் அம்மா ராதிகாவை ஏற்றிச் செல்கிறார் சிவா. இந்த சூழலில் சிக்னலில் வேகமாக

‘டுலெட்’ இயக்குநர் படத்தில் நடிக்கும் மிஷ்கின், ஆர்.கே.சுரேஷ்

‘டுலெட்’ படத்தை இயக்கிய செழியனின் அடுத்த படத்தில், மிஷ்கின் மற்றும் ஆர்.கே.சுரேஷ் நடிப்பதாகத் தகவல் வெளியாகியுள்ளது. பல படங்களுக்கு ஒளிப்பதிவாளராகப் பணியாற்றியவர் செழியன். இவர் முதன்முதலாக இயக்கிய படம் ‘டுலெட்’ (Tolet). கடந்த பிப்ரவரி 21-ம் தேதி இந்தப் படம் ரிலீஸானது. ஒரு இளம் தம்பதி, அவர்களது மகன் ஆகியோரை இந்த ‘டுலெட்’ என்கிற வார்த்தை எப்படி அல்லாட வைக்கிறது என்பதுதான் படத்தின் கதை. இந்தப் படத்தில் நாயகன் – நாயகி என்றெல்லாம் கிடையாது. செழியனின் உதவியாளர்

2011 உலகக்கோப்பையை வென்ற தோனி தலைமை இந்திய அணியை விட 2019 அணி சூப்பர்:  பாடி அப்டன் பேட்டி

2011-ல் தோனி தலைமையில் இந்திய அணி 2வது முறையாக உலகக்கோப்பை கிரிக்கெட்டை வென்று சாம்பியன்களாகி சாதனை படைத்தது. அந்த அணியை ஒப்பிடும்போது தற்போதைய அணி உண்மையில் காகிதத்தில்தான் பலமான அணியாகத் தெரிகிறது என்று பலரும் விமர்சித்து வரும் நிலையில் 2011 உலகக்கோப்பை இந்திய அணியை விட தற்போதைய கோலி தலைமை உலகக்கோப்பை இந்திய அணி பிரமாதம் என்கிறார் முன்னாள் உடல்/மனோதத்துவ பயிற்சியாளர் பேடி அப்டன். ஆனால் இந்த உலகக்கோப்பையிலும் இந்திய அணியின் ஒரே அம்சம், பலமான அம்சம்